Read in : English
தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், கடந்த 8ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை நீட் தேர்வு மீதான அரசின் நிலைப்பாட்டை சிறப்பாக எடுத்துரைத்தது. இது திராவிட இயக்கத்தின் அரசியல் வரலாறு, சட்டப்பேரவை வரலாறுடன் சமூக நீதி மற்றும் மாநில உரிமைகளுக்கான அதன் அர்ப்பணிப்பை உறுதிபடக் கூறுகிறது.
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை வலியுறுத்தியபோதும், நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் வழக்கு புறக்கணிக்கப்படுகிறது அல்லது விசாரிக்க மறுக்கப்படுகிறது என்று முதல்வர் வேதனை தெரிவித்தார். இந்த விவகாரத்தில், இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் அடுத்தவர் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்காமல், தங்கள் நிலைப்பாட்டைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றனர்.
மக்களிடம் இருந்து விரிவான கருத்துகளை பெற்று பரிந்துரை செய்வதற்காக நீதிபதி ஏ.கே. ராஜன் குழு அமைக்கப்பட்டது என்று முதலமைச்சர் தெரிவித்தார். நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பெறப்பட்ட நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதியின் கருத்துகள் ஏற்கனவே தெரிந்தவையே. உதாரணமாக, நீட் மீதான தடையை 2016ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நீக்கியதை எதிர்த்து ராஜன் எழுதியிருந்தார். குழுவின் அறிக்கையில் என்ன இருக்க வேண்டும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டதால், மருத்துவக் கல்வி வணிகமயமாவதைப் பற்றி முழுமையாக ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை முன்வைக்கவில்லை.
மருத்துவக் கல்வி வணிகமயமானதன் காரணமாகவே, உச்சநீதிமன்றம் நீட் தேர்வை அனுமதித்து, பின்னர் அதனை அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது. வணிகமயமாக்கலுக்கு எதிராக நீட் செயல்படுகிறது என்ற வாதத்தில், நீட் பயிற்சிளில் பயிற்சிக்கான செலவுகள் குறித்து ராஜன் குழு அறிக்கை பேசினாலும் பிரச்சினை மிகவும் பெரியது.
மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்பட்ட அதீத நன்கொடையும், அளவுக்கதிகமான கேபிடேஷன் கட்டணமும், 2020இல் உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக மேற்கோள் காட்டப்பட்டன. ஆனால், ராஜன் குழுவின் அறிக்கையோ, திராவிடக் கட்சிகளோ இதைப் பெரிய அளவில் எடுத்துக் கொள்ளவில்லை
மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்பட்ட அதீத நன்கொடையும், அளவுக்கதிகமான கேபிடேஷன் கட்டணமும், 2020இல் உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக மேற்கோள் காட்டப்பட்டன. ஆனால், ராஜன் குழுவின் அறிக்கையோ, திராவிடக் கட்சிகளோ இதைப் பெரிய அளவில் எடுத்துக் கொள்ளவில்லை
நீட் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கக் காரணமான உச்ச நீதிமன்ற வழக்குகளுகும், மாநில சட்டத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியது உண்மைதான். அந்தத் தீர்ப்புகள், கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பதில் அரசியலமைப்புச் சட்டப்படி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு எதிராக நீட் தேர்வு செயல்படுகிறது என்று தொடரப்பட்ட மனுக்கள் தொடர்பானவையே.
மாநில உரிமைகளை நசுக்குகிறது என்று கூறப்பட்டதனாலேயே 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நீட் தேர்வுக்குத் தடை விதித்தது. ஆனால் அதன்பிறகு நீட் தேர்வை அமலுக்குக் கொண்டு வருவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
நீட் விலக்கு மசோதா, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், பொதுப்பிரிவில் உள்ள, கல்வி மீதான மாநில உரிமைகள் பற்றியது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். மாநில உரிமைகளை நசுக்குகிறது என்று கூறப்பட்டதனாலேயே 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நீட் தேர்வுக்குத் தடை விதித்தது. ஆனால் அதன்பிறகு நீட் தேர்வை அமலுக்குக் கொண்டு வருவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 254(1)ஆவது பிரிவை, ஸ்டாலின், தவறாக மேற்கோள் காட்டினார். மத்திய அரசின் சட்டத்திற்கு எதிரான ஒரு சட்டத்தை ஏதேனும் ஒரு மாநிலம் இயற்றினால், மத்திய சட்டமே செல்லும் என்று அந்த சட்டப்பிரிவு கூறுகிறது. ஆனால் சட்டப்பிரிவு 254(2)இன் படி, எந்தவொரு மாநிலமும் அத்தகையச் சட்டத்தை நிறைவேற்றினால், அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படலாம். அதன் பிறகு அந்தச் சட்டம் அந்த குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும் நடைமுறையில் இருக்கும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் தனிப் பிரிவின் கீழ், ஆளுநர் தனது தனிப்பட்ட கருத்தைப் பொருட்படுத்தாமல் சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் கையெழுத்திட கடமைப்பட்டிருக்கிறார் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் இந்த மசோதாவை ஒருமுறை மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சில் நீட் தேர்வை நடைமுறைப்படுத்த முனைந்தபோது, திமுக தலைவராக இருந்த கருணாநிதி அதை எப்படி எதிர்த்தார் என்பது குறித்து ஸ்டாலின் பேசினார். அப்போது, மத்திய அரசில் திமுக அங்கம் வகித்த போதும், அதன் அமைச்சர்கள் எவரும் கல்வித்துறைக்குப் பொறுப்பு வகிக்கவில்லை.
மத்தியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுகளில் திமுக பங்கு வகித்தது. ஆனால், அது கல்வி, மொழி, கலாச்சாரம், கலை, தொல்லியல் போன்ற துறைகளை அமைச்சர்கள் வகிக்கவில்லை. அதற்குப் பதிலாக வணிகம், கப்பல் போக்குவரத்து, உரம், தொலைத்தொடர்பு போன்ற இலாகாக்களை கேட்டுப்பெற்றது. திமுகவின் அரசியல் மையப்படுத்தும் கல்வி, கலாச்சாரம் போன்ற துறைகளைக் கேட்டுப் பெற்று, அவர்கள் விரும்புகிற மாற்றங்களைக் கொண்டுவர திமுக முயற்சித்து இருக்கலாம். ஆனால் அது அவ்வாறு செய்யவில்லை.
நீட் தேர்வின் முறைகேடுகளை பட்டியலிட்ட ஸ்டாலின், ஏழை மற்றும் சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான வாய்ப்புகளை, இப்படி ஒரு குறைபாடுள்ள தேர்வு எப்படி சிதைக்கும் என்று கூறினார். ஆனால் நீட் தேர்வு மட்டுமின்றி, பல தேர்வுகளிலும் முறைகேடுகள் பதிவாகியுள்ளன.
மாணவர்களின் தற்கொலைகள் குறித்தும், குறிப்பாக பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும், நீட்தேர்வால், மருத்துவப் படிப்பு மறுக்கப்பட்ட அனிதாவின் தற்கொலை குறித்தும் முதலமைச்சர் பேசினார். ஒவ்வொரு ஆண்டும், மனஉழைச்சல் காரணமாக ஒன்றிரண்டு மாணவர்கள் தேர்வுக்கு முன் அல்லது 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு தற்கொலை செய்து கொள்கிறார்கள். சாதாரணமாக கூகுளில் தேடினாலே இதுகுறித்த தகவல்களைப் பார்க்க முடியும். நீட் தேர்வினால் ஏற்படும் தற்கொலைகளுக்குக் காரணம், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் நிராகரிக்கப்பட்ட உணர்வும், அவர்களின் கனவுகளை நசுக்கியதும்தான்.
Read in : English