Read in : English

கர்நாடகம் கட்ட விரும்பும் மேகதாது அணை பற்றிய கர்நாடகத்தின் பார்வையைப் புரிந்துகொள்ளக் காவிரி நதிநீப் பங்கீடு பற்றி விரிவாக அறிந்துகொள்ள வேண்டும். காவிரி நதிநீர்ப் பங்கீட்டின் கதை நீண்ட வரலாற்றைக் கொண்டது; அதன் பின்னணியைச் சற்று ஆராய்வோம்.

கர்நாடகத்தில் மாண்டியா மாவட்டத்தில் காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணையில் நீர்மட்டம் 97.91 அடியாக இருக்கிறது. அதன் முழுக் கொள்ளவு 121.80 அடி. நீர்வரத்து டிசம்பரில் அணையின் நீர்வரத்து ஒரு நாளைக்குச் சில ஆயிரம் லிட்டர் அளவுக்குக் குறைந்துவிடுகிறது. ஜூலை மாதம் பருவமழை காலத்தில் நீர்வரத்து பல லட்சம் லிட்டராக உயர்ந்துவிடுகிறது.

கடந்த காலத்தில் இப்படிப் பலமுறை நிகழ்ந்திருக்கிறது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை நன்றாகப் பெய்திருக்கிறது என்பதாலும், கேஆர்எஸ் அணையில் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது என்பதாலும், அணை விரைவாக நிரம்பிவிடும் என்று அர்த்தமில்லை. 2011ஆம் ஆண்டுதான் ஆகச்சிறந்த உதாரணம். அப்போது அணையில் நீர் விரைவாகக் காலியானது.

அணை முழுக் கொள்ளளவை எட்டும்போது, உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி, டிசம்பர் 10 வரை தமிழ்நாட்டுக்குக் கர்நாடகம் 2 லட்சத்து 83 ஆயிரத்து 170 லிட்டர் நீரைத் திறந்துவிட வேண்டும்; இது மொத்தம் 4.8 டிஎம்சி நீராகும். மேலும், காரிஃப் பருவ விவசாயத்துக்காக, 11 இலட்சம் ஹெக்டேர் நிலத்தின் நீர்ப்பாசனத்திற்காக மேலும் 12.8 டிஎம்சி நீர் சேமிக்கப்படுகிறது. பெங்களூரு, மைசூரு, மாண்டியா நகரங்களின் குடிநீர்த் தேவைகளுக்காக 8 டிஎம்சி நீரும் சேமிக்கப்படுகிறது. இதெல்லாம் 2023 பருவகாலம்வரைக்குமான கணக்குதான். அணையின் நீர்வரத்து ஒரு நாளைக்கு 84, 951 லிட்டராக உள்ளது ; நீர்வெளியேற்றம் ஒரு நாளைக்கு 1,45,549 லிட்டராக இருக்கிறது.

அதிகப்படியான பருவமழையினால் இன்னும் ஒரு வாரத்தில் மேட்டூர், பவானி சாகர் அணைகள் முழுநீர் மட்டத்தை அடைந்துவிடும். உச்சநீதி மன்றத்தில் தங்களின் வழக்கைப் பலப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு நீர்ப்பாசனத் துறை இந்த அணைகளின் நீர் மட்டத்தை முழுக் கொள்ளளவுக்கு மூன்றடி குறைவாகவே வைத்திருக்கிறது

அதாவது தேக்கிவைத்திருந்த நீரிலிருந்து ஒவ்வொரு நாளும் 60,598 லிட்டர் நீர் காலியாகிறது. டிசம்பர் 10 வரை ஒவ்வொரு நாளும் 2 லட்சத்து 83 ஆயிரத்து 170 லிட்டர் நீரை அணையிலிருந்து திறந்துவிட்டால், மிச்சம் 16 டிஎம்சி நீர்தான் இருக்கும். அதில் 4 டிஎம்சி நீரைப் பயன்படுத்த முடியாது. ஏனெனில், அணையில் குறைந்தது 4 டிஎம்சி தண்ணீர் இருந்தாகவேண்டும்.

இந்தப் பின்னணியில் சிந்தித்தால், நல்ல பருவமழை பெய்தால்கூட இந்தப் பகுதியில் ஆண்டுமுழுவதும் அணைக்கு அபரிமிதமான நீர்வரத்து வரும் என்று சொல்ல முடியாது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இது தொடர்பான எண்ணங்களை வழக்குரைஞரும் சட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான டி. எஸ். சத்யானந்தா இன்மதியிடம் பகிர்ந்துகொண்டார்: “தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் உள்ள பிலிகுண்டுலூ என்னும் கிராமத்தில் இருக்கும் நீர் அளவுமானி பருவமழைக் காலமான அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் காட்டும் அளவின்படி, காவிரியின் தெற்குப் பகுதியிலிருந்து ஒவ்வொரு நாளும் சுமார் 5 லட்சம் லிட்டர் நீர் மேட்டூர் அணைக்கும், பவானி சாகர் அணைக்கும் போகிறது.”

இதுவரை பெய்த அதிகப்படியான பருவமழையால் இன்னும் ஒரு வாரத்தில் மேட்டூர், பவானி சாகர் அணைகள் முழுக்கொள்ளளவை எட்டிவிடும். என்றாலும், “அந்த அணைகள் முழுக் கொள்ளளவை எட்டுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அணைகளின் நீர் தஞ்சாவூர் மற்றும் பிற மாவட்டங்களுக்குத் திறந்துவிடப்படுகிறது.

உச்சநீதி மன்றத்தில் தங்களின் வழக்கைப் பலப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு நீர்ப்பாசனத் துறை இந்த அணைகளின் நீர் மட்டத்தை முழுக் கொள்ளளவுக்கு மூன்றடி குறைவாகவே வைத்திருக்கிறது” என்றார் அவர்.

பருவகாலங்களில் ஒவ்வோர் ஆண்டிலும் அக்டோபர் மாதத்தில் 12 நாள்களுக்கு மேலாகக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குச் சுமார் 8 லட்சத்து 77 ஆயிரம் லிட்டர் நீரைத் திறந்துவிடுகிறது. அதாவது, காவிரி கண்காணிப்புக் குழு பரிந்துரை செய்திருக்கும் 27 டிஎம்சிக்கும் அதிகமான அளவிலான 30 டிஎம்சி நீர் இது. இந்த மிகைநீர் கர்நாடகத்தின் பங்கிலிருந்து கொடுக்கப்படுகிறது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். ஜூலை 30, 2022 அன்று கர்நாடக நீர்வளத்துறையின் ஆவணங்கள் தெரிவிக்கும் தரவுகள் இவை.

காவிரி நதி நீர்ப் பங்கீட்டு விவகாரத்தை நன்கு அறிந்த நிபுணரான எல். சந்தேஷ் சொல்கிறார்: “காவிரி நதிநீர்ப் பங்கீட்டுச் சர்ச்சையின் காரணமாக 200 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடகம் கஷ்டப்பட்டிருக்கிறது. முதல் சர்ச்சை 1800-1801இல் வெடித்தது.”

‘காவிரி கடனா’ (காவிரி யுத்தம்) என்ற கன்னட நூலின் ஆசிரியரான சந்தேஷ் மேலும் சொல்கிறார்: “இந்தச் சர்ச்சை 200 ஆண்டுகளுக்குப் பின்பும் தொடர்கிறது. நிலைமை மாறவில்லை. 1924இல் ஆங்கிலேயே ஆட்சியில் மெட்ராஸ் மாகாணத்துக்கும் கர்நாடக மாகாணத்துக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது. அது 1974 வரை நடைமுறையில் இருந்தது. சுதந்திரம் அடைந்த கையோடு, ஆங்கிலேய ஆட்சியில் போடப்பட்ட எல்லா நதிநீர் ஒப்பந்தங்களையும் ரத்து செய்யும்படி கர்நாடகம் கேட்டுக்கொண்டது. ஆனால், தமிழ்நாடு 1924ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை நீதிமன்ற உத்தரவுப்படி தக்கவைத்துக் கொண்டது.

கர்நாடகம் தனிமாநிலமாக உருவானபின்பு, அந்த ஒப்பந்தத்தை விலக்கிக் கொள்ளும்படியும், தனிமாநிலமாக மாறிவிட்டபடியால் புதிய ஒப்பந்தம் போடலாம் என்றும் கர்நாடகம் விரும்பியது. ஆனால், தமிழ்நாடு பழைய ஒப்பந்தத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டது.”

மேலும் படிக்க:

மேட்டூர் அணை நீரைப் பாதுகாக்க வேண்டாமா?

தமிழகம் நீர்மிகை மாநிலமாகும் சாத்தியம் அதிகம்

சந்தேஷ் மேலும் சொல்கிறார்: “காவிரி தீர்ப்பாயம் வழக்கமான நீர் ஆண்டில் கிட்டத்தட்ட மொத்தம் 740 டிஎம்சி நீரளவைக் கணக்கில் எடுத்துக் கொண்டது. ஆனால், என்னைப் போன்ற சாமானியர்களுக்குச் சில கேள்விகள் இருக்கின்றன. தீர்ப்பாயம், தமிழ்நாட்டுக்கு 404.25 டிஎம்சி, கர்நாடகத்திற்கு 284.75 டிஎம்சி, கேரளாவிற்கு 30 டிஎம்சி, பாண்டிச்சேரிக்கு 7 டிஎம்சி என்று காவிரி நீரைப் பகிர்ந்தளிக்கிறது. மொத்தம் 726 டிஎம்சி பகிர்ந்தளிக்கப்படுகிறது. மிச்சமிருக்கும் 14 டிஎம்சி சுற்றுப்புறச் சூழல் காரணிகளுக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கிறது.”

“காவிரி நீர்க் கட்டமைப்பிற்குக் கர்நாடகம் 425 டிஎம்சி நீரை அதாவது 54 சதவீதத்தைத் தனது பங்காகத் தருகிறது. இதில் அது தனது பங்கான 284.75 டிஎம்சி நீரைப் பயன்படுத்தினால், மிச்சம் அந்த மாநிலத்தில் 140.25 டிஎம்சிதான் இருக்கும். அப்போது பிலிகுண்டுலூ மையத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு 177.25 டிஎம்சி நீரைத் திறந்துவிடுவது சாத்தியமற்றது. தீர்ப்பாயம் சொன்னதை நிறைவேற்ற தமிழ்நாட்டிற்கு இன்னும் 37 டிஎம்சி பாக்கி தரவேண்டியிருக்கும். அதைக் கர்நாடகம் எப்படி தரும்? அதற்கு இரண்டே இரண்டு வழிகள்தாம் இருக்கின்றன. ஒன்று கர்நாடகம் தன் பங்கைத் தியாகம் செய்ய வேண்டும். அல்லது கேரளாவிலிருந்து பெறும் கபினி நீரை அது பயன்படுத்தக் கூடாது.

கபினியும் அதன் கிளைநதிகளும் ஓர் அங்குல அளவுக்குக் கூட தமிழ்நாட்டில் பாய்வதில்லை. அவை கர்நாடகத்தில்தான் முழுவதுமாய்ப் பாய்கின்றன. அதனால் கபினி நீரில் கர்நாடகத்தின் பங்கை மறுதலிப்பது எப்படி நியாயமாகும். இதுவோர் நியாயமான கேள்வி” என்கிறார் ஸ்ரீதர் ரகுநாத ராவ் என்னும் காவிரி நீர்ப்பங்கிட்டுத் துறை நிபுணர்.

“177.25 டிஎம்சி நீரை பிலிகுண்டுலூவிலிருந்து திறந்துவிட்டால், கர்நாடகத்திற்கு, சட்டப்படியான 284.75 டிஎம்சி-க்குப் பதிலாக, 247.75 டிஎம்சி மட்டுமே கிடைக்கும். இரண்டாவது, தமிழ்நாட்டின் நிலையைப் பார்ப்போம். கர்நாடகம் பிலிகுண்டுலூவிலிருந்து திறந்துவிடும் 177.25 டிஎம்சி தவிர, 32 சதவீத அளவில் உற்பத்தியாகும் 252 டிஎம்சியையும் சேர்த்தால், மொத்தம் 429.25 டிஎம்சி ஆகும். இதில் பாண்டிச்சேரியின் பங்கான 7 டிஎம்சியைக் கழித்தால் தமிழ்நாட்டிற்கு மொத்தம் 422.25 டிஎம்சி நீர் கிடைக்கும். தனது முழுப்பங்கான 404.25 டிஎம்சியை விட 18 டிஎம்சி நீர் மிகையாகத்தான் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கிறது. இது கர்நாடகத்திற்குச் செய்யும் அநியாயம்” என்கிறார் ராவ்.

கேஆர்எஸ் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு 13 ஆண்டுகளாக அலைந்து திரிய வேண்டியதாயிற்று என்று சொன்னார் சந்தேஷ்.

அவரது நூலின் தரவுகள் படி, கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு ஏற்கெனவே 6,000 டிஎம்சி-க்கும் மேலாக நீரைத் திறந்துவிட்டிருக்கிறது. அதில் வெறும் சிறிய அளவு நீரைத்தான் தமிழ்நாடு பயன்படுத்தியிருக்கிறது. மிச்சநீர் வங்காள விரிகுடாவிற்குள் கலந்து வீணாகப் போய்விட்டது. “தமிழ்நாடு-கர்நாடகக் கூட்டுத் திட்டத்தின்படி ஒன்றிய அரசின் பங்களிப்போடு மேகதாது அணையைத் தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியில் கட்டும் கருத்து 1972-ல் முன்மொழியப்பட்டது.

ஆனால், அரசியல் காரணங்களுக்காக அந்த அணை உருவாகவே இல்லை. அதனால் நீர்ப்பங்கீட்டு விசயத்தில் இரண்டு மாநிலங்களுக்கும் இடையில் அடிக்கடி சர்ச்சை வெடிக்கிறது” என்கிறார் சந்தேஷ். அவர், தேவராஜ் அர்ஸ் பிற்படுத்தப்பட்டோர் சங்கத்தை ஏற்படுத்தி அதன்மூலம் மேகதாது அணையின் தேவையை இரண்டு மாநிலங்களுக்கும் புரியவைக்க முயன்றார்.

காவிரி நீர்ப்பாசனத்தால் 9 இலட்ச ஹெக்டேருக்கும் மேலான நிலப்பகுதிகள் பலனடைகின்றன. அவற்றில் ராகி, கரும்பு, நெல் பயிர்கள் விளைகின்றன. தமிழ்நாட்டில் 75 அணைகளும், 10,540 ஏரிகளும், 4,429 கிமீ தூரம் ஓடும் கால்வாய்களும் இருக்கின்றன; அந்தப் பலமான நீர்ப்பாசனக் கட்டமைப்பால் சுமார் 33 இலட்சம் ஹெக்டேருக்கும் மேலான வேளாண்மை நிலங்களின் நீர்த்தேவைகள் பூர்த்தியாகின்றன. காவிரிக் கண்காணிப்புக் குழு தகவல்கள், தென்மாநிலங்களிலே வலுவான நீர்ப்பாசனக் கட்டமைப்பு கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்கின்றன.

தமிழ்நாட்டின் இந்த நீர்ப்பாசனக் கட்டமைப்புக்கு மேலும் வலுசேர்ப்பது அக்டோபர்-ஜனவரி வடகிழக்குப் பருவமழையும், தென்மேற்குப் பருவமழையில் நீர்பெறும் கர்நாடகம் திறந்துவிடும் காவிரி நீரும்.

கர்நாடகத்தின் நேத்ராவதி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய நதிகளில் நீர்கொழித்து ஓடுகிறது. ஆனால் மிகைநீர் அரபிக்கடலில் கலந்துவிடுகிறது. அதனால் மிகைநீரைத் தொடர்க் கால்வாய்கள் கட்டி காவிரியில் கலக்கவிடும் யோசனையைக் கர்நாடகம் மேற்கொள்ளலாம்

இதுவரை பெய்த மழையினால், கேஆர்எஸ் அணை தனது முழுமட்டத்தை ஆகஸ்டு இறுதிக்குள் அல்லது செப்டம்பர் முதல் வாரத்திற்குள் எட்டிவிடும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். ஆனால், தமிழ்நாடு ஒன்றிய அரசிடம் கோரியிருக்கும் 46 டிஎம்சி நீரைத் திறந்துவிட்டால், அந்த அணையின் நீர் வேகமாகவே காலியாகிவிடும். வழக்கமாக நீர்ப்பங்கீட்டு காலண்டர் செப்டம்பரில் ஆரம்பித்து டிசம்பர் வரை செல்கிறது. அதற்குள் கர்நாடகம் தமிழ்நாட்டிற்கான பங்குநீரைத் திறந்துவிட வேண்டும்.

காவிரி டெல்டாவில் குறுவைச் சாகுபடி தமிழ்நாட்டிற்கு நல்ல விளைச்சலைக் கொடுத்திருக்கிறது; அதற்குக் காரணம் தமிழகத்தின் பலமான நீரதிகரிப்பு மற்றும் விநியோகக் கட்டமைப்புதான் என்று தமிழ்நாட்டின் வேளாண் துறை சொல்கிறது. குறுவைப் பயிருக்கான முஸ்தீபுகள் ஜூன் தொடக்கத்திலேயே முற்றுப்பெற்றுவிட்டன. இந்த ஆண்டு மேட்டூர் அணை குறுவைக்கான நீரை வழங்கியிருக்கிறது. அதனால் தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களில் பரந்திருக்கும் காவிரி டெல்டாவில் வசிக்கும் விவசாயிகள் அக்டோபரில் நல்லதொரு அறுவடைக்காகக் காத்திருக்கிறார்கள்.

திருவாரூர், திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் கடலூரின் சில பகுதிகள் ஆகியவற்றில் ஐந்து இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான வேளாண் நிலங்களில் குறுவை பயிரிடப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் குறுவைக்காக ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை திறந்துவிடப்படுகிறது. ஜூலை 30 வரை கர்நாடகம் போதுமான நீரைத் திறந்துவிட்ட படியால் தமிழ்நாட்டு விவசாயிகளின் நம்பிக்கைகள் அதிகரித்திருக்கின்றன.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் சென்றால்தான் அது திறந்துவிடப்படும். இந்த ஆண்டு ஜூனில் ஒரு முறையும், ஜூலையில் இரண்டு முறையும் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆகஸ்டு முதல் வாரத்தில் கூட, மேட்டூர் அணையின் நீர்மட்டம் நன்றாக இருந்தது என்று கர்நாடக அதிகாரிகள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

காவிரி நீர் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி ஒன்றிய அரசு காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை உருவாக்கத் தவறிவிட்டது என்று காவிரி டெல்டா விவசாயிகள் நலச் சங்கம் குற்றஞ்சாட்டியிருக்கிறது.

தற்போது கர்நாடகத்திலும் தமிழ்நாட்டிலும் நல்ல மழையால் நீர்வளம் அதிகரித்திருக்கிறது. இந்த நேரத்தில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் நிபுணர்களின் ஆலோசனைகள்படியும், ஒன்றிய அரசின் மேலாண்மையோடும் காவிரி நீர்ப்பங்கீட்டுக் கட்டமைப்பு ஒன்றை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளும், காவிரி டெல்டா விவசாயிகள் நல சங்கத்தின் விவசாயத் தலைவர்களும் விரும்புகிறார்கள்.

உத்தரகாண்ட், அஸ்ஸாம், பீகார், வங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் நல்லமழை பெய்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருப்பது போன்ற கால்வாய்க் கட்டமைப்புகள் அந்த மாநிலங்களில் இல்லை. மாநிலங்களுக்கிடையிலான ஒப்பந்தங்கள் அந்த மாநிலங்களில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஐஎஃப்ஏ) ஆய்வு நடத்தியிருக்கிறது.

கர்நாடகத்தின் நேத்ராவதி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய நதிகளில் நீர்கொழித்து ஓடுகிறது. அதனால் மிகைநீர் அரபிக்கடலில் கலந்துவிடுகிறது. அதனால் மிகைநீரைத் தொடர்க் கால்வாய்கள் கட்டி காவிரியில் கலக்கவிடும் யோசனையைக் கர்நாடகம் மேற்கொள்ளலாம் என்று தஞ்சாவூரில் இருக்கும் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தின் வானிலை மாற்றத்திற்கான மையம் சொல்லியிருக்கிறது.

நேத்ராவதி வடிகாலிலிருந்து மிகைநீரை நீர்ப்பற்றாக்குறை கொண்ட தமிழ்நாட்டுக் காவிரி வடிகால் பகுதிக்கு மடைமாற்றம் செய்யும் திட்டத்திற்கு நீர்வள அமைச்சகத்தின் கீழ்வரும் தேசிய நீர் அபிவிருத்தி ஆணையம் இறுதிவடிவம் கொடுத்திருக்கிறது.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival