Read in : English

மெரினா கடற்கரையில் உள்ளிருப்புப் போராட்டமாகத் தொடங்கிய அந்த  போராட்டம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் முடிந்தது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள்வருடங்கள் தமிழ்நாடு தொடர்ந்து போராட்டங்களால் அதிர்ந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு அரசியல் அரங்கில் தவிர்க்க இயலாத தலைவர்களான கருணாநிதியும் ஜெயலலிதாவும் காலமானதை அடுத்து அரசியலில் திடீர் வெற்றிடம் ஏற்பட்டது.

போராட்டங்கள்கிளர்ச்சிகள் மூலம் அடக்கி வைக்கப்பட்ட சில உணர்வுகள் வெளிவருவதாகத் தோன்றுகிறது. இந்தக் கொந்தளிப்புகள் தமிழ்ப் பொது வாழ்வில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கின்றன. உளவுத்துறை அதிகாரிகள் போன்ற உயர் அலுவலர்கள் சில யூகங்களை இதற்க்கு [பின்னால் வைக்கின்றனர். அப்போது அதிகாரத்தில் இல்லாமல் இருந்த திமுகதமிழர் அடையாளத்தையும் மத்திய அரசு எதிர்ப்பு அரசியலையும் ஊதிப்பெருக்க முயல்கிறதுஇஸ்லாமிய அடிப்படைவாதிகள் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கிறார்கள்வளர்ச்சிக்கு எதிரான என்ஜிஓக்களின் தவறான கண்ணோட்டம் என்பன அவற்றில் சில. ஆனால்அனைத்து வெகுஜன போராட்டங்களும் பல்வேறு காரணிகள் உச்சம் பெறுவதாலேயே நிகழ்கின்றன. தங்கள் சொந்த நலன்களைக் கொண்ட பலதரப்பட்ட நபர்கள் பொதுவான இலக்கை நோக்கிச் செல்வதே போராட்டத்துக்கான காரணம். இருப்பினும்பொதுமக்களின் ஆதரவும் பங்கேற்பும் இல்லாமல், எந்த போராட்டமும் ஒரு அடையாளத்தை உருவாக்க முடியாது. 

ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் மதிக்கப்படவில்லை என்பதற்கு எதிரான உணர்வு. நெடுவாசல் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் அச்சத்தில் உள்ளனர். நியூட்ரினோ என்பது அறிவியலின் விளைவுகள் பற்றிய பயம். எவ்வாறாயினும்ஸ்டெர்லைட் விவகாரம் உண்மை அடிப்படையிலானது. மேலும்அந்த நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. உள்ளூர் மக்களுடன் நல்ல உறவைக் கொண்டிருக்காதஉள்ளூர் மக்களைச் சேர்க்காமல் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்திய ஒரு பெருநிறுவனம் மீதான கோபம்.

மகாராஷ்டிரத்தில் நடந்த போராட்டங்களால் ரத்னகிரியில் தன்னுடைய காப்பர் ஆலையை ஸ்டெர்லைட்டால் செயல்படுத்த முடியாமல் போனது. வங்கிச் சங்கச் செயல்பாட்டாளரான தனது மனைவிக்குமகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தோழர்கள் ஸ்டெர்லைட் குறித்து முன்கூட்டியே எச்சரித்ததாகவும்அவர் மூலம் ஸ்டெர்லைட் பற்றித் தெரிந்து கொண்டதாகவும் நினைவு கூர்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும்தூத்துக்குடியில் வசிப்பவருமான அப்பாதுரை. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் முகமான பாத்திமா பாபுஆரம்பத்தில் ஸ்டெர்லைட்டை ஊருக்கு வேலை வாய்ப்பையும்வளர்ச்சியையும் கொண்டு வரும் பன்னாட்டு நிறுவனமாக நம்பியதை நினைவு கூர்ந்தார். ஆனால்தாமிர உருக்காலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் கடலில் விடப்பட்டால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அவர் அவெலின் மேரி என்ற புகழ்பெற்ற கடல் உயிரியலாளரிடம் இருந்து  கேள்விப்பட்டார். பாத்திமா பாபு அப்போது தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தார். ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்ததையும் அவர் மற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்து அறிந்து கொண்டார்.

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வரும் கப்பல்களை முற்றுகையிடும் போராட்டத்தை தூத்துக்குடி மீனவர்கள் தொடங்கினர். அப்போதுகழிவுநீரை கடலில் விடமாட்டோம் என  ஸ்டெர்லைட் ஆலை உறுதியளித்ததைத் தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் பல்வேறு கட்டங்களாக பல்வேறு தரப்பினரையும்பல்வேறு ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்களையும் உள்ளடக்கியது.  

 

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் பல்வேறு கட்டங்களாக பல்வேறு தரப்பினரையும்பல்வேறு ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்களையும் உள்ளடக்கியது. உதாரணமாகவைகோநீதிமன்றத்தில் போராடியதோடு போராட்டங்களையும் வழிநடத்தினார். இருப்பினும் ஸ்டெர்லைட்டைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அவரது பேச்சைக் கேட்டாலும்போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதை நினைவுகூர்கின்றனர்.  தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு வைகோவின் மதிமுக சார்பில் பாத்திமா பாபு போட்டியிட்டார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தின் முக்கிய முகமாகத் திகழ்ந்த பாத்திமா பாபு

போராட்டத் தலைவர்கள்ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஆரம்பத்தில் தீவிரமாக இருந்த தமிழ்மாந்தன் என்ற ஒரு இடதுசாரி போராட்டக்காரர் பற்றி பேசுகிறார்கள். அவர் கடத்தப்பட்டு பிணைக் கைதியாக வைக்கப்பட்டார் என்ற வெளியான செய்திகளையும் அவர்கள் புன்னகையுடன் எதிர்கொள்கிறார்கள். போராட்டங்கள் ஓய்ந்து போனாலும்ஆர்வலர்கள் ஸ்டெர்லைட் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். உதாரணமாகபாத்திமா பாபு,  எழுத்தாளரும்சுற்றுச்சூழல் ஆர்வலருமான சென்னையைச் சேர்ந்த நித்யானந்த் ஜெயராமனுடன் சேர்ந்து பணியாற்றினார். இதழியல் பயின்றிருந்தாலும் ஒரு தேர்ந்த பத்திரிகையாளராக எல்லா பக்கங்களையும் அலசி ஆராயமாட்டார். தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா (ஸ்டெர்லைட்) மற்றும் கொடைக்கானலில் உள்ள ஹிந்துஸ்தான் லீவர் போன்ற நிறுவனங்களை குறிவைத்து பிரச்சார அடிப்படையில் அவரது கட்டுரைகளும்புலனாய்வுப் பணிகளும் இருக்கும். உதாரணத்திற்கு, நித்யானந்த் ஜெயராமனின் பணிஸ்டெர்லைட்டின் புகைபோக்கி உயரம் விதிமுறைகளை விட மிகக் குறைவாக இருப்பதைக் காட்டியது. மேலும்ஸ்டெர்லைட்டை ஆய்வுக்கு உட்படுத்தும் நீதிமன்ற உத்தரவுகளைப் பெறவும் காரணமானது. உமிழ்வுகளை வெளியேற்ற உதவும் ஒரு உயரமான புகைபோக்கி மக்களை அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்காது.

பொதுமக்களுடன் கலந்து பழகக்கூடிய பாத்திமா பாபுவை பலரும் அக்கா என்று அழைப்பார்கள். மீனவ சமூகத்தில் இருந்து வந்த அவர் கிறிஸ்தவராக இருந்தாலும்ஆச்சாரமான இந்து ஒருவரைத் திருமணம் செய்துள்ளாதாக அவர் கூறுகிறார். இடதுசாரிகள் அவரை தன்னை மக்களிடமிருந்து தனித்து தெரியும்வகையில் கட்டிக்கொள்ளும் ஒரு தலைவராகவே பார்க்கிறார்கள். தானும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டுபாளையங்கோட்டை சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த நேரத்தை நினைவு கூர்கிறார் பாத்திமா பாபு சிறை அனுபவம்வாழ்க்கையை மாற்றியமைத்ததாகவும்சாதாரணப் பெண்களுடன் தன்னை நெருக்கமாகக் கொண்டுவந்ததாகவும் கூறுகிறார். கணவரின் குடும்பத்தினர் அவரது செயல்பாட்டிற்குப் பழகிவிட்டதாக கூறும் பாத்திமாஆனால்தான் சிறைப்பட்டது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சியாக இருந்ததாகக் கூறுகிறார்.

தொழிற்சாலை மூடப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகியும்ஆலையை நிரந்தரமாக மூடுவதே ஒரே தீர்வு என்று பாத்திமா வலியுறுத்தினார்.  

தொழிற்சாலை மூடப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகியும்ஆலையை நிரந்தரமாக மூடுவதே ஒரே தீர்வு என்று பாத்திமா வலியுறுத்தினார். தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் பிற நுணுக்கமான விஷயங்களை நித்யானந்த் ஜெயராமனிடம் கேட்க வேண்டும் என்கிறார்.

பல்வேறு தரப்பினரும் பங்கேற்ற ஸ்டெர்லைட் போராட்டம்

இது போன்ற போராட்டங்களில்வணிகர்கள் சங்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவரான வெள்ளையன்,பிரச்சினைகளில் திராவிட அல்லது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை அடிக்கடி எடுத்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மெரினாவில் அவருடைய ஈடுபாடு தெரிந்தது. ஜல்லிக்கட்டுப் போராட்டக்காரர்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்க அவரது லாரிகள் வந்தன. மேலும்பெப்சி மற்றும் கோக்கைப் புறக்கணிக்குமாறும்தனது சங்கத்தில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் அவற்றை விற்க வேண்டாம் என்றும் வெள்ளையன் கேட்டுக் கொண்டார். வெள்ளையனுடன் இணைந்துஉள்ளூர் வணிகர்கள் சங்கங்கள் போராட்டங்களை ஆதரிப்பதில் சமீபத்திய ஆண்டுகளில் முக்கிய பங்கு வகித்தன.

தொடக்கத்தில் ஸ்டெர்லைட்டைச் சுற்றியுள்ள கிராம மக்களைப் போலவே வணிகர்களும் போராட்டங்களில் ஈடுபடாமல் இருந்தனர். ஒரு கட்டத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் துணை ஒப்பந்ததாரர்கள் மீதான தனது கொள்கையை மாற்றிக்கொண்டதும் அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொண்டதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து வணிகத்தைப் பெறுவதற்கு குறைந்தபட்ச விற்றுமுதல் வேண்டும் என்றது புதிய விதி. இதனால், சிறு வணிகர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்.

முதன்மையாக நாடார் சமூகத்தினரையும்சிறிய அளவில் பிள்ளை சமூகத்தினரையும் கொண்ட வணிகர்கள்சமீபகாலமாக தூத்துக்குடி மீனவர் மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளனர். 1990களில்,  நாடார்களுக்கும் பரவர்களும் இடையே நடந்த மோதல்கள் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தன. இந்த மோதல்களை தொடர்ந்து, இரு சமூகங்களுக்கு இடையேயான நல்லுணர்வு மற்றும் அமைதியை நிலைநாட்டவே மீனவர்கள் போராட்டங்களுக்கு தாங்கள் பெரும்பாலும் ஆதரவு அளித்து வருவதாகக் கூறுகிறார் வணிகர் சங்க பொருளாளர் செந்தில்  ஆறுமுகம். மே 22 அன்றுதுப்பாக்கிச் சூடு நடந்தபோதுவணிகர்கள் சங்கம் அணிவகுப்பில் பங்கேற்கவில்லை என்றாலும்ஸ்டெர்லைட் மீதான அதன் நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில் அது கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தது.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் ஒரு ஒருங்கிணைப்புக் குழுவால் நடத்தப்பட்டது. அமைப்புப்பெயர் மாறிக்கொண்டே இருந்தது. விடுதலைச் சிறுத்தைகள்நாம் தமிழர் போன்ற சில கட்சி ஆர்வலர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் அதில் அங்கம் வகித்தனர்இருப்பினும் பாத்திமா பாபு அதில் நிரந்தரமாக இருந்தார்.

சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படஆலை விரிவாக்கத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கினர். நெஞ்சு அடைப்புமூச்சு விடுவதில் சிரமம் மற்றும் துர்நாற்றத்துடன் தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்திருப்பதைப் பற்றி அவர்கள் இன்னும் பேசுகிறார்கள்.  

அரசியல்வாதிகள்ஆர்வலர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தாலும்அது ஒரு போர்க்குணமிக்க தொனியைப் பெறவில்லை. மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில்ஸ்டெர்லைட் ஆலையின் உற்பத்தித் திறனை 4 லட்சம் டன்னிலிருந்து 8 லட்சம் டன்னாக விரிவாக்கும் பணியைத் தொடங்கியது. கிராமங்களுக்கு அருகில் கட்டுமானப் பணிகள் முழு அளவில் தொடங்கப்பட்டன. சுற்றுசூழல் பாதுகாப்பில் மோசமான முன்னுதாரணம் கொண்ட ஆலையின் விரிவாக்கத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கினர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஸ்மெல்டர்

நெஞ்சு அடைப்புமூச்சு விடுவதில் சிரமம் மற்றும் துர்நாற்றத்துடன் தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்திருப்பதைப் பற்றி அவர்கள் இன்னும் பேசுகிறார்கள். தூத்துக்குடியில் ஆலை விரிவாக்கத்திற்கு எதிராக ஒரு நாள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டதாகக் கூறிய குமரெட்டியபுரம் போராட்டத்தின் தலைவர் முருகன்கிராம மக்களை சந்திக்கவோஅவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்கவோ யாரும் வரவில்லை என நினைவு கூர்ந்தார். எனவேஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மெரினாவில் தங்கியிருந்தது போல் அவர்கள் போராட்ட இடத்திலும் இருக்க முடிவு செய்தனர்.

போராட்ட இடத்திற்கு வந்த ஒருங்கிணைப்புக் குழுவை கிராம மக்கள் அழைத்தனர். அவர்களை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைக்கப் போவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கைதுசிறைவாசம் ஆகியவற்றிற்குப் பழக்கமில்லாத கிராமத்து மக்களுக்கு இது முதல் அனுபவமாகும்.

போராட்டக்காரர்கள் ரிமாண்ட் செய்யப்படுவதாகவும்சட்ட உதவி தேவைப்படும் என்றும் தனது வழக்கறிஞர் சகாக்களிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகக் கூறினார் மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த ஹரிராகவன். அந்த நேரம் வரைபோராட்டம் பெரும்பாலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் வழிநடத்தப்பட்டது.

மக்கள் அதிகாரத்தின் பார்வையில்ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் ஒரு வெகுஜன எழுச்சியாக மாறியதுஅதற்கு அவர்கள் வழிகாட்டினர். உதாரணமாகஹரிராகவன்போராட்டக்காரர்களுக்கு துண்டுப் பிரசுரங்களை எழுதுவதற்கு உதவுவதுசட்டச் சிக்கல்கள் மற்றும் போராட்டங்களைத் திட்டமிடுவது போன்றவற்றைப் பற்றி பேசினார்.

சிபிஐசிபிஎம் போன்ற முக்கிய இடதுசாரிக் கட்சிகள் நிலைமையை மதிப்பிட்ட பிறகு போராட்டங்களுக்கு முன்னின்று தலைமை தங்குவார்கள். ஆனால் மக்கள் அதிகாரம் மக்களைப் போராட்டங்களின் முதன்மைத் தலைவர்களாகப் பார்க்கிறது. அவர்களுக்குப் பின்னால் இருந்து ஆதரவளிக்கிறது. 

மார்ச் 24 பொதுக் கூட்டம் நிர்வாகத்தால் அனுமதிக்கப்படவில்லைஆனால் இறுதியில் உயர் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தனது நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான போராட்ட வாழ்வில்இதுபோன்ற வெகுஜன ஈடுபாட்டை தான் பார்த்ததில்லை என்றார்  இந்தியக் கம்யூனிஸ்ட் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாதுரை. போராட்டத்தின் தீவிரம் கூடிக் கொண்டிருந்தது.

ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகுசிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர். மே 22, 2018 அன்று தூத்துக்குடி குமரெட்டியபுரம் கிராம மக்கள் தாங்கள் தொடங்கிய போராட்டத்தின் 100வது நாளை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றபோதுஅது சோகத்தில் முடிந்தது

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival