Read in : English

Share the Article

பொது விவாதங்கள், ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகள் துடிப்பான ஜனநாயகத்தின் முக்கிய மூலக்கூறுகளாகும். மோசமான ஆட்சி அல்லது தவறான நிர்வாகம் இதை சிதைத்துவிடும். தவறான நிர்வாகம் என்பது மெதுவாக வெளிப்படும். ஒருசிலரால் மட்டுமே என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஜனநாயகம் என்பது சிலர் நினைப்பதுபோல சமீபத்தில் இறக்குமதியானது அல்ல,அது நாட்டின் நீண்ட வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

துரதிஷ்டவசமாக கடந்த 200 ஆண்டுகளாக நிர்வாகம் என்பது அதிகாரம் பரவலாக்கப்பட்ட ஜனநாயாக நெறிமுறைகளுக்கு எதிரான ஆட்சி முறையாக மாறிவிட்டது. ஜனநாயக உணர்வின்படி பேச்சு சுதந்திரம் என்பது அர்த்தமுள்ள விவாதங்களுக்கு அடிப்படையானது. சிறந்த ஒரு ஜனநாயகத்தில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப்போல எந்தவித தடைகளும் இல்லாமல் இருதரப்புக்கும் இடமளிக்க வேண்டும். உண்மையான நடைமுறையில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் அரசியலமைப்பு சட்ட நடைமுறையிலிருந்து விலகிச் செல்கின்றன.

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பேச்சு சுதந்திரத்தை நசுக்குவது என்பது மிகவும் கவலை அளிக்கிறது. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மதங்கள், ஜாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகப் பேச்சுச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதில் குறியாக செயல்படுகிறது. ஊடகங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் முறைகளைக் கையாளுகிறது. விவாதங்களில் திமுகவின் தலையீடுகள் ஒருமித்த கருத்தை எட்ட உதவவில்லை.

அவர்கள் துவேஷத்துக்கே துணைபோகின்றனர். அவர்களின் தேசியவாத நற்சான்றிதழ்கள் சந்தேகத்துக்குரியவை. நாட்டின் ஒருமைப்பாடு அர்ப்பணிப்பு அவர்களிடம் இல்லை. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கும் இதில் வித்தியாசம் இல்லை. தேசியவாத எழுத்தாளரும் விமர்சகருமான மாரிதாஸ் சமீபத்தில் கைது செய்யப்பட்டிருப்பது அதிகாரம் எப்படி துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதற்கு சிறந்த உதாரணம். பேராசிரியர் ஆருத்ர புர்ரா (2018) குறிப்பிட்டபடி, அரசியல்
பேச்சுக்கள் பற்றிய விவாதம் 1963ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்துடன் முடிந்து விடுகிறது.

இந்தத் திருத்தத்தின் மூலம் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் வகையில் பேச்சைக் கட்டுப்படுத்த அரசமைப்புச் சட்டம் மாநில நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கியது. இதன் முக்கிய நோக்கமானது அந்தக் காலத்தில் திமுக, திராவிடநாடு கோரிக்கை எழுப்பியதை கட்டுப்படுத்துவதற்கானதாகும். (பிரிவினைக்கான வக்காலத்து 1967இல் மட்டுமே அதிகாரப்பூர்வமாக, சட்ட விரோதமானது.) சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்த ஒரே நபர், மாநிலங்களவையில் திமுகவின் பிரதிநிதியாக இருந்த சி.என். அண்ணாதுரை.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் விவகாரங்கள் மற்றும் அவற்றின் தவறான செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டப்படி உரிமை உண்டு. நாட்டின் இறையாண்மையை அரசியலமைப்புச் சட்ட முறைப்படி பாதுகாக்கவே மாரிதாஸும் முன்வந்தார்.  

கடந்த திமுக ஆட்சிக் காலத்திலும் ஊடகச் சுதந்திரத்தின் மீது தாக்குதல்கள் நடைபெற்றன. கருத்துச் சுதந்திரத்தை திமுக ஆட்சி ஒடுக்குவதாகச் செய்திகள் வந்தன. துக்ளக் மற்றும் குமுதம் இதழ்கள் மீதான தாக்குதல்கள் இதை வெளிச்சம்போட்டு காட்டின. கடந்த பத்தாண்டுகளில் திராவிட இயக்கத்தினரின் தூண்டுதலின் பேரில் தெருமுனைப் போராட்டங்கள் நடைபெற்றதை தமிழ்நாடு பார்த்தது. தமிழர்களின் அடையாளத்தை பாதுகாக்கிறோம் என்கிற பெயரில் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியைக் கொடுப்பதே அவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் விவகாரங்கள் மற்றும் அவற்றின் தவறான செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டப்படி உரிமை உண்டு. நாட்டின் இறையாண்மையை அரசியலமைப்புச் சட்ட முறைப்படி பாதுகாக்கவே மாரிதாஸும் முன்வந்தார். நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தியாகிகளின் நினைவை அவமதித்தவர்களுக்கு அவர் தகுந்த பதிலடி கொடுத்தார்.

நீதிமன்றத்தின் ஆதரவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான மறுநாள் “திமுக ஆட்சியில் தமிழ்நாடு மற்றொரு காஷ்மீராக மாறிவருகிறது என்றும் நாட்டிற்கு எதிரான துரோக நடவடிக்கையில் ஈடுபடும் குழுக்களை உருவாக்க சுதந்திரம் அளிக்கிறது” என்றும் மாரிதாஸ் கருத்துகளை பதிவிட்டிருந்தார். இந்த சூழலில் எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டப்படலாம். இதுபோன்ற பிரிவினைவாத சக்திகளை அழிக்க வேண்டும் என்றும்
அதில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து போலீஸார் மாரிதாஸை கைது செய்தனர். எனினும் இந்திய தண்டனைச் சட்டம் 153, 504 மற்றும் 505 (2) மற்றும் பிரிவு 153-ஏ ஆகியவற்றின் கீழ் அவர் மீது சட்டவிரோதமாக வழக்குகள் போடப்பட்டுள்ளன என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, அவர் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்துச் செய்தது. மேலும் அவர் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்து வருவதால் அவர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

மாரிதாஸின் கருத்துக்களை மேலும் படித்த உயர் நீதிமன்றம், “மாரிதாஸின் டுவிட்டர் கருத்துகளைப் படிக்கும் போது மனுதாரர் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு ஆதரவாகவே அழைப்பு விடுத்துள்ளார் என்பது தெரியவருகிறது. சிலரின் தேசவிரோதமான செயல்களுக்கே அவர் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிரிவினைவாத சக்திகளை ஒடுக்குமாறு மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பிரிவினைவாத சக்திகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்
என்பதுதான் அவரின் நோக்கமாகும். அவரது டுவிட் அரசுக்கு எதிரானதாகவோ அல்லது அரசை கவிழ்க்கும் எண்ணத்திலோ அமையவில்லை. மாறாக அரசாங்கத்தின் அஸ்திவாரத்தை பலப்படுத்துவதற்கு அழைப்பு விடுப்பதாகவே உள்ளது”.

  மாரிதாஸ், பலதரப்பட்ட பொதுவான விஷயங்களில் வெளிப்படையான கருத்துகளைக் கூறிவந்துள்ளார். தி.க. மற்றும் தி.மு.க.வின் தீவிர நிலைப்பாடுகளுக்கு எதிராக அவர் குரல் கொடுத்துள்ளார்.

மாரிதாஸ், பலதரப்பட்ட பொதுவான விஷயங்களில் வெளிப்படையான கருத்துகளைக் கூறிவந்துள்ளார். தி.க. மற்றும் தி.மு.க.வின் தீவிர நிலைப்பாடுகளுக்கு எதிராக அவர் குரல் கொடுத்துள்ளார். திராவிடம் மற்றும் மார்க்சியத்தை அவர் இடைவிடாமல் எதிர்த்து வந்துள்ளார். விரிவான விளக்கப் படங்களின் வாயிலாக அவர் தனது பார்வையாளர்களுக்கு கருத்துகளை விளக்கியுள்ளார். சமூக ஊடகப் பயனாளர்களின் மத்தியில் அவர், தனி வெற்றியாளராகவே இருக்கிறார்.

தற்போதைய நிலையில் மாரிதாஸ் ஒரு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மாநிலத்தில் ஆளும் அரசு அவரை தொடர்ந்து துரத்துவதும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளதும் அரசியல் பழிவாங்கும் செயலுக்கு எடுத்துக்காட்டு. ஒரு வழக்கு 17 மாதங்களுக்கு முன்பு நியூஸ்-18 தொலைக்காட்சியில் நடந்த சர்ச்சைக்குரிய விவாதம் தொடர்பானது. அத்துடன், அப்போதைய நியூஸ்-18 ஊடகவியலாளர்களின் அரசியல் நம்பிக்கைகள் தொடர்பாக மாரிதாஸ் எழுப்பிய கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. மற்றொரு வழக்கு கோவிட்-19 தொற்றுப் பரவல் ஆரம்ப கட்டத்தில் அரசின் பொது சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்கள் மற்றும் நாட்டு மக்களின் நலன்களுக்காக வெளியிடப்பட்ட உத்தரவுக்கு இணங்க மறுத்தது தொடர்பானது. இந்த வழக்கை மெட்ராஸ் நீதிமன்ற மதுரை கிளை வியாழக் கிழமையன்று தள்ளுபடி செய்தது.

தேசியத்தின் மீது மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருப்பவர்கள் மற்றும் ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடுவதற்கான அரசியலமைப்பு முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இன்று மாரிதாஸ். நாளை நாமாகவோ அல்லது நமது குழந்தைகளாகவோ இருக்கலாம்!.

(கட்டுரையாளர் ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் பொதுக் கொள்கையில் நிபுணர்)


Share the Article

Read in : English

Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles Green path to health: Have a different keerai every day