Read in : English

Share the Article

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், போலீசாரின் நடவடிக்கையை மறைமுகமாக நியாயப்படுத்தும் அறிக்கைகள், அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளுக்கு ஆதரவு, குறிப்பாக கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு பாராட்டு என மென்மையான அரசியலை ரஜினி கையிலெடுத்துள்ளார். தனது படங்களின் வெளியீட்டில் சிக்கல் வந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த வழக்கமான அரசியல் யுக்திகளை அவர் கையாளுகிறார்.

ஜெயலலிதா முதல் முறையாக முதல்வரான போது ரஜினிகாந்த் அவரை சந்தித்தார். அப்போது அவரின் காரை ஜெயலலிதாவின் வீட்டின் அருகே நிறுத்தி பாதுகாவலர்கள் சோதித்தனர் (இருவரின் வீடுகளின் போயஸ் கார்டனில் அருகருகே உள்ளது). இதனால் ரஜினி எரிச்சல் அடைந்தார்.
பின்னாட்களில் ரஜினி ஜெயலலிதா அரசாங்கத்தை கடுமையாக எதிர்த்தார். அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் பெருத்து விட்டது என்றெல்லாம் அறிக்கைகள் விட்டார் அவர். ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கூட, 1996ம் ஆண்டு மீண்டுமொரு முறை ஜெயலலிதா ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டால், தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்றார்.

இதுவே 1996ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், அ.தி.மு.க.விற்கு எதிரான மனநிலைக்கு மக்கள் மாற உதவியது. இருப்பினும் 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையிலான ஜெயலலிதா ஆட்சியில் ரஜினி மென்மையான போக்குடன் நடந்து கொண்டார்.
அவர் முதல்வராக பதவியேற்ற உடனே, வாழ்த்துகளுடன் பூங்கொத்து ஒன்றை கொடுத்து அனுப்பினார். பின்னர் சினிமா நட்சத்திரங்கள் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்து கொண்ட ஜெயலலிதாவை வரவேற்றார். அந்த விழாவில் ஜெயலலிதாவை வானளவ புகழ்ந்த ரஜினி, அவரை அஷ்டலட்சுமி என்றும் கூறினார்.இதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. ரஜினியின் படத்துக்கு தியேட்டர் எண்ணிக்கையை கூட்ட அரசு அனுமதித்தது. அனுமதிக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் ரஜினி படத்துக்கு முதல் வாரத்தில் வசூல் குவிந்தது.

முந்தைய தி.மு.க. ஆட்சியிலும் இது தொடர்ந்தது. ரஜினியின் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டது. முதல் சில நாட்களுக்கு படத்தின் காட்சிகள் கூடுதலாக தியேட்டர்களில் திரையிடப்பட்டது. ஆந்திராவில், பெரிய பட்ஜெட் படம் என்ற பெயரில், ரஜினியின் ‘சிவாஜி’ படம் முதல் வாரத்தில் 70 சதவீதம் அதீத கட்டணத்தில் டிக்கெட் வசூல் செய்யப்பட்டது.

சமீபத்தில் கூட ஜூன் 10 மற்றும் 11ந் தேதிக்கு முன்னர், 8 மற்றும் 9ந் தேதிகளில் கூடுதல் காட்சிகளை வழங்க காலா படத்துக்கு அ.தி.மு.க. அரசு அனுமதி வழங்கியது. இந்த நாட்களில் 5 காட்சிகள் ஓட்ட திரையரங்குகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.


சமீபத்தில் கூட ஜூன் 10 மற்றும் 11ந் தேதிக்கு முன்னர், 8 மற்றும் 9ந் தேதிகளில் கூடுதல் காட்சிகளை வழங்க காலா படத்துக்கு அ.தி.மு.க. அரசு அனுமதி வழங்கியது. இந்த நாட்களில் 5 காட்சிகள் ஓட்ட திரையரங்குகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இது விநியோகஸ்தவர்கள் அதிக வருமானம் ஈட்ட செய்யப்படும் வழியாகும். 1994ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை ரஜினி, ஜி.கே. மூப்பனாருக்கு அனைத்து ஆதரவும் வழங்கி வந்தார். தமிழ் மாநில காங்கிரஸ் (டி.எம்.சி.) கூட்டணியுடன் தி.மு.க. 1996ல் ஆட்சிக்கு வந்தது. பின்னர் மு. கருணாநிதி மற்றும் அவரின் மகன் மு.க. ஸ்டாலினிடம் நெருக்கமாக உறவை வைத்துக் கொண்டார். இதெல்லாம் தனது படத்துக்கு தடை வந்து விடக் கூடாது. வெளியீடு மென்மையாக இருக்க வேண்டும். முதல் வார வசூலில் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்யவே.

2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையிலான ஜெயலலிதா ஆட்சியின் போது, ரஜினி கருணாநிதியை சந்திப்பதை குறைத்துக் கொண்டார். பாரதிய ஜனதா மற்றும் அ.தி.மு.க.வின் ஆதரவாளர் போன்று காட்டிக் கொண்டார். ஜெயலலிதாவின் தலைமை குறித்து அவர் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை.
2006ம் ஆண்டு மீண்டும் கருணாநிதி ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர், கருணாநிதி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரை ரஜினி தொடர்ச்சியாக சந்தித்தார். அவர்களுடன் முக்கிய நிகழ்ச்சிகளில் சிலவற்றில் மேடைகளையும் பகிர்ந்துக் கொண்டார்.

எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசை ரஜினிகாந்த் 2 முறை விமர்சித்து இருந்தாலும், பல்வேறு இடங்களில் கருத்துகள் மற்றும் அறிக்கைகள் வாயிலான அரசின் செயல்பாடுகளை பாராட்டி உள்ளார். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை வரவேற்று பேசினார்.
பெரும்பாலான கட்சிகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ரஜினியின் கருத்துக்கு அ.தி.மு.க. அமைச்சர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். மேலும் அவரின் ஆதரவிற்கு அமைச்சர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

ஆதலால், ரஜினியின் ஆரம்பக்கால சினிமா வாழ்க்கையை தொடர்ந்து கண்காணித்து வருபவர்களுக்கு, தற்போது அவர் புதிதாக கட்சி தொடங்கி (1994ம் ஆண்டு முதல் 1996 வரை நீங்கலாக), அரசுக்கு ஆதரவாக வெளியிட்டு வரும் அறிக்கைகள் வியப்பை தராது.
அவர் பாரதிய ஜனதா தலைவர்களுடன் நட்புறவுடன் இருக்கிறார். இதுமட்டுமின்றி காங்கிரஸ் தலைவர்களான பி. சிதம்பரம், அவரின் தீவிர ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் உள்பட ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, மற்றும் கர்நாடக, கேரளாவில் உள்ள அரசியல் மற்றும் சினிமா பிரமுகர்களுடன் நட்புறவுடன் இருக்கிறார். அவரின் திரைப்படம் வெளியீடு தடையின்றி நடக்க இது உதவி புரிகிறது.

ரொட்டியில் எந்த பக்கம் வெண்ணெய் தடவப்பட்டு உள்ளது என்பது ரஜினிக்கு நன்றாக தெரியும். அவர் ஒவ்வொரு நாளிலும் தனது வணிகநலன் சார்ந்தே ஆர்வம் கொள்கிறார். இதனால்தான் அவரின் அரசியல் அவதாரத்திற்கு மக்களிடையை மந்தமான ஆதரவு கிடைக்கிறது. பெரும்பாலான படங்களில் அவர் ஒரு கோபமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நிறுவனத்திற்கு எதிராக போராடுகிறார். இந்த உண்மையான அரசியல் உலகை எடுத்துக் கொண்டால், ரஜினிகாந்த் படத்தில் சுறுசுறுப்பாக செயல்படும் வரை, அவர் ஒரு கலகக்காரராக இருக்கக் கூடாது.


Share the Article

Read in : English

Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles Green path to health: Have a different keerai every day