மகாராஷ்டிரா எப்போதுமே தலித் அரசியலில் தேசத்திற்கான டிரெண்ட் செட்டராக இருந்து வருகிறது என்று குறிப்பிடும் மும்பைபல்கலைக்கழகத்தின் அரசியல் துறை இணை பேராசிரியரும்பத்தி எழுத்தாளருமான மிருதுல் நீலேமுன்னோக்கிச் செல்லும் போது தெற்கு தலித் அரசியலில் முன்னிலை வகிக்கும் என்று கூறுகிறார்அவருடன் கொண்ட நேர்காணலின் கேள்வி-பதில் கீழ்வருமாறு:  

மகாராஷ்டிரா தலித் அரசியல் எப்போதும் நாட்டின் பிற பகுதிகளில் ஒரு டிரெண்ட் செட்டராக இருந்து வருகிறது. உதாரணமாக, தமிழகத்தில் இருக்கும் ஒரு கட்சியின் பெயர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி; அது தலித் பாந்தர்ஸ் என்பதின் தமிழ் மொழிபெயர்ப்பு. இங்குள்ள தற்போதைய போக்குகள் என்ன?

மகாராஷ்டிரா தலித் அரசியல் எப்போதும் நாட்டின் பிற பகுதிகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து வந்திருக்கிறது. ஏனென்றால் முதன்மையாக இந்த மாநிலத்தில் சமூக சீர்திருத்த இயக்கத்தின் வேர்கள் வலுவாக ஊன்றியிருக்கின்றன. மேற்கு வங்கத்திற்கு அடுத்து சமூக சீர்திருத்தத்தில்  மகாராஷ்டிராவுக்கென்று ஒரு சிறந்த வரலாறு உண்டு என்று என்னால் கூற முடியும். மேலும், கிராந்தி ஜோதி மகாத்மா பூலே மற்றும் சாவித்ரி பாய் பூலே ஆகியோரின் பங்களிப்புகள் இந்த இயக்கத்தின் அடித்தளத்தை அமைத்துக் க் கொடுத்தன, பின்னர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கார் அன்றைய சூத்திரர்கள் மற்றும் தீண்டத்தகாதவர்களின் சமத்துவத்திற்காக நடத்திய முழுமையான போராட்டம், நாட்டில் நடந்த அவர்களுக்கான விடுதலை விசயத்தில்  மகாராஷ்டிராவை மேலும் முக்கியமான ஒரு மாநிலமாக மாற்றியது. அடித்தட்டு மக்களுக்கான விடுதலைக்காக மற்ற மாநிலங்கள் அனைத்தும் மகாராஷ்டிராவின் வழியைப் பின்பற்றின.

என்றாலும் தற்போதைய காலகட்டத்தில் தென்மாநிலங்கள்தான் தலித் பிரச்சினைகளில் அதிகம் குரல் கொடுக்கின்றன என்று நான் நினைக்கிறேன். தலித் பாந்தர்ஸ் (தலித் சிறுத்தைகள்) இயக்கத்தின் தலைமையில் ஏற்பட்ட உட்பூசலுக்குப் பிறகு அந்த இயக்கம் கலைக்கப்பட்டது. சில ’சிறுத்தைகள்’ இன்று ஆளும் கட்சியில் இருக்கின்றன. மேலும் சிலர் தலித் பிரச்சினைகளில் தங்களின் நிலைப்பாட்டில் சமரசம் செய்து விட்டார்கள்.

இன்று, மகாராஷ்டிராவில் தலித் இயக்கத்திற்குப் புதிய இரத்தம்  தேவைப்படுகிறது. தலித் தலைவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிகளில் இரண்டாம் கட்ட பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.  இன்னும் சில ஆண்டுகளில் இந்த நாட்டின் தலித் இயக்கத்தை தெற்குதான் வழிநடத்தும் என்று நினைக்கிறேன். திராவிட-தலித் கூட்டணி அந்த இயக்கத்திற்குத் தலைமையேற்று வழிநடத்தும்.

தமிழகத்தில் தலித் அரசியல் என்பது வெவ்வேறு பகுதிகளில் வாழும் மூன்று தனித்தனி தலித் சாதிகளைச் சுற்றியே நிகழ்கிறது. ஆனால் அவர்கள் அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து செயல்படவில்லை. மகாராஷ்டிராவில் இப்போது நிலைமை எப்படி இருக்கிறது?

துரதிர்ஷ்டவசமாக, மகாராஷ்டிராவிலும் தலித் சமூகங்களும் கட்சிகளும் ஓர் ஒருங்கிணைந்த சக்தியாக ஒன்று சேரவில்லை. இங்கேயும் நிலைமை அவ்வளவு வித்தியாசமாக இல்லை. மஹர்கள், மாதங்குகள், சார்மகார்கள் ஆகிய தலித் சாதியினர் முற்றிலும் வேறுபட்ட நிலைப்பாடுகள் கொண்டுள்ளனர்.  மகாராஷ்டிரத்திலுள்ள மூன்று சாதிகளுக்கிடையில் மகர்கள் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும், மிகவும் செல்வச் செழிப்புள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால் எண்ணிக்கை வலிமை மற்றும் அறிவாற்றல் ஆகிய இரண்டின் அடிப்படையில் இந்த இயக்கத்தை எப்போதும் அவர்கள்தான் முன்னின்று நடத்துகிறார்கள். மஹாராஷ்டிராவின் தலித் இயக்கங்களில் மற்ற இரண்டு சமூகங்களின் பங்களிப்பு எப்போதும் குறைவாகவே இருந்து வந்துள்ளது.

மும்பைபல்கலைக்கழகத்தின் அரசியல் துறை இணை பேராசிரியரும், பத்தி எழுத்தாளருமான மிருதுல் நீலே

உண்மையில், இந்த இயக்கங்கள் மஹர்களால் தலைமை தாங்கப்பட்டன என்ற ஒரே காரணத்திற்காக, மற்ற சமூகங்கள் பங்கேற்கவில்லை என்றுகூட நாம் கூற முடியும். 1956-ல் பாபாசாகேப் அம்பேத்கரின் தலைமையின் கீழ் இந்து-மஹர்கள் பௌத்த மதத்திற்கு மாற வேண்டும் என்ற கருத்தாக்கம் இதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாகக் கூற முடியும். மற்ற இரு சமூகத்தினரும் இந்து மதத்திலேயே இருக்க விரும்பினர்.

மாதங்குச் சமூகம் இன்று பெரும்பாலும் ஆளும் கட்சியுடன் உள்ளது, அதேசமயம் சார்மகார்கள் தங்களது இந்துமத அடையாளத்தின் மேன்மையைப் பறைசாற்றிக் கொண்டு தலித் அடையாளத்தை ஏற்றுக் கொள்வதில்லை. இந்த இரு சமூகங்களிலும் நிகழும்  சமூகமயமாக்கல் மற்றும் சமஸ்கிருதமயமாக்கல் செயல்முறைகள் அவர்கள் தங்களது இந்துமத அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் வலுப்படுத்தவும் உதவுகின்றன.   

இன்று, மகாராஷ்டிராவில் தலித் இயக்கத்திற்குப் புதிய இரத்தம்  தேவைப்படுகிறது. தலித் தலைவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிகளில் இரண்டாம் கட்ட பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளனர் 

தமிழகத்தில் பறையர் ஆர்வலர்கள் பலரும் தலித் என்ற அடையாளத்தை இழிவாகக் கருதி அதை மறுக்கிறார்கள். இது பற்றி கருத்து சொல்ல முடியுமா?

இதே போக்கு மகாராஷ்டிராவிலும் உண்டு. தலித் முத்திரை இழிவானது என்றும் பழைய படிநிலைப்படுத்தலை  வலுப்படுத்துகிறது என்றும் அவர்கள் கருதுகிறார்கள். எனினும் ‘தலித்’ என்ற சொல் ஒரு வலுவான அடையாளத்தைத் தருகிறது; மற்றும் ஒரு சாதிக் குழுவைக் காட்டிலும் பல விஷயங்களைக் குறிக்கும் என்று நான் கருதுகிறேன். கற்பனாசக்தி அர்த்தத்தில் பார்த்தால், ‘தலித்’ அடையாளம் கறுப்பான, வலிமையான மனிதர்களைக் குறிக்கும். என்னைப் பொறுத்தவரை, இது ஓர் அடையாளத்தையும், உரக்கக் கூவும் சக்தியின் அம்சங்களையும் வலுப்படுத்துகிறது.

மேலும் படிக்க: காவி எதிர்ப்பு: முன்னணியில் திருமா

மகாராஷ்டிராவில் இந்த முறை தலித்துகள் எப்படி வாக்களிக்கிறார்கள்? விபிஏ-யின் தாக்கம் எப்படி இருக்கும்? கடந்த முறை, விபிஏ மற்றும் ஓவைசி பெற்ற வாக்குகள் பெரும்பாலும் வெற்றி வித்தியாசத்தை விட அதிகமாக இருந்தன.

தலித் இயக்கங்களின் கோட்டைகளான பிடிடி சால் மற்றும் மாதுங்கா தொழிலாளர் முகாமில் உள்ள மக்களுடன் நான் சமீபத்தில் கலந்துரையாடினேன். வோர்லி கலவரங்களுக்கும் மற்றும் தலித் பாந்தர் இயக்கத்தின் உச்சக்கட்டத்திற்கும் சாட்சியாக இருப்பதால் பிடிடி சால் தலித் இயக்கத்தில் ஒரு சிறப்புமிக்க இடத்தைப் பெற்றுள்ளது. மும்பையில் தலித் வாக்குகளின் மிக முக்கியமான பகுதியாக மாதுங்கா தொழிலாளர் முகாம் இன்னும் உள்ளது. நான் மக்களிடம் பேசித் தெரிந்து கொண்ட விசயம் இது: தலித் ஆதிக்கம் நிறைந்த இந்த இடங்களில் 2019-ஆம் ஆண்டில் விபிஏ கொண்டிருந்த செல்வாக்கு இப்போது இல்லை. பிராமணக் கட்சிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்ற டாக்டர் பாபாசாகேப் அம்பேத்காரின் கருத்துக்களில் தலித் வாக்காளர்கள் தீவிர நம்பிக்கை கொண்டவர்கள்.

1952-ஆம் ஆண்டில் பம்பாய் வடக்கு மக்களவைத் தொகுதியில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்காரை எதிர்த்து காங்கிரஸ் ஒரு வேட்பாளரை நிறுத்தியது. இது போன்ற பல காரணங்களால் தலித்துகள் இந்திய தேசிய காங்கிரஸை நீண்ட காலமாகவே நிராகரித்து வந்தனர். பெரும்பான்மையான தலித் வாக்காளர்கள் தொடர்ந்து இந்திய குடியரசுக் கட்சிக்கு அல்லது வழக்கறிஞர் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான ஆர்பிஐ (பகுஜன் மகாசங்) கட்சிக்கு வாக்களித்தாலும், தனது உறுதியான செயல்பாட்டுக் கொள்கைகளால், காங்கிரஸ் கணிசமான அளவு தலித் வாக்குகளைக் கைப்பற்றியது. 2019-ஆம் ஆண்டில் விபிஏ மற்றும் ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்ததால், 21-க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பாதிப்படைந்தன.

2024-ல் பெரும்பான்மையான தலித் வாக்காளர்கள் விபிஏ, எம்விஏ இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று நம்பினர், துரதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு இயக்கங்களாலும் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை. ஆதலால் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான தலித்துகள் விபிஏ-விற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.  

தலித் வாக்காளர்களின் முக்கிய நோக்கமே ஆளும் கட்சியை தோற்கடிப்பதுதான். விபிஏ-விடமிருந்து பாஜக-வுக்கு வரும் எந்த மறைமுக உதவியும் மக்களால் நிராகரிக்கப்பட்டது. சோலாப்பூரில் நிகழ்ந்ததைப் போல, வேட்பாளர்கள் கூட எம்விஏ வேட்பாளருக்கு எதிராக போட்டியிட மறுத்து தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். வரவிருக்கும் நாட்களில் விபிஏ கட்சியின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கப் போவதில்லை. மேலும் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் அந்தக் கட்சி எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவதானிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ராம்தாஸ் அத்வாலேயின் தலைமையிலான ஆர்பிஐ (ஏ) பாஜகவின் கூட்டணிக் கட்சியான பின்னர், தலித் வாக்காளர்களுக்கு மகாராஷ்டிர விகாஸை (எம்விஏ) ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

2024-ல் பெரும்பான்மையான தலித் வாக்காளர்கள் விபிஏ, எம்விஏ இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று நம்பினர், துரதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு இயக்கங்களாலும் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை

மகாராஷ்டிராவில் தலித்துகள் மத்தியில் பாஜக அரசியல் ஊடுருவியுள்ளதா? இந்துக்களிடமிருந்து இடஒதுக்கீட்டை இஸ்லாமியர்கள் பறிக்கிறார்கள் என்ற வாதத்திற்கு மாநிலத்தில் ஆதரவு கிடைத்துள்ளதா? தமிழகத்தில் பள்ளர் தலித் சாதியை தன்பக்கம் கொண்டு வர பாஜக பல முயற்சிகளை மேற்கொண்டது. இரண்டு பெரிய தலித் சாதிகளான பறையர்கள் மற்றும் அருந்ததியர்களைச் சேர்க்காமல் விட்டாலும், பள்ளர்களைச் சேர்த்து உள்ளடக்கிய ஓர் அரசியல் தந்திரத்தைப் பாஜக பிரயோகப்படுத்த முயன்றது.  

மஹாராஷ்டிராவைப் பொறுத்தவரை, மதாங்குச் சாதியினர் பாஜகவுடன் உள்ளனர். பாஜக மதாங்குச் சாதியினர்க்கு அரசாங்கத்திலும், தன்னாட்சி நிறுவனங்களிலும் சில முக்கிய பதவிகளை வழங்கியிருக்கிறது. ரஷ்யாவில் லோக்ஷாஹிர் அன்னபாவ் சாத்தேவின் சிலையைத் திறந்தது மற்றும் மாநிலத்தில் உள்ள பொது நிறுவனங்களில் சில முக்கிய பதவிகளை மதாங்குச் சாதியினருக்குக் கொடுத்தது ஆகிய செயல்கள் அந்தச் சமூகத்தின்மீது தாக்கம் செலுத்தியிருக்கிறது. தலித்துக்கான இட ஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்களின் பலன்களில் பெரும்பாலானவை ஆதிக்கம் செலுத்தும் மஹர்களால் பறிக்கப்படுகின்றன என்றும், அரசு அமைப்புகளிலும், பதவிகளிலும் மதாங்குகள் குறிப்பிடத்தக்க வகையில் எதையும் பெற்றுவிடவில்லை என்றும் மதாங்குச் சாதியினர் வருத்தத்தில் இருக்கின்றனர்.

ஒதுக்கப்படுகிறோம் என்ற இந்த உணர்வு, மகாராஷ்டிரத்தில் மதாங்குகளுக்கும், மஹர்களுக்கும் இடையே ஒரு போட்டியை உண்டாக்கி விட்டது. ஆதலால் மதாங்குச் சமூகத்தில் இருக்கும் வசதி படைத்தவர்கள் கடந்த சில ஆண்டுகளாகப் பாஜகவிற்கு ஆதரவான ஓர் அலையை உருவாக்கி விட்டனர். இதனால் வாக்குப்பதிவு சதவீதம் பாஜகவுக்கு அதிகரித்துள்ளது. சார்மகர்களும் தங்கள் வெளிப்படையான இந்து அடையாளத்தின் காரணமாக, பாஜகவுக்கு வாக்களிக்கவே விரும்புகிறார்கள்.

Share the Article
Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival