Read in : English
திமுக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சில மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டுள்ளதை அடுத்து, சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மயிலாடுதுறையில், ஏப்ரல் 19ஆம் தேதி ஆளுநருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆளுநருக்கு எதிரான எதிர்ப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதலைப் பெறுவதற்காக தமிழக ஆளுநர் ஏப்ரல் 20ஆம் தேதி தில்லி சென்றுள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடந்த கறுப்புக்கொடி போராட்ட சம்பவத்தை அடுத்து மாநில அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே புதிய மோதல் ஏற்பட்டுள்ளது. ஆளுநருடன் சென்ற கார்கள் மீது கறுப்புக் கொடி விழுந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை தமிழகப் போலீஸ் மறுத்துள்ளது. ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறையில் நடந்த கறுப்புக் கொடி போராட்டத்தில் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டதாகக்கூறி ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி (ஏடிசி) மாநில போலீஸ் டைரக்டர் ஜெனரலிடம் புகார் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் வழக்கம்போல, மாநில பாஜக தலைவர் கே. அண்ணாமலை, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளதாகவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வலியுறுத்தியுள்ளார்.
மயிலாடுதுறையில் நடந்த கறுப்புக் கொடி போராட்டத்தில் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டதாகக்கூறி ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி (ஏடிசி) மாநில போலீஸ் டைரக்டர் ஜெனரலிடம் புகார் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுகவும், பாஜகவுடன் சேர்ந்து கொண்டு, தமிழக ஆளுநருக்குப் போதிய பாதுகாப்பு வழங்க தமிழக அரசு தவறிவிட்டது என்றுகூறி கண்டனம் தெரிவித்தது. அத்துடன், சட்டப்பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளிநடப்பும் செய்தனர்.
இதற்கிடையே, சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநருடன் சென்ற வாகனங்கள் மீது கறுப்புக் கொடி விழுந்தது என்பதை மறுத்தார். ஆளுநருக்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் ஏற்படவில்லை என்றும் எதிர்காலத்திலும் ஏற்படாது என்றும் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
ஜனநாயக ரீதியாக கறுப்புக் கொடிப் போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறது என்றாலும்கூட, போராட்டதில் ஈடுபட்ட சிலர் மீது போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. ஆளுநருடன் சென்ற காரைப் பின்தொடர்ந்த கார்கள் சென்ற பிறகு கறுப்புக் கொடி வீசியதாக சிலர் உள்பட 73 பேரை மாநில போலீசார் கைது செய்துள்ளனர். ஆளுநர் தனது கடமையைச் செய்யக்கூடாது என்ற நோக்கத்துடன் முரட்டுத்தனமான கும்பல் செயல்பட்டது என்று ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி அளித்த புகாரில் கூறியுள்ளார்.
திராவிடர் கழகம், இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தகைள், இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ) ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் கூடி நின்று கறுப்புக்கொடி ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தபோதும், ஆர்ப்பாட்டக்காரர்கள், ஆளுநரே திரும்பிப்போ என்று கோஷமிட்டனர்.
ஆளுநருக்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் ஏற்படவில்லை என்றும் எதிர்காலத்திலும் ஏற்படாது என்றும் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையிலிருந்து ஆளுநருக்கு அனுப்பட்ட மசோதா அனுப்பப்பட்டு 210 நாட்களாகியும்கூட, அந்தக் கோப்புகள் மீது எந்த முடிவும் எடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறார் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியிருந்த சூழ்நிலையில், ஆளுநருக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு, பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கு ஒத்துழைப்புத் தராத போக்கைக் கடைப்பிடித்து வரும் சூழ்நிலையில், அதற்கு ஏற்ற வகையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் தாமதப்படுத்தி வருவது குறித்து முக்கிய பத்திரிகைகள் கட்டுரைளை வெளியிட்டன.
தெலங்கானா, மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஆளுநருக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே மோதல் பிரச்சினைகள் இருந்து வருகின்றன. திமுக உள்ளிட்ட சில கட்சிகள், இந்த ஆளுநர்களை பதவி விலக வேண்டும் அல்லது பதவி விலக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
Read in : English