Read in : English

கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றுப்படுகையில் இந்த ஜூலையில் இதுவரை கணிசமான அளவுக்கு மழை பெய்திருக்கிறது. ஆதலால் நீர் விசயத்தைப் பொறுத்தவரை இனி தமிழ்நாட்டுக்கு நல்லநேரம் வருவது சாத்தியமாகலாம். தமிழ்நாட்டில் செப்டம்பரில் வடகிழக்குப் பருவமழை நன்றாகப் பெய்யும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் (ஐஎம்டி) கணித்திருப்பதால், தமிழ்நாடு விரைவில் நீர்மிகை மாநிலமாக மாறக்கூடும்.

இந்தச் சூழலில் தமிழகத்தின் நீர்வளத்துறை சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்கிவிட்டது. துறைசார்ந்த பொறியாளர்கள் மாநிலத்திலுள்ள காவிரிப்படுகையிலும் கீழ்ப்படுகைகளிலும் இருக்கின்ற நீர்த்தேக்கங்களையும், அணைக்கட்டுகளையும், ஆய்வு செய்யத் தொடங்கிவிட்டனர்.

தென்னிந்தியாவில் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் வண்ணம், தமிழகம் 1970-களின் ஆரம்பக்கட்டத்தில் அதிகரிக்கப்பட்ட நீரைக் சேமிக்கும் திறனை அதிகப்படுத்தும் வேலைகளில் இறங்கியது. தமிழகத்தில் 90 அணைகள் இருக்கின்றன. இரண்டு பருவகாலங்களிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மாநிலம் பெறக்கூடிய மொத்த நீர் கொள்ளளவுபடி பார்த்தால், ஒட்டுமொத்தமாக 224 ஆயிரம் மில்லியன் கனஅடி (டிஎம்சி அடி) நீரைச் சேமித்து வைக்கும் கொள்திறனைக் கொண்டவை அந்த அணைகள். தென்மேற்குப் பருவகாலத்தின்போது, கர்நாடகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், குறிப்பாக குடகு மாவட்டத்தில் பெய்யும் மழையின் காரணமாக, கர்நாடகத்திலிருந்தும், கேரளாவின் வயநாட்டிலிருந்தும் தமிழகத்திற்கு நீர்வரத்து நிகழ்கிறது.

ஒவ்வொரு ஆண்டிலும் ஜூலை மாதம் முடிவதற்குள், தமிழகத்தின் அனைத்து 90 அணைக்கட்டுகளிலும் நிரம்பும் நீரின் கொள்ளளவு கிட்டத்தட்ட 130 டிஎம்சி அடி அளவைத் தொட்டுவிடும்.

தமிழகத்தின் நீர்வளத்துறை சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்கிவிட்டது. துறைசார்ந்த பொறியாளர்கள் மாநிலத்திலுள்ள காவிரிப்படுகையிலும் கீழ்ப்படுகைகளிலும் இருக்கின்ற நீர்த்தேக்கங்களையும், அணைக்கட்டுகளையும், ஆய்வு செய்ய தொடங்கிவிட்டனர்

காவிரி நதியின் தெற்குப் பிராந்தியத்தில் பவானி சாகருக்கும், மேட்டூர் அணைக்கும் இடையில் 800 கிமீ தூரம் (பகுதிகளாக) ஓடும் கால்வாய்களில் செய்ய வேண்டிய பணிகளையும் தமிழகத்துப் பொறியாளர் நிபுணர்க்குழு கவனத்தில் வைத்திருக்கிறது. தென்தமிழகத்தின் பிற அணைகளின் கொள்திறன் மேலும் விஸ்தரிக்கப்படவிருக்கிறது.

மேலும், மேற்குத் தமிழகம் தனது பங்கு நீரை முல்லைப் பெரியாறு அணைக்கட்டிலிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க:

மாநிலங்களின் சுயநலனில் சிக்கித் தவிக்கும் முல்லைப் பெரியார் பிரச்சினை!

மத்திய பட்ஜெட்: கோதாவரி—காவிரி இணைப்புத் திட்டம் குமரி முனையைத் தொட வேண்டும்!

தென்மேற்குப் பருவமழை அண்டை மாநிலமான கேரளாவில் ஏற்கனவே தொடங்கிவிட்டது. அதனால் தமிழகத்தின் அணைகளைச் சுற்றிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்துகொண்டிருக்கிறது. செப்டம்பரில் தொடங்கவிருக்கும் வடகிழக்குப் பருவகாலத்தில் தமிழகத்தில் கணிசமான அளவுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கணித்திருக்கிறது.

அணைகளின் பாதுகாப்பு நிலையை ஆராய்வதற்காக, தமிழக நீர்வளத்துறை ஏற்கனவே அணைப் பாதுகாப்பு ஆய்வுக் குழுவையை அமைத்திருக்கிறது. அந்த ஆய்வுக்குழு, சென்னையின் முக்கியமான குடிநீர்த் தேக்கமான பூண்டி நீர்த்தேக்கத்தின் மதகுகளை நவீனப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

”வடகிழக்குப் பருவகாலத்திற்கு முந்திய அணைக்கட்டு ஆய்வு என்பது வெறும் வருடாந்திரச் சடங்கு அல்ல; தொடர்ந்துப் பேணிக்காக்கும் செயற்பாடு அது. வடகிழக்குப் பருவம் வரும் முன்பே, நீர்த்தேக்கங்களின் கரைகளையும் கால்வாய்களையும் மேம்படுத்த வேண்டும் என்று நாங்கள் பரிந்துரை செய்திருக்கிறோம். பூண்டி நீர்த்தேக்கம் பற்றிய முழு அறிக்கை இன்னும் இரு வாரங்களில் சமர்ப்பிக்கப்படும். அதன்பின்பு, வடகிழக்குப் பருவம் வரும் முன்பு, தேவைப்படும் மராமத்துப் பணிகள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்படும்,” என்று நீர்வளத்துறை அதிகாரிகள் இன்மதியிடம் கூறியிருக்கிறார்கள். முதல் கட்டமாக, கடந்த மூன்று நாட்களில் திருச்சி, கோயம்புத்தூர், மற்றும் மதுரை ஆகிய மாநகரங்களின் நீர்த்தேக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன.

காவிரி-கோதாவரி நதியிணைப்புத் திட்டத்தின் இறுதிப்பகுதியான பெண்ணார்-பாலாறு-காவிரி இணைப்புக் கால்வாய் பாலாற்றைக் கடந்தபின்பு, தூசி மாமண்டூர் ஏரியிலிருந்து நீரை எடுத்து அந்தக் கால்வாய் அடையும் பகுதியைத் தூக்கி உயர்த்த வேண்டும் என்றும், திட்டத்தின் முதல்படி நிலையிலேயே இணைப்புக் கால்வாய் கல்லணையில் முடிவதற்குப் பதிலாக கட்டளை தடுப்பணையில் முடியும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்று முன்பு தமிழகம் ஒன்றிய அரசிடம் வைத்த வேண்டுகோளை தற்போது நினைவுகூரலாம். தமிழகத்தின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டால், திட்டத்தின் கீழ் கல்லணை வரும் பட்சத்தில் கழிமுகப் பகுதிகள் அழியும் அபாயம் தவிர்க்கப்படும்; நதி வந்தடையும் நேரமும் மிச்சமாகும். தமிழகத்தின் இந்த வேண்டுகோள் சம்பந்தமான ஓர் ஆரம்பநிலை வரைவுக் கருத்தாக்கக் குறிப்பு தேசிய நீர்வள வளர்ச்சி ஆணையத்தால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்தத் திட்டம் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியான சாத்தியத்தைப் பொறுத்தது.

மேலும் பூண்டி நீர்த்தேக்கத்தைப் பழவேற்காடு அருகிலிருக்கும் திருவள்ளூரில் உள்ள ஆரணியாறு நீர்த்தேக்கத்தோடு இணைத்தால், மொத்தம் 15 டிஎம்சி கொள்திறன் கொண்ட 609 டாங்குகளில் நீர்நிரம்பும் என்றும் தமிழக அரசு கருத்து தெரிவித்திருக்கிறது. ஆனால் இந்தத் திட்டத்தின் சாத்தியம், ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் இடம்பெற்ற காவிரி-கோதாவரி நதியிணைப்புத் திட்டத்தின் இரண்டாம் படிநிலை பலமாவதைப் பொறுத்தது.

 தமிழகத்தில் காவிரிப் படுகையில் ஒன்பது இலட்சத்திற்கும் மேலான ஹெக்டேர் நிலப்பகுதியில் ராகி, கரும்பு மற்றும் நெற்பயிர்களை பயிரிடுவதற்குத் தேவையான நீர்ப்பாசன வசதியைத் தருவது காவிரி நதிதான்

தமிழகத்தில் காவிரிப் படுகையில் ஒன்பது இலட்சத்திற்கும் மேலான ஹெக்டேர் நிலப்பகுதியில் ராகி, கரும்பு மற்றும் நெற்பயிர்களை பயிரிடுவதற்குத் தேவையான நீர்ப்பாசன வசதியைத் தருவது காவிரி நதிதான். அதற்கான நீர்ப்பாசன உட்கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது தமிழகம். இந்த மாநிலத்தில் 75 அணைகளும், 10,540 டாங்குகளும், 4,429 கிமீ தூரம் பயணிக்கும் கால்வாய்களும் இருக்கின்றன. அதனால் மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக சுமார் 33 இலட்சம் ஹெக்டேர் நிலங்களில் நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது.

ஆகச்சிறந்த நீர்ப்பாசனம், மற்றும் நீரை அதிகரிக்கும் வசதிகள் ஆகியவற்றை கொண்டிருக்கும் ஒருசில தென்மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று காவிரி கண்காணிப்புக் குழு தந்த தரவுகள் சொல்லும் செய்தி. தமிழகத்தில் நீர்வறட்சி ஏற்பட்டால்கூட அதைத் தணிப்பதற்கென்றே வடகிழக்குப் பருவமழை அக்டோபர்-ஜனவரி காலகட்டத்தில் பெய்துவிடுகிறது.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival