Read in : English
பாதகாணிக்கைப் படத்துக்காக கவிஞர் கண்ணதாசன் எழுதி விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்து டி..எம். சௌந்தரராஜன் பாடிய நமது நினைவில் நிற்கும் பாடல்:
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
கண்ணதாசன் கவிதையில் உள்ள நான்கு வரிகள் உலக வாழ்க்கையில் எல்லாமே தற்காலிகமானது. எதுவும் நிரந்தரமில்லை என்பதுதான். பட்டித்தார் பாடலின் தாக்கம் அவரை இந்தப் பாடலை எழுதத் தூண்டியிருக்க வேண்டும்.
அந்தமும் வாழ்வும் அகத்து மட்டே
விழி அம்பொழுக மெத்திய மாதரும் வீதி மட்டே
விம்மி விம்மி இரு கை தலை மேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இரு வினை புண்ணியம் பாவமுமே.
நாம் வாழ்ந்த வாழ்க்கையும் தேடிய செல்வமும் வீட்டோடு இருந்து விடும் நம் சுக துக்கத்தில் பங்கு கொண்ட மனைவியும் வீதியோடு நின்று விடுவாள். நாம் பெற்ற மைந்தரும் தலையிலடித்து அழுது கொண்டு சுடுகாட்டுக்கு வந்து ஈமக்கடனை முடிக்கும் வரைதான், முடிவில் நம்முடன் வருவார் யார்? நாமும் யாருடனும் செல்ல முடியாது.
நம்முடன் யாரையும் அழைத்துச் செல்லவும் முடியாது. நாம் செய்த நன்மை தீமை என்ற இருவினையும் தாம் நம்மைத் தொடர்ந்து வரும். அதனால் புண்ணியம் இல்லாவிட்டாலும் பாவம் செய்யாமலிருப்போம். இதுதான் பட்டினத்தார் பாடலின் விளக்கம்.
பட்டினத்தார் பாடலின் கடைசி வரியை எழுதாமல், அதற்குப் பதிலாக, “`கடைசி வரை யாரோ?’ என்று எழுதியது ஏன் என்று கண்ணதாசனிடம் கேட்டதற்கு, “ஒருவர் செய்த கெட்ட செயல்கள் இறுதிவரை தொடர்ந்து வரும்” என்று சொல்ல விரும்பவில்லை என்று பதில் அளித்தார்.
கவிஞர்கள் எதிர்மறைச் சிந்தனைகளைச் சொல்லக்கூடாது. காரணம், அவர்கள் வாக்கு பலித்துவிடக்கூடும் என்பதுதான்.
கடந்த காலங்களில், ஏரிகளிலும் நதிக் கரைகளிலும் வீடுகளைக் கட்டவும், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கவும் அனுமதித்துவிட்டு, பின்னர், பணம் வாங்கிக் கொண்டு அந்த ஆக்கிரமிப்புக¬ளை சட்டப்படி வரைமுறைப்படுத்துதலும் நிகழ்ந்துள்ளது. கடந்த 50ஆண்டுகளுக்கு மேலாக இதுபோன்று நகரின் சூழலைப் பாதிக்கும் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
எனினும், நல்ல நோக்கத்துடன் முதல்வர் ஸ்டாலின், சென்னை நகரை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டுவருகிறார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளார். வாக்கு வங்கி
அரசியல் ஸ்டாலினையும் விட்டு வைக்கவில்லை.
சென்னையிலும் புறநகர்களிலும் முழங்கால் அளவு தண்ணீரில் முதல்வர் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை நகரின் உளகட்டமைப்பு வசதி சீரமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அதற்கு விரிவான அணுகுமுறையின் தேவையையும் இது காட்டுகிறது.
பல்வேறு வழக்குகளில் அரசின் பொறுப்பின்மை நீதிமன்றங்கள் கண்டித்துள்ளன என்பதால் பெருமைகொள்ள முடியாது. ஏனெனில் கடந்த பத்து ஆண்டுகளில் புதிதாகத் தொடங்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட நீதிமன்றங்களுக்கான கட்டடங்கள் நீர்நிலைகளின் மீது கட்டப்பட்டிருக்கின்றன.
ஏரிக் கரைகளிலும் நதிக் கரைகளிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களும் போலீஸ் நிலையங்களும் நீதிமன்றங்களும் கட்டப்பட்டன. நம்மைச் சுற்றியுள்ள அக்கறையின்மையே இது வெளிக்காட்டுகிறது.
சென்னையில் மழை நின்று இரண்டு நாட்களாகிவிட்ட சூழ்நிலையில் நகரின் சில பகுதிகளில் இன்னமும் தேங்கிய நீர் அகற்றப்படவில்லை. அங்கு வெளியேற முடியாமல் தங்கி இருக்கும் மக்களுக்கு சென்னை மாநகராட்சியும் தொண்டு நிறுவனங்களும் உணவு வழங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
சுரங்கப்பாதைகளில் உள்ள தண்ணீரை வெளியேற்றவும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மின்வசதியை ஏற்படுத்தவும் உடனடி நடவடிக்கைகள் தேவை. மழை காலத்தில் நகரின் பகுதிகளில் வெள்ள நீர் தேங்குவது என்பது வழக்கமான கதையாகிவிட்டது என்பது இந்த அரசு நிர்வாகத்துக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக இருக்காது.
மழை காலத்தில் நகரின் பகுதிகளில் வெள்ள நீர் தேங்குவது என்பது வழக்கமான கதையாகிவிட்டது என்பது இந்த அரசு நிர்வாகத்துக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக இருக்காது
எடுத்துக்காட்டாக, மாம்பலத்தில் கால்வாய் அடைப்புப் பிரச்சினையைத் தீர்த்து, தேங்கிக் கிடக்கும் தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் அதிகாரிகள் சிரமத்தில் ஆழ்ந்துள்ளனர்.
எவ்வளவு தண்ணீரை கால்வாய் மூலம் பம்ப் செய்து வெளியேற்ற முடியும் என்பதற்கு ஓர் எல்லை இருக்கிறது. தி.நகர்., கோடம்பாக்கம பகுதிகளில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றுவதற்கு இன்னும் இரண்டு நாட்களாவது ஆகும்.
இந்த நிலைமைக்கு தற்போதைய அரசை நேரடியாகக் காரணம் சொல்ல முடியாது என்றாலும்கூட, அரசுகள் மாறினாலும்கூட, மழை வெள்ளத்தில் தண்ணீர் தேங்குவது என்பது ஏற்கெனவே இருந்து வரும் பழைய கதைதான் என்று அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
தற்போதைய சூழ்நிலையில், ஏற்கெனவே திட்டமிட்டபடி டிசம்பர் மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆளும் திமுக தயாராகவில்லை என்றே தெரிகிறது.
டிசம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றங்கள் வலியுறுத்தியுள்ள போதிலும்கூட, சென்னை பெருநகரத்தில் தற்போதுள்ள வெள்ளச் சூழ்நிலையைகளையும் நிவாரணப் பணிகளையும் காரணம் காட்டி தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் கூறலாம்.
உள்ளாட்சித் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்ற திமுக, அதன் உற்சாகத்தால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும் நடத்துவதற்குத் தயாரானது. ஆனால், சமீபத்திய மழை வெள்ளபாதிப்பிலிருந்து வாக்காளர்கள் மீளாமல் இருக்கிறார்கள். அவர்கள் சகஜநிலைக்குத் திரும்புவதற்கு மேலும் சில நாட்களாகும். இதுவே தேர்தலைத் தள்ளி வைக்கக் காரணமாகிவிட்டது.
அதிமுக ஆட்சியின் மோசமான நிர்வாகத்தின் காரணமே தற்போது நெருக்கடிக்குக் காரணம் என்று திமுக நிர்வாகிகள் சுட்டிக்காட்டினாலும், இந்த இரண்டு கட்சிகளும் ஆட்சியில் இருந்த போது நிரந்தரத் தீர்வுக்குப் பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை.
2015ஆம் ஆண்டு பெருவெள்ளத்தை சென்னை மக்கள் மறந்துவிடவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து படிப்படியாகத் தண்ணீரைத் திறந்துவிடாமல், ஒரே நாளில் அதிக அளவு தண்ணீரைத் திறந்து விட்டதால் அடையாறு, கூவம் நதிக் கரையில் வாழ்ந்த மக்களின் வீடுகளும் சொத்துகளும் சேதமடைந்தன.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீரைத் திறந்து விடுவதில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தாமத நடவடிக்கைகளினால் ஏற்பட்ட பாதிப்பை சென்னை மக்கள் மன்னிக்கத் தயாராக இல்லை.
இது 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னைப் பகுதியில் எதிரொலித்தது. அதுவே சென்னைப் பகுதியில் அதிமுக பெருந்தோல்வியைத் தழுவக் காரணமாக இருந்துவிட்டது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீரைத் திறந்து விடுவதில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தாமத நடவடிக்கைகளினால் ஏற்பட்ட பாதிப்பை சென்னை மக்கள் மன்னிக்கத் தயாராக இல்லை.
எனவே, ஒரு மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் பொதுமக்களின் கோபம் தங்களுக்கு எதிராகத் திரும்பலாம் என்று தெரிந்து வைத்திருக்கும் திமுக, அதற்கு எந்த வாய்ப்பும் கொடுத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைத்தால், வெள்ளநீர் தடுப்புக்கான நீண்ட காலத்திட்டங்களை முன்வைத்து, தங்களது நல்ல செயல்பாடுகளை முன்வைத்து திமுக மக்களிடம் வாக்குக் கேட்க முடியும்.
Read in : English