Read in : English

Share the Article

இசை என்பது ஒற்றுமையை உருவாக்குவதற்குத்தானே தவிர,  பிளவை ஏற்படுத்துவதற்கு அல்ல. இப்போதும், உலகில் வேறு எந்த உயர்வான அமைப்புப்பை விடவும் குறைவில்லாத கர்நாடக இசை, மக்களுக்கும் சமூகத்துக்கும் இடையே நல்லிணக்கத்தை உருவாக்கி இருக்கிறது. அண்மைக் காலத்தில் மத அல்லது சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில், அத்தகைய இசையை மதத்துடன் தொடர்புபடுத்தி,  நல்ல நோக்கத்துக்காகச்  செயல்படுகிறவர்களை புண்படுத்தும் வகையில் குறிப்பிட்ட சிலர் பேசுகிறார்கள். ஏசு கிறிஸ்துவின் பாடல்களைக் கர்நாடக இசையில் பாடுகிறார்கள் என்று சில கர்நாடக இசைக் கலைஞர்களை கடுமையாகத் தாக்கி விமர்சனம் செய்கிறார்கள். 1980களில் சில முன்னணி கர்நாடக இசைப் பாடகர்களும் இதுபோன்ற பிரச்சினையை கன்னட வெறியர்களிடமிருந்து எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

தலைப்புச் செய்தி வேட்கை

எதிர்பார்த்தது போலவே, வெறுப்பைக் கக்குபவர்களுக்கும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்கத் துடிப்பவர்களுக்கும் தாக்குதலைத் தொடுப்பதற்கான பிரச்சினையாக இது வேகமாக உருமாற்றமடைந்துள்ளது. சிலர் இணையதளங்களில் விஷம் கக்குகிறார்கள்; மற்ற சிலர் தொலைபேசிமூலம் பேசி மிரட்டுகிறார்கள். இவர்களில் யாருக்கும் இந்த விஷயம் குறித்துப் போதிய அறிவு கிடையது. விவரங்களும் தெரியாது. நான் சட்ட வல்லுநர் இல்லை என்ற போதிலும், தொலைபேசி அழைப்புகள் பதிவு செய்யப்பட்டு அவற்றை இணைய தளங்களில் உலவவிடுவதன் மூலம் வேண்டுமென்றே அவதூறு செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. கலாச்சார நேர்மையைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் சம்பந்தப்பட்ட கலைஞர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்.

உண்மையான அக்கறை

மதமாற்றம் குறித்து சட்டப்பூர்வமான கவலை என்ற பெயரில் நூறு கோடி பேருக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை சில பத்து ஆண்டுகளில் 2 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்ந்துள்ளது (பெரும்பாலும் மதப் பிரச்சாரகர்களால் கூறப்படுகிறது) என்பதைச் சுட்டிகாட்டுவது ஆய்வுக்குரியது என்று சொல்கிறார்கள். அதேசமயம், ஒட்டுமொத்தமாக இந்து அல்லாதவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்திலிருந்து-25 சதவீதமாக உயர்ந்துள்ளது, மேலும் மத மாற்றங்களை ஏற்படுவதை ஊக்குவிக்கும் வகையில் கவலையளிக்கும் விஷயமாக இருக்கப் போகிறது. இந்துக்கள் மற்ற இந்துக்களை நடத்தும் முறையினால் மேலும் மதமாற்றங்கள் ஏற்படப் போகின்றன என்றும் இதற்குத் தங்களுக்குத் தாங்களே பதிலடி கொடுக்க முயற்சிக்கலாம் என்று சாய்வு நாற்காலி ஆய்வாளர்களும் கருத்தியலாளர்களும் பதிலடி கொடுக்க முயற்சிக்கலாம். நமது நாட்டில் நிலவும் வெறுப்பூட்டும் உள்ளார்ந்த காரணங்கள் வேறுவிஷயமாக இருந்தாலும்கூட, அவை தீர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம். ஆனால், இந்த ஓட்டைகளை வெளிநாட்டு சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, விளிம்பு நிலை மக்களை வெளிப்படையாக மதமாற்றம் செய்வதைப் பொருட்படுத்தமால் விட்டு விட முடியாது. நிச்சயமாக மன்னிக்க முடியாது. உறுதியாக ஆராதனை செய்ய முடியாது.

சுய மதமாற்றமும் கட்டாய மதமாற்றமும்

சந்தேகத்துக்கு இடமில்லாமல், கட்டாய அல்லது பணம் கொடுத்து ஊக்குவிக்கப்பட்ட மத மாற்றத்துக்கு எதிரானவன் நான். ஆனால், நமது புவி முழுவதும் ஒவ்வொரு நாளும் மத மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மதங்களைச் சேர்ந்த சில ஆயிரம் பேர் இந்து மதத்துக்கு மதம் மாறியுள்ளனர் என்பது நமக்கு உறுதியாகத் தெரியும். ஸ்லோவேனியா, பிரேசில், ஹங்கேரி, குரோஷியா போன்ற நாடுகளில் கூட இந்து மதப் பண்பாடுகள் தளைத்து வருகின்றன. இதில் பெரும்பான்மையாக பணம் கொடுத்தோ அல்லது கட்டாயப்படுத்தியோ நிகழவில்லை என்பதில் ஓர் இந்து என்ற முறையில் பெருமை கொள்ளலாம். சனாதன தர்ம நெறிகளின் சக்தியால் நிகழ்ந்த இயல்பான மத மாற்றங்கள் இவை (இந்தியாவைப் பொருத்தவரை, வெற்றி பெற்றதைவிட வெற்றியாளர் என்பது வேறு கதை)

ஆனால், கர்நாடக இசை கிறிஸ்தவம் குறித்த சர்ச்சை வேகமாக சுழன்று வருகிறது. சரியான கண்ணோட்டம் இல்லாமை இதற்கான காரணத்தின் ஒரு பகுதி. தவறான அல்லது தவறான  தகவல்கள் அல்லது தவறாகப் பரப்படும் தகவல்கள் காரணத்தின் மற்றொரு பகுதி.

மத மாற்றங்களுக்காக கர்நாடக இசையைப் பயன்படுத்துவது (துஷ்பிரயோகம் செய்வது)

நட்சத்திர இசைப் பாடகர்களால் பாடப்பட்ட கிறிஸ்துவத்தை மையமாகக் கொண்ட பாடல்கள், இசை நிகழ்ச்சி அல்லது ஆல்பம் அவர்களது மதத்துக்கு துரோகம் என்று வரிசைப்படுத்த முடியுமா? அல்லது இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்களை மதம் மாற்ற முயன்றுள்ளார்களா? முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என சிலர் வாதிடலாம். ஆனால் இந்தப் பின்னடைவு நோக்கிய செயல்கள் தீவிர செயல்பாடுகளைத் தூண்டுவதில் முடிவடையும் (சில இடங்களில் இதுபோல ஏற்கெனவே ஏற்பட்டுள்ளது). ஒரு கலைஞனின் தொழிலுக்கும் அல்லது கலை வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கும் மதம சார்ந்த பொறுப்புணர்வுக்கும் இடையே குற்றம்சாட்டுபவர்களுக்குத் தெளிவு இல்லை.

இதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

இந்துஸ்தானி  இசை மேதை உஸ்தாத் அப்துல் கரீம் கான் தியாகராஜரின் ‘ராமா நே சமன மேவரூ’ கீர்த்தனையை அல்லது Ôஇந்துÕ மதப் பாடல்களை 1900களின் தொடக்கத்திலேயே பாடியபோது அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இது சொந்த மதத்துக்குச் செய்யும் துரோகமாக மாறிவிடுமா? அதேபோல் ஜான் ஹிக்கின்ஸ் போன்ற பல்வேறு மதங்களைச் சேர்ந்த பலர் கர்நாடக இசையை உச்சத்துக்கு எடுத்து செல்லவில்லையா?

இணையாத துருவங்கள்

இதுவரை நான் பார்த்ததிலிருந்து, இந்த விஷயத்தில் கவலைப்படுகிறவர்கள், கர்நாடக இசையை கிறிஸ்துவர்களுக்கு எடுத்துசெல்கிறோமோ தவிர கர்நாடக இசை ரசிகர்களிடம்   கிறிஸ்துவைக் கொண்டு செல்லவில்லை என்பதைப் புரிந்து கொள்லவில்லை. இவை இரண்டும் வேறு வேறு. இந்த இசை நிகழ்ச்சியையோ அல்லது ஆல்பங்களையோ கேட்பது என்பது கேட்கும் ரசிகர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தான் என்பது தெளிவானது.

நமது இசையை உலகம் முழுவதும் உள்ள முக்கிய இசைக் குழுக்களின் இசை அமைப்பாளர்களிடமும் இசைக் கலைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது எனது நோக்கங்களில் ஒன்று. அண்மையில் விஸ்கான்சின் சேம்பர் ஆர்கெஸ்ட்ராவுடன் நான் இணைந்துள்ளேன். இவர்களிடம் உள்ள 45 கிறிஸ்துவ, யூத இசை கலைஞர்கள் சிவன், பார்வதி பாடல்கள் உள்பட பல்வேறு மதங்களைச் சேர்ந்த பாடல்களை 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசை ரசிகர்கள் கேட்டு ரசித்தனர்.

நேர்மறை கருத்துகள்

மேற்சொன்ன உதாரணங்களில் மத சித்தாந்தங்கள் குறித்து எந்தக் கேள்வியும் இல்லை. மதமாற்றத்தை தனியே விட்டு விடுங்கள். அதே நேரத்தில், இந்து நலன்களுக்கு எதிராக இந்த ஆல்பங்களுக்கும் இசை நிகழ்ச்சிகளுக்கும் தெளிவான நோக்கம் உள்ளது என்று வாதிடலாம். கர்நாடக இசை மற்ற மதங்களுக்கு உதவுவதால், மற்ற மதங்களை இசையினால் வெற்றி கொள்ளலாம் என்று எதிர்வாதம் செய்யலாம்.

ஆனால், இதன் உண்மையான பயன் என்பதை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம். அந்தக் கலைஞர்களின் முயற்சியால், அடுத்த சில ஆண்டுகளில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் கர்நாடக இசை ரசிகர்களாக மாறுவார்கள். அவர்கள் இந்து கடவுள்கள் மீது பாடப்பட்ட பெருவாரியான பாடல்கள் மீது  நம்பிக்கையற்ற தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இசை மேதைகளின் இசையைக் களவாடுதல்

இசை மேதைகளின் இசைப் படைப்புகளைக் திருடுவது என்பது கலாச்சார குற்றச்செயல். அதுவும் அவரின் மத நம்பிக்கைக்கு அல்லது ஆன்மீக நம்பிக்கைக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டால் அது குற்றம். நான் பார்த்தவரையில் இவை அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளே. தியாகராஜரின் ‘ராமா நீ சமணமேவரூ’ பயன்படுத்தப்பட்டதாக பலர் குற்றம்சாற்றுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் கிறிஸ்துவ பாடல்களில் எங்குமே அந்தப் பாடல் பயன்படுத்தப்படவில்லை; அதன் சிறு சாயல் கூட எங்கும் தென்படவில்லை.

அருணகிரிநாதரும் தீட்திதரும்

பாடலில் ஏதாவது ஒரு வார்த்தை பயன்படுத்தப்பட்டு இருப்பதைப் பார்த்து திருட்டு என்று சிலர் புழுங்குகிறார்கள். சிலரின் திறமையின்மையாலும் மாறுபட்ட நிலையாலும் இசைத் திருட்டு நிகழ்கிறது. ஆனால், அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில், ‘அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு’ எனும் பாடலில் வரும் சலாம் என்ற வார்த்தையை எப்படி வகைப்படுத்த முடியும்?

சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடு

சுவாமிமலை வாழும்  பெருமாளே.

இந்த நோக்கில் பார்த்தால், சில அந்நிய சொற்கள் கர்நாடக கிறிஸ்துவப் பாடல்களில் காணமுடியும். முத்துஸ்வாமி தீட்சிதரின் ன் பாடல்களில் பல இடங்களில் புகழ்பெற்ற மேலை நாட்டு இசையைச் சேர்த்துள்ளார். அதனை இந்து-சம்ஸ்கிருத பாடல் வரிகளாக மறு உருவாக்கம் செய்துள்ளார்.

பெரும்பாலான இசை கலைஞர்கள் தங்களது இசையை ரசிப்பவர்களுக்கு ஏற்ற வகையில் தங்கள் இசையை மேம்படுத்தியிருப்பார்கள். இறுதியில், அவர்களின் மனதில் வெகுஜன  வெறுப்புக்கு எதிரான மனநிலையை மாற்றும் எண்ணம் தான் இருக்கும். அல்லது அவர்களது கலை திரும்பவும் அவர்களையே திருப்பித் தாக்கும் அபாயம் உள்ளது. ஒவ்வொரு குடிமகனும் இந்த முக்கிய விஷயத்தில் உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். தவறான நோக்கம் இருந்தால் எவரும் நிலைத்திருக்க  முடியாது.

என்ன தீர்வு?

இந்துக் கலாச்சாரமும் மதமும் மிகவும் உறுதியனது; மற்ற மதங்கள் அல்லது கலாச்சாரங்களின் ஓர் இசை நிகழ்ச்சி ல்லது இசை ஆல்பத்தினால் அடையாளத்தை குலைத்து விடுமா? பல்வேறு திசைகளிலிருந்து வரும் எந்தவகை அச்சுறுத்தலையும் தன் அடையாளத்துடன் தாங்கி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிற்கக் கூடியது. அசைக்க முடியாத அடையாளத்துடன் இருக்கிறோம். இதை நாமே இழக்காதவரையில் இதை யாரும் நம்மிடமிருந்து எடுத்து செல்ல இயலாது. வெகுசிலர் பிரச்சாரத்தாலும் பணத்துக்காகவும் மாறலாம். ஆனால், ஒரு கலாச்சாரம் உள்ளார்ந்து உறுதியாக இருந்தால், அதுபோன்ற நிலையில் மத மாற்றம் குறைவாகவே இருக்கும். இல்லாவிட்டால், உள் காரணங்களைவிட, வெளிக் காரணங்களைக் குறை கூற வேண்டியதிருக்கும். உண்மையிலேயே அருவருக்கத்தது என்னவென்றால், காரணங்களை ஆராய்வதற்குப் பதிலாக அறிகுறிகளைத் தாக்குவதுதான்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles