Read in : English

பயோ எத்தனால் என்பது ஓர் உயிரி எரிபொருள் (பயோ ஃபியூயல்). மாசைக் கட்டுப்படுத்தவும், விலையை மட்டுப்படுத்தவும் வாகன எரிபொருளோடு பயோ எத்தனால் கலக்கப்படுவது ஒன்றும் புதியதல்ல. ஆனால் பயோ எத்தனாலை நெல் தரும் வைக்கோல் போன்ற கழிவுகளிலிருந்து தயாரிக்கும் முறையில் இந்தியா முழுமையும், குறிப்பாக அரிசி உற்பத்தி மாநிலமான  தமிழ்நாடும் போதிய கவனம் செலுத்தவில்லை.

ஒன்றிய அரசு 2018-ல் தேசிய உயிரி எரிபொருட்கள் கொள்கையைக் கொண்டுவந்தது. எத்தனால் உற்பத்தியை ஆதரிக்கும் கொள்கை அது. அன்றிலிருந்து அரசு எரிபொருட்களில் எத்தனாலைக் கலக்கும் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. ஆண்டு 2030-க்குள் 20 சதவீதம் எத்தனாலைப் பெட்ரோலிலும், 5 சதவீதம் பயோடீசலை டீசலிலும் கலக்கும் இலக்கை அந்தக் கொள்கை விதித்திருக்கிறது. மேலும் 20 சதவீதம் எத்தனாலைப் பெட்ரோலில் கலக்கும் இலக்கு ஆண்டு 2025-26-ஆக திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரலில் மக்களவையில் வழங்கப்பட்ட தகவல்.

இந்தக் கொள்கைப்படி, பருத்தித்தண்டு, கோதுமை வைக்கோல், கரும்புச்சக்கை, மூங்கில் மற்றும் பாரம்பரியமான வெல்லப்பாகு போன்ற  பல்வேறு அடிமூலக்கூறுகளைப் பயன்படுத்தி எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இப்போது உணவுப் பயிர்களிலிருந்து வேளாண் பொருட்களின் கழிவுகள் மீது பயோஎத்தனால் உற்பத்தியின் கவனம் மடைமாற்றம் செய்யப்படவிருக்கிறது.

  ஒன்றிய அரசு 2018-ல் தேசிய உயிரி எரிபொருட்கள் கொள்கையைக் கொண்டுவந்ததுஎத்தனால் உற்பத்தியை ஆதரிக்கும் அது.

ஆனால், ’லிக்னோசெல்லுலோசிக்’ பொருட்களில் அதிகமாக இருக்கும்  கழிவைப் பயன்படுத்தி எத்தனால் தயாரிக்கலாம் என்பது இன்னும் சாத்தியப்படவில்லை. நெல் வைக்கோலிலிருக்கும் சிக்கலான   கார்போஹைட்ரேட்களை நொதித்த நீரில் இட்டு வேதியல் சேர்மத்தைப் பகுத்தெடுத்து நொதித்து அவற்றை முதலில் எளிமையான வடிவத்திற்கு மாற்றி பயோ எத்தனால் தயாரிக்கப்படுகிறது.

சென்னையிலிருக்கும் எம்.எஸ்.சுவாமிநாதன் பவுண்டேஷனில் அறிவு மேலாளராகவும், முதன்மைக் காப்பக நிபுணருமான என். பரசுராமன்

சென்னையிலிருக்கும் எம்.எஸ்.சுவாமிநாதன் பவுண்டேஷனில் அறிவு மேலாளராகவும், முதன்மைக் காப்பக நிபுணருமான என். பரசுராமன் இந்த விசயத்தில் அரசின் செயல்முறை சார்ந்த அணுகுமுறையைப் பரப்புகிறவர்களில் ஒருவர். அவர் சொல்கிறார்: “உயிரி எரிபொருட்களில் எதிர்காலப் புரட்சியைக் கொண்டுவருவது சாத்தியம். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் அல்லது வேளாண் அமைச்சகம் அல்லது ஒரு தன்னார்வலர் நிறுவனம் இந்தத் திட்டத்தைக் கையில் எடுக்கலாம். தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் அல்லது திருவாரூரில் நெல் வைக்கோலைப் பயன்படுத்தி பயோ எத்தனால் தயாரிக்கும் ஒரு பரீட்சார்த்தத் திட்டம் தொடங்கப்படலாம்.” எந்திரத்தால் அறுவடை செய்யப்படும் நெல் மீதான ஆர்வம் கால்நடைகளுக்குப் போய்விட்டதால் கழிவுகள் நிறையவே கிடக்கின்றன என்கிறார் அவர்.

ஆண்டிற்கு  சுமார் 120 மில்லியன் டன் அரிசியை இந்தியா உற்பத்தி செய்கிறது. உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு கிலோ அரிசிக்கும் சுமார் ஒன்றரை கிலோ வைக்கோல் உருவாகிறது. இந்த அதிகஅளவு வைக்கோலை எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்தப் பெரும் வாய்ப்பு இருக்கிறது; அதே சமயம் உணவு உற்பத்தியும் பாதிக்காது. இந்த அணுகுமுறை, பஞ்சாப் போன்ற வடக்குப் பகுதிகளில் வைக்கோலை எரித்து அதன்மூலம் மாசுப்பொருட்களை கிழக்கு நோக்கிய மாநிலங்களில் பரப்புகின்ற பிரச்சினையைத் தீர்த்துவிடும்.

உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு கிலோ அரிசிக்கும் சுமார் ஒன்றரை கிலோ வைக்கோல் உருவாகிறது. இந்த அதிகஅளவு வைக்கோலை எத்தனால் உற்பத்திக்குப் பயனபடுத்தலாம்.

அவ்வளவு எளிதல்ல
எத்தனால் உற்பத்தி சாத்தியம் சற்று நம்பிக்கை ஊட்டுவதுதான். ஆனாலும் பிரச்சினை இருக்கிறது.  ஃபரிதாபாத்திலிருக்கும் டிபிடி-ஐஓசி சென்டர் ஃபார் அட்வான்ஸ்ட் பயோ-எனர்ஜி ரிசர்ச் என்னும் உயிரி எரிபொருள் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் மனஸ் ஆர். ஸ்வெயின் மற்றும் அவரது சகபணியாளர்கள் எழுதிய கட்டுரையில் வெளியிடப்பட்ட செய்தி இது: நெல், கோதுமை வைக்கோல்களிலிருந்து பயோ எத்தனால் தயாரிப்பதில் ஒரு செம்மைப்படுத்தல் முறை இருக்கிறது. அவற்றிலிருக்கும் லிகினினை நீக்கவும், நொதிகளை நீரிலிட்டு நன்றாக பகுப்பதற்கும் வைக்கோல்களுக்கு சுத்திகரித்தலும் இணையான நொதித்தலும் அவசியம். அப்படிச் செய்தால் கிடைக்கும் எத்தனால் அளவு அதிகமாகவும் திறனோடும் இருக்கும் என்று ’உணவுப் பயிர்களிலிருந்து பயோ எத்தனால் உற்பத்தி செய்தல்’ என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரை சொல்கிறது (எல்செவியர்).

இந்தச் செயற்பாட்டில் விவசாயிகளையும், வேளாண் உற்பத்தி அமைப்புகளையும் கூட்டாளிகள் ஆக்கலாம் என்று டாக்டர் பரசுராமன்  கருத்து தெரிவிக்கிறார். அப்போதுதான் நிலையான தொழில்நுட்பங்களை உருவாக்க முடியும்.  ஆனால் எத்தனால் உற்பத்தி மையங்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து சற்று தள்ளி நிறுவுவது நல்லது; அப்போதுதான் கிராம மக்களுக்கு அச்சம் வராமலிருக்கும். எத்தனால் உற்பத்தியில் இளைஞர்களையும் ஈடுபடுத்துவது வேலை வாய்ப்புக்களையும் உண்டாக்கும் என்று அவர் சொல்கிறார். இந்த மாதிரியான புதிய ஆராய்ச்சிக்கு நல்லதோர் உதாரணம் கும்பகோணத்தருகே ஆடுதுறையிலிருக்கும் வேளாண் ஆராய்ச்சி நிலையம்தான்.

எத்தனால் உற்பத்தியில் இளைஞர்களையும் ஈடுபடுத்துவது வேலை வாய்ப்புக்களை உண்டாக்கும்.

தமிழ்நாட்டு வேளாண்மையில் புதுமைக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, காவிரிப் பாசனப்பகுதியில் அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான பருவநிலை பாசுமதி நெல் உற்பத்திக்கு உகந்தது. அதனால் இக்காலகட்டத்தில் பாசுமதி நெல் உற்பத்தி செய்யலாம். இதன்மூலம் பாசுமதி தேவையைப் பூர்த்தி செய்து தமிழ்நாட்டின் அரிசி உற்பத்தித் துறையின் அந்தஸ்தை மேம்படுத்தலாம்.

உயர்திறன் முறைகளில் பயோ எத்தனால் உற்பத்தி செய்வது பசுமை இல்ல வாயுக்களின் வெளிப்பாட்டில் தெளிவானதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். புதுப்பிக்கத்தக்க மற்றும் தொடர்ந்துவரும் எரிபொருள் ஆய்வுகள் என்ற இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில், ரேணு சிங், மோனிகா ஸ்ரீவஸ்தவா மற்றும் ஆஷிஷ் சுக்லா (2015) ஆகியோர் இப்படி எழுதுகிறார்கள்: நெல் வைக்கோல் போக்குவரத்து, நொதிகளின், ரசாயனங்களின் பயன்பாடு, பக்கவாட்டு விளைபொருட்களை எரித்தல் மற்றும் எத்தனால் ஆகியவற்றிற்கும், வைக்கோல் எரித்தலை நிறுத்தல், புதைபடிம எரிபொருள் எரித்தல், மின்சார உற்பத்தி ஆகியவற்றிற்கும் இடையில் ஓர் ஒப்பீட்டைச் செய்துபார்த்தால், எத்தனால் தயாரிப்புக்கு நெல் வைக்கோலைப் பயன்படுத்துவது கழிவுகளை உபயோகமாகப் பயன்படுத்துவதற்கான நல்லதொரு வழி என்று புலப்படும்.

நெல் மிச்சங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் வேளாண்மை அடிப்படையிலான பயோஎத்தனால் என்பது இந்தத் துறையில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தும் நல்லதொரு நடவடிக்கை. எரிபொருள் கலக்கும் திட்டங்களுக்கு வழங்கப்படும் எத்தனால் பற்றி பெட்ரோலிய அமைச்சகம் தந்திருக்கும் தரவுகளும் இதை உறுதி செய்கின்றன. பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தின் கீழ், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு வடிசாராய ஆலைகள் வழங்கிய எத்தனால் அளவுகள் பின்வருமாறு: 188.80 கோடி லிட்டர் (2018-19), 173.10 கோடி லிட்டர் (2019-20), 302.30 கோடி லிட்டர் (2020-21).

நெல் வைக்கோல் கழிவிலிருந்து பயோ எத்தனால் உற்பத்திக்கான உயர்திறன் தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பதற்கு உதவி செய்து பெரும்புரட்சிக்குத் தமிழ்நாடு தலைமை தாங்கி அதை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival