Read in : English
காவிரி நதி நீர் பங்கீடு குறித்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது. அந்தஆணையத்துக்கு கர்நாடக மாநிலம் அதன் உறுப்பினரை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இந்நிலையில் மத்திய அரசு காவிரி நதி நீர் பங்கீடுதொடர்பாக 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அறிவித்துள்ளது.
அதன்படி மத்திய நீர்வளத் துறையின் தலைவரான மசூத் ஹூசைன் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். செயலாளராக ஏ.எஸ்.கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலர் எஸ்.கே.பிரபாகர் பகுதிநேரஉறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநில அரசு யாரையும் நியமனம் செய்யாத நிலையில் மத்திய அரசு, அம்மாநில நீர்வளத்துறையின்தலைமை பொறியாளரை உறுப்பினராக அறிவித்துள்ளது.
கர்நாடக அரசு அதன் பிரதிநிதிகளை அறிவிக்காமல் , காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் முடிவு சரியானதாக இருக்குமா என்றகேள்வியை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாணிடியனிடம் கேட்டோம். ‘’மத்திய அரசின் இந்தஅறிவிப்பை வரவேற்கிறோம் இந்த அறிவிப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு உரிய நீரை, சரியான நேரத்தில் பங்கீடு செய்யும்என எதிர்பார்க்கிறோம். ஆனால் இந்த முடிவை ஒருவேளை கர்நாடக அரசு புறக்கணித்தால் அதனை மத்திய அரசு முறையாக கையாண்டுமேலாண்மை ஆணையத்தை செயல்பட வைக்கும் என முழுமையாக நம்புகிறோம். அந்த வகையில் இந்த முடிவு சரியானதே’’ என்றார்.
இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதா கிருஷ்ணன்,’’மத்திய அரசின் இந்த முடிவு ஆறுதல் அளிக்கிறது. ஆனால் மேலாண்மை ஆணையம்அமைக்க இப்போது காட்டும் வேகத்தை மத்திய அரசு, கர்நாடகாவில் தேர்தல் வருவதற்கு முன்பே காட்டியிருந்தால் பல பிரச்சனைகள்தவிர்க்கப்பட்டிருக்கும். என்னுடைய பார்வையில் இந்த முடிவு ஒருவகையில் மாநில அரசின் முடிவுகளில் தலையிட்டு, மாநில சுயாட்சியைகேள்விக்குள்ளாக்குகிறதோ என்றும் தோன்றுகிறது’’ என்றார்.
இதுகுறித்து மூத்த பொறியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வீரப்பன் கூறுகையில்,’’மத்திய அரசின் இந்தமுடிவு மிகச் சரியானது. பாரட்டப்படக்கூடியது.காவிரி மேலாண்மை ஆணையம் என்பது அதன் தலைவரோடு சேர்த்து 9 உறுப்பினர்களைக் கொண்டது. அதன் ஒழுங்காற்றுக் குழு 5 பேர்களைக் கொண்டது. 5 பேரில் ஒருவர் தான் கர்நாடக மாநில உறுப்பினர். தானால், அவரை அம்மாநிலம் அறிவிக்கவில்லை. ஒருவேளைஎதிர்காலத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றால், 8 பேரில் பெரும்பான்மையானவர்கள் எடுக்கும் முடிவுக்கு கர்நாடகம் கட்டுப்பட வேண்டும். அதன்படிஅணையில் இருந்து காவிரியில் நீர் திறந்துவிட வேண்டும். அரசியல் அமைப்பு சட்டம் 365 கீழ் உச்சநீதிமன்றம்,காவிரி மேலாண்மை ஆணையம், மத்திய அரசு அனைத்தும் அரசியலமைப்பு சட்டத்துக்குட்பட்டவை. கர்நாடக அரசு குழு, ஆணையத்தின் முடிவை ஏற்காவிட்டால், இச்சட்டத்தின் கீழ்அந்த அரசின் மீது நடவடிக்கை எடுக்க இயலும். கர்நாடகா, அதன் உறுப்பினரை அறிவிக்காமல் இருப்பது அந்த மாநிலத்துக்குத்தான் நஷ்டத்தைஉண்டாக்கும்’’ என்றார் தெளிவாக.
கடந்த 6 ஆண்டுகளாக காவிரியில் நீர் வராத காரணத்தால் டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி செய்யப்படாமல் விவசாயிகள் இழப்பை சந்தித்துவந்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படட் பிறகாவது கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிட வேண்டும் என்பதேஅனைவரின் எதிர்பார்ப்பு. அதுதான் நீதியும் கூட!
Read in : English