Read in : English
பள்ளி விழாவில் ஆபாசம் தவிர்க்கலாமே!
‘மலம பித்தா பித்தாதே மலம பித்தா பித்தாதே… மலம பித்தா பித்தாதே மலம பித்தாதே..’ – பிரபல திரைப்படப் பாடல் பின்னணியில் ஒலிக்க.. பட நாயகி போலவே அங்க அசைவுகளை அளித்து ஆடுகிறார் அந்தச் சிறுமி...! அடுத்து இன்னொரு திரைப்படத்தில் இடம்பெற்ற ஆபாசப் பாடல் – அந்த நடனத்தையும் அச்சுப்பிசகாமல் ஆடுகிறார்! 'காதல்...
விமான நிலையங்கள் மேம்பாட்டில் மக்களுக்கான இடம்?
விமான நிலையங்கள் மேம்பாட்டுக்கான பொதுத்துறை, தனியார் கூட்டாண்மை மாடலில் பொதுமக்கள் நலன் வளர்த்தெடுக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும். விமான நிலையங்களில் பிரயாணிகளின் நீண்ட வரிசை குழப்பங்களையும் நெருக்கடிகளையும் பெரும் பிரச்சனையையும் ஏற்படுத்தியிருக்கின்றன. கடந்த வாரம் சமூக வலைதளங்களில் விமானப்...
ஆன்லைன் விளையாட்டுகள் வேண்டவே வேண்டாம்!
இன்மதியின் ’நிஜமும் நிதானமும்’ என்ற வேர்காணல் நிகழ்வில் எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்ட பிரச்சினை ‘ஆன்லைன் விளையாட்டுகள், சூதாட்டங்களால் நிகழும் உயிரிழப்புகள்’. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு இது சம்பந்தமாக உரையாடினார் உளவியல் அறிஞர் டாக்டர் சுந்தரி. இவர் 25 ஆண்டுகளாக உளவியல் துறையில்...
சென்னை புறநகர் பகுதிகளில் திட்டமிடல் குறைபாடுகள்!
சமீபத்து மாண்டஸ் புயல் சென்னையில் பெருமழையைக் கொட்டித் தீர்த்துவிட்டது. புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேலும் ஒரு துயர்மிக்க ஆண்டைக் கடந்து வந்திருக்கிறார்கள். சென்னை புறநகர் பகுதிகளில் ’கேட்டட் கம்யூனிட்டிஸ்’ மற்றும் வீடுகளைக் கட்டி விற்ற ரியல் எஸ்டேட் வணிகர்கள் அந்தப் பகுதிகளில்...
வாரிசு அரசியல்: வித்திட்டது கருணாநிதி தான்!
உதயநிதி அமைச்சராயிருப்பது குறித்துப் பொங்குவானேன்? எங்கில்லை வாரிசு அரசியல்? அஇஅதிமுகவில் கூடத்தான். ஏன் மதிமுக, பாமக என ஏறத்தாழ அனைத்து கட்சிகளிலும் இதே நிலைதான். இதற்கெல்லாம் வழிவகுத்ததே பண்டித ஜவஹர்லால் நேருதானே என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால் அது உண்மையா? இந்திராவைப் பிரதமராக்கி...
கேரளப் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறை
கல்வியிலும் பெண் விடுதலையிலும் முன்னேறிய மாநிலமாக புகழ்பெற்று விளங்கும் கேரளாவில்தான் சமீபகாலமாக எல்லா வயதுப் பெண்கள் மீதும் வன்முறைத் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. ஆணாதிக்கச் சிந்தனைகளாலும் சட்டங்களாலும் கட்டமைக்கப்பட்ட சமூகத்தை எதிர்த்து வீரியமிக்க கலாச்சாரப் புரட்சியை...
சுவை தரும் நாட்டுக்கத்தரி
சமையலில் தனியாகவும் பிற காய்களுடன் சேர்ந்தும் உணவில் சுவையை உருவாக்கவல்லது கத்தரிக்காய். சைவத்தில் தனித்துவமாகவும் அசைவத்தில் இணைந்தும் உணவுச்சுவையில் சிறப்பிடம் பெறுகிறது. அவியலில் ஆதிக்கம் செலுத்துவதோடு, பிரியாணி உடன் தொடுகறியாகவும் வந்து சுவை ஊட்டுகிறது. கிராமங்களிலும் கோயில்களிலும்...
சினிமாவில் இடம்பெற்ற ‘சக்தி’ இதழ்!
பரண் என்ற வார்த்தையே இன்று கிட்டத்தட்ட இல்லை. அந்நாளில் வீடு என்ற ஒன்றிருந்தால் பரண் இருந்தே ஆக வேண்டும். வீட்டில் கக்கூஸ், பாத்ரூம் போல ஒரு அத்தியாவசிய இடம் பரண். இந்த அத்தியாவசியமான இடத்தில்தான், அன்று வீட்டுக்குத் தேவையில்லாத அனாவசியப் பொருள்கள் போடப்பட்டன. பழைய பாட்டி கால பாத்திரங்கள்,...
கமல்ஹாசன் நடிப்பைக் கைவிட மாட்டார்?
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால், அந்தப் படத்தில் இனி நடிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார் தமிழக அமைச்சராகியிருக்கும் உதயநிதி. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன்தான் தனது கடைசிப் படம் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்....
திமுக முகமாக மாறுவாரா உதயநிதி?
முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி மாநில அமைச்சராகப் பதவியேற்றுள்ளது கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. பனி பெய்து குளம் நிறையாது என்பதுபோல விமர்சனங்களால் எதுவும் மாறிவிடாது. உதயநிதி அரசியலில் நீடிப்பதும் நிலைப்பதும் அவரால் மக்களின் வாக்குகளைப் பெற முடியுமா என்பதையும் மூத்த தலைவர்களை...
Read in : English