Read in : English

(இந்துக் கோயில்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்த வரலாற்றுப் போக்குகளை கட்டுரையின் முதல் பகுதி ஏற்கனவே விளக்கியுள்ளது. அக்கட்டுரையில் உள்ள வாதத்தில் உள்ள நியாயத்தை பற்றி கட்டுரையின் இரண்டாம் பகுதி விளக்கியது. கோயில் நிர்வாகத்தை அரசு நிர்வாகத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற கருத்துகள் குறித்தும், கோயில் நிர்வாகத்தை அரசு நிர்வாகமே சிறப்பாக செய்ய முடியும் என்பது குறித்தும் இந்த மூன்றாவது இறுதிப் பகுதி விளக்குகிறது.)

எம்.ஜி. ராமச்சந்திரன் 1987-இல் முதலமைச்சராக இருந்தபோது, சிதம்பரம் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க 5-.8.-1987இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இதனை தீட்சிதர்கள் ஏற்கவில்லை. தீட்சிதர்கள் நீதிமன்றம் சென்று இந்த அரசாணையை நீக்கச் செய்தனர்.

இதற்குப் பிறகு தி.மு.க. ஆட்சியின்போது 2008ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்தக் கோயிலை தமிழக அரசு கையகப்படுத்தியது.

இதை எதிர்த்து தீட்சிதர்கள் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் தீட்சிதர்கள் மேல்முறையீடு செய்தனர். நடராசர் கோயிலை தமிழக அரசு ஏற்றது செல்லாது என்றும், தீட்சிதர்கள் நிர்வாகத்தில்தான் கோயில் இருக்க வேண்டும் என்றும் இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கில், அந்த கோயிலுக்கு 2007ஆம் ஆண்டு ரூ.37,199 வருமானம் வந்ததாகவும் அதில் ரூ.37,000 கோயில் நிர்வாகத்திற்கு செலவு செய்து விட்டதாகவும் கோயிலை பராமரித்த தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அந்தக் கோயில் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு ஆண்டு வருமானம் என்ன தெரியுமா? அதன் பிறகு 5 ஆண்டுகளில் அந்தக் கோயிலின் வருமானம் ரூ.3.15 கோடி. 2014ஆம் மீண்டும் தீட்சிதர்கள் கைக்கு சென்ற போது, தமிழக அரசு அந்த வருமானத்தை தீட்சிதர்கள் கையில் கொடுத்தது.

இந்தத் தகவல் பத்திரிகைகளில் செய்திகளாக வந்திருக்கிறது. அதாவது, தமிழக அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் போது ஆண்டுக்கு சராசரியாக ரூ.63 லட்சம்.

இதுபோல, தனியார் நிர்வாகத்தில் கோயில்கள் இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு சாட்சி. கோயில் நிர்வாகத்தை தங்கள் கையில் வைத்துள்ள தனியார்கள், தங்கள் விருப்பபடி கோயில் பணத்துக்குச் செலவு கணக்குக் காட்டுகிறார்கள். ஆனால், கோயில் பணத்தில் கல்வி நிலையங்களை நடத்தக்கூடாது என்பதுதான் இவர்களில் பலரின் பரப்புரையாக உள்ளது.

கோயில் நிர்வாகத்தை தங்கள் கையில் வைத்துள்ள தனியார்கள், தங்கள் விருப்பபடி கோயில் பணத்துக்குச் செலவு கணக்குக் காட்டுகிறார்கள். ஆனால், கோயில் பணத்தில் கல்வி நிலையங்களை நடத்தக்கூடாது என்பதுதான் இவர்களில் பலரின் பரப்புரையாக உள்ளது.

பல்வேறு நிலச்சீர்திருத்த பதிவுத் துறை சட்ட மாற்றங்களால் கோயில் நிலங்கள் சில இடங்களில் தனியார் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கடந்த 9 ஆண்டுகளில் 1,199 கோயில்களுக்கு சொந்தமான 8031.19 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

2016 – 2017ஆம் ஆண்டு மட்டும் 70 கோயில்களுக்கு சொந்தமான 1119 ஏக்கர் நிலங்கள் அறநிலையத்துறையால் அந்தக் கோயில்களுக்கே மீண்டும் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை மட்டும் 6066 நபர்கள் வாடகைதாரர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல 2019 – 2020 ஆம் ஆண்டு காலத்தில் 194 கோயில்களுக்கு சொந்தமான 1448.38 ஏக்கர் நிலங்கள் கோயில்கள் பெயரில் மீண்டும் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இவை அனைத்தையும் மீட்க மாவட்ட வாரியாக, மண்டல வாரியாக, மாநில அள்வில் என்று இந்து சமய அறநிலையத்துறை வழக்குகளை நடத்திக் கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு சென்னையில் தனியார் பள்ளி நிர்வாகம் ஆக்கிரமித்திருந்த மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான 46 கிரவுண்ட் நிலத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை கையகப்படுத்தி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏழை எளிய மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் பொது விளையாட்டு மைதானமாக மாற்றினார்.

பள்ளி நிர்வாகம் அந்த இடத்திற்கான வாடகை நிலுவை ரூ.1 கோடி தரவேண்டியுள்ளது. முதல் தவணையாக ரூ.18 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி வந்தபின் மட்டும் இதுவரை ரூ.1130 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 5000 ஏக்கர் கோயில் நிலம் அளக்கப்பட்டுள்ளது.

பள்ளி நிர்வாகம் அந்த இடத்திற்கான வாடகை நிலுவை ரூ.1 கோடி தரவேண்டியுள்ளது. முதல் தவணையாக ரூ.18 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் மீட்க மாவட்ட வாரியாக மண்டல வாரியாக மாநில அள்வில் என்று இந்து சமய அறநிலையத்துறை 188 வழக்குகளை நடத்திக் கொண்டிருக்கிறது.

கோயில் நிர்வாகத்திலிருந்து அரசு வெளியேற வேண்டும் என்று பரப்புரை செய்யப்படுவது, இது இன்று நேற்று மட்டுமே நடப்பது அல்ல.

நீதிக்கட்சி ஆட்சியில் கோயில் நிர்வாகத்தைச் சீரமைக்க அரசு தலையிடத் தொடங்கியபோது சுதேசமித்திரனும், தி இந்துவும் இதுகுறித்து விமர்சனம் செய்து எழுதின.

இந்து சமய அறநிலையத்துறையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனியே பல கிளை அமைப்புகளை உருவாக்கியது. அதில் ஒன்று தான் “இந்து ஆலயங்கள் மீட்புக்குழு”. சில ஆண்டுகளுக்கு முன் பொன் விழா கொண்டாடிய இந்த அமைப்பு 50 ஆண்டுகளாகச் செய்து கொண்டிருக்கும் பரப்புரைகள் தான் இவை.

அதேபோல ஆர்எஸ்எஸ் அமைப்பின் இன்னொரு அமைப்பு, “இந்து ஆலய பாதுகாப்பு குழு”. ‘அயோத்திக்கு படை எடுத்தது போல கோயில்களை மீட்க படை எடுக்க வேண்டும்’ என்று சில ஆண்டுகளுக்கு முன் எச்.ராஜா பேசினார்.

கோயில்களை அரசு நிர்வாகத்திலிருந்து மீட்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் வழிவந்தவர்களின் குரலாக மட்டுமே இப்பொழுது ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival