Read in : English

அதிமுக எம்.எல்.ஏ கருணாஸை போலீசார் கைது செய்த வேகமும் அவரை வேலூர் சிறையில் அடைத்த விதமும் ஆளும் அதிமுகவுக்குள் நிகழும் உள்சண்டைகளை வெளிச்சமிட்டு காட்டுவது போல் தான் உள்ளது; கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் தினகரன் ஆதரவாளர்களை நசுக்கி, எதிர் முகாமை பழிவாங்குவாதகத்தான் உள்ளது. ஒருவகையில், திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கருணாஸ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் துணை முதல்வர் ஒபிஎஸ்ஸுக்கும் எதிராகவும் மாற்று இனத்தவருக்கு எதிராகவும் கட்டுப்பாடு இழந்து  பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இது நியாயமே. ஆனால், பெண் பத்திரிகையாளரை இழிவாகப் பேசிய எஸ்.வீ.சேகரையும்  காவல்துறையையும் நீதிமன்றத்தையும் அவமதித்துப் பேசிய பாஜக தேசிய செயலாளர் எ.ராஜாவையும் ஏன் கைது செய்யவில்லை என எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அன்சாரி,கருணாஸ்,தனியரசு

கருணாஸ், கொங்கு இளைஞர் பேரவை தலைவரும் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினருமான உ.தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.தமிமுன் அன்சாரி ஆகிய மூவரும் அமுமுக தலைவர் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் என்றே அறியப்பட்டுள்ளனர். இம்மூவரையும் அதிமுக சின்னமான இரட்டை இலையில்  போட்டியிட வேண்டுமென மறைந்த முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். அந்தவகையில் இவர்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாகினர்.   இருந்தபோதும் தங்கள் கடந்தகால நடவடிக்கை மூலம், சிறையில் இருக்கும் சசிகலாவின் ஆதரவாளர்கள் என்றே இவர்களது செயல்கள் இருந்துள்ளன. தினகரனுக்கு நெருக்கம் என்று காட்டிக்கொண்டாலும் அதிமுக அரசுக்கு பகையற்றவர்கள் என்பதாகவும் காட்டிக்கொண்டுள்ளனர்.

மெய்நிகர் உலகில் மைனாரிட்டியாக இருக்கும் ஆளும் அதிமுக அரசுக்கு  சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால்,  இந்த மூவரின் வாக்கும் மிக முக்கியம் என்பதால் இவர்களைத் தக்கவைத்துக்கொள்ளவே அதிமுக விரும்புகிறது. இம்மூவரில் கருணாஸ் தன் வார்த்தைகள் மூலமும் தேவர் இன அடையாளத்துடனும் தினகரனுக்கு தன் ஆதரவை பகிரங்கமாகவே தெரிவித்து வருகிறார்.

தேவர் இன மக்களின் ஆதிக்கம் மிகுந்த தென் தமிழகத்தில், தினகரன் தரப்பை தங்கள் இன பாதுகாவலராகவே கருதுகின்றனர். இது அதிமுகவுக்கு கவலையளிக்கும் விஷயமாக மாறிவருகிறது.

18 சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கின் தீர்ப்பு விரைவில் வரவுள்ளதால், அதிமுக இம்மூவரின் ஆதரவை எதிர்பார்த்துள்ளது. அதன் வெளிப்பாடாக தினகரன் அணியினரை நசுக்குவதை  அதிமுக தலைவர்கள் நோக்கமாகக் கொண்ட்டுள்ளனர். கருணாஸின் சகாக்களான தமிமுன் அன்சாரி மற்றும் உ.தனியரசு ஆகிய இருவரும் கருணாஸின் கைதை ஆதரிக்கவில்லை. மாறாக, போலீசார் ஏன் எஸ்.வீ.சேகரையும், பாஜகவின்  எச்.ராஜாவையும் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மெய்நிகர் உலகில் மைனாரிட்டியாக இருக்கும் ஆளும் அதிமுக அரசுக்கு  சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால்,  இந்த மூவரின் வாக்கும் மிக முக்கியம் என்பதால் இவர்களைத் தக்கவைத்துக்கொள்ளவே அதிமுக விரும்புகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சில எதிர்க்கட்சி யைச் சார்ந்த தலைவர்கள் அதிமுகவின் இக்கைது நடவடிக்கையை  அரசின் பாரபட்ச நடவடிக்கை என குறிப்பிட்டு, எச்.ராஜாவையும் எஸ்,வீ.சேகரையும் கைது செய்யாமல் கருணாஸை மட்டும் கைது செய்தது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர். கருணாஸின் மீது கடும் நடவடிக்கையை மேற்கொண்ட  அதிமுக அரசு தன்னை தக்கவைத்துக்கொள்ள தத்தளித்துக்கொண்டுள்ளது என்பதை திமுகவும் தினகரனும் உணர்ந்தே உள்ளனர்.

எதிர் முகாமிலிருந்து வரும் விளைவுகளை சந்திக்கவே,  கருணாஸ் புத்திசாலித்தனமாக தன்னை,   முக்குலத்தோர்-தேவர் இன மீட்பர் என்று அறிவித்துக்கொண்டார். 2017 வரை  அதிமுகவில் இருக்கும் தேவர் இன தலைவர்களின் கையில் தான் கட்சி மேலிடம் இருந்தது.

ஏற்கனவே தினகரனை பகைத்து அதற்கான பலனை தேவர் சமூக மக்களிடம் அதிமுக அனுபவித்துக்கொண்டுள்ளது. தேவர் சமூக வாக்குகள்  ஒருங்கிணைந்து  தினகரனுக்கு ஆதரவாகச் செல்லும் சூழல் உருவாகிவிடக்கூடாது என்று அதிமுகவில் இருக்கும் தேவர் சமூக தலைவர்கள் நினைக்கின்றனர்.  தேவர்கள் ஆதிக்கம் மிகுந்த  40-50 தொகுதிகள் தினகரனுக்கு ஆதரவாகத் மாறி  அதிமுகவுக்கு அது துன்பத்தையும் இடைஞ்சலையும்  உருவாக்கலாம் என்று அதிமுகவில் பலர் அஞ்சுகின்றனர்.  ஏனெனில் இச்சமுகத்தினர் சமூக அமைப்பிலும் தொழிலிலும்  பலத்த இடத்தைப் பிடித்துள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் கருணாஸ், தேவர் என்னும் துருப்புச் சீட்டை பயன்படுத்தினால் அது அதிமுகவிற்கு இன்னலையும் இடைஞ்சலையும் ஏற்படுத்தும். தென் மாவட்டங்களில் பல கட்சிகள் தேவர் சமூக வேட்பார்களையே களமிறக்கும் சூழ்நிலை இருக்கும் பொழுது,  இந்த சமூகத்தை புறக்கணித்து விட்டு அரசியல் செய்ய முடியாது என்று அதிமுக தலைமை உணர்ந்துள்ள நிலையில்,  அதிமுக கருணாஸ் விஷயத்தை கவனத்துடன்  கையாள வேண்டிவரும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival