Read in : English

சங்கீத உலகில் நாகஸ்வரம் ஒரு ராஜ வாத்தியம் என்று அழைக்கப்படுகிறது. கர்நாடக சங்கீதத்தில் இதற்கு ஒரு தனியிடம் உண்டென்பது உண்மையே. நாகஸ்வரம் கேட்பதாலே ஞானம் விருத்தி பெறும், நுணுக்கங்கள் புலப்படும் என்று பல முன்னணி வித்வான்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். இவ்வுண்மைகளை ஏற்றுக் கொள்ளும் நாம், அதிகமாக இவ்வாத்தியத்தை கற்றுக் கொள்ள நமது மத்தியில் இருந்து மக்கள் முன் வராமலிருப்பது ஏனோ என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். வயலின், வீணை, வாய்ப்பாட்டு, புல்லாங்குழல் ஆகிய கலைகளை ஆர்வத்துடன் கற்க முன் வரும் “கூட்டம்”,  ஏனோ நாகஸ்வரத்தின் பக்கம் திரும்புவதில்லை.

சங்கீத கலாநிதி புல்லாங்குழல் வித்வான் திரு என் ரமணி தனக்குப் பின் குழல் வாசிக்க உலக அளவில் 1000 பேர் தயாராக இருப்பதாக ஒரு முறை பேச்சு வாக்கில் சொல்லி இருக்கிறார். நாகஸ்வரத்தின் கதையே வேறு. யோசித்துப் பார்த்தால் இன்று வரை இசை வேளாளர் சமூகத்தில் இருந்தே நாகஸ்வர வித்வான்கள் உருவாகி இருக்கிறார்கள். இந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளை நாகஸ்வரம் பயிலவும் பழகவும் மாணவர்களாக அனுப்பி வைக்கிறார்கள். இந்த பாரபட்சம் ஏன்? மற்றவர்கள் (அதாவது இசை வேளாளரல்லாதோர்), — பிராமணர்களையும் சேர்த்துத்தான் — இந்த வாத்தியத்தின் மீது கவனம் செலுத்தாமல் இருப்பது என்ன விந்தை!

காரணங்கள் என்னவாக இருக்கலாம். உடற் சக்தி ஒரு காரணமா? பலத்தை சொல்லி விடலாமா? அல்லது வாசிக்கும் போதும், வாசிப்பதற்கு முன்னும், சீவாளியை எச்சில் படுத்தி வாசிப்பது ஒரு கேடான, களங்கமான செயலாக கருதப்படுகிறதா?

ஒரு நாகஸ்வர வித்வானின் அனுபவம்

தனது சிறப்பான நாகஸ்வர வாசிப்பினால் பல உள்ளங்களை அள்ளிச் சென்ற இஞ்சிக்குடி சுப்பிரணியத்திடம் கேட்டோம். அவர் “வெறும் உடல் சக்தியை மட்டுமே நாம் கூற முடியாது.. கோவில் உற்சவத்தின் போது சாயங்கால வேளையில் சுவாமி புறப்பாட்டிலிருந்து ஆரம்பித்தால் விடிய விடிய நாகஸ்வரம் வாசிக்க வேண்டியது ஒரு கட்டாயம் தான். வித்வானுக்கு அதிகமான சிரமம் தான். ஆனால் ஒன்றை கவனியுங்கள். அந்தக் காலங்களில் ஆலத்தூர் சகோதரர்களாகட்டும், மஹாராஜபுரம் விசுவநாத ஐயராகட்டும், தங்களது கச்சேரிகளை ஐந்து அல்லது ஆறு மணி நேரம் நடத்தினார்கள்.

வயலின், வீணை, வாய்ப்பாட்டு, புல்லாங்குழல் ஆகிய கலைகளை ஆர்வத்துடன் கற்க முன் வரும் “கூட்டம்”,  ஏனோ நாகஸ்வரத்தின் பக்கம் திரும்புவதில்லை.

இஞ்சிக்குடி மேலும் பேசினார். “பூஜை செய்யும் குருக்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் உற்சவ மூர்த்தியுடனே பயணிப்பார். வீதி வலம் வரும் போது ஆரத்தி எடுக்கவும் ஆயத்தமாக இருப்பார். கண் துஞ்சார். இதையே அவர்கள் ஒரு வரமாக எண்ணினார்கள். அவர்கள் கொடுக்கும் உழைப்பும் சொல்லில் அடங்காது.” ஒரே வித்வானால் நடத்தப்படும் அகண்டங்களில் 12 மணி நேரத்திற்குக் குறையாமல் ஒருவர் பாட வேண்டியதைப் பற்றியும் கவனப்படுத்தினார் இஞ்சிக்குடி.

ஒவ்வொரு நாகஸ்வர வித்வானும் அசைவ உணவை உட்கொள்வது அவசியம். இந்த உணவு தான் அவர்களது வாசிப்பிற்கு உகந்த சக்தியை அளிக்க வல்லது எனும் கூற்றை ஏற்க மறுக்கும் இவர் தனது தகப்பனார் வித்வான் திரு முத்துக்குமாரசாமி பிள்ளை மேற்கொண்ட சில வழக்கங்களை நமது நினைவில் நிறுத்துகிறார். தனது தகப்பனார் சத்தான உணவு – புரதச் சத்து நிறைந்த உணவை சாப்பிடுவார். நெய் வெண்ணை போன்றவற்றையும் நிறைய சேர்த்துக் கொள்வார். வழக்கமான எண்ணை குளியல் அவருக்கு அவசியம். அதே போல சுண்டைக்காய் சாப்பிடுவதும் அவருக்கு வழக்கமாம்.  இவற்றால் அவர் இழந்த சக்தியை மீட்டு, மீண்டும் வாசிக்கத் தன்னை தயார் படுத்திக் கொண்டவர் என்கிறார்.

மருத்துவர்களின் கருத்து

டாக்டர் பிரகாஷ் பூமிநாதன் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலை கழகத்தில் “உரையாடும் மொழி மற்றும் காது கேட்கும் தன்மை குறைந்தவர்களுக்கான சிகிச்சை” அளிக்கும் துறையில் தலைமை பொறுப்பு வகிப்பவர். இவர் மூச்சுக் காற்றின் உபயோகத்தினால் ஒலி ஏற்படுத்தக்கூடிய ஒரு தன்மையை மருத்துவ ரீதியாக எப்படி நோக்குவது என்பதைப் பற்றிய ஆராய்ச்சியைத் தான் மேற்கொள்ள வேண்டும் என்கிறார். தனது 20 வருட அனுபவத்தில் எந்த ஒரு நாகஸ்வர வித்வானும் இந்த “ஊதும்” சக்தியை இழந்ததாகத் தெரிவித்ததில்லை என்றும் கருத்து தெரிவிக்கிறார். பொதுவாக இந்த வாத்தியம் வாசிப்பவர்கள் லாரிங்கோசில் (laryngocele) எனும் நோயால் பாதிக்கப் படுவார்கள். இதன் காரணமாக கழுத்தின் வெளிப்புரத்தில் ஒரு பகுதி புடைத்துத் தென்படும். தொண்டையில் கரகரப்பைக் காணலாம். மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும் போதும் வெளியில் சுவாசிக்கும் போதும் உயர்ந்த அளவிலான சப்தம் ஏற்படலாம். இதுவே இவர்களுக்கு ஏற்படும் உபாதையின் அறிகுறி.

நாகசுவர வித்வான்கள் தங்களது உடலின் மேல் பகுதியை சிறந்த முறையில் பாதுகாப்பது இன்றியமையாத ஒன்றாகும்.

தொடர்ந்து பேசுகையில் நாகஸ்வரம் வாசிக்க மிக மிக அதிக அளவிலான சக்தி தேவை என்பது முற்றிலும் உண்மை என்பதை அறிவுறுத்துகிறார். பொதுவாகவே உடல் ஆரோக்கியம் தான் குரல் ஆரோக்கியத்தின் வெளிப்பாடு. அதிலும் நாகசுவர வித்வான்கள் தங்களது உடலின் மேல் பகுதியை சிறந்த முறையில் பாதுகாப்பது இன்றியமையாத ஒன்றாகும். “ஓசைப்படாமல் அவர்கள் ஒழுங்காக உடற்பயிற்சி மேற்கொள்கிறார்களோ?” என்று நம்மிடமே வினவுகிறார்.

இவர்கள் உட்கொள்ளும் உணவு புரதச்சத்து நிறைந்ததாக இருந்தே தீர வேண்டும். இசை வேளாளர் சமூகம் இயல்பாகவே அசைவ உணவு சாப்பிடும் ஒரு சமூகம். இதனால் இவர்களுக்கு வேண்டிய சத்து இந்த உணவில் இருந்து இவர்களுக்குக் கிடைத்து விடுகிறது. இங்கே நாம் கவனிக்க வேண்டிய அடிப்படை தேவை, சுவாசக் காற்றிற்கு இவர்கள் அளிக்கும் அழுத்தமும் அதன் மீது இவர்கள் செலுத்தும் கட்டுப்பாடும் தான்.

முனைவர் டி பாலசுப்ரமணியம் ஒரு இந்திய சமூக விஞ்ஞானி. எல் வி ப்ரசாத் கண் ஆராய்ச்சி மையம், ஹைதராபாத்தில் உயர் பதவியில் இருப்பவர். இவரது அபிப்பிராயத்தில் அசைவ உணவானது சைவ உணவை விடவும் அதிக சக்தியையோ, தாங்கும் தன்மையையோ அளிக்கும் என்பது ஏற்புடையதாக இல்லை. சைவ உணவு சாப்பிடுபவர்கள் அவர்களுக்குத் தேவையான புரதச் சத்தை பருப்பு வகைகளிலும் அவர்கள் தினமும் உணவாக உண்ணும் சாம்பார், ரசம், பால் தயிர் வெண்ணெய் இவற்றிலிருந்து பெற்று விடுகிறார்களே. திருமதி சலோனி அப்போலோ மருத்துவமனையின் நோயியல் நிபுணர். நாகஸ்வர வித்வான்களுக்கு ஒரு முறைப்படுத்தப்பட்ட சுவாசப் பயிற்சி மிக அவசியம். ஒரு விஷயம்: வறுக்கப்பட்ட மாமிசமும் மீனும் அதிகம் உட்கொள்வதால் உள்ளே செல்லும் புரதச் சத்து நிறைந்த உணவு அதன் எதிர் வினைப் பயனையே விளைவிக்கும்.

தற்போதைய நிலை

இசை மற்றும் நாட்டியத்தில் தனது மேலான கருத்துக்களால் தனக்கு ஒரு தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் முனைவர் திரு பி எம் சுந்தரம். முந்தைய நாட்களில் சிறந்து விளங்கிய நாகஸ்வர வித்வான்கள் தொட்டு தற்கால வித்வான்கள் குறித்த விவரங்களைக் கொண்ட ஒரு வியக்கத்தக்க வரலாற்றுப் புத்தகத்தை ”மங்கல இசை மன்னர்கள்” என்று வழங்கியுள்ளார் இவர். இது 68 நாதஸ்வர வித்வான்கள் மற்றும் 43 தவில் வித்வான்களைப் பற்றியது. இதற்கான முன்னுரையில் ஒரு விஷயம் பற்றி அவர் நொந்து கொள்வார். நாகஸ்வர மற்றும் தவில் வித்வான்கள் இசை ஞானத்தில் எவருக்கும் சளைத்தவரில்லை. ஆனால் சமூக அந்தஸ்து என்று எடுத்துக் கொண்டால் மற்ற வாய்ப்பாட்டு மற்றும் இதர வாத்தியக்காரர்களுக்குக் கொடுக்கப்படுவது போல இவர்களுக்கு இந்த அந்தஸ்து அளிக்கப்படுவதில்லை.

மற்ற சமூகத்தினர் ஏன் நாகஸ்வரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், சீவாளியை எச்சில் படுத்தி வாசிப்பதனால் ஒரு அசுத்தத் தன்மையை இந்த வாத்தியம் பெற்று விடுகிறது என்ற குறைதான் என்கிறார். இந்த ஒவ்வாத நிலைதான் காரணம். இவ்வாறு எச்சில் படுத்தி வாசிப்பது தங்களது குல கௌரவத்தை பாதித்து விடுவதாக இவர்கள் கருதுகிறார்கள். தவிலின் நிலை இன்னும் மோசமானது. அது தோலினாலான ஒரு வாத்தியம். இதில் உபயோகமாகும் வார் எருமை மாட்டுத் தோலினால் ஆனது. கேட்கவே வேண்டாம். அதைத் தொடுவதே மோசமான செயல் என்பார்கள். ஆனால் இதையெல்லாம் மீறி பழநி லக்ஷ்மி நரசிம்ம ஐயரும், திருச்சீரையைச் சார்ந்த ரங்கநாதன் பட்டாசாரியும் (கோவில் சாங்கியங்களை நடத்துபவர்) முறையே நாகஸ்வரம் மற்றும் தவில் வாத்தியங்களைப் பயின்று, வாசித்து பெயர் பெற்றவர்கள் எனும் விவரத்தை நம் ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறார்.

சங்கீத கலாநிதி திரு டி வி கோபாலக்ருஷணன் ஒரு சகலகலா வல்லவர். வாய்ப்பாட்டு, மிருதங்கம், குழல் எல்லாமே இவருக்கு அத்துபடி. “நான் நாகஸ்வரத்தை வாசித்ததில்லை. ஆனால் இந்த வாத்தியத்தின் நுணுக்கங்களைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்திருக்கிறேன்.” என்பதைப் பணிவுடன் தெரிவிக்கிறார். அவர் வாய்ப்பாட்டை முழு நேர தொழிலாக எடுத்துக் கொண்டதால் நாகஸ்வரத்தில் அதிகமான கவனம் செலுத்தவில்லை. மேலும் இவ்விரண்டிற்குமான தேவைகள் சற்றே மாறுபட்டு இருப்பதால் ஒரு தர்ம சங்கடத்திற்கும் உள்ளானேன் என்கிறார்.அவர் சிலவற்றை நம்மிடம் தெளிவு படுத்துகிறார். அதாவது புல்லாங்குழலுக்கும் நாகஸ்வரத்திற்கும் காற்று கொடுப்பதில் வித்தியாசம் உண்டு. புல்லாங்குழலுக்கு உதட்டின் அருகில் இருக்கும் துவாரத்தில் மெல்லிய இழை போல காற்றை ஊத வேண்டும். ஆனால் நாகஸ்வரத்திற்கோ காற்றை ஒருவாறு வாயின் உள்ளே தக்க வைத்து தேவைக்கு ஏற்றவாறு சீவாளி மூலம் வாத்தியத்தில் செலுத்த வேண்டும். நிலையான காற்று நாகஸ்வரத்திற்கு மிக அத்தியாவசியம். நாளடைவில் பெறும் பயிற்சியினால் ஒரு வித்வானுக்கு இது இயல்பாகி விடும். இதில் உள்ள கமகங்களை உதட்டினாலும், நாக்கினாலும், விரல் அசைவுகளினாலும் ஏன் வாயினாலும் கூட நிகழ்த்த வேண்டும். அந்த நாட்களிலிருந்தே இது ஒரு அசுர வாத்தியம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. இதற்குக் காரணம் இதை வாசிக்கத் தேவையான அபார சக்தி மற்றும் ஆளப்படும் யுக்திகள்.

இன்று ஒரு புதிய வாத்தியம் கண்டு பிடிக்கப்பட்டால் அதை நாளை வாசித்து அசத்தி விடுபவர் பாலக்காடு ஸ்ரீராம். அவரது ஞானம் அவ்வகைப்பட்டது. நாகஸ்வரம் பற்றி கேட்டால் அவர் இதே போன்று இயங்கவல்ல ஒபோ (Oboe) எனும் வாத்தியம் பற்றி நம்மிடம் சிலாகித்துப் பேசுகிறார். இதுவும் தேவையான அழுத்தத்துடன் சுவாசக் காற்றை வாத்தியத்தினுள் செலுத்தி நாதத்தை வரவழைக்கும் ஒரு வாத்தியமாகும். ”புல்லாங்குழலில் உள்ள துவாரங்களை விரல் உபயோகத்தினால் சற்றே திறந்து (அதாவது முழுவதுமாகத் திறக்காமல்) கமகங்களை வாசிக்கலாம். இது நாகஸ்வரத்தில் இயலாது. கமகங்கள் எல்லாம் மனதிலிருத்திக் கொண்டு நாம் அவற்றை வாத்தியத்தின் பிரயோகத்தினால் வெளிக் கொணர வேண்டும். மூச்சுக் காற்றைப் பதப்படுத்திக் கொடுப்பதனாலேயே கமகங்கள் உருவாகும்.” இவர் மற்றொன்றையும் நமக்கு உரைக்கிறார். தோலினால் செய்யப்பட்ட மிருதங்க வாத்தியத்தை எடுத்தாள எத்தனை பேர் இருக்கிறார்கள்! அங்கு தங்கு தடையில்லையே! நாகஸ்வரத்திற்கும் தவிலிற்கும் அந்த பாக்கியம் இல்லாமல் போனது ஏனோ? (திரு பி எம் சுந்தரம் அவர்களும் இதைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.) ஸ்ரீராம் இசைவேளாளர் சமூகம் நாகஸ்வர வித்வான்களை அரவணைத்துத் தாங்கிப் பிடித்தாளும் செயலை அயராது செய்வதால் தான் இந்தக் கலை அந்த சமூகத்தின் மத்தியில் நிலை பெற்றுள்ளது என்கிறார்.

நாகஸ்வரத்திற்கு காற்றை ஒருவாறு வாயின் உள்ளே தக்க வைத்து தேவைக்கு ஏற்றவாறு சீவாளி மூலம் வாத்தியத்தில் செலுத்த வேண்டும்

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி எம் க்ருஷ்ணாவின்  எ சதர்ன் ம்யூசிக் – தி கர்நாடிக் ஸ்டோரி (A Southern Music – The Karnatik Story) என்ற புத்தகத்தில் நாகஸ்வரம் பற்றி மிகுந்த அக்கறையுடன் கூறும் சில கருத்துக்கள் இங்கே பகிர்ந்து கொள்வது சரியாகப் படுகிறது.

“நாகஸ்வர வித்வான்கள் சங்கீதம் சம்பிரதாயம் சடங்கு இவற்றைச் சார்ந்திருந்தாலும் அவர்கள் இவற்றைக் கடந்து செயலாற்றினார்கள். இருக்கும் சடங்குகளுக்கு உட்பட்டு கலா பூர்வமான கருத்தியல் பிம்பங்களை உருவாக்க முற்பட்டார்கள்.” வேளைக்குத் தக்க ராகங்களை வாசிப்பதைப் பற்றி கூறும் பொழுது (உதாரணத்திற்கு மல்லாரி, நீலாம்பரி  முதலியன) “இதனால் கலைஞர்கள் எவ்வாறு சமூக பழக்க வழக்கங்களின் நிலையில் இருந்து கொண்டே, புதிய முறைகளைக் கையாண்டு, கலையை அந்த நிலையைக் கடந்து பரிமளிக்கும்படி செய்வது எப்படி என்பதை நமக்கு உணர்த்திச் சென்றார்கள்.” துரதிர்ஷ்டவசமாக “கச்சேரியின் கட்டமைப்பு சங்கீதத்தின் ஒரு முக்கிய அம்சமாகக் கருதப்படும் நாகஸ்வர வித்வான்களை கணக்கில் கொள்ளாமலேயே வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த நாகஸ்வர வித்வான்கள் என்ற ஒரு சமூகத்தவர்கள் தான் கலாபூர்வமான இசையை இயங்கச் செய்தவர்கள்”

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival