Read in : English
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. ஆறாம் நாள் போட்டிகள் ஆகஸ்ட் 3 அன்று, அதாவது நேற்று நடைபெற்றன.
நேற்று நடைபெற்ற ஆறாம் சுற்றின் வெற்றி தோல்விகளைப் பார்ப்போமா?
ஓபன் பிரிவில், இந்திய A அணியின் உஸ்பெகிஸ்தானுடனான ஆட்டம் இழுபறியில் முடிந்தது. பெண்டலா ஹரிகிருஷ்ணா நோடிர்பேக் அப்துசட்டரோவைத் தோற்கடித்தார். இவர்தான் தற்போதைய உலக ரேப்பிட் செஸ் சாம்பியன். இந்த ஆட்டம்தான் இந்த செஸ் ஒலிம்பியாட்டில் இவரது முதல் தோல்வி. ரேப்பிட் செஸ்ஸில் காய்கள் நேர அவகாசமின்றி உடனுக்குடன் நகர்த்தப்பட வேண்டும். விதித் சந்தோஷ் குஜராத்தி நோடிர்பேக் யாகோபோய்வுடனும் அர்ஜுன் எரிகைசி ஜாவோகீர் சிந்தரோவுடனும் தமது ஆட்டங்களை டிரா செய்தனர். கிருஷ்ணன் சசிகிரன் சம்சிதீன் வோக்கிடோவிடம் தோல்வியடைந்தார்.
இந்த செஸ் ஒலிம்பியாட்டின் முதல் இழப்பாக, B அணி ஆர்மேனியா அணியிடம் 1½ – 2½ என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தது. குகேஷ் சர்கிஸியன் கேப்ரியலைத் தோற்கடித்தார். நிஹல் சரின் ஹிராந்த் மெல்கும்யனுடனான ஆட்டத்தை டிரா செய்தார். அதிபன் சாம்வேல் தேர்-சஹாக்யெனிடமும், சத்வானி ராபர்ட் ஹொவ்ஹானிஸியனிடமும் தோற்றுப்போயினர்.
குகேஷுக்கும் டேனியல் சர்கிஸியனுக்குமிடையேயான நேற்றைய ஆட்டம் மிகவும் பரபரப்பானது. டேனியல், குகேஷிடம் தோற்றுப்போகும் சூழலை எதிர்கொண்டிருந்தார். ஆட்டத்தின் பத்தொன்பதாம் நகர்வில் குகேஷ் டேனியேலுக்கு வலைவிரித்தார். குகேஷ் வெள்ளை ராஜாவுக்கு ஆடினார். ஒன்றன்பின் ஒன்றாக மூன்று விதமான வியூகங்கள் அமைக்கப்பட்டன.
ஒரு புறம் சிப்பாய்கள் இரண்டு, நடுப் போர்க்களத்தை தாண்டி நின்றுகொண்டு, கோட்டையை நோக்கி நகர்ந்து ராணியாக ஏதுவான தருணத்தை எதிர்நோக்கியிருந்தன, அருகில் யானை துணைக்கு இருந்தது. இவற்றின் இடையே புகுந்து சென்று கோட்டையினை அடைய வெள்ளை ராணி தனது கோட்டையிலிருந்து உத்தேசித்திருந்தது.
இந்த செஸ் ஒலிம்பியாட்டின் முதல் இழப்பாக, B அணி ஆர்மேனியா அணியிடம் 1½ – 2½ என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தது. குகேஷ் சர்கிஸியன் கேப்ரியலைத் தோற்கடித்தார். நிஹல் சரின் ஹிராந்த் மெல்கும்யனுடனான ஆட்டத்தை டிரா செய்தார். அதிபன் சாம்வேல் தேர்-சஹாக்யெனிடமும், சத்வானி ராபர்ட் ஹொவ்ஹானிஸியனிடமும் தோற்றுப்போயினர்
டேனியலுக்கு ஆட்டத்தின் தீவிரம் புரிந்தாலும், முடிச்சுகளை ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்க வேண்டிய கட்டாயம், முதலில் தனது மந்திரியை வெளியே கொண்டுசென்று, அதன்பின் யானையை வெளியே கொண்டுவர முடிவுசெய்தார். மந்திரியைக் கொண்டு வெள்ளை மந்திரியைத் தாக்க உத்தேசித்தார். ஆனால், அதற்குள் தன் ராஜா செக் மேட் ஆவதைத் தவிர்க்க சில நகர்வுகளைச் செய்தார். குகேஷ் தனது மந்திரிக்கு மந்திரியைக் கொடுத்த பிறகு, தனது இன்னொரு மந்திரியை ஒரு சிப்பாய்க்குப் பலி கொடுத்து அதன் மூலம் கறுப்பு ராணியைத் திசை திருப்பினார். இதெல்லாம் ஒரு வகையில் முடிவுக்கு வருவதற்குள்ளாகவே, இன்னொருபக்கம் சிப்பாய் யானைகள் மற்றும் யானையைக் கொண்டு கோட்டையை முற்றுகையிட்டார்.
தொடர்ந்து ஆடினால், எல்லாக் காய்களை இழக்க வேண்டியதிருக்கும் என்ற முடிவுக்கு வந்த டேனியல், தோல்வியை ஒப்புக்கொண்டு விலகினார். குகேஷின் சூட்சுமங்களிலிருந்து, அவர் ஆட்டக்காய்களின் ஆற்றலை விடவும் வியூகங்களையே நம்புகிறார், என்று புலப்படுகிறது.
மேலும் படிக்க:
செஸ் ஒலிம்பியாட்: இந்தியாவுக்குச் சவாலாகுமா ஜார்ஜியா?
இத்தாலியை அதிரவிடும் இளசுகள்: விட்டுக்கொடுத்து வென்ற குகேஷ்
C அணி லிதுவேனியாவை 3½ – ½ என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. சேதுராமன் கரோலிஸ் ஜுக்ஸ்டாவையும், அபிஜித் குப்தா பவுலியுஸ் புல்டினிவிசியுஸையும், அபிமன்யு புராணிக் வலேரி கஜாகௌஸ்க்கியையும் தோற்கடித்தனர். சூரியசேகர் கங்குலி டிடாஸ் ஸ்ட்ரெமாவிசியசுடன் டிரா செய்தார்.
ஜார்ஜியாவுடனான ஆட்டத்தில், இந்திய மகளிர் A அணி 3 – 1 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்றது. கொனேரு ஹம்பி நானா ட்சாக்னிட்சேவையும், வைஷாலி லேலா ஜாவாகிஷ்விலியையும் தோற்கடித்தனர். மேலும், தானியா சச்தேவ் சலோம் மெலியாவுடனும், ஹரிகா த்ரோணவல்லி நினோ பாட்சியாஸ்விலியுடனும் தமது ஆட்டங்களை டிரா செய்தனர்.
செக் குடியரசுடன் மோதிய B அணியின் ஆட்டம் இழுபறியில் முடிந்தது. வந்திகா அகர்வால், பத்மினி ராவத், மேரி ஆன் கோம்ஸ், திவ்யா தேஷ்முக் என நால்வரும், ஜூலியா மோவ்சேஸியன், ஜோனா ஒரேக், கரோலினா பில்சோவா, கிரிஸ்டைனா பெட்ரோவா ஆகியோருடனான தமது ஆட்டங்களை டிரா செய்தனர்.
ஆஸ்திரேலியாவுடன் மோதிய C அணி 3 – 1 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றியடைந்தது. நடந்த ஆட்டங்களில், சஹிதி வர்ஷினி நுகுயென் மாய் சி பானையும், விஷ்வா வஷ்னாவாலா து கியாங் நுகுயென்னையும் தோற்கடித்தனர். மேலும், ஈஷா கரவாதே மற்றும் நந்திதா முறையே ஜூலியா ரைஜாநோவாவையும் ஹெதர் ரிச்சர்ட்ஸையும் எதிர்கொண்டு தமது ஆட்டங்களை டிரா செய்தனர்.
ஓபன் பிரிவில், நார்வே அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. அணியின் தலைவரான, உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சென் அன்டோன் ஸ்மிர்நோவைத் தோற்கடித்தார், இருந்தும் மற்ற இருவரான தாரி ஆர்யன், ஜோன் லுட்விக் ஹேமர் ஆட்டம் இழந்ததால் நார்வேயின் இழப்பு தவிர்க்கமுடியாததானது. இப்படியாக இந்த செஸ் ஒலிம்பியாட்டின் சுவாரசிய ஆட்டங்கள் தொடரும்.
Read in : English