Read in : English

ஒருகாலத்தில் 69 இலட்சம் இலங்கை மக்களின் கதாநாயகனாகவும், இலங்கையின் முடிசூடா மன்னனாகவும் கொண்டாடப்பட்ட முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச இன்று ‘நகி மைனா’ என்ற வயதான மனிதருக்கான அவமானச் சொல்லால் அழைக்கப்படுகிறார். அவரை ஆராதனை செய்த அதே மக்களே இன்று அவரை இப்படிக் கேவலமாகப் பார்க்கிறார்கள்.

மஹிந்த ராஜபக்சவின் வீழ்ச்சி அவரே தேடிக்கொண்டது. அவரது முதல் பதவிக்காலம் முடிந்ததும், அதிகாரத்தின்மீது தீராதவொரு மோகம் அவருக்குள் உருவானது. அவரது அதீத நம்பிக்கை, பேராசை, திமிர்த்தனம் அவரது முடிவின் ஆரம்பத்தைக் காட்டின.

ராஜபக்சவின் வெற்றிமுகம் மிகவும் கவர்ச்சியானது; அது அவர் முன்னிறுத்திய எளிய கிராமத்துப் பையன் என்னும் படிமம். அதில் வசியமான கீழ்நடுத்தரவகுப்பு வாக்காளர்கள் அவருக்குள் தங்களைப் பார்த்து அவரை 2005-ல் நாட்டின் உச்சஅதிகாரமிக்க செயல் ஜனாதிபதி பதவியில் உட்கார வைத்தனர்.

இலங்கையின் ஆறாவது செயல் ஜனாதிபதியாக அவர் பதவியேற்றதும், அவர் உண்மையான மண்ணின் மைந்தர் என்றும், உள்நாட்டுப் போரில் சிதைந்துக் கிடந்த தேசத்திற்கு மறுவாழ்வு தரவந்தவர் என்றும் கொண்டாடப்பட்டார். எதிர்காலக் கனவு கண்ட ஒருதேசம் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை அப்படி. அவரும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடனான 30-ஆண்டு உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அந்த நம்பிக்கையைக் காப்பாற்றினார்.

நன்றியுடன், நிம்மதி உணர்வுடன் தேசம் அவரை வணங்கியது

விடுதலைப் புலிகளின் ராணுவத் தோல்விக்கு ஒரு வருடம் கழித்து 2010-ல் மஹிந்த ராஜபக்ச தனது முதல் பதவிக்காலம் முடிவுக்கு வந்தவுடன் கெளரவமாகக் கண்ணியமாக பணிஓய்வு பெற்றிருந்தால், அவரை இலங்கையின் உயர்ந்த கதாநாயகர்களில் ஒருவர் என்று சரித்திரம் ஞாபகத்தில் வைத்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

அல்லக்கைகளாலும் ஜால்ராக்களாலும் சூழப்பட்டிருந்த மஹிந்த ராஜபக்ச இரண்டாம் தடவை ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிடுமாறு தூண்டப்பட்டார். “போரில் நான் ஜெயித்தேன்,” என்ற ஒற்றைத் தகுதியை முன்னிறுத்தினார்.

அரைக்கடவுள் அந்தஸ்திற்கு அவரை  ஏற்றிவிட்ட பெரும்பான்மை இனத்தினர் தங்கள் வாக்கால் 2010-ல் அவரை மீண்டுமொரு ஐந்தாண்டு காலத்திற்கு இலங்கையின் செயல் ஜனாதிபதியாக்கினர்.

2009-ல் எல்டிடிஈ-யை அழித்த வெற்றி, அவரைச் சுற்றிப் பொங்கி எழுந்த புகழ்ச்சி அலைகள் ஆகியவற்றால் அவருக்குள் மலையளவு வளர்ந்த தானெனும் அகந்தை அவரைக் களநிஜங்களைப் பார்க்கவிடாமல் தடுத்தது. பெரும்வாரியான ஜனங்கள் தன்னைக் காலத்தை வென்ற ‘அரசனாக’ கருதி தனக்கு நாடாளும் அங்கீகாரத்தைத் தந்துவிட்டனர் என்று அவர் முற்றிலும் நம்பினார். அதன்பின் தன்னிஷ்டத்திற்கு எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தேசம் தனக்கு முழுஉரிமை கொடுத்திருப்பது போல அவர் நடந்துகொண்டார்.

தமிழ்நாட்டு அரசியலில் ஊறிப்போன ‘முகஸ்துதி பதாகைக் கலாச்சாரத்தை’ அதிகாரப் போதை கொண்ட மஹிந்தா ராஜபக்சவும் ஆர்வமுடன் பின்பற்ற ஆரம்பித்தார். ஜெயலலிதாவின் அரசியல் தோல்விகளுக்குக் காரணமானது போலவே ராஜபக்சவின் தோல்விக்கும் அந்த பதாகைக் கலாச்சாரமே காரணமானது. ராஜபக்ச தன்னை குடிமக்களின்மீது அழுத்தமாகத் திணித்தது போலவும் அதனால் மக்கள் மூச்சுத்திணறி வாந்தி எடுப்பதுபோலவும் ஓர் உணர்வு வியாபித்திருக்கிறது.

வெள்ளை யானைகள் போன்ற பிரயோஜனப்படாத திட்டங்களால் ராஜபக்ச தன் ’ராஜ்யத்தை’ கட்டமைக்க ஆரம்பித்தார். அதனால் சீனாவிடமிருந்து கடன்வாங்கிய அமெரிக்க டாலர்களை வீணடித்தார். தற்போது அவர் மாட்டிக் கொண்டிருக்கும் ’சீனக் கடன் பொறி’க்கு அவர் பெயர்தான் வைக்கப்பட்டிருக்கிறது. சுயஆராதனை உணர்வு கொண்ட ராஜபக்சேவின் பகட்டுத் திட்டங்களுக்கு வாங்கிய பெருங்கொண்ட கடன்களை அடுத்தடுத்து வரும் இலங்கைத் தலைமுறைகள்தான் அடைக்க வேண்டியிருக்கும்.

மஹிந்த ராஜபக்ச முற்றிலும் ஓர் பேரினவாதி என்பதும், அவருக்குத் தமிழினத்தின் மீது தீராத வெறுப்பும் பரிகாசமும் உண்டு என்பதும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு ரகசியம்தான். தமிழர்கள்மீது தான் கொண்டிருந்த ஆழமான வெறுப்பின் காரணமாக, இலங்கையின் மத்தியில் கால்லே ஃபேஸ் கிரீன் என்னும் கடலோர நகர்ப்புறப் பூங்காவில் பனைமரங்கள் நடுவதைக்கூட அவர் கடுமையாக எதிர்த்தார். ஏனெனில் பனைமரம் தமிழ்க் கலாச்சாரத்தோடு தொடர்புடையது. தேசிய நிகழ்வுகளில் இலங்கையின் தேசிய கீதம் தமிழில் பாடுவதற்கு அவர் அதிகாரப் பூர்வமில்லாத தடையைக் கூட விதித்தார்.

இவ்வாறு போருக்குப் பின்பு, இலங்கையின் இரண்டாவது பெரிய இனமான தமிழினத்தின் குறைகளை, பிரச்சினைகளைத் தீர்த்து துருவங்களாக பிளவுபட்டிருக்கும் சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே சமாதானத்தை, நல்லுறவை உண்டாக்குவதற்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்த அவர் தவறவிட்டார்.

இலங்கையில் வசிக்கும் எல்லாத் தமிழர்களும் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் அல்ல என்பது இலங்கைக்கு அப்பாலிருக்கும் ஒரு பொதுக்கருத்து. உண்மையில் 1980-களிலும், 1990-களிலும் மைய நீரோடை தமிழர் தலைவர்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு ஆளாயினர்; சிலர் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கைத் தமிழர்களுக்கு நிஜமான அரசியல் குறைகள் இருந்தன; ஆனால் அவற்றை ராஜபக்சே கண்டுகொள்ளவே இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் 13-ஆவது திருத்தம் ஒரு நல்ல ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கும். ஆனால் இன்றுவரை அது புறக்கணிக்கப் பட்டிருக்கிறது.

’போரில் வெற்றி பெற்றேன்’ என்றும், ’எதிரியான விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டேன்’ என்றும் மார்த்தட்டிக்கொண்ட ராஜபக்சவின் தொலைநோக்கும் செயற்பாடும் தன்னை ‘சிங்களப் புத்தமத இலங்கையின் அரசனாக’ நிலைநிறுத்திக் கொள்வதிலே மையம் கொண்டன.

வெள்ளை யானைகள் போன்ற பிரயோஜனப்படாத திட்டங்களால் அவர் தன் ’ராஜ்யத்தை’ கட்டமைக்க ஆரம்பித்தார். அதனால் சீனாவிடமிருந்து கடன்வாங்கிய அமெரிக்க டாலர்களை வீணடித்தார். தற்போது அவர் மாட்டிக் கொண்டிருக்கும் ’சீனக் கடன் பொறி’க்கு அவர் பெயர்தான் வைக்கப்பட்டிருக்கிறது. சுயஆராதனை உணர்வு கொண்ட ராஜபக்சவின் பகட்டுத் திட்டங்களுக்கு வாங்கிய பெருங்கொண்ட கடன்களை அடுத்தடுத்து வரும் இலங்கைத் தலைமுறைகள்தான் அடைக்க வேண்டியிருக்கும்.

தீவிரவாத பௌத்த பிக்கு ஞானசாரவுக்கு மகிந்த ஆதரவு கொடுத்தார்

கொழும்பு தாமரைக் கோபுரம், மஹிந்த ராஜபக்ச நெளும் போகுண தியேட்டர், மகம்புர மஹிந்த ராஜபக்ச துறைமுகம், மஹிந்த ராஜபக்ச அனைத்துலக கன்வென்சன் சென்டர், மட்டாலா ராஜபக்ச உலக விமானத்தளம், மஹிந்த ராஜபக்ச உலக கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகியவையும், பயன்படுத்தப்படாத சாலைகளும் நெடுஞ்சாலைகளும்தான் அந்தப் பளபளப்பான ஆடம்பரமான திட்டங்கள். இவற்றிற்காக சீனாவிடமிருந்து வாங்கிய ஆகப்பெரிய கடன்களால் இலங்கையின் வெளிநாட்டுக் கடன்சுமை மும்மடங்கானது. அதன் விளைவாக இன்று இலங்கை பொருளாதார நெருக்கடியில் மாட்டிக்கொண்டுவிட்டது.

மஹிந்த ராஜபக்சவைப் போல ஆட்சியில் நீண்டகாலம் இருக்கும் எந்தவொரு தலைவருக்கும் களநிஜத்தோடு தொடர்புவிட்டுத்தான் போகும். பொய் வாக்குறுதிகளும், போலி நம்பிக்கைகளும் கொடுத்து பாமர மக்களைத் தாஜா பண்ணி வாக்குகளைப் பெற்றபின்பு அவர்களை மறந்துவிடுவதும் சீரழிய விடுவதும் வழக்கமாகி விட்டது. உச்சத்தை அடைந்தவுடன்  கிடைக்கும் ‘சொகுசான வாழ்க்கையும்’ கேட்டதெல்லாம் கிடைக்கச் செய்யும் கீர்த்தியும் தலைவருக்கு ஞாபகமறதியை உண்டாக்கிவிடுகின்றன.

இரண்டாவது பதவிக்காலத்தில் ஆழமாக காலூன்றிய ராஜபக்ச மதப்பேரினவாதத் தீவிரம் என்னும் நெருப்புக்கங்குகளை ஊதி ஊதிப் பெரிதாக்கினார். இந்தத் தடவை தமிழர்கள் விடப்பட்டார்கள். சிறுபான்மை இஸ்லாமியர்களும், சுவிசேஷ கிறித்துவர்களும் இனவெறிக்கு இலக்காயினர்.

மஹிந்த ராஜபக்சவின் வீழ்ச்சி அவரே தேடிக்கொண்டது. அவரது முதல் அதிகாரப்பதவியின் காலம் முடிந்ததும், அதிகாரத்தின்மீது தீராதவொரு மோகம் அவருக்குள் உருவானது. அவரது அதீத நம்பிக்கை, பேராசை, திமிர்த்தனம் அவரது முடிவின் ஆரம்பத்தைக் காட்டின.

வெளிப்படையான இனவாதிப் புத்தபிட்சுவான ஞானசாராவும் அவரைப் போன்றவர்களும் தலைமை ஏற்று வழிநடத்திய சிங்களப்புத்த தீவிரவாதிகள் ’மற்றவர்கள்’ மீது தாக்குதல் நடத்தி வெறித்தனம் காட்டியபோது மஹிந்த ராஜபக்ச கண்ணை மூடிக்கொண்டார். இந்தக் காவியுடைக் காலிகளுக்குப் பலியானவர்களை ஏறிட்டுப் பார்க்காமல் ராஜபக்ச தலைதிருப்பிக் கொண்டார்.

ராஜபக்ச ஆட்சியின் போது இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் அடங்கிய இலங்கை மக்கள் பிளவுபட்டு நின்றதைப் போன்று ஒருபோதும் அவர்கள் பிரிந்திருந்தது கிடையாது. 2015 ஜனவரியில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை வாக்காளர்கள் மூன்றாவது தடவையாக ஜனாதிபதி ஆகமுயன்ற ராஜபக்சவைத் தோற்கச் செய்யாமல் இருந்திருந்தால், மற்றுமொரு நீண்டகால உள்நாட்டுப் போர் இலங்கையில் ஏற்பட்டிருக்கும்.

சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கை வரலாற்றில் ராஜபக்சவின் எதேச்சதிகார ஆட்சியில் வெடித்த வெளிப்படையான சிங்களப்புத்த பேரினவாதக் கலாசாரத்தைப் போன்ற ஒன்று நிகழ்ந்ததே இல்லை.

இலங்கைக் கட்டமைப்பைக் கெடுப்பதற்கு ராஜபக்ச தன் குடும்பத்திற்கு – சகோதர்கள், மகன்கள், உறவுகள் ஆகியோர்களுக்கு – கொடுத்திருந்த முழுசுதந்திரம் அவரது புகழை மேலும் நாசமாக்கியது. மஹிந்த ராஜபக்ச ஆட்சி என்றாலே ஊழல், பாரபட்சம் என்றானது. ராஜபக்ச குடும்பத்தைப் பற்றி இலங்கையில் பரவியிருந்த இந்த கடுமையான எதிர்மறைக் கருத்து  சிறுபான்மையினர் மத்தியில் மட்டுமல்லாது பெரும்பான்மை மக்களிடமும் நிலவியது.

உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தபின்பு, இனவேற்றுமை கடந்து வடக்கிலும் தெற்கிலும் வசிக்கும் மக்கள் சுத்தமான அரசு, நல்லாட்சி, அதிகாரப்பகிர்வு, ஊழலற்ற நிர்வாகம் அமையும் என்று நம்பிக்கையோடு இருந்தார்கள். ஆனால் மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் அந்த நம்பிக்கை பொய்த்துப்போனது.

மஹிந்த ராஜபக்சவைப் போல, கவர்ச்சியான போர்வெற்றிப் புகழ் வெளிச்சத்தில் மக்கள் மூழ்கிவிடவில்லை. போருக்குப் பின்பு மக்கள் கடந்தகாலத்தைக் கடந்து நிகழ்காலத்தில் வாழ ஆரம்பித்தார்கள். செளகரியமான நிகழ்காலம், ஆகச்சிறந்த எதிர்காலம் இவைதான் அவர்கள் விரும்பியது.

2015 ஜனவரியில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தவுடன் மக்கள், குறிப்பாக சிறுபான்மை இனத்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அப்போது எல்லோரையும் அரவணைத்துப் போகும் அரசியல் நிர்வாகம் ஒன்று உருவாகும் வாய்ப்பு இருந்தது.  ஆனால் மஹிந்த ராஜபக்ச வளர்த்துவிட்ட மதத்தீவிரவாதப் புற்றுநோயின் வேர்கள் அப்படியே இருந்தன. ஆனால் பெருமளவில் அடங்கியிருந்தன.

ஊழல் செய்தும், அதிகாரத் துஷ்பிரயோகம் செய்தும் மஹிந்த ராஜபக்சவின் குடும்பம் கெட்டபெயர் சம்பாதித்து விட்டது. நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்தார்கள்; மோசடிகள் செய்தார்கள்; அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார்கள்; கொலைகள் செய்தார்கள்; சட்டவிரோதமாக 5.31 பில்லியன் டாலரை (அதற்கும் மேலிருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள்) கள்ளப்பணத்தை வெள்ளையாக்கும் முறைகள் மூலம் நாட்டிலிருந்துக் கடத்திக் கொண்டு சென்றார்கள். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது இருக்கின்றன.

இன்று அவர் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டுமென்று ஒன்றுபோல ஒலிக்கும் ஒற்றுமைக் குரல்களில், ஒருகாலத்தில் மஹிந்த ராஜபக்சவுக்குச் சார்பாக இருந்த மூன்று பெளத்தமடங்களின் தலைமைக் குருமார்களின் குரல்களும் கலந்து ஒலிக்கின்றன.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival