Read in : English

தற்போது இலங்கை வரலாறு காணாத அளவுக்கு பெரும் பொருளாதார, அரசியல் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு ஏறிக்கொண்டே போகின்றன கடன்கள். அந்நியச் செலவாணிக் கையிருப்பும் குறைந்துவிட்டது. அதனால் உணவு, மருந்து, எரிபொருள், சமையல் வாயு போன்ற அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசிடம் பணமில்லை. நாட்டின் பொருளாதாரத்தை மோசமாக்கியதற்காக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச, அவரது சகோதரர் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரும் அவர்களின் அரசும் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாடுமுழுவதும் கிளர்ச்சிகள், போராட்டங்கள் வெடித்துவிட்டன.

இலங்கையின் பொருளாதாரத்தை கோவிட்-19 பெருந்தொற்று சீரழிப்பதற்குச் சிலமாதங்களுக்கு முன்பு 2019-ல் நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கோத்தபய ராஜபக்ச பெரும் வரிவிலக்குகள் கொடுப்பதாக வாக்குறுதி தந்தார். தொலைநோக்குப் பார்வை இல்லாத இந்த வாக்குறுதிதான் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

“வருமானவரியும், மதிப்புக்கூட்டு வரியும் (வாட்) செலுத்துபவர்களுக்கு தேவையற்ற கவர்ச்சியான வரிவிலக்குச் சலுகைகள் அளிப்பதாக 2019 டிசம்பரில் கோத்தபய ராஜபக்ச வாக்குறுதி கொடுத்ததின் மூலம் பொருளாதார மூடத்தனத்தைச் செய்தார். அதனால் அவரது நிர்வாகத்தில் இலங்கையின் வரிக்கட்டமைப்பு நாசமானது,” என்று இலங்கை மத்திய வங்கியின்  முன்னாள் துணை ஆளுநர் டபிள்யூ ஏ விஜேவர்த்தனா சொல்கிறார்.

இலங்கை மத்திய வங்கி அளவுக்கு அதிகமாக பணத்தைச் சகட்டுமேனிக்கு அச்சடித்துக் கொண்டே போனால், பொருளாதாரம் உள்வெடிப்புக்கு ஆளாக நேரிடலாம் என்று ஐஎம்எஃப் எச்சரித்தது. இறுதியில் ஐஎம்எஃப் சொன்னது பலித்துவிட்டது!

வரிக்குறைப்புகள் அரசு வருமானத்தையும், நிதிக்கொள்கைகளையும் பாதித்து, பட்ஜெட் பற்றாக்குறைகளை உயர்த்திவிட்டன. வரிக்கட்டத் தேவையில்லாத வருமான வரம்புகளை உயர்த்தியது இந்த வரிச்சலுக்கைகளில் அடங்கும். இதன் விளைவாக பதிவுசெய்யப்பட்ட வரிசெலுத்துவோர்களின் எண்ணிக்கை 33.5 சதவீதம் சரிந்தது; ‘வாட்’ 8 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது; கார்ப்பரேட் வரி 28-லிருந்து 24 சதவீதமாகக் குறைந்தது. ’சம்பாதி, வரிகட்டு’ என்ற திட்டத்தின் கீழ் கட்ட வேண்டிய வரியும், 2 சதவீத தேசக் கட்டமைப்பு வரியும் ஒழிக்கப்பட்டன; இந்த இரண்டு வரிகளும்தான் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கான நிதியை வழங்கின. பெரிய அளவிலான வரிவருமான இழப்பின் காரணமாக தரமதிப்பீடு செய்யும் முகமைகள் இலங்கையின் கடன்வாங்கும் தரம் சரிந்துவிட்டதென்று மதிப்பீடு செய்தன. அதனால் இப்போது இலங்கையால் கடன்வாங்க முடியாத சூழல் உருவாகிவிட்டது.

உலக நிதி நிறுவனம் (ஐஎம்எஃப்) சொல்லியும் கேட்காமல், செலவுகளைச் சமாளிக்க இலங்கை மத்திய வங்கி அளவுக்கு அதிகமாக பணத்தை அச்சடிக்க ஆரம்பித்தது. பணம் அச்சடிப்பதற்குப் பதிலாக, வட்டி விகிதங்களை ஏற்றவும், வரிகளை உயர்த்தவும், அரசு செலவீனங்களைக் குறைக்கவும் ஐஎம்எஃப் அறிவுரை சொன்னது. இலங்கை மத்திய வங்கி அளவுக்கு அதிகமாக பணத்தைச் சகட்டுமேனிக்கு அச்சடித்துக் கொண்டே போனால் பொருளாதாரம் உள்வெடிப்புக்கு ஆளாக நேரிடலாம் என்றும் ஐஎம்எஃப் எச்சரித்தது. இறுதியில் ஐஎம்எஃப் சொன்னது பலித்துவிட்டது!

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச 2021-ல் எல்லா இரசாயன உரங்களும்  தடைசெய்யப் படுவதாக கடுமையானதொரு தீர்மானத்தை அறிவித்தார். அது சமீபத்தில் திரும்பப்பெறப்பட்டது. என்றாலும் அந்த முடிவு வேளாண்மைத் துறையைக் கடுமையாகப் பாதித்தது. அதனால் அதிமுக்கியமான நெல், டீ பயிர்களின் உற்பத்தி சரிந்தது. டீ உற்பத்திச் சரிவால் ஏற்பட்ட பொருளாதார நட்டத்தின் மதிப்பு 425 மில்லியன் டாலர். அரிசி உற்பத்தி முதல் ஆறுமாதத்திற்குள் 20 சதவீதம் சரிந்தது; அதனால் முன்பு அரிசி உற்பத்தியில் நாடு சாதித்திருந்த தன்னிறை நிலை வீழ்ச்சியடைந்தது. அதன்பின் 450 மில்லியன் டாலர் விலைகொடுத்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது அரசாங்கம். டீ உற்பத்தித் தொழில் மோசமான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டது. இயற்கை வேளாண்மை முறையிலான  டீ உற்பத்தி பத்துமடங்கு செலவைச் சந்தித்தது; மொத்த உற்பத்தியும் 50 சதவீதம் குறைந்தது.

நாட்டின் வேளாண்மைத் தொழிலை முற்றிலும் இயற்கைமுறையில் மாற்றியமைக்கும் நோக்கத்துடன் இரசாயன உரத்தடை கொண்டுவரப்பட்டது. ஆனால் அப்படிச் செய்தால் வேளாண்மைத் தொழில் நசிந்துவிடும் என்று விஞ்ஞானிகளும், விவசாயிகளும் எச்சரித்தார்கள். மொத்தத்தில் இந்த இரசாயன உரங்களின் மீதும், இரசாயன பூச்சிக்கொல்லிகள் மீதும் விதித்த தடை இன்றைய பொருளாதார வீழ்ச்சிக்குப் பெருமளவில் அடிகோலியது.

நாட்டின் வேளாண்மைத் தொழிலை முற்றிலும் இயற்கைமுறையில் மாற்றியமைக்கும் நோக்கத்துடன் இரசாயன உரத்தடை கொண்டுவரப்பட்டது. ஆனால் அப்படிச் செய்தால் வேளாண்மைத் தொழில் நசிந்துவிடும் என்று விஞ்ஞானிகளும், விவசாயிகளும் எச்சரித்தார்கள். மொத்தத்தில் இரசாயன உரங்களின், இரசாயன பூச்சிக்கொல்லிகள் மீது விதித்த தடை இன்றைய பொருளாதார வீழ்ச்சிக்குப் பெருமளவில் அடிகோலியது.

பொருளாதார வீழ்ச்சிக்கு மற்றுமொரு காரணம் வெள்ளையானைகள் போன்று பிரயோஜனமில்லாத திட்டங்களை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனக்கடன் உதவியுடன் அமல்படுத்தியது. இந்தத் திட்டங்கள் இதுவரைக்கும் வருவாய் ஈட்டியதே இல்லை.

கோவிட் பெருந்தொற்று இலங்கையின் சுற்றுலாத் தொழிலை உறிஞ்சி எடுத்தது. மாறுதல் இல்லாத பணமாற்று விகிதம் புலம்பெயர்ந்தவர்கள் கட்டும் கட்டணங்களைப் பெரிதும் குறைத்தது.

ஐஎம்எஃப்-விடம் அவசரகால நிதியுதவி கேட்கும்படி எதிர்க்கட்சித் தலைவர்களும், மூத்த பொருளாதார அறிஞர்களும் அரசைக் கேட்டுக்கொண்ட போதிலும், நாளுக்குநாள் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துகொண்டே போன போதிலும், ராஜபக்ச அரசாங்கம் பிடிவாதமாக ஐஎம்எஃப் உதவிபெற மறுத்துவிட்டது.

பணவீக்கத்தின் அழுத்தம் ஏறிக்கொண்டே போனாலும், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், அரசியல்வாதியும், தொழில்ரீதியாகக் கணக்காளருமான நிவார்டு கப்ரால் இலங்கைக்கு ஐஎம்எஃப் கடன் தேவையில்லை என்றும், உலக இறையாண்மைக் கடன்கள் உட்பட எல்லாவிதமான கட்டாய கடன்களையும் இலங்கை அடைத்துவிடும் என தான்நம்புவதாக 2022 ஜனவரியில் கூறினார். இந்த ஆண்டு ஃபிப்ரவரி நிலவரப்படி, இலங்கையின் அந்நியச் செலவாணிக் கையிருப்பு வெறும் 2.36 பில்லியன் டாலர்தான்.

பொருளாதார வீழ்ச்சிக்கு மற்றுமொரு காரணம் வெள்ளையானைகள் போன்று பிரயோஜனமில்லாத திட்டங்களை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனக்கடன்கள் உதவியுடன் அமல்படுத்தியது. இந்தத் திட்டங்கள் இதுவரைக்கும் வருவாய் ஈட்டியதே இல்லை.

மிகவும் தாமதமாக, ஜனாதிபதி ராஜபக்ச தனதுஅரசு ஐஎம்எஃப்-வுடன் உட்கார்ந்து பேசத்தயார் என்று மார்ச் மாதம் அறிவித்தார். தற்போதைய பொருளாதாரச் சிக்கலுக்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மத்திய வங்கி ஆளுநர் நிவார்டு கப்ராலும், நிதியமைச்ச்சர் பாசில் ராஜபக்சவும் ஏப்ரல் 4 அன்று பதவி விலகினார்கள். கப்ராலை ராஜபக்சவின் அடியாள் என்று கருதிய பலர் அப்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

ஏப்ரல் 7-ல் ஜனாதிபதி ராஜபக்ச தனக்கு ஆலோசனை சொல்ல ஒரு நிபுணர்க்குழுவை நியமித்தது. பிரதானமான பொருளாதார அறிஞர்களைக் கொண்ட அந்தக் குழு ஐஎம்எஃப்-வுடன் நடத்தப்போகும் பேச்சுவார்த்தைகளுக்கு உதவி செய்ய உத்தேசித்து உருவாக்கப்பட்டது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்  டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி, வளர்ச்சிப் பொருளாதாரத்தின் மூத்த இயக்குநரும் உலக வங்கியின் முன்னாள் தற்காலிகத் தலைமைப் பொருளாதார நிபுணருமான சாந்தா தேவராஜன், ஐஎம்எஃப்-வின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் இயக்குநர் சர்மினி குரே ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

பாசில் ராஜபக்ச பதவி விலகியவுடன், நீதியமைச்சர் அலி சப்ரி நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.

சப்ரி ஓர் இலங்கை வழக்கறிஞர். அரசியல் அனுபவம் இல்லாதவர். தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக கோத்தபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டார். (தேசிய பட்டியல் என்பது ஓர் அரசியல் கட்சியோ அல்லது ஒரு சுயாதீனக் குழுவோ இலங்கைப் பாராளுமன்றத்திற்கு நியமிக்கும் உறுப்பினர்களைக் கொண்ட பட்டியல்). இப்படித்தான் சப்ரி நீதியமைச்சராக நியமிக்கப்பட்டார்; இப்போது நிதியமைச்சராகவும் ஆகியிருக்கிறார்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது பாதுகாப்புச் செயலராக கோத்தபய ராஜபக்ச பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில் கோத்தபய ராஜபக்ச மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அவருக்காக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்குரைஞர்தான் இந்த அலி சப்ரி. மேலும், 2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு, அமெரிக்கக் குடியுரிமை சம்பந்தமான பிரச்சினைகளில் கோத்தபய ராஜபக்ச மாட்டிக்கொண்டபோதும், பின்னர் ஜனாதிபதி தேர்தலின் போதும், இதே அலி சப்ரிதான் அவரை ஆதரித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்கே ஒரு பொருளாதார அறிஞர். இதே மத்திய வங்கியில் முன்பு அதிகாரியாகவும், தலைமை பொருளாதார நிபுணராகவும், மூத்த துணை ஆளுநராகவும் பணியாற்றியவர். அரசியல்வாதியும் கணக்காளருமான நிவார்டு கப்ராலுக்குப் பதில் இப்போது மத்திய வங்கி ஆளுநராக நந்தலால் வீரசிங்கே நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பொருளாதாரச் சிக்கலும், ஜனாதிபதிக்கும், அரசுக்கும் எதிரான கிளர்ச்சிகளும்  அதிகரித்துக் கொண்டே இருக்கும் இந்தச் சூழ்நிலையில், ஏப்ரல் 17 அன்று ஓர் இலங்கைக் குழு ஐஎம்எஃப்-வுடனும் உலக வங்கியுடனும் நிதிஉதவிக்கான  ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டனுக்குச் சென்றிருக்கிறது. அந்தக் குழுவில் இருப்பவர்கள் நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கி ஆளுநர் டாக்டர். நந்தலால் வீரசிங்கே மற்றும் நிதிச்செயலர் மகிந்த சிரிவர்த்தனா ஆகியோர்.

உணவு, சமையல் எரிவாயு, எரிபொருள், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காகும் செலவுகளுக்காக, உலக வங்கி இலங்கைக்கு 600 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க ஒத்துக் கொண்டிருக்கிறது. முதலில் ’வெகுசீக்கிரமாக’ உலக வங்கி 400 மில்லியன் டாலர் அளிக்கும் என்று இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கை ஒன்று சொல்கிறது.

ஐஎம்எஃப் இலங்கைக்கான நிதியுதவித் திட்டத்தை வடிவமைக்கும் முன்பு,  அத்தியாவசியச் செலவுகளுக்காக உடனடியாக இலங்கைக்கு குறைந்தபட்சம் 4 பில்லியன் டாலர் தேவைப்படுகிறது. அதனால் ஐஎம்எஃப் நிதியுதவித் திட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு அவசர நிதியதவி கேட்டு பல நாடுகளிடமும், பல்முனை அமைப்புகளிடமும் இலங்கை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இலங்கையின் அண்டைநாடான இந்தியா 1.9 பில்லியன் டாலர் கொடுத்து உதவியிருக்கிறது. அவசரமான இறக்குமதி தேவைகளுக்காக மேலும் 1.5 பில்லியன் டாலர் கேட்டு டில்லியுடன் கொழும்பு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. 1 பில்லியன் டாலர் ’சிண்டிகேட்டட்’ கடன்கேட்டு இலங்கை சீனாவோடும் பேசிக்கொண்டிருக்கிறது.

ஐஎம்எஃப் உதவி கிடைத்தால் இலங்கையின் எல்லாப் பொருளாதாரக் கஷ்டங்களும் தீர்ந்துவிடும் என்று பலர் நம்புவது போலத் தெரிகிறது என்று மத்தியவங்கியின் முன்னாள் துணை ஆளுநர் டபிள்யூ. ஏ. விஜேவர்த்தனா சொல்கிறார். “ஆனால் அது அப்படியல்ல. ஐஎம்எஃப் இலங்கையின் நிதித்துறைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவும்; அது தேவைதான்; ஆனால் இலங்கை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குச் செல்வதற்கு அந்த உதவி போதாது,” என்கிறார் அவர். மேலும் அவர் சொன்னார்: “இலங்கை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குச் செல்வதற்கு, வளர்ச்சிக்குச் சாதகமான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்; சரியான ரியல் எஸ்டேட் துறைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதெல்லாம் அரசின் கடமை; மத்திய வங்கியின் அல்லது உலக வங்கியின் கடமை அல்ல.”

இதற்கிடையில் நிதியுதவிக்காக ஐம்எஃப்-வுடன் இலங்கை கொண்ட சந்திப்பு சீனாவைக் கடுப்பேத்தியது போலத் தெரிகிறது. இலங்கையில் இருக்கும் சீன தூதர் கி ஜென்ஹாங் இப்படிச் சொல்லியிருக்கிறார்: “அவசர அவசரமாக  இலங்கை ஐஎம்எஃப்-வுடன் கொண்ட சந்திப்பு, 1.5 பில்லியன் டாலர் கடன் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்; இது தவிர்க்க முடியாதது. இந்தக் கடன் மீள்கட்டமைப்பு என்பது எதிர்காலத்தில் இருமுனை கடன்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.”

”இலங்கை-ஐஎம்எஃப் பேச்சுவார்த்தைகளை சீனா அவதானித்துக் கொண்டிருக்கிறது,” என்றும் அவர் கூறினார்.

”பேச்சுவார்த்தைகளில் ஏற்படக்கூடிய தாக்கம்” என்னவாக இருக்குமென்று அவர் கணிக்கிறார் என்ற கேள்விக்கு, ஐஎம்எஃப் பேச்சுவார்த்தைகள் பற்றியும், கடன் மீள்கட்டமைப்பு பற்றியும் நிறைய தகவல்களுக்காகச் சீனா காத்திருப்பதாகக் கி ஜென்ஹாங் விடையளித்தார்.

இந்த வருடம் இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன் டாலர் 7 பில்லியன் அளவுக்கு இருக்கி|றது.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival