Read in : English

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையானது வி.கே. சசிகலா, மருத்துவர் கே.எஸ். சிவக்குமார், சிகிச்சை வழங்கப்பட்ட காலகட்டத்தில் சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோரை குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தப் பரிந்துரைத்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், இரண்டு மாத சிகிச்சைக்குப் பிறகு டிசம்பர் 5ம் தேதி இரவு 11. 30 மணியளவில் அவர் மரணித்ததாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டதும் நாம் அறிந்த தகவல்கள்தான்.

2017ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, சுமார் 4 ஆண்டுகளாக ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆங்கிலத்தில் 500 பக்கங்களும், தமிழில் 608 பக்கங்களும் கொண்ட தனது அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

சில அதிகாரம் பெற்றோருக்கு உதவ, ஆஞ்சியோ சிகிச்சையைத் தவிர்ப்பதற்காக மருத்துவர் பாபு ஆபிரகாம் அறுவைசிகிச்சையைத் தள்ளிப்போட தவறான ஆலோசனை வழங்கியுள்ளார்

2016 செப்டம்பர் 22ஆம் தேதியன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதற்கு முன்னர் தொடங்கி அதே ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியன்று இரவு அவர் மரணமைடைந்ததாகச் சொல்லப்பட்டதற்கு பிறகான நிகழ்வுகள் வரை பல தகவல்கள் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்தது.

தற்போது ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையை சட்டமன்றத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்ற சில தகவல்கள் இவ்விவகாரத்தில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்துகின்றன.

மேலும் படிக்க: ஆறுமுகசாமி ஆணைய விசாரணை முடிந்தது: அறிக்கையில் சந்தேக முடிச்சுகளுக்கு விடை கிடைக்குமா?

ஆறுமுகசாமி ஆணையத்தில் குறிப்பிடப்பட்ட தகவல்கள்..
* மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்பே ஜெயலலிதா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்

*குடும்ப மருத்துவர் டாக்டர் சிவகுமாரின் ஆலோசனையின் பேரில் ஜெயலலிதாவுக்கு காய்ச்சலைக் குணப்படுத்த பாராசிட்டமால் அளிக்கப்பட்டுள்ளது

*குளியலறையில் இருந்து படுக்கைக்கு திரும்பியபோது ஜெயலலிதா மயங்கி விழுந்தார்

* மயங்கி விழுந்த ஜெயலலிதாவை சசிகலா தாங்கிப் பிடித்துள்ளார், அதன்பின்னர், அப்போலோ மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்

* ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார் ஜெயலலிதா

* ஜெயலலிதாவை வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர்களிடம், அவரது உடல்நிலை பாதிப்பு குறித்த அசாதாரணமான செயல் எதுவும் கண்டறியப்படவில்லை.

* உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாட்டற்ற நீரிழிவு ஆகிய நோய்களால் ஜெயலலிதா அவதிப்பட்டு வந்தார்.

* ஹைப்போ தைராய்டிசம், நாள்பட்ட வயிற்றுப்போக்குடன் எரிச்சல் கொண்ட குடல்நோய்க்குறி, நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி ஆகிய நோய்களாலும் ஜெயலலிதா பாதிக்கப்பட்டு வந்துள்ளார்

* மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ஜெயலலிதாவுக்கு சிறுநீர் தொற்று மூலம் ‘செப்சிஸ்’ பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விசாரணையின் அடிப்படையில் வி.கே.சசிகலா, மருத்துவர் சிவகுமார், சுகாதாரதுறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர், செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் ஆகியோரைக் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்து விசாரணைக்குப் பரிந்துரைக்கிறது

* செப்டம்பர் 27ம் தேதி மூச்சு திணறல் ஏற்பட்டதால் ஜெயலலிதாவுக்கு வென்டிலேட்டர் பொருத்தியுள்ளனர்.

* அக்டோபர் 11ம் தேதி அமெரிக்க மருத்துவர் டாக்டர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல், ஜெயலலிதாவுக்கு ‘ஆஞ்சியோ’ சிகிச்சை அளிக்க அப்போலோ மருத்துவர் டாக்டர் பாபு ஆபிரகாமிடம் பரிந்துரைத்தார். ஆனால், அதை அப்போலோ மருத்துவமனை செய்யத் தவறிவிட்டது.

*அமெரிக்க மருத்துவரின் ஆலோசனைப்படி ஆஞ்சியோ செய்திருந்தால் ஜெயலலிதா உயிர் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

* அந்த நேரத்தில், இங்கிலாந்து மருத்துவர் டாக்டர் ரிச்சர்ட் பீலே தொலைபேசி வழியே தெரிவித்த வாய்வழி கருத்தை ஏற்று, இதய அறுவைசிகிச்சை தேவையில்லை என அப்போலோ மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்

*ஆஞ்சியோ சிகிச்சையைத் தவிர்ப்பதற்காக சில அதிகாரம் பெற்றோருக்கு உதவ, மருத்துவர் பாபு ஆபிரகாம் அறுவைசிகிச்சையைத் தள்ளிப்போட தவறான ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் படிக்க: புதிராக வாழ்ந்து புதிராக மறைந்த திராவிட இயக்கத் தலைவராகத் தகவமைத்துக் கொண்ட ஜெயலலிதா!

*இந்த ஆலோசனையை முதன்மை மருத்துவரான டாக்டர் ரிச்சர்ர்ட் பீலே கூறியதாக அமெரிக்க மருத்துவர் ரஸ்ஸலிடம் மருத்துவர் பாபு தெரிவித்துள்ளார்.

* 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதியன்று இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

* சாட்சியங்கள் அளித்த தகவலின்படி டிசம்பர் 4ம் தேதி மாலை 3 மணியில் இருந்து 3.50 மணிக்குள் ஜெயலலிதா இறந்திருப்பது தெரிய வந்துள்ளது.

*ஜெயலலிதாவை திறன்மிகு சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லாதது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது அத்தகைய நடவடிக்கை நமது இந்திய மருத்துவர்களை அவமானப்படுத்தும் செயலாக இருக்கும் என சுகாதாரத்துறைச் செயலாளர் அளித்த பதில் வியப்பில் ஆழ்த்தியது

*இது போன்ற பொய்த்தன்மையை வெளிப்படுத்தும் தகவல்கள் அப்போதே உடனுக்குடன் அரசிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தால் நோய்வாய்ப்பட்ட முதலமைச்சரை உயர்சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும்.

*சுகாதாரத்துறை செயலாளரின் கூற்று சரியானது என்று எடுத்துக்கொண்டாலும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்தும் சிங்கப்பூரிலிருந்தும் மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டது இந்திய மருத்துவர்களின் தன்முனைப்பிற்கு அழுத்தம் அளிப்பதாக இல்லையா..?

* 2012 ஜனவரியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டமொன்றில் சசிகலா குடும்பத்தினரை தொடர்புகொள்ள வேண்டாம் என அதிமுக உறுப்பினர்களை ஜெயலலிதா எச்சரித்திருந்தார்.

* 2012 ஏப்ரல் மாதம் சசிகலா வழங்கிய உறுதிமொழி கடிதத்தின் அடிப்படையில் அவரை மட்டும் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார்.

* சசிகலாவின் உறவினர் கிருஷ்ணபிரியாவின் சாட்சியத்தின்படி, சசிகலாவிற்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே நல்லுறவு இல்லை.

* விசாரணையின் அடிப்படையில் வி.கே.சசிகலா, மருத்துவர் சிவகுமார், சுகாதாரதுறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர், செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் ஆகியோரைக் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்து விசாரணைக்குப் பரிந்துரைக்கிறது.

முதல்வரின் உடல்நலக் குறைவு மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து உண்மை நிலையை வெளிப்படுத்த தவறிய மருத்துவர் பிரதாப் சி ரெட்டி விசாரிக்கப்பட வேண்டும்

*ஜெயலலிதாவிற்கு சிகிச்சைஅளித்த மருத்துவர்கள் ஒய்விசி ரெட்டி மற்றும் பாபு ஆபிரகாம் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

*முன்னாள் தலைமைச்செயலாளர் ராமமோகனராவ் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

* உண்மைகளைத் தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்ற நபராக இருந்தும், செய்தியாளர்கள் சந்திப்பில் மறைந்த முதல்வர் எந்தநேரத்திலும் டிஸ்சாஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கையை மருத்துவர் பிரதாப் சி ரெட்டி வெளியிட்டுள்ளார்.

*முதல்வரின் உடல்நலக் குறைவு மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து உண்மை நிலையை வெளிப்படுத்த தவறிய மருத்துவர் பிரதாப் சி ரெட்டி விசாரிக்கப்பட வேண்டும்

*ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான எய்ம்ஸ் மருத்துவக்குழுவின் அறிக்கையை விசாரணை ஆணையம் ஏற்காது.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival