Read in : English
இசை உலகில் கொடிகட்டிப் பறந்த மிருதங்க மேதை காரைக்குடி மணி மே 4ஆம் தேதி பிற்பகல் 12.50 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 77. மிருதங்க வாசிப்பில் புதுமை, நடை, மேடையில் அழகு ததும்ப வாசித்தளித்தல் ஆகியவற்றில் ஈடு இணையற்ற தனித்துவத்தையும் மரபையும் உருவாக்கிய கலைஞர் அவர். அவரது இழப்பு கலையுலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் இசை உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது வாசிப்பைப் பற்றிச் சொல்வதென்றால், மிருதங்க சொற்களை, ஒவ்வொரு சொல்லுக்கும் அவற்றிற்கு உரித்தான அழுத்தத் தன்மையுடன் (pressure) அளிப்பதில் அவர் வல்லவர், அதி வல்லவர். காலப் பிரமாணம் கச்சிதமாக இருக்கும். மணியின் தனியாவர்ததன மணிகளைக் கேட்பதெற்கென்றே ஒரு தனிக்கூட்டம் உண்டு.
மேல் கால வாசிப்பிலும் சொற்களை ஒரு உன்னதமான, மாசற்றத் தெளிவுடன் கொடுத்தவர் மணி.கண்களில் ஆழ்ந்த கவனிப்பு. மெயின் ஆர்டிஸ்டை கவனித்த வண்ணமே இருப்பார். எண்ணற்ற சீடர்கள் அவருக்கு. முக்கியமாக ரமேஷைச் சொல்லலாம். இவர் ஒரு ஆல் இந்தியா ரேடியோ ஆர்டிஸ்ட். மணி, தனது குருவாக சுரஜா நந்தாவைக் கொண்டிருந்தார்.
உலகம் முழுவதும் சுமார் 1200 சீடர்கள் மணிக்கு உள்ளனர். 1984இல் மணியால் நிறுவப்பட்ட ஸ்ருதிலயா என்ற நூதன தாள இசைக் குழு, உலகம் முழுவதும் நிகழ்ச்சிகளை வழங்கி வந்திருக்கிறது
11.09.1945இல் காரைக்குடியில் டி ராமநாத ஐயருக்கும் பட்டமாளுக்கும் மகனாகப் பிறந்தார் மணி. காரைக்குடி ரங்கு அய்யங்காரிடம் ஆரம்பத்திலும், பிறகு டி.ஆர்.ஹரிஹர சர்மா, கே.எம்.வைத்யநாதன் ஆகியோரிடமும் மிருதங்கப் பயிற்சியை பெற்றார். மணி 1963இல் அதாவது, தனது 18வது வயதில் தேசிய அளவில், குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடமிருந்து தனது முதல் விருதைப் பெற்றார். 1998இல் சங்கீத நாடக அகாடமி விருதை வென்றார்.
கடைசி வரை உற்சாகமாக வாசித்துக் கொண்டிருந்து, சில நாட்களுக்கு முன்பு ஓர் ஆல்பத்தை பதிவு செய்தார். சில குறிப்பிடத்தக்க தனியாற்றல்கள் இதில் வெளிப்பட்டிருந்தன.
இந்தியாவின் கலாசார தூதர்களுள் ஒருவரான மணி, தனது அசாதாரண மிருதங்க வாசிப்புத் தன்மையை ஒவ்வொரு கச்சேரியிலும் வெளிப்படுத்தினார். தென்னிந்தியப் பாரம்பரிய இசைத் திறையில் ரிதத்தைப் பொருத்த வரையில் ஒரு புதுமைப்பித்தன் என்றே இவரை கருதிக் கொள்ளலாம். அவரது முழு அர்ப்பணிப்பு மற்றும் கலையின் மீதான கொண்டுள்ள ஈடுபாட்டால், மணியின் மூலம் மிருதங்கத்தில் உருவான பாணி/பள்ளியை சேராத கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட, இந்த பாணியை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 1200 சீடர்கள் மணிக்கு உள்ளனர்.
மேலும் படிக்க: பாம்பே சிஸ்டர்ஸ் லலிதா – காற்றில் கலந்த கானம்!
1984இல் மணியால் நிறுவப்பட்ட ஸ்ருதிலயா என்ற நூதன தாள இசைக் குழு, உலகம் முழுவதும் நிகழ்ச்சிகளை வழங்கி வந்திருக்கிறது. இது இந்தியாவின் தாள வாத்தியங்களில் முன்னணியில் இருக்கும் மிருதங்க வித்வான்களுடன் இணைந்து, ஆஸ்திரேலியாவின் பால் க்ரோபோவ்ஸ்கி மற்றும் ஃபின்லாந்தின் நாட்டின் ஈரோ ஹமீனிமியின் தலைமையில், ஜாஸ் வடிவத்தில் ஆஸ்திரேலிய ஆர்கெஸ்ட்ராவை ஒத்த கலைஞர்களுடன் இணைந்து செயல்பட்டு வந்த, ஒரு சிறந்த தரவரிசை கலைஞர்களைக் கொண்ட குழுவாகும்.
ஸ்ருதிலயா சேவா டிரஸ்ட் மற்றும் ஸ்ருதி லயா கேந்திரா ஆகியவை மிருதங்க வித்வான் மணியால் நிறுவப்பட்டவை. இவை இசை மற்றும் இசைக்கலைஞர்களுக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு முதன்மை நிறுவனமாகும். இது முதன்முதலில் ஒரு தாள வாத்தியக்காரரால் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இதற்கு உலகம் முழுவதும் 4 நகரங்களில் துணை மையங்கள் உள்ளன. இந்தியாவைப் பொருத்த மட்டில் சென்னை, மைசூர், சாலக்குடி மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் உள்பட உலகம் முழுவதிலுமே பரவி இருக்கிறது.
தனிக் கச்சேரிகளை வெற்றிகரமாக நடத்தி மேடையில் மிருதங்கத்தை ஒரு முக்கிய இசைக்கருவியாக அங்கீகாரம் பெறுவதில் மணி முன்னோடியாக இருந்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. தென்னிந்தியாவின் அனைத்து முன்னணி இசைக்கலைஞர்களின் கச்சேரிகளில் மணி பக்க வாத்தியம் வாசித்துள்ளார். மேடையில் மிருதங்கத் தனித் தாளக் காட்சியை (ஸோலோ) வழங்கிய பெருமை இவருக்கு உண்டு. புதிய பரிமாணத்தை பரதநாட்டியத்தின் மூலம் மணி புதுமை செய்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
தென்னிந்தியாவின் அனைத்து முன்னணி இசைக்கலைஞர்களின் கச்சேரிகளில் மணி பக்க வாத்தியம் வாசித்துள்ளார்.தனிக் கச்சேரிகளை வெற்றிகரமாக நடத்தி மேடையில் மிருதங்கத்தை ஒரு முக்கிய இசைக்கருவியாக அங்கீகாரம் பெறுவதில் மணி முன்னோடியாக இருந்திருக்கிறார்
மிருதங்கத்திற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டு, வாழ்க்கைத் துணை என்ற ஒன்றை நாடாமலே இருந்து விட்டார். இசையில் தாளத்தின் மதிப்பையும், தாளத்தில் மிருதங்கத்தின் பங்கையும் பிரச்சாரம் செய்யும் பணியை இன்னும் பன்மடங்கு உறுதியுடனும் உற்சாகத்துடனும் மணி மேற்கொண்டு வருகிறார்.
ராஜேஸ்வரி சாய்நாத்துடன் இணைந்து ஸ்ருதி லய கேந்திரா நடராஜாலயா என்ற நிறுவனத்தை மணி அமைத்து, அதன் இயக்குநராக, மெல்லிசை, தாளம், நடனம் ஆகியவற்றை ஒருங்கமைக்கும் குழுமங்களை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க: சங்கீத கலாநிதி விருது பெறும் பம்பாய் ஜெயஸ்ரீ!
சிலர் இந்த உலகத்தை முன்னிருந்ததைக் காட்டிலும் தங்களால் இயன்ற வரை மேம்படுத்திக் காட்டுவேன்; அது நிறைவேறாமல் தணியேன் என்றிருப்பர். அயராது இந்த இலக்கு நோக்கியே பயணிப்பார்கள். அத்தகையவர்களை நாம் ஒருபோதும் எளிதில் மறத்தல் இயலாது. இத்தகையவர்களில் ஒருவர்தான் மிருதங்க வித்வான் காரைக்குடி மணி.
Read in : English