Read in : English
வயர் இணைய இதழின் தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியத் தலைமைக்குழு தற்போது ஒரு சர்ச்சையில் மாட்டிக்கொண்டிருக்கிறது. அந்த இணையதளத்தில் வெளிவந்த மெட்டாவைப் பற்றிய ஒரு கட்டுரை, பாஜகவைப் பற்றியும், இந்துத்துவா பற்றியும் குறிப்பிட்ட ஒரு கணக்கில் எழுதப்பட்ட நையாண்டிப் பதிவுகளை இன்ஸ்டாகிராம் உடனடியாக நீக்கிவிடுகிறது என்று சொன்னது.
அதன்பின் வயரில் வந்த மற்றொரு கட்டுரை, அந்த இன்ஸ்டாகிராம் பதிவுகள் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மாள்வியாவின் கட்டளைப்படி நீக்கப்படுகின்றன என்று சொன்னது; மெட்டா நிறுவனத்தின் அகச்சான்று ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு அந்தக் கட்டுரை எழுதப்பட்டதாக வயர் சொன்னது. இன்ஸ்டாகிராமின் கண்காணிப்பு மற்றும் சோதனைத் திட்டத்தின் படி (எக்ஸ்செக் புரோகிராம்), பாஜகவுக்கு எதிரான பதிவுகளை நீக்குவதற்கு மாள்வியாவுக்கு சிறப்புரிமை உண்டென்றும் சொல்லப்பட்டது.
பதிவுகள் நீக்கப்படுவது பற்றிய மெட்டா நிறுவனத்தின் ஆவணங்கள் வயருக்கு எப்படிக் கசிந்தன என்று கேட்டு மெட்டாவின் தகவல் தொழில்நுட்ப இயக்குநர் ஆன்டி ஸ்டோன் தனது சகபணியாளர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார் என்றும் வயர் சொன்னது.
ஆனால் கசிந்ததாகச் சொல்லப்பட்ட அந்த ஆவணங்களும், ஸ்டோன் எழுதியதாகச் சொல்லப்படும் மின்னஞ்சலும் எல்லாம் போலிகளாக இருக்கக் கூடும் என்றும், வயர் ஒரு சூழ்ச்சி விளையாட்டுக்குப் பலியாகிவிட்டது என்றும் ஸ்டோனும் மற்றவர்களும் சொன்னார்கள். அந்த மின்னஞ்சல் உண்மைதான் என்று இரு ’நிபுணர்கள்’ பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்கள் என்று வயரின் இன்னொரு கட்டுரை சொன்னது. அந்த இரண்டு நிபுணர்களின் பெயர்களைக்கூட வயர் வெளியிட்டது.
வயரின் நம்பகத்தன்மையைக் குலைக்கவே இந்த மோசடி வித்தை செய்யப்பட்டிருக்கிறதா? இதுவொரு தார்மீகமான அறம்சார்ந்த கேள்வி
ஆனால் நடந்தது என்னெவென்றால் அந்த இரண்டு நிபுணர்களும் அந்த மின்னஞ்சல் உண்மைதான் என்று சொல்லவில்லை. வயர் தங்களை இது சம்பந்தமாக அணுகவே இல்லை என்று அவர்கள் சொன்னார்கள்.
மேலும், சர்ச்சைக்குரிய இரண்டு ஆவணங்கள், மின்னஞ்சல், மாள்வியாவின் சிறப்புரிமை பற்றிய செய்தி எல்லாம் போலியானவை என்ற சாத்தியங்கள் இருந்தன. தகவல் தந்த வயரின் ஊழியருக்கு இது பொய்யென்று தெரிந்திருக்கிறது; செய்தியில் சம்பந்தப்பட்ட மனிதர்கள் செய்தியை மறுப்பார்கள் என்றும் அவருக்கு தெரிந்திருக்கிறது. என்றாலும் வயர், சம்பந்தப்பட்ட நிபுணர்களை வெளிப்படையாகவே அடையாளம் காட்டியது.
மேலும் படிக்க: இணைய பத்திரிகைகள்: காக்கப்பட வேண்டும்
மாள்வியா கொடுத்த புகாரின் அடிப்படையில், டில்லிக் காவல்துறை வயரின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மற்றும் சக நிறுவனர் எம்.கே. வேனு ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தியது. இதற்கிடையில் வயர் ஊழியர் தேவேஷ் குமார் கொடுத்த தகவல்கள் அடிப்படையில்தான் வயர் கட்டுரைகள் எழுதப்பட்டன என்றும், அவருக்கு வயர்மீது கெட்ட நோக்கம் இருந்தது என்றும் கூறி அவர்மீது குற்றஞ்சாட்டி வயர் காவல்துறையிடம் புகார் செய்தது. தேவேஷ் குமார் கொடுத்த தகவல்கள் பொய்யாகிப் போய்விட்டன.
அந்த இரண்டு நிபுணர்கள் வயர் சொல்வதை மறுதலிக்கலாம்; அப்படி மறுதலித்தால் வயர் பரிகாசத்திற்குள்ளாகும்; இது தெரிந்தும் வயர் அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களின் பரிசோதனைக்குப் பின்தான் கட்டுரைகள் வெளியிடப்பட்டன என்று சொன்னது. இதன்மூலம் வயர் சொல்வதில் நம்பகத்தன்மை இருக்கிறது என்று தெரிகிறது. வயர் வேண்டுமென்றே பொய் சொல்கிறது என்பது சாத்தியமில்லை. ஆனால் வயரின் ஆசிரியர்க் குழு ஏமாற்றப்பட்டிருப்பது போலத் தெரிகிறது.
ஊடகத்தில் இந்த மாதிரியான ஏமாற்று வேலைகள் இந்தியாவில் புதிதல்ல. சுதந்திரமான தகவல்களுக்கும் செய்திகளுக்கும் இடமில்லாத ஒரு சமூகத்தில் பத்திரிக்கையாளர்கள் பொதுமக்களின் நலனுக்காகச் சரியான உண்மையான தகவல் சேகரிக்க அதிகச் சிரமம் எடுக்க வேண்டியிருக்கிறது. சில போலி ஆசாமிகள் இந்தச் சூழலைத் துஷ்பிரயோகம் செய்து போலியான செய்திகளை வெளியிடச் செய்துவிடுகின்றனர். அவர்கள் என்ன நோக்கத்தில் இதைச் செய்கிறார்கள் என்பதை ஊகிக்க மட்டுமே முடியும்.
வயரின் நம்பகத்தன்மையைக் குலைக்கவே இந்த மோசடி வித்தை செய்யப்பட்டிருக்கிறதா? இதுவொரு தார்மீகமான அறம்சார்ந்த கேள்வி.
ஊடகத்தில் இந்த மாதிரியான ஏமாற்று வேலைகள் இந்தியாவில் புதிதல்ல. சுதந்திரமான தகவல்களுக்கும் செய்திகளுக்கும் இடமில்லாத ஒரு சமூகத்தில் பத்திரிக்கையாளர்கள் பொதுமக்களின் நலனுக்காகச் சரியான உண்மையான தகவல்கள் சேகரிக்க சிரமப்பட வேண்டியிருக்கிறது. சில போலி ஆசாமிகள் இந்தச் சூழலைத் துஷ்பிரயோகம் செய்து போலியான செய்திகளை வெளியிடச் செய்துவிடுகின்றனர்
பத்திரிக்கையாளர்கள் ஏமாந்துபோகும் பொதுவான போலிச் செய்திகளில் நாசா சம்பந்தப்பட்ட செய்தியும் ஒன்று. அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசாவில் வேலை செய்வதற்கு ஸ்காலர்ஷிப் அல்லது அழைப்பு வந்திருக்கிறது என்று யாரோவொரு மாணவர் நாசாவிலிருந்து வந்திருப்பதாகச் சொல்லும் கடிதங்களைக் காட்டுவார். அந்த மாதிரியான தந்திரவாதிகளிடம் பத்திரிகையாளர்கள் பலியாவதுண்டு. இந்த எழுத்தாளர் கூட அந்த மாதிரி ஏமாந்து ஒரு செய்தியைப் பிரசுரிக்க அனுமதித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் இதைப் போல மற்றுமொரு போலிச் செய்தி வெளிவந்திருக்கிறது. 1997-ல் ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ராஜீவ்காந்தி கொலையாளிகளான சிவராசன், தாணு ஆகியோருடன் சேர்ந்து ஜெயலலிதா நிற்பது போனற ஒரு நிழற்படத்தை அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, ஜுனியர் விகடன் வெளியிட்டன. ஆனால் அந்த நிழற்படத்தில் இருப்பது தஇஅதிமுக ஆட்கள் என்று பின்புதான் தெரிந்தது.
மேலும் படிக்க: சவுக்கு சங்கர் நல்லவரா, கெட்டவரா?
தவறுகள் உலகம் முழுவதும் பொதுவானவைதான். அமெரிக்காவில் வாட்டர்கேட் ஊழல் செய்திகளைச் சேகரிக்கும் பணியைச் செய்த பாப் வுட்வார்டு, கார்ல் பெர்ன்ஸ்டெயின் ஆகிய நிருபர்கள் வாஷிங்டன் போஸ்ட்டில் போலியான செய்தி ஒன்றை வெளியிட வைத்துவிட்டனர். அந்தப் பத்திரிக்கை தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்று சொன்ன ஜனாதிபதி ரிச்சர்டு நிக்ஸன் இந்தச் சம்பவத்தைத் தனது குற்றச்சாட்டிற்கு ஆதாரமாகக் காட்டினார். ஆனால் அமெரிக்க அரசு வாஷிங்டன் போஸ்ட்டுக்கு எதிராகக் குற்றவழக்கு பதிவு செய்யவில்லை
நியூயார்க் டைம்ஸ் நாளேடு தினமும் அரைப்பக்க அளவுக்குத் திருத்தங்கள் வெளியிடும் வழக்கத்தை வைத்திருந்தது.
நேர்மையான தவறுகள், உள்நோக்கம் இல்லாத தவறுகள் குற்றம் அல்ல என்பதுதான் உலகம் முழுவதும் நிலவும் பத்திரிக்கைச் சுதந்திரக் கருத்தாக்கத்தின் ஆணிவேர். வேண்டுமென்றே செய்யாத தவறுகள், தீயநோக்கம் அற்ற தவறுகள் பத்திரிகைகளில் நிகழலாம் என்பதைப் புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் எதிர் சுலிவான் வழக்கு நிரூபித்தது. அந்த மாதிரியான தவறுகளுக்கு ஊடகங்கள் கொடுக்கும் விலை அவற்றின் நம்பகத்தன்மைதான். அதுவே – அது மட்டுமே – அதிக நாசம் பண்ணக்கூடியது. உள்நோக்கம் அற்ற உண்மையான தவறுகளை சட்டப்படி தண்டிப்பது என்பது மக்களாட்சித் தத்துவத்தின் அதிமுக்கிய உத்தரவாதமான பத்திரிகைச் சுதந்திரத்திற்குச் சாவுமணி அடிப்பதாகும்.
வயர் இணைய இதழ் பிரதமர் மோடியைப் பற்றியும், பாஜகவைப் பற்றியும் ஓர் எதிர் நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. சித்தார்த் வரதராஜனிடம் தென்பட்ட மோடி எதிர்ப்புணர்வைக் காரணம் காட்டி இந்து நாளிதழின் ஆசிரியர் பதவியிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் நீக்கப்பட்டார். துடிப்புடன் இயங்கும் ஒரு ஜனநாயகத்தில் எதிர்க்கருத்துக்கள் கொண்ட இதழியல் துறை என்பது அதிகார மையங்களுக்கான ஓர் ஒழுங்குநெறி அமைப்பு. அவ்வப்போது ஏற்படும் தவறு என்பது அதற்கான ஒரு சிறிய விலை. அவ்வளவே!
Read in : English