Read in : English
விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகாவில் பாஜகவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், அங்கே தனது இருப்பை ஆணித்தரமாக பதிய வைத்துக் கொண்டிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை. எந்த வகையில் அது அமைந்துள்ளது என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம்.
கர்நாடக மாநிலத்தின் பாஜக தலைவரான அண்ணாமலை (முன்பு கர்நாடகா காவல் துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர்) தமிழக தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். ஹிஜாப் பிரச்சினையில் தீர்ப்பை வழங்கிய கர்நாடகத் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வில் அவருடன் இருந்த இரண்டு நீதிபதிகளான கிருஷ்ண தீட்சித், ஜெய்புன்னிசா மொகிதீன் ஆகியோருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுத்திய நிகழ்வுகள் குறித்து அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலையின் இந்த நடவடிக்கை கர்நாடகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது; அது கர்நாடகத்தில் உள்ள சட்ட நிபுணர்கள் சமூகத்திற்கு மாநிலம் சார்ந்த ஓர் உந்துதலைத் தந்துள்ளது.
“2022 பிப்ரவரி 5 ஆம் தேதி, கர்நாடக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்தது. சீருடைகள் பரிந்துரைக்கப்படும் அரசு கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதைக் கட்டுப்படுத்தலாம் என்று அது பரிந்துரைத்தது.” மேலும் அந்த உத்தரவு ”பள்ளிச் சீருடைப் பரிந்துரை” என்பது ”அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்கப்பட்ட” ஒரு ”நியாயமான கட்டுப்பாடு” என்று வலியுறுத்தியது.
கர்நாடகாவில் இந்த விவகாரம் எழுந்ததில் இருந்தே, கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், பின்னர் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராகவும் தமிழகத்தைச் சேர்ந்த சில தீவிரவாத சக்திகளும், சில அரசியல் விமர்சகர்களும் கடுமையான கருத்துகளை தெரிவித்தனர்” என்று அண்ணாமலை தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
ஹிஜாப் பிரச்சினையில் தீர்ப்பை வழங்கிய நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி மற்றும் நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜெய்புன்னிசா மொகிதீன் ஆகியோருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுத்திய நிகழ்வுகள் பற்றி தமிழக தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு கடிதம் எழுதியுள்ளார் அண்ணாமலை
கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள அரசியல் நிகழ்வுகள் குறித்த தமிழக பாஜக தலைவரின் அவதானிப்புகள், சில அறியப்படாத பிரச்சினைகளை அம்பலப்படுத்தியுள்ளன. இதனால் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் மீது கடற்கரைப் பகுதி காங்கிரஸ் கட்சி சுமத்திய குற்றச்சாட்டுகளை கர்நாடக பாஜகவால் முறியடிக்க முடியும்.
உடுப்பியில் காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது புன்ட்வால் தாலுகாவில் பல இடங்களில் இனக்கலவரத்தை ஏற்படுத்திய கும்பல்களை ஒடுக்குவதற்காக, அண்ணாமலை தட்சிண கன்னடா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன் அடிப்படையில் புன்ட்வாலில் எப்படி, ஏன் இவ்வளவு முறை மதக்கலவரம் ஏற்பட்டது, உண்மையான குற்றவாளிகள் எப்படித் தப்பினர், எத்தனை முறை காங்கிரஸ் தொண்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று காவல்துறையிடம் தலைவர்கள் சிலர் சொன்னார்கள் என்பது பற்றிய தகவல்களை எல்லாம் தான் சேகரித்து வைத்துள்ளதாகச் சொல்கிறார் அண்ணாமலை.
மேலும் படிக்க: மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவாரா?
வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாக வதந்தி பரவியதை அடுத்து, சென்னையில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சமீபத்திய சம்பவத்தில், வன்முறையைத் தூண்டியதாகவும், இரு குழுக்களிடையே பகைமையைத் தூண்டியதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவதாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தை குற்றம் சாட்டி அவர் வெளியிட்ட பத்திரிகை அறிக்கை காரணமாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றுக்கொண்டு, மாநிலத்திற்கு அவர்கள் தந்த பங்களிப்பை பாராட்டுகிறார்கள் என்று அண்ணாமலை மார்ச் 4 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் சொன்னார்.
” திமுகவின் இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டால்தான் இந்த வெறுப்பு பேச்சு தொடங்கியது. இந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் வட இந்தியர்களைக் கேலி செய்யும் திமுக கலாச்சாரத்தின் விளைவுதான் தற்போதைய நிலைமை” என்று அவர் கூறினார்.
திமுக எம்.பி தயாநிதி மாறன், அமைச்சர்கள் க.பொன்முடி, பி.மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் குற்றம் சாட்டினார் அண்ணாமலை.
அண்ணாமலை மீதான தமிழக போலீசார் நடவடிக்கையைக் கண்டித்து கர்நாடக பாஜக கடற்கரையோரங்களில் ஒன்று திரண்டு போராட்டங்களை நடத்தி வருவது அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சினையாகவும் மாறும்
இந்த சம்பவங்கள் சம்பந்தமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், திமுகவின் இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டால்தான் போலி செய்திகளை மக்கள் நம்பத் தொடங்கினர் என்றும் கூறினார். இது போன்ற கருத்துக்களுக்குப் பதிலளித்து தற்போதைய பதட்டத்தைத் தணிப்பது திமுகவின் கடமை என்றும் தெரிவித்தார்.
“எப்போதும் நிலைநிறுத்தி வரும் வடக்கு-தெற்குப் பிளவு அரசியலை திமுக மீண்டும் கையில் எடுத்திருக்கிறது. இந்த நிலைமையைs சரிசெய்வது இப்போது அவர்களின் பொறுப்பாகும், மேலும் பயனற்ற பிரச்சாரத்தை நிறுத்த அவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாகும்” என்று சமூக ஊடகங்களில் பாஜக தலைவர் பதிவு செய்திருக்கிறார்.
அண்ணாமலை மீதான தமிழ்நாட்டு காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்து கர்நாடக பாஜக மீண்டும் கடற்கரையோரங்களில் ஒன்று திரண்டு போராட்டங்களை நடத்தி வருகிறது, விரைவில் இது ஒரு தேர்தல் பிரச்சினையாகவும் மாறும் என்று கர்நாடக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Read in : English