Read in : English

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கும் நிலையில் பெரும்பாடு பட்டு தமிழக மாணவர்கள் அங்கிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். சிலர் குண்டுவீச்சு நடந்துகொண்டிருக்கும் பகுதிகளை கடந்து வந்திருக்கிறார்கள் மற்றும் பலர் நீண்டதூரம்  பயணம் மேற்கொண்டு, உக்ரைனின் அண்டை நாடுகளை அடைந்து அங்கிருந்து இந்திய அரசால் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். இங்கு மருத்துவ படிப்புப் படிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில் நூற்றுக்கணக்கான தமிழக மாணவர்கள் உக்ரைனின் மருத்துவ கல்லூரிகளில் பயில்கிறார்கள். கல்வி நிறுவனங்களின்  கட்டமைப்பை மனதில் வைத்து அங்கு சென்று பொறியியல் படிக்கும் மாணவர்களும் அதிகம்.

உக்ரைனின் மீதான ரஷ்யா தாக்குதல் சட்டென்று நிகழ்ந்தல்ல. அதற்கு ஒரு நெடிய வரலாறு உண்டு. சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன், சோவியத் ரஷ்யா சிதைந்த பிறகு, அது மெல்ல மெல்ல மேற்கு நாடுகளை நோக்கி நகர துவங்கிவிட்டது. 1991ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா உடையும் தருவாயில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைக் கொண்ட  வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு என்ற நேட்டோ அமைப்பு, அன்றைய ரஷ்யா அதிபர் கோர்பசேவுக்கு ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொடுத்தது. கிழக்கு நோக்கி நேட்டோ விரிவடையாது என்று ஒப்பந்தத்தில் இருந்தாலும்கூட, கிட்டத்தட்ட சோவியத்தில் அங்கம் வகித்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளை உறுப்பு நாடுகளாக சேர்த்துக்கொண்டு ரஷ்யாவின் வாயில்வரை நேட்டோ விரிவடைந்து வந்திருக்கிறது.   ரஷ்யாவின் பாதுகாப்பு குறித்து புடின் கவலைப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. ரஷ்யா ஆதரவு அதிபர் நாட்டை விட்டு விரட்டப்பட்டு மேற்கு நாடுகளின் ஆதரவு அதிபர்கள் உக்ரைனை ஆள்கிறார்கள். உக்ரைனை நேட்டோ அமைப்பை நோக்கி நகர விடாமல் தடுக்கவும் உக்ரைனில் வசிக்கும் ரஷ்யர்களின் பாதுகாப்புக்காகவும் இந்த போர் நடைபெறுவதாக ரஷ்யா அதிபர் புடின் அறிவித்திருக்கிறார்.

அனைவரும் ரஷ்யாவை ஒரு ஆக்கிரமிக்கும் ஒரு பகைவனாகக் கருதவில்லை. அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தையும் சீர்தூக்கி பார்க்கும் ஒரு போக்கு நமது மாணவர்களுக்கு உள்ளது. தங்களின் இரண்டாம் வீடாக இருக்கும் உக்ரைனின் மீதுள்ள பாசமும் முக்கியமாக மாணவிகளுக்கு அதிகமாக இருக்கிறது.

சில ஆண்டுகளாக உக்ரைனில் தங்கி படித்து வரும் நமது தமிழக மாணவர்கள் இந்தப் போரை எப்படி பார்க்கிறார்கள்? தங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியிருக்கும் ரஷ்யாவின் படையெடுப்பு பற்றி மாணவர்களின் கருத்து என்னவாக இருக்கிறது என்று தாயகம் திரும்பியிருக்கும் சில மாணவர்களிடம் உரையாடியபோது, அனைவரும் ரஷ்யாவை ஒரு ஆக்கிரமிக்கும் ஒரு பகைவனாகக் கருதவில்லை. அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தையும் சீர்தூக்கி பார்க்கும் ஒரு போக்கு நமது மாணவர்களுக்கு உள்ளது. தங்களின் இரண்டாம் வீடாக இருக்கும் உக்ரைனின் மீதுள்ள பாசமும் முக்கியமாக மாணவிகளுக்கு அதிகமாக இருக்கிறது. நமது மாணவர்கள் சொல்வதை பார்ப்போம்.

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த சாமுவேல் சூரிச் ராவ், ரஷ்யா சாதாரண மக்களை கொல்லத் தலைப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறார். அறிஞர்கள் முதல் விளையாட்டுவீரர்கள் வரை உக்ரைனியர்கள் ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்த துவங்கியுள்ளனர். இந்த நிலையில், இந்தப் போரை உடனடியாக நிறுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்துகிறார்.  தாங்கள் சொந்த நாடு திரும்புவதற்காக, ருமேனியா எல்லைக்கு சென்ற போது ருமேனிய மற்றும் உக்ரைனிய தன்னார்வ தொண்டர்கள் தங்களுக்கு மிகவும் உதவியாக இருந்ததை நினைவுகூர்ந்தார். உக்ரைனில் நான்காம் ஆண்டு மருத்துவப் படிப்பு படிக்கும் மாலினி அமெரிக்க ஐக்கிய நாடுகளை நம்பி உக்ரைன் மோசம் போனதாகக் கருதுகிறார். இந்தப் போருக்கு நேட்டோவும் அமெரிக்காவும் தான் காரணம் என்கிறார் மாலினி.

மக்கள் வசிக்கும் நகரங்களையும் தவிடு பொடியாக்கி வருகிறது ரஷ்யா ராணுவம். போரின் கடைசி நேரம்வரை தங்களை வெளியேற்ற முயற்சிக்காத மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறார் ரம்யா.

உக்ரைனில் மருத்துவம் படிக்கும் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ரஷ்யா அதிபர் புடின், உக்ரைனின் எளிய மக்களின் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் வன்முறையாக இந்தப் போரை பார்க்கிறார்.  ராணுவ நிலைகளை மட்டும் புடின் குறிவைப்பது இல்லை. மக்கள் வசிக்கும் நகரங்களையும் தவிடு பொடியாக்கி வருகிறது ரஷ்யா ராணுவம். போரின் கடைசி நேரம்வரை தங்களை வெளியேற்ற முயற்சிக்காத மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறார் ரம்யா.

எல்லா மாணவர்களும் ரஷ்யாவை கண்டிக்கவில்லை. அவர்கள் தரப்பு நியாயத்தையும் முன்வைக்கிறார்கள். உக்ரைனில் கடைசி ஆண்டு மருத்துவப் படிப்பை மேற்கொண்டிருக்கும் ரூபன் க்ளாட்வின் மூன்று ஆண்டுகள் ரஷ்யாவிலும் மூன்று ஆண்டுகள் உக்ரைனிலும் கழித்திருக்கிறார். ரஷ்யர்களும் உக்ரைனியர்களும் அன்பான மக்கள் என்று கூறும் க்ளாட்வின், அவர்களது நாட்டுப்பற்று நம்மை வியப்பில் ஆழ்த்தும் என்கிறார். ரஷ்யா அதிபர் புடின் மற்றும் உக்ரைனிய அதிபர் செலன்ஸ்கை இருவருமே இந்த போருக்கு காரணம் என்கிறார். கிரிமியா பிரச்சினையை ரஷ்யாவுடன் உக்ரைன் பேசித் தீர்த்திருக்க வேண்டும். இந்தப் போரை உக்ரைன் தவிர்த்திருக்கலாம் என்கிறார் க்ளாட்வின் .

உக்ரைனில் கடைசி ஆண்டு மருத்துவப் படிப்பை படித்து வரும் ரூபன் க்ளாட்வின் மூன்று ஆண்டுகள் ரஷ்யாவிலும் மூன்று ஆண்டுகள் உக்ரைனிலும் படித்திருக்கிறார். கிரிமியா பிரச்சினையை ரஷ்யாவுடன் உக்ரைன் பேசித் தீர்த்திருக்க வேண்டும் என்றும், இந்தப் போரை உக்ரைன் தவிர்த்திருக்கலாம் என்றும் கூறுகிறார் க்ளாட்வின்

கம்பத்தைச் சேர்ந்த விஜய்ஆனந்த் இந்தக் கருத்தை ஒப்புக்கொள்கிறார். புடின் இடத்தில் யாராக இருந்தாலும் இப்படிதான் நடந்துகொள்வார்கள் என்கிறார் இவர். தங்களுடைய சொந்த விஷயங்களில் அமெரிக்காவோ நேட்டோவோ மூக்கை நுழைப்பதை உக்ரைன் அனுமதித்திருக்க கூடாது என்பது விஜய்ஆனந்தின் கருத்து.  உக்ரைனையும் அதனது அதிபரையும் முதுகில் குத்தப்பட்டவர்களாக தான் பார்ப்பதாகச் சொல்கிறார்.

ரஷ்யாவின் இறையாண்மையை பாதுகாக்க அதற்கு உரிமையுண்டு என்று கூறும் ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), நேட்டோ பக்கமே உக்ரைன் சென்றிருக்க கூடாது என்று கருதுகிறார். ஒவ்வொரு சோவியத் உறுப்பு நாடாக நேட்டோவில் இணைந்ததும் ரஷ்யா ஆதரவு அதிபர் நீக்கப்பட்டதும் ரஷ்யாவை அச்சுறுத்தியிருப்பது நியாயமே. இதில் புடின் செய்வதை தவறு என்று எப்படி சொல்வது  என்கிறார் ரமேஷ்.  ரஷ்யா பக்கமோ உக்ரைன் பக்கமோ சாயப்போவதில்லை என்று கூறும் மதுரையை சேர்ந்த தாமரைச்செல்வன் நிதிஸ் ரஷ்யர்களுக்கும் உக்ரைனியர்களுக்கும் அதிக வித்தியாசங்கள் ஒன்றும் இல்லை என்கிறார்.

இருதரப்பினரிடையும் தனக்கு நண்பர்கள் உண்டு என்று கூறும் நிதிஸ், இந்த போர் விரைவில் முடிவுக்கு வருவது அனைவருக்கும் நல்லது என்று கருதுகிறார்.    கிரிமியா மற்றும் லூபன்ஸ்க் பகுதிகளை கைப்பற்றி ரஷ்யா உக்ரைனியர்களை எப்பொழுதும் ஒரு அச்சத்திலும் அழுத்தத்திலும் வைத்திருந்தது என்கிறார் மயிலாடுதுறையை சேர்ந்த ஆர்த்திகா.
உக்ரைனியர்கள் பெண்களை மிகவும் மரியாதையாக நடத்துவார்கள் என்று கூறும் இவர், ரஷ்யா தொடுத்துள்ள இந்தப் போர் தேவையற்ற ஒன்று என்றும் இது விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என்றும் கருதுகிறார். ஒருவேளை தான் உக்ரைனுக்கு படிக்க சென்றிருக்காவிட்டால், இந்தியாவின் நட்பு நாடான ரஷ்யாவையே இந்த போரில் ஆதரித்திருப்பேன் என்கிறார் கும்மிடிபூண்டியை சேர்ந்த பரத். உக்ரைனில் வாழ்ந்து அந்த மக்களுடன் பழகிய பின்பு அவர்களை தன்னால் ஆதரிக்காமல் இருக்கமுடியாது என்கிறார் அவர்.

கோவில்பட்டியை சேர்ந்த ஹரிணி போர் தங்கள் வாசலில் வந்துவிட்ட சூழ்நிலையிலும் உக்ரைனியர்கள் தங்களை எப்படி பார்த்துக்கொண்டார்கள் என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். தாங்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் பாதுகாப்பாக நாடு திரும்ப தங்களை வலியுறுத்தியதாக’ கூறியதை நினைவு கூறும் ஹரிணி, அவ்வளவு நல்ல மக்களை தங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. தான் எப்போதுமே உக்ரைனியர்கள் பக்கம்தான் என்கிறார் இந்த மாணவி.

 

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival