Read in : English
இன்மதியின் சமீபத்திய யூடியூப் சேனல் உரையாடலில், இந்தியா: தி மோடி கொஸ்டின் எனும் பிபிசி ஆவணப்படத்தைத் தடை செய்ததன் விளவுகள் குறித்து பிரெஞ்சு ஊடகர் பிரான்காய்ஸ் காட்டியர், முன்னாள் பிபிசி தமிழோசை ஆசிரியர் டி.மணிவண்ணன், பத்திரிகையாளர் ஜி.அனந்தகிருஷ்ணன் மூவரும் விவாதித்தார்கள்.
“ பிபிசி ஆவணப் படத்தைத் தடை செய்தது தவறு என்று நினைக்கிறேன். இண்டெர்நெட் மூலம் அதனை நீங்கள் காணலாம். இண்டெர்நெட்டில் தேடினால் அதன் சுட்டிகளை அடையலாம். திரு,மோடி ஒரு சர்வாதிகாரி எனும் பிம்பத்தை வலுவூட்டும்படி அது அமைகிறது. இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் அனுமதிக்கப்படுவதில்லை என்பதையும் சுட்டுகிறது” என்கிறார் பிரதமர் மோடியைப் பல்வேறு தருணங்களில் ஆதரித்த பிரான்காய்ஸ் காட்டியர். இந்த விவகாரத்தில் பிரதமருக்குத் தவறான ஆலோசனை வழங்கிய ஊடக ஆலோசகர்களைக் குறை சொல்கிறார் காட்டியர்.
”காட்டியருடன் நான் முரண்படவில்லை”என்றார் மணிவண்ணன். “எதையும் தடைச் செய்வது என்பது இந்த டிஜிட்டல் யுகத்தில் எதிர் விளைவுகளை உருவாக்கும். புத்தகத்தைத் தடை செய்தால் பிடிஎஃப் விநியோகிக்கப்படும். உங்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை தடை செய்வது உருப்படியாக இருக்காது என்பது மட்டுமின்றி அது ஜனநாயக வழியும் ஆகாது” என்றார் அவர்.
இந்த ஆவணப்படமானது ஆவணக் காப்பகப் படங்களையும், புதிதாக வெளியிடப்பட்ட இங்கிலாந்து நாட்டின் அரசு விசாரணை அறிக்கையையும் சார்ந்துள்ளது. இது 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரங்களின் மீது புதிய தகவல்களைக் கொண்டுள்ளதா எனக் கேட்டபோது, இதொரு கடினமான விவாதம் என்றார் காட்டியர். ஏனெனில் 2002ஆம் ஆண்டில் அவர் மோடியை ஆதரித்தார்.
அப்போது அவருக்கு சபர்மதி இரயிலில் பயணம் செய்தவர்களை முஸ்லிம் குழு ஒன்று தீயிட்டுக் கொளுத்தியது தெரிந்திருந்தது என்றார். இதுதான் குஜராத் முழுவதும், அஹமதாபாத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகளைத் தூண்டியது என்பதை அறிவேன். பிராமணர்கள் முதல் தலித்துகள் வரையில் வீதிக்கு வந்து இஸ்லாமியர்களை அனைத்துப் புறங்களிலும் கொல்லத் துவங்கினர்”என்றார். “அதற்காக, திரு. மோடி கொலைகளை ஊக்குவிக்கிறார் என நினைக்கவில்லை” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கோத்ராவில் நிகழ்ந்தது புண்ணைப் போன்று சீழ் பிடித்துள்ளது; மீண்டும் 2024ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கூட, அது மோடியைத் தொடர்ந்து துரத்தித் துன்புறுத்தும்
ஒரே கேள்வி எதுவென்றால் அவர் இராணுவத்தை அழைக்க 24 மணி நேரம் காத்திருந்தாரா என்பதுதான். நான் மோடியை ஆதரித்த காரணம் 58 இந்துக்களை எரித்தது கொடூரமான நிகழ்வு எனக் கருதியால்தான்.
அவர்கள் பிராணிகளைப் போல எரிக்கப்பட்டனர். எனது மனைவியோ அல்லது மகளோ அது போலக் கொல்லப்பட்டால் நான் கோபத்தில் வீதிக்குச் செல்வேன். மோடியின் மீது நான் இப்போதும் முழுத் தவறையும் போடவில்லை”என்கிறார் காட்டியர்.
மேலும் படிக்க: மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவாரா?
மணிவண்ணனோ பிபிசி ஆவணமானது கோத்ரா கலவரங்கள் குறித்து ஏற்கனவே அறியப்பட்டவற்றுடன் மேலும் எதையும் சேர்க்காதது வருத்தத்திற்குரியது என்றார்.“இந்த ஆவணப்படமானது இங்கிலாந்து அரசிற்கு தூதரகங்கள் மூலம் அனுப்பப்பட்ட அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
அந்த அறிக்கை சமீபத்தில் கண்டறியப்பட்டதாகும். ஆவணப்படத்தின் முதல் பாகத்தில் புதிதாக நாம் அறிந்து கொள்ளும் விஷயம் இதுதான்”என்று தெரிவித்தார் மணிவண்ணன்.
காட்டியருக்கோ ஆவணப்படத்தினை இப்போது வெளியிட்டிருப்பது சதி போலத் தெரிகிறது. “ஜி 20 மாநாட்டிற்கு முன்பு இரு பாகங்களை வெளியிட்டிருப்பது சதிக் கோட்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது. இந்தியா ஜி 20 குழுவை ஓராண்டிற்கு நடத்துவது மோடிக்குப் பெருமையைத் தருகிறது என்பதைக் காட்டிலும், அவர் மரியாதைக்குரிய தலைவராக காணப்படுவதும் முக்கியம்,
ஆனால், அவர் கோத்ரா கலவரங்களுக்காக வெறுக்கப்படுகிறார்”என்றார் காட்டியர். கலவரங்களைத் தடுக்காமல் மூன்று நாட்கள் அரசு அமைதியாக இருந்தது குறித்து கேட்கப்பட்டபோது,“26/11 மும்பை தீவிரவாதத் தாக்குதல் நிகழ்ந்தபோது சிறப்புக் காவல் படையினருக்கு டெல்லியிலிருந்து மும்பை செல்ல 48 மணி நேரம் ஆனது. அதற்குள் பாதகங்கள் நிறைவேறிவிட்டிருந்தன”என்றார் காட்டியர்.
“சபர்மதி இரயில் எரிக்கப்பட்டதில் மோடிக்கு கோபம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இந்திய இராணுவத்தின் சிறப்புக்காவல் படையினருக்கு டெல்லியிலிருந்து மும்பை செல்வது கடினமாக இருந்துள்ளது. அதன் திறனற்றத்தன்மையையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்.
மும்பைச் செல்ல சில மணி நேரங்களே ஆகும். திரு.மோடியின் மீது நான் முழுப்பழியையும் போட மாட்டேன்.ஆம், அஹமதாபாத்திலும் இதர பகுதிகளிலும் கலவரங்களை நிறுத்த இராணுவத்தை அழைப்பதற்கு அவர் தாமத்தித்தார் என்று சந்தேகங்கள் உள்ளன”என்று கூறினார் காட்டியர்.
ஊடகங்கள் மோடியை விமர்சிப்பதில்லை; அதைவிட பாஜகவிற்குள் யாரும் தங்களது குரலை எழுப்புவதில்லை; குறிப்பாக பாஜக செய்தித்தொடர்பாளருக்கு ஏற்பட்ட கதியைக் கண்டபிறகு எவரும் துணியவில்லை
1984ஆம் ஆண்டில் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களைக் கட்டுப்படுத்த மூன்று நாட்கள் ஆயின என்று மணிவண்ணனும் நினைவுகூர்ந்தார். “கலவரத்தை அடக்காமல் இருந்ததற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் விழுந்தன. காங்கிரஸோ அல்லது பாஜகவோ யாரானாலும் ஆளுங்கட்சிகளை மன்னிக்க இயலாது. அப்போதெல்லாம் தாமதங்கள் இருந்தன”என்றார் மணிவண்ணன்.
“கலவரங்களின் மீதும் அதற்கு மேலும் நிகழ்ந்தவற்றைப் பற்றிய உலகப் பார்வையைப் பொறுத்தவரை பிபிசி, நியூயார்க் டைம்ஸ் மற்றும் லீ மாண்டி போன்றவற்றில் முஸ்லிம் குழுவினரால் 58 இந்துக்கள் எரித்துக் கொல்லப்பட்டது குறித்து குறிப்பிடவில்லை அல்லது அதை முஸ்லிம் குழுவினர்தான் செய்தார்களா எனச் சந்தேகம் எழுப்பப்பட்டது அல்லது அது இரயிலில் எதேச்சையாக ஏற்பட்ட தீ விபத்தா எனவும் ஐயம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: தமிழர்களுக்கு வேலை: பாஜகவின் தமிழ் அரசியல் எடுபடுமா?
இது இந்தியர்கள் அயல் நாட்டு ஊடகங்கள் மீது சதிக் கோட்பாடுகளை உருவாக்க வழிவகுத்தது. பல விசாரணைகள் அப்படியொரு நிகழ்வு நடந்ததை நிரூபித்துள்ளன. சிலர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். காங்கிரஸ் கவுன்சிலர் தலைமையிலான கும்பல் இரயில் அயோத்தியாவிலிருந்து வருகிறது என்பதால் தாக்கப்பட்டது”என்றார் காட்டியர்.
(பாப்ரி) மசூதியை இடித்துத் தள்ளியது குறித்துச் சொல்லும்போது,“நிஜத்தில் அதொரு காலி மசூதி; அதை இடிப்பது இஸ்லாத்தை அவமதிப்பதாகாது. இரயில் யாத்ரீகர்களை ஏற்றிக்கொண்டு அயோத்தியிலிருந்து வருவது இஸ்லாமியர்களைக் கோபம் கொள்ளச் செய்தது. இதை மேலை நாட்டு ஊடகங்கள் சொல்லவேயில்லை” என்றார் காட்டியர்.
“உலகில் மோடி வெறுக்கப்படுகிறார்; பிரதமர் அதை உணரவில்லை”என்பதே காட்டியரின் வாதம். அவர் மோடியின் சுயசரிதம் எழுத தயாரானபோது பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஊடகரும் ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு பதிப்பாளரும் அதற்கு எதிராக இருந்தனர். கோத்ரா கலவரங்களின் படங்களைக் கண்ட அரசுகளும் கூட அத்தகைய பார்வைகளை ஏற்படுத்திக் கொண்டன.
கலவரங்களில் மோடியின் பங்கு குறித்த சந்தேகங்கள் ஒருபோதும் தீர்க்கப்படவில்லை என்றார் காட்டியர்.“அவர் குஜராத்தில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்டபோது மீண்டும் வென்றார். கோத்ராவில் நிகழ்ந்தது புண்ணைப் போன்று சீழ் பிடித்துள்ளது. அது திரு.மோடியின் மீதான சாபம் போலுள்ளது. அவர் இதுவரை செய்தவற்றால் தேசியவாதமும், அதனால் உருவாகும் பெருமையும் இந்தியாவில் இருந்தாலும் அயல்நாடுகளில் கோத்ரா நிகழ்வுகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. அவர் 2024 ஆம் ஆண்டில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கூட, அது அவரைத் தொடர்ந்து துரத்தித் துன்புறுத்தும்” என்றார்.
மணிவண்ணனைப் பொறுத்தவரை இறுதித் தீர்ப்பாளராக விளங்கும் உச்ச நீதிமன்றம் விசாரணை மீது திருப்தி கொண்டிருந்தது என்றார். “மக்களைப் பொறுத்தவரையிலும் சமூகத்தின் புலன்களிலும் இரயில் எரிப்பும் கலவரங்களும் இன்னும் நினைவில் மங்கவில்லை. அரசியலிலும் சர்ச்சை இன்னும் நீடிக்கிறது. இரண்டு விசாரணைகள் நிகழ்ந்தன. ஒன்று மாநில அரசு நடத்தியது. மற்றொன்று இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் நடத்தியது.
அவை கோத்ரா எரிப்பு குறித்து ஒன்றுக்கொன்று எதிர்மறையான முடிவுகளை எடுத்தன. நீதிமன்றங்களைப் பொறுத்தவரை இரயிலில் தீப்பற்றியது குறித்தும், கலவரங்கள் குறித்தும் விடை காணாக் கேள்விகள் இருந்தன”என்று தெரிவித்தார்.
நாஜிக்களின் பரப்புரைத் தலைவர் ஜோசப் கோயபல்ஸின் பரப்புரை குறித்த கோட்பாட்டை முரண்பாடற்ற வகையில் நினைவு கூர்ந்தார் காட்டியர்.“ ஒரு பொய்யை திரும்பத் திரும்பக் கூறினால் அது உண்மையாகிவிடும். இந்துக்கள் விலங்குகளைப் போல எரிக்கப்பட்டது என்பது திட்டமிட்டதல்ல என்றும் அது தீ விபத்துதான் என்றும் ஒரு சாரார் விளக்குகின்றனர். அது மக்கள் மனதில் ஐயத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.
மோடி இராணுவத்தை அழைப்பதை தாமதித்தாரா , முஸ்லிம்கள் கொல்லப்படுவதால் நீதி வழங்கப்படுகிறது என்று நினைத்தாரா என்பதெல்லாம் எப்போதும் நிரூபிக்கப்படாது
” திரு.மோடி வெறித்தனத்தையும் கலவரத்தையும் ஊக்குவித்தார் என்று கூறப்பட்டதாக கேள்விப்படவில்லை எனக் கூற முடியாது. அவர் இராணுவத்தை அழைப்பதை தாமதித்தாரா , முஸ்லிம்கள் கொல்லப்படுவதால் நீதி வழங்கப்படுகிறது என்று நினைத்தாரா என்பதெல்லாம் எப்போதும் நிரூபிக்கப்படாது. அவராகவும் சொல்ல மாட்டார். அமித் ஷாவும் சொல்ல மாட்டார். ஆனால் அமித் ஷா சிறைக்குச் சென்றார். நீதி ஏதோ ஒரு அளவில் வழங்கப்பட்டது” என்றார் காட்டியர்.
பெரும்பாலான இந்தியர்களுக்கு, இஸ்லாமியர்கள் மற்றும் சில அறிவுஜீவிகளைத் தவிர கோத்ரா குறித்த கேள்விகள் ஏதுமில்லை. அதனால்தான் மோடியால் இரண்டாம் முறை பெரும்பான்மையுடன் வெல்ல முடிந்தது. குஜராத்திலும் இன்னும் பல மாநிலங்களிலும் வெல்ல முடிந்தது என்றும் கூறினார் காட்டியர். அதன் பிறகு மோடி அயல் நாட்டுத் தலைவர்கள், தலித்துக்கள், இஸ்லாமியர் மற்றும் பாலிவுட் நடிகர்கள் என அனைவரையும் சந்தித்தார். “கோத்ராவின் நாயகர்” எனும் பிம்பத்தை குலைக்கவே இப்படி செய்தார், அதில் வென்றார்.
ஆவணப்படத்தின் ஒரு பகுதியில் மோடியின் கூற்றைக் குறித்துக் கூறிய மணிவண்ணன், எப்படி அவர் ஊடகங்களை மாறுபட்டுக் கையாண்டார் என்பதைச் சுட்டிக்காட்டியதோடு, பெரும்பாலான இந்திய ஊடகங்கள் மிகவும் வெளிப்படையாக இருந்தன என்றார். எல்.கே.அத்வானி சொன்னது போல, “அவர்களை (ஊடகத்தினர்) குனியச் சொன்னால் தவழ்கிறார்கள்” என்பதைச் சுட்டினார்,
”அது போன்ற நிகழ்வுகளில் நாம் எத்தனை புலன் விசாரணை அறிக்கைகளை கண்டிருப்போம்? பிபிசி ஆவணப்படம் குஜராத் கலவரங்கள் குறித்து புதிய தகவல்கள் எதையும் கொடுக்கவில்லை, ஆயினும் இந்தியாவின் ஊடகத்தினர் என்ன செய்தனர்?”என மணிவண்ணன் நுட்பமாகக் கேட்டார். அதற்கு தெளிவான பதில் ஏதுமில்லை.
இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் பெயரளவில் என்பதால் மோடியை சர்வாதிகாரி என்று குற்றஞ்சாட்டுவது குறித்து நீண்ட காலம் தான் போரிட்டதாகக் கூறினார் காட்டியர்.“ ஆனால் திரு, மோடியின் கையிலும், அவரது பிரதமர் அலுவலகத்தின் கையிலும் மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் குவிந்துள்ளன என்பது உண்மை. இதைச் சொல்வதற்கு நான் தயங்குகிறேன். ஏனெனில் நீண்டகாலமாக நான் அவரை ஆதரித்து வந்தேன். இந்த பிபிசி தடையின் மூலம் சர்வாதிகாரம் இருக்கிறது என்பதற்கான துப்பு வெளிப்படுகிறது.
இப்போது ஊடகச் சுதந்திரம் குறைந்து அதிகளவில் தேசியவாதத் தன்மை உயர்ந்துள்ளது. அவை திரு. மோடியை விமர்சிப்பதில்லை, அதைவிட பாஜகவிற்குள்ளும் யாரும் தங்களது குரலை உயர்த்துவதில்லை. குறிப்பாக அந்த பாஜக செய்தித்தொடர்பாளருக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்து எவரும் அதனைச் செய்வதில்லை”என்றார். ஆவணப்படத்தின் இரண்டாம் பகுதியைப் பார்த்துவிட்டு காஷ்மீர் மற்றும் அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 பற்றிப் பேசுகையில், இந்தியாவிற்கு எதிராக முஸ்லிம்கள் போர் தொடுத்துள்ளதாகக் குற்றம் சுமத்தினார் காட்டியர். “ஜேகேஎல்எஃப்பின் மூலம் தீவிரவாதம் எழுச்சியுற்று காஷ்மீர் பண்டிட்களை கொல்வதை நான் கண்டிருக்கிறேன்.
இன்று காஷ்மீரி முஸ்லிம்கள் தாங்கள் பாதிப்படைந்தவர்கள் என்று சொல்வது உண்மையல்ல, காரணம் இஸ்லாத்தின் பெயரால் அவர்கள்தான் போரினைத் துவங்கினர். அவர்கள் பாகிஸ்தானால் பயிற்றுவிக்கப்பட்டு, ஆயுதம் வழங்கப்பட்டு, நிதியளிக்கப்பட்டனர். அப்போது பிபிசி அவை உண்மையல்ல என்றது. நான் அது உண்மை என்பதை அறிவேன், அது தர்க்கரீதியிலானது” என்றார்.
மணிவண்ணன் கூறும்போது அவை பாஜக முன்னெடுக்கும் பெரும்பான்மையின அரசியலின் ஒட்டுமொத்தப் போக்கினைக் காட்டுகிறது என்றார். “ஆவணப்படத்தில் பிபிசி சுட்டுவது சட்டப்பிரிவு 370 உடன் மாட்டுக்கறி உண்போர் மீதான தாக்குதல் மற்றும் சிஏஏ-என்ஆர்சி விஷயமும் அடங்கும். அரசின் பார்வைகளை அவர்கள் கேட்டனர். ஆனால் அதை அவர்கள் பேச மறுத்துவிட்டனர். ஆவணப்படத்தில் புவிசார் உத்தியின் காரணமாக இந்தியாவில் நிகழும் மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்குலகு குறைந்தளவே முக்கியத்துவம் கொடுக்கிறது”என்று தெரிவித்தார் மணிவண்ணன்.
இதன் மீதான அறிஞர் கிறிஸ்டஃபே ஜாஃபர்லோவின் கூற்று பற்றிக் கேட்டபோது, “இப்படத்தில் முன்னாள் பிரிட்டிஷ் செயலர் ஜாக் ஸ்டிரா இந்தியாவுடன் உறவுகளை முறித்துக் கொள்வது குறித்து சிந்திக்கவேயில்லை. பிரிட்டிஷ் அரசுக்கு கடும் கண்டனத்திற்குரிய அறிக்கை கிடைத்தும் பிரிட்டன் வர்த்தகம் மற்றும் இதர உறவுகளால் செயலாற்றவில்லை” என்றார் மணிவண்ணன்.
காட்டியர் சீனாவைச் சுட்டிக்காட்டி,“இந்தியாவிலுள்ள மனித உரிமை விஷயங்களை சீனாவுடன் ஒப்பிட முடியாது. கோத்ரா கலவரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டாலும் கூட ஒப்பிட முடியாது. சீனாவின் மனித உரிமை மீறல்களை மாவோ காலம் முதல் திபெத்தின் இப்போதைய நிலை வரை எடுத்துக்கொண்டாலும் ஒப்பிட முடியாது”என்றார்.
Read in : English