Read in : English

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆளுநரின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை அனைவரும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். சட்டப்பிரிவு 200இன்படி, குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்புவதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை என்று அரசியலமைப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இவ்விவகாரத்தில் திமுக அரசுக்கு உடனடியாக சாதகமான பலன் ஏதும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. மத்தியிலுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இந்த மசோதாவைச் சட்டமாகவிடாமல் தடுக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யும்.

தமிழ்நாட்டு வரலாற்றில் முதல்முறையாக, ஆளுநரால் நிராகரிக்கப்பட்ட ஒரு மசோதா, மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, இரண்டாவது முறை ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதலில் தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021, கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேறியது. ஆளுநர் மசோதாவை கடந்த மூன்றாம் தேதி (பிப்ரவரி 3, 2022) அன்று சட்டப்பேரவைத் தைலவர் எம். அப்பாவுக்குத் திருப்பி அனுப்பிய நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிப்ரவரி 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக பிப்ரவரி 8ஆம் தேதி ஒரு நாள் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது. “சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடர் ‘நீட்‘டை எதிர்ப்பதற்காக மட்டுமல்ல, கூட்டாட்சியை வலுப்படுத்தவும், மாநிலத்தின் இறையாண்மையைப் பாதுகாக்கவுமே” என்றார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

சமூக நீதிக்கு எதிரானது, ஏழை மாணவர்களுக்கு எதிரானது என்ற வாதத்தை முன்வைத்து,  நீட் விலக்கு மசோதாவை ஆளுநரிடம் திருப்பி அனுப்பும் தீர்மானத்தை பேரவை ஒருமனதாக ஏற்றுக்கொண்ட போதிலும்,  மசோதாவை ஆளுநர் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு. அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்த பாஜக, சட்டப்பேரவையில் மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பு  வெளிநடப்பு செய்தது. பாஜகவைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தில் மசோதாவை ஆதரித்தன.

நீட் விவகாரத்தில் மாநில அரசின் முடிவை முழுமையாக எதிர்க்கும் பாஜக, சென்னையிலும், தில்லியில் அதனைத் தொடர்ந்து எதிர்க்கும் என்பது தெளிவு. அரசியல் சட்டப்பிரிவு 200இன்படி, ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மசோதாவை குடியரசுத் தலைவருக்கு முன்னனுப்பும் தேர்வை ஆளுநர் பயன்படுத்தலாம். குடியரசுத் தலைவருக்கு மசோதாவை, ஆளுநர் அனுப்பி வைக்க வேண்டும் என்று திமுக அரசும், நீட்டை எதிர்க்கும் அரசியல் கட்சிகளும் வலியுறுத்துகின்றன.

குடியரசுத் தலைவரும்ஆளுநரும் இந்த மசோதாவை கிடப்பில் வைத்திருப்பதே நடக்கும். குடியரசுத் தலைவர்மசோதாவை நிராகரிப்பதற்கு பல மாதங்கள் ஆகலாம்அதாவதுநீட் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடக்கும் மற்றொரு கல்வியாண்டு நடைமுறைக்கு வந்துவிடும்.

மத்தியில், பாஜக மற்றும் அதன் ஆட்சியின் முந்தைய நடவடிக்கைகளை வைத்தும், 2017ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரின் நடவடிக்கையை வைத்தும் இதைப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் அப்போதைய அதிமுக அரசு நிறைவேற்றிய இதேபோன்ற மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்தார்.  புதிய மசோதாவும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. அது எதிர்மறையான முடிவாக இருந்தாலும், ஆளுநரும் குடியரசுத் தலைவரும் விரைவாகச் செயல்படுவார்கள் என்பதை உறுதிப்படுத்த எந்த வழியும் இல்லை. மேலும், குடியரசுத் தலைவரும், ஆளுநரும் இந்த மசோதாவை கிடப்பில் வைத்திருப்பதே நடக்கும். குடியரசுத் தலைவர், மசோதாவை நிராகரிப்பதற்கு பல மாதங்கள் ஆகலாம், அதாவது, நீட் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடக்கும் மற்றொரு கல்வியாண்டு நடைமுறைக்கு வந்துவிடும். இறுதியில், திமுக அரசு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும்.

கல்வி பொதுப்பட்டியலில் உள்ளதால், அங்கும் அதிமுக அரசு உரிய வெற்றியைப் பெறவில்லை.  மேலும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு சில அதிகாரங்கள் உள்ளன. நீட் தேர்வை எதிர்த்துப் போராடுகிறோம் என்ற எண்ணத்தை உருவாக்குவது மட்டுமே தற்போது திமுகவால் சாதிக்கக்கூடியது.  குடியரசுத் தலைவர் ஒப்புதல் மறுத்துவிட்டதைக்கூட, பல மாதங்களாகத் தெரிவிக்காத, அதிமுக ஆட்சியைப் போலல்லாமல், நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை தொடங்குதல் மற்றும் மாநில பாடத்திட்டத்தை சிபிஎஸ்இக்கு இணையாக மாற்றியமைப்பது உள்ளிட்டவற்றை திமுக அரசு செய்யலாம்.

உச்சநீதிமன்றம் மாநில அரசின் பக்கம் இருந்தால்அது திமுகவுக்கு நல்வாய்ப்பே. ஆனால்கடந்த சில ஆண்டுகளில் நடந்ததைப் பார்க்கும்போதுமத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான தீர்ப்புகள் வெகுசிலவே என்பது அந்த வாய்ப்பையும் குறைத்து விடுகிறது.

கருத்துப் போரில், திமுக, தனது இமேஜை அப்படியே வைத்திருக்க முடியும். மேலும் அரசியல் ரீதியாக பாஜக மற்றும் அதன் கூட்டாளியான அதிமுகவுக்கு எதிரான ஒரு கருவியாக இந்த பிரச்சினையைப் பயன்படுத்த முடியும். நீட் தேர்வை தடுக்க தவறிவிட்டதாகவும், நீட் தேர்வை தடுப்பதாக உறுதியளித்ததற்காகவும் திமுகவை, அதிமுக சாடும்போது  இந்த விஷயத்தை திமுக பயன்படுத்திக் கொள்ளலாம். பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் போய்விட்டாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதன் மூலம் அதிமுக தன்னை அம்பலப்படுத்திக் கொண்டது.

நீட் விவகாரத்தில் திமுக தொடர்ந்து எந்த பலனுமின்றிப் போராடினாலும், அதிமுக பலவீனப்படுவதே அதற்குக் கிடைக்கும் அனுகூலம். நீட்டை அமல்படுத்தியதும், பாஜகவுடன் கூட்டணியில் தொடர்வதும் அதிமுகவுக்குப் பின்னடைவே. உச்சநீதிமன்றம் மாநில அரசின் பக்கம் இருந்தால், அது திமுகவுக்கு நல்வாய்ப்பே. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் நடந்ததைப் பார்க்கும்போது, மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான தீர்ப்புகள் வெகுசிலவே என்பது அந்த வாய்ப்பையும் குறைத்து விடுகிறது.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival