Read in : English

Share the Article

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை ஜூலை 24ஆம் தேதி டெல்லியில் சந்திக்க மறுத்த செய்தி, ஒபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். காரணம், ஓபிஎஸ் பயன்படுத்துகிற துருப்பு சீட்டு, மத்திய அரசில் உள்ள பாஜக அமைச்சர்களை அவரால் ஏளிதில் சந்திக்க முடியும் என்பதுதான், குறிப்பாக பிரதமரை. இந்த சந்திப்பு மறுப்பு சம்பவம்,பாஜக அமைச்சர்கள்  அதிமுகவின் உள்விவகாரங்களில் தலையிடும்  முக்கிய அம்புகளாக இருக்கிறார்கள் என்ற கருத்தை உடைப்பதற்காகவும் ஒபிஎஸ்ஸை சந்திக்க மறுத்திருக்கலாம் என்பதை உணார்த்துவதாகவே உள்ளது.  கடந்த காலங்களில் மாநிலத்தில் தங்கள் அதிகார நிலையை நிலைநிறுத்துவதற்காக  ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மத்திய அரசின் தலையீட்டை ஆதரித்து வந்தார்கள். ஆனால் தமிழக அரசியலை பாஜக  பின்னாலிருந்து இயக்குகிறது என்ற பிம்பத்தை பொதுமக்களிடம் உருவாக்கியுள்ளது.

ஓபிஎஸ்ஸை சந்திக்க மறுத்த விவகாரத்தில் வினையாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம், அதிமுக எம்.பி.மைத்ரேயனுக்கு மத்திய அமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால் சந்திப்பு நிகழ்ந்தது. ஆனால் ஒபிஎஸ்ஸுக்கு  நேரம் கொடுக்கப்படவில்லை என்ற காரணம் சொல்லப்படுகிறது. மைத்ரேயனுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் ஓபிஎஸ், அவருடன் சென்ற மனோஜ் பாண்டியன், கே.பி.முனுசாமி மற்றும் மைத்ரேயன் ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க சென்ற்றுள்ளனர். ஆனால், அமைச்சரோ மைத்ரேயனை மட்டும் சந்தித்துள்ளார்; ஓபிஎஸ் அங்கு 20 நிமிடங்கள் காத்திருந்தும் சந்திப்பு நிகழவில்லை.

சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முன்பாக பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்திக்க ஓபிஎஸ் நேரம் வாங்கினாரா என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. உடல்நிலை சரியில்லாமல் இருந்த தன் தம்பியை மதுரையிலிருந்து சென்னைக்கு கொண்டுவர ராணுவ விமானம் கொடுத்த அமைச்சரை சந்திக்க செல்கிறேன் என செய்தியாளர்களிடம்கூறியது மத்திய அமைச்சருக்கு எரிச்சலைக் கொடுத்திருக்கலாம் என அதிமுக வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

மத்திய அமைச்சர் அதிமுகவின் உள்விவகாரங்களில் இருந்து விலகி இருக்க விரும்பிகிறது என்று சிலர் கூறுகிறார்கள். சொந்தக் காரணத்துக்காக அமைச்சரை சந்திக்கப் போனேன் என ஓபிஎஸ் கூறினாலும் அவருடைய ஆதரவாளர்களுடன் சென்றதால், கட்சி உள்விவகாரத்தை பற்றி பேசவே அவர் வந்திருக்கிறார் என்பது அனைவரும் உணர்ந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். சில நாட்களுக்கு முன்பு என்டிஏ அரசின் மீது நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிமுக ஆதரவை பாஜக கோரியபோது, கொடுக்கப்பட்ட உத்தரவாதமே அதிமுக உள்விவகாரங்களில் தலையிடுவது இல்லை என்பதுதான் என்கிறார்கள்.

றும் 11 எம்.எல்.ஏக்களை இணைத்துக்கொண்டது, ஒபிஎஸ்ஸுக்கு ஒமுதல்வர் பதவி, மாஃபா கே பாண்டியரஜனுக்கு அமைச்சர் பதவி கொடுத்தது எல்லாம் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு அழுத்தம் கொடுத்தனாலும் பலமுறை மோடியை சந்தித்து  முறையிட்டதனாலும் தான் என்கிறார்கள், அதிமுக உள்விவரங்களை அறிந்த சிலர். பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜகவின் மூத்த அமைச்சர்களையும் ஓபிஎஸ் நேரடியாக சந்திப்பதுதான், அதிமுகவில்  இன்று  அவர் அந்தஸ்துடன் இருப்பதற்கு காரணம். குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு என்று ஈபிஎஸ் உடனடியாக அறிவித்தது, பாஜகவுக்கும் ஈபிஎஸ்ஸுக்கும் இடையில் இருக்கும் தற்போதைய அந்நியோன்யத்தை காட்டுகிறது.

தற்போது நடந்திருக்கும் சந்திப்பு மறுப்பு நிகழ்வின் மூலம், பாஜகவின் மூத்த அமைச்சர்கள், பிஎஸ்தமிழக முதல்வர் ஈபிஎஸ்ஸின் தலைமை கிரீடத்தை சிதைக்க விரும்பவில்லை என்றும் அதிமுக ஒரு ஒற்றுமை நிறைந்த கட்சி, சிறு குழுக்கள் நிறாஇந்த கட்சியல்ல என்ற செய்தியை சொல்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கங்வுள்ள நிலையில் அதிமுக பல குழுக்களாக பிரிந்திருப்பதும் ஒருவரை ஒருவர் பின்னுக்குத் தள்ளுவதும் றதுடிடிவி தினகரனின் அமுமுக உருவாக்கியுள்ள சலசலப்பும்  அக்கட்சி குறித்து மக்களிடம் உருவாகியுள்ள மோசமான பிம்பமும் பாஜகவுக்கு கவலையளிறது. இதுகுறித்து கூறிய திமுக செய்தி தொடர்பாளர் சரவணன், ஓபிஎஸ் மீதும் அவரது உறவினர்கள்மீதும் லஞ்ச ஊழல் வழக்கு குற்றச்சாட்டு இருப்பதால் நிர்மலா சீதாராமன் அவரை சந்திக்க மறுத்திருக்கலாம் என கூறுகிறார்.

டிடிவி தினகரன் தரப்போ, ஓபிஎஸ்ஸை வளார்த்துவிடுவதால் கட்சியில் ஒரு நிலையற்ற தன்மை உருவாகும் என்பதை பாஜக தலைவர்கள்  உணர்ந்திருக்கலாம் என்கிறார்கள். இதுகுறித்து பேசிய அதிமுக வழக்குரைஞர், 18 எம்.எல்.ஏக்கள் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அந்த 18பேரும் அதிமுக அரசுக்கு எதிராக வாக்களிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இது ஈபிஎஸ், தினகரன் தரப்பை  சமாதானப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்த இரு குழுவும் இணைந்துவிட்டால் ஓபிஎஸ் ஓரம்கட்டப்படலாம். ஆனால் குழு இணைப்பு  எப்போது,எங்கு என்பதுதான் புதிர். அதிமுகவில் அடுத்து என்ன நிகழும் என்ற நிலை உருவாகியுள்ள காரணாத்தால் அக்கட்சியிடமிருந்து பாஜக விலகி இருக்கவே விரும்புகிறது. மேலும், 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவும் பாஜக விரும்புகிறது.

அதுவரை ஓபிஎஸ்- நிர்மலா சீதாரமணுக்கு இடையே நடந்த  நிகழ்வு,  அனைவரது மனதிலும் ஓபிஎஸ்- நிர்மலா சீதாராமன் சந்திப்பு மறுப்பு நிகழ்வாகவே இருக்கும்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles