Read in : English

தமிழ்நாட்டில்  உணவு பாதுகாப்பு  குறித்து அபாய மணி ஒலிக்க ஆரம்பித்து விட்டது. காரணம் தமிழகத்தில் நெல் உற்பத்தி செய்யும் பரப்பளவு  குறைந்து வருகிறது.  1980 ஆம் ஆண்டுகளில் இருந்த பரப்பளவை  விட மூன்றில் ஒருபங்கு குறைந்துள்ளது. இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால் ஒரு ஏக்கரில்   உற்பத்தி செய்யப்படும் சராசரி  நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதனாலேயே சந்தைகளில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. மேலும்  மத்தியதர வர்க்கத்தினர்   வெளிமாநிலங்களில் வரும் அரிசியை  வெளிப்புற சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்குவதால்(ரேஷன் கடைகளில் வாங்காமல்) தற்போதைக்கு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை.
இருந்தபோதும் இந்த நிலை வெகுநாட்களுக்கு தொடராது.காரணம் பெரும்பாலானவர்கள் நெல் உற்பத்தி செய்வதிலிருந்து பணப்பயிர்களை உற்பத்தி செய்வதை நோக்கி ஓடிக்கொண்டுள்ளனர். மேலும், விவசாய விலை நிலங்களை ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றி விற்பனை  செய்துகொண்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் மக்கள்தொகையும் கணிசமான அளவுக்கு உயர்ந்துகொண்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து தமிழகத்துக்கு வருவதாலும் நெல் உற்பத்தி செய்யப்படும் விளைநிலத்தின் அளவு குறைந்து வருவதாலும் வருகின்ற காலங்களில் உணவுச் சந்தையில் இந்த அழுத்தம் இருமடங்காக அதிகரித்து கடும் உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். ஒருவேளை மொத்த நெல் உற்பத்தி இதே அளவு தொடர்ந்து வந்தாலும் உற்பத்தி செய்யப்படும் நிலத்தின் அளவு மிக வேகமாக சரிந்து வருவதால்,  2041-ல் சரசரியாக தனிநபருக்கு  57.39 கிலோ நெல் தான் உற்பத்தியாகும்.  இது ஒப்பீட்டளவில்  1980ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில்  ஒரு நபருக்கு 119.79 கிலோ நெல் உற்பத்தியுடன் பாதிக்கு மேல் குறையும் அபாயம் உள்ளது.
கடும் அழுத்தத்தில் இருக்கும் நெல் உற்பத்தி

1979-80ஆம் ஆண்டுகளில் நெல் 29,06,440 அல்லது 29.06 லட்சம் ஹெக்டேரில்  விளைந்தது. எண்பதுகளின்  இறுதியில் அது 22 லட்சம் ஹெக்டேராக குறைந்தது. தொண்ணூறுகளின் இறுதியில் அது 20 லட்சம் ஹெக்டராக  குறைந்து தற்போது 17-18 லட்சம் ஹெக்டர் என சுருங்கியுள்ளது. அதேபோல் அதே 1979-80களில் உணவுதானியங்கள் 52,52,735 ஹெக்டேர்  அல்லது 52.52 லட்சம் ஹெக்டேரில்  விளைந்தது. இந்த பரப்பளவு படிப்படியாகக் குறைந்து தற்போது 34 லட்சம் ஹெக்டேராகியுள்ளது. இதுவும் குறிப்புடத்தக்க அளவிலான வீழ்ச்சி; மூன்றில் ஒருபங்காக பயிரிடப்படும் நிலத்தின் அளவு குறைந்துள்ளது. ஆனால், ஒரு ஏக்கரில் விளையும் அளவு அல்லது உற்பத்தி திறன் அதிகரித்ததால் தற்போது நிலைமை பாதுகாப்பாக உள்ளது.

கடந்த சில வருடங்களாக உணவுதானிய உற்பத்தி 110 மெட்ரிக் டன்னை எட்டியிருப்பதாக அரசு  தன் சாதனையாக தெரிவித்துக்கொண்டுள்ளது. இது உற்பத்தி அதிகரித்ததால் நிகழ்ந்தது. கடந்த ஏழு வருடங்களக சராசரி நெல் உற்பத்தி 63 லட்சம் டன்.  ஆனால் அரசு நெல் உற்பத்தி செய்யும் நிலத்தின் பரப்பளவு குறைவது கண்டு கவலைப்படுவதாக இல்லை.  குறைந்து வரும் நெல் உற்பத்தி பரப்பளவு குறைந்துவருவது  மறைக்கப்பட்டு  வருகிறது.
மக்கள் தொகை பெருக்கமும் அழுத்தமும்
1961லிருந்து 2011 வரை, கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் மக்கள் தொகை இருமடங்காக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு பத்தாண்டுக்கும் மக்கள் தொகை வளர்ச்சி  சராசரியாக 10சதவீதமாக  உயர்ந்திருந்த நிலையில் 2001 முதல் 2011 வரை மக்கள் தொகை வளார்ச்சி 15 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.    2011-2021 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி இதே 15 சதவீதம் இருக்கக் கூடும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை அறிக்கை தெரிவிக்கிறது.

அதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் மக்கள்  தொகை 2021-ல் 8.30  கோடியாகவும் 2031-ல் 9.54 கோடியாகவும் 2041-ல் 10.97 கோடியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் தொகை கணக்கீடு  2011, எதிர்வரும் 2021ஆம் ஆண்டில் 8.57 கோடியாக மக்கள் தொகை இருக்கும் என்று கணித்துள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் உள்கட்டமைப்பு வசதிகள், கட்டட வளர்ச்சி, உற்பத்தி, உயர்கல்வி ஆகிய காரணங்களால் இங்கு இடம் பெயர்ந்து வரும் மக்களின் வரவு அதிகரிக்கும்.

பொதுவாக குழந்தை பிறப்பு விகிதம் 2.1-க்கு குறைவாக ஏற்படும்போது மக்கள் மொத்த தொகை குறைய தொடங்கிவிடும். தமிழகத்தில் மொத்த குழந்தை பிறப்பு விகிதம் 2.1க்கு குறைவாக 1.6 சதவீதமாக குறைந்துள்ளது. இறப்பு விகிதத்தை காட்டிலும் பிறப்பு விகிதம் குறைந்து உள்ளது.
இது தொடர்ந்தால் 2031ம் ஆண்டு முதல் தமிழகத்தில் மக்கள் தொகை குறைந்துவிடும் என்று மக்கள்தொகை ஆய்வாளார்கள் தெரிவிக்கின்றனர்.  ஓட்டுமொத்தமாக இந்திய மக்கள் தொகை, 2051ம் ஆண்டு முதல் குறையத் தொடங்கலாம்.  ஆனால், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் முறையே 2031ம் மற்றும் 2041ம் ஆண்டுக்குள் மக்கள் தொகை குறையத் தொடங்கிவிடும் என்று இந்திய மக்கள் தொகை ஆய்வுச் சங்க தலைவர் கே. சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.
பிறப்பு விகிதம் குறைந்தாலும் மாநிலத்தின் மக்கள்தொகை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. இது எதனால் ஏற்படுகிறது மக்கள்தொகை கணாக்கீடு 2011 அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மாநிலத்தில் உயர்கல்வி அமைப்பும் அதன் மூலமாக அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதாலும் வளர்ந்து வரும்  உள்கட்டமைப்பு மற்றும் தொழிலில்கள் மூலமாக தமிழ்நாடு ஒரு வளர்ச்சி மாநிலமாக அமைந்த காரணத்தால் இந்தியாவின் வேறு மாநிலங்களில் ஏராளமான மக்கள் வந்துகொண்டுள்ளாகள். இதன் காரணமாகத்தான் தமிழகத்தின் மக்கள்தொகை 15% வளர்ந்து வருகிறது.
கணக்கிடுதல் ஆண்டு..!
ஒரு நபருக்கு தேவையான நெல் உற்பத்தி 56.65 கிலோவாக குறைந்துவிடும்.  தற்போதைய வளர்ச்சி நிலவரப்படி, மக்கள் தொகை 11 கோடியே 12 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 63 லட்சம் டன்னில் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்படுகிறது. 1981ம் ஆண்டு ஒரு நபருக்கு நெல் உற்பத்தி 119 கிலோவாக இருந்தது. இது தற்போது 60 சதவீதமாகக் குறைந்துள்ள நிலையில் மக்கள்தொகை அதிகமாகும் சூழ்நிலை நீடித்தால் 2041ம் ஆண்டு அரிசி பஞ்சம் ஏற்படும்.
அதாவது 1980ம் ஆண்டுகளில் ஒருநபருக்கு  இருந்த  நெல் உற்பத்தி  பாதிக்கு மேல் குறைந்துவிடும்.  தமிழகத்தில் அரிசி அத்தியாவசிய உணவு. ஆகவே, இந்த குறைபாடு உணவு மேலாண்மைக்கு பொது நியோக முறையிலும் கணிசமான அழுத்தத்தை கொடுக்கும்.  அரிசி பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக கேரளாவிற்கு அதிக அரிசி ஏற்றுமதி செய்யப்படுமானால் அரிசி தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வரப்போகும் இந்த உணவு பஞ்சத்துக்கு தீர்வு காண, நெல்லுக்கு சிறப்பு விலை நிர்ணயம், மானியம் உள்ளிட்டவைகளை வேளாண்மைத்துறை வழங்கி பயிர் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் நடுத்தர மக்கள், ரேஷன் கடைகளில் அரிசி வாங்குவது குறைந்து விட்டது. அவர்களின் வாழ்க்கை தர உயர்வு காரணமாக, வெளிச்சந்தைகளில் அரிசி வாங்குகின்றனர். ஆன்இனால்ந்த , நெல் உற்பத்தி குறைப்பு, அரிசி ஏற்றுமதி அஅத்யிதிகரிப்பு, மக்கள் தொகை அதிகரிப்பு ஆகிய காரணங்களினால் வெளிசந்தைகளில் அரிசி வ்விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது.  இது நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். அந்த சூழ்நிலையில்  நடுத்தர வர்க்கம்,  ரேஷன் கார்டுகளின் மூலம் குறைந்த விலையில் தங்களுக்கும் அரசு அரிசி வழங்க வேண்டும் என்று அரசை நிர்பந்தம் செய்யக் கூடும். அரசு பொதுவிநியோக திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்தை பராமரிக்க வெளிமாநிலங்களில் பெரும் செலவில் அரிசி இறக்குமதி செய்ய நேரிடும்.
இது மாநில அரசுக்கு அதீத நிதிச் சுமையை ஏற்படுத்தும். ஏற்கனவே மாநில அரசு பொதுவிநியோக திட்டத்தில் சில மாறுதல்களை செய்து, அரிசி விநியோகத்தை குறைத்து வருகிறது. வரும் ஆண்டுகளில் ஏற்படும் அரிசி தட்டுப்பாட்டை குறைக்க நெல் உற்பத்தி நிலங்களுக்கான மானியங்கள், உற்பத்தியை அதிகரிக்கத் திட்டங்கள் ஆகியவற்றை அமல்படுத்தினால் தான் வரக்கூடிய நெருக்கடியை தவிர்க்க முடியும்.
Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival