Read in : English
(இந்த கட்டுரை முதலில் ஜூலை 2018 இல் வெளியிடப்பட்டது)
ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு தேர்தல் என்பது மத்தியிலும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் அரசியல் நகர்வு.
‘ஒரே நேரத்தில் தேர்தல்’ என்ற சிந்தனை பிரதமர் நரேந்திரமோடி யோசித்தது என்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. 1982-ல் தேர்தல் ஆணையம் கூறிய யோசனை இது. இந்திய சட்ட ஆணையத்தின் 1999ஆம் ஆண்டு அறிக்கையில் ‘தேர்தல் சீரமைப்பு அறிக்கை 117’ல் இந்த ஒரே தேர்தல் திட்டம் இடம்பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் என்ற கோரிக்கையை, தேர்தல் அமைப்பில் சீராக்கம் வேண்டும் என பல்வேறு கட்சிகள் இந்த கோரிக்கையை வலியுறுத்தின. இதில் மோடி தனக்கு எது பொருந்துமோ அதை மட்டும் தேர்வு செய்து, 2019ல் நாடாளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி இப்போதே இதை உரக்க கூற ஆரம்பித்துவிட்டார்.
இந்த அரசியல் நகர்வால் பாஜகவுக்கு என்ன லாபம்?
பொதுவாக, சட்டசபைக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், பாஜக மற்றும் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் 5 சதவீத ஓட்டுக்களை அதிகம் பெறலாம். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் வாஜ்பாயிக்கு நாடாளுமன்ற தேர்தலும் சட்டசபை தேர்தலும் ஒருங்கே நடத்தப்பட்ட போது அது அவர்களுக்கு சாதமாக இருந்தது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கடந்த ஓராண்டில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக கடும் தோல்வியை சந்தித்தது. அது பாஜக மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் வெறுப்பை காண்பிக்கிறது என்பது தெளிவாகிறது. அவ்வெறுப்பு, இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தும் சாத்தியக்கூறுகளும் உள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சட்டசபைக்கான தேர்தல் நடக்கவுள்ளது. அதேவேளையில் அடுத்து சில மாத இடைவெளியில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. ஒருவேளை மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக தோல்வியைத் தழுவினால் அந்த தோல்வி நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலித்து பாஜக தோல்வியடைந்துவிடுமோ என்பதுதான் பிரதமர் மோடியின் கவலை; மோடியின் அலை ஓய்ந்துவிட்டது என்பதுதான் உண்மை. அது, நாட்டில் மோடி எதிரலையை அதிகப்படுத்தி, பாஜக கப்பல் மூழ்கும்நிலையை உருவாக்கலாம்; என்டிஏ- கூட்டணியில் உள்ள கட்சியில் அக்கூட்டணியை விட்டு விலகலாம். ஏற்கனவே சில கட்சிகள் மூன்றாம் கூட்டணியை உருவாக்கி வருகிறதுகிறது. மூன்றாம் கூட்டணிக்கு லாபம் என்பது பாஜகவுக்கு இழப்பு. அது என்டிஏ கூட்டணிக்கு இரட்டிப்பு இழப்பு.
2019-ல் நாடாளுமன்ற தேர்தல் முடியும்வரை எந்த ஒரு மாநிலத்திலும் தோல்வியை தழுவ பாஜக விரும்பவில்லை. பாஜக குறித்தான பிம்பம் நாடாளுமன்ற தேர்தலில் நேர்மறையாக இருக்கும்பட்சத்தில், ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவே பாஜக விரும்புகிறது. மேலும், இந்த இரு மாநிலங்களிலும் பெறும் முடிவை விட சிறந்த முடிவாக இருக்க வேண்டும் என்பதும் பாஜகவின் விருப்பம். சில கட்சிகள் ஒரே நேரத்தில் தேர்தல் அண்மையிலோ அல்லது எதிர்காலத்திலோ நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என கூறுகின்றன. அனைத்து கட்சிகளும் ஒத்துக்கொண்டால், சில சட்டசபைகளின் காலத்தை நீட்டித்தும் சில சட்டசபைகளின் காலத்தை குறைத்தும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.
ஒரே நேரத்தில் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்புள்ள 13 மாநிலங்கள்:
வ.எண். சட்டசபை காலம் நாட்கள் நீட்டிப்பு(+) /குறைப்பு (-)
1. மிசோரம் 15 -டிசம்பர் 18 170
2. சட்டீஸ்கர் 5 ஜனவரி 18 149
3. மத்தியபிரதேசம் 7 ஜனவரி 18 147
4. ராஜஸ்தான் 20 ஜனவரி 19 134
5. ஆந்திரபிரதேசம் 14 ஜூன் 19 115
6. தெலுங்கானா 8 ஜூன் 19 5
7. சிக்கிம் 27 மே 19 197
8. ஒடிசா 11 ஜூன் 19 8
9. ஹரியானா 2 நவம்பர் 19 152
10. மஹாராஷ்ட்ரா 9 நவம்பர் 19 159
11. ஜார்கண்ட் 5 ஜனவரி 19 216
12. அருணாசல பிரதேசம் 1 ஜூன் 19 243
13. டெல்லி பிப்ரவரி 20 271
ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் டெல்லியில் அங்குள்ள கட்சிகள் ஒத்துக்கொண்டால் 2019ஆம் மத்தியில் நாடாளுமன்ற தேர்தலும் சட்டசபை தேர்தலும் ஒன்றாக நடத்தப்படும். மோடியின் திட்டத்துக்கு டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஒத்துக்குள்ளுமா என்பது கேள்விக்குறியே. காரணம் அங்கு 300 நாட்களை அது சட்டசபை காலத்தை இழக்க வேண்டி வரும். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, மற்றும் ஒரிசாவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கலாம். இருப்பினும் அங்கு பல சட்டசிக்கல்கள் எழும்.
சட்ட சிக்கல்கள் என்ன…?
(இரண்டாவது பகுதியை இங்கே படிக்கவும்)
Read in : English