Read in : English

Share the Article

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை புறந்தள்ள முடியாது. ஆனால் ரோஹித் ஷர்மாவின் ஆட்கள் தொடர்ந்து ஐந்து ஆட்டங்களில் வெற்றிபெற தவறிவிட்டார்கள். எல்லா நிலைகளிலும் ஓட்டைகள் தெளிவாகவே தெரிகின்றன.

இதற்கு முந்தி நிகழ்ந்த ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் முன்பு டைட்டில் வென்ற தன் அணியை மீண்டும் கொண்டுவரவும், அவர்களுக்கு பொருத்தமான மாற்று ஏற்பாடுகளைச் செய்யவும் தவறிவிட்டது. பாண்டியா சகோதரர்களின் பிரிவு, குறிப்பாக டிரெண்ட் போல்ட்டின் பிரிவு அணியில் வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது. டானியல் சாம்ஸும், டிம் டேவிட்டும் தாங்கள் ஒத்த திறன் கொண்டவர்கள் என்பதை அவர்கள் புரியவைக்கத் தவறிவிட்டார்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணி போராடிக்கொண்டிருக்கிறது. முதல் வெற்றி எப்போதும் போல கைநழுவிப் போவது போலத் தெரிகிறது.ஆயினும் மும்பை இந்தியன்ஸ் அணி 2023-இல் தனது ஆறாவது டைட்டிலை வெல்லும் வாய்ப்பு கொண்டதாகக் கருதப்படுகிறது.

ஐந்து போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில் ஆழமில்லை. ரோஹித் ஷர்மா சோகமான நிலையில் இருக்கிறார். ரன்-அவுட்கள், தவறிப்போன கேட்ச் ஆகியவை அவர்களின் ஃபீல்டிங்கை சாதாரணமாக்கியது. மும்பை இந்தியன்ஸ் அணி போராடிக்கொண்டிருக்கிறது. முதல் வெற்றி எப்போதும் போல கைநழுவிப் போவது போலத் தெரிகிறது.

ஆயினும் மும்பை இந்தியன்ஸ் அணி 2023-இல் தனது ஆறாவது டைட்டிலை வெல்லும் வாய்ப்பு கொண்டதாகக் கருதப்படுகிறது. இந்த விஷயத்தில் ரசிகர்கள் ஏன் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் பின்னே வருகின்றன.

முதலில் எதிர்மறையாக உள்ள விஷயங்கள் பற்றிப் பேசுவோம். அவற்றை எப்படி சரிபண்ணலாம் என்று பார்ப்போம். எப்போதுமே மும்பை இந்தியன்ஸ் அணி ஆட்டக்காரர்கள் மெதுவாகத்தான் ஆரம்பிப்பார்கள். இந்தக் கருத்தை நிரூபிக்க வேண்டிய தரவுகளைக் கொடுக்க விருப்பமில்லை. ஆனால் அவை சொல்லும் விஷயம் இதுதான்: ஒரு பெரிய ஏலத்தைத் தொடர்ந்து வரும் சீசனில் மும்பை எப்போதும் போராடுகிறது.

ஐபிஎல் சீசனில் ஆகமோசமான ஆரம்பங்கள்:

2008: 4 தோல்விகள்

2014: 5 தோல்விகள்

2015: 5 தோல்விகள் (இறுதியில் சேம்பியன் ஆனது)

2018: 3 தோல்விகள்

2022: 4 தோல்விகள்

பல பரிசோதனைகள் செய்தும், பலமான 11 ஆட்டக்காரர்கள் கொண்ட ஒரு அணியை நிர்மாணிக்க மும்பை இந்தியன்ஸ் அணியால் இயலவில்லை

சூர்யகுமார் யாதவ் காயத்திலிருந்து மீண்டு வந்துவிட்டார். பேட்டிங்கில் ஒரு நுட்பமான அழகைக் கொடுக்கிறார். ஆனால் பந்துவீச்சாளர்கள் தங்கள் வேலையை சரிவரச் செய்வதில்லை. முருகன் அஷ்வின், பாசில் தம்பி, யுனட்காட் ஆகியோர் பெரும்பலம்கொண்டவர்கள் இல்லை என்பதை நிரூபித்துவிட்டார்கள். மத்திய ஓவர்களிலும், இறுதி ஓவர்களிலும் ஒரு கட்டுப்பாடு இல்லை. குறிப்பாக மும்பை சொந்த மண்ணில் அவர்களின் வரிசையும், வீச்சும் ஒழுங்கற்று இருக்கின்றன.

மில்ஸ்தான் அவர்களின் மிகப்பெரிய விக்கெட் வீழ்த்துநர்; நான்கு ஆட்டங்களில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இந்தப் பந்துவீச்சு நால்வர் அணியை பம்ரா, போல்ட், பட்டின்சன், மற்றும் ராகுல் சகார் ஆகிய நால்வருடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்களில் இருவர் இப்போது மற்ற அணிகளுக்காக விளையாடும் உச்சத்தில் இருக்கும் பத்து பௌலர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். கேப்டன் ரோஹித ஷர்மாவின் சீரற்ற தன்மையே விரக்தியின் ஆதிமூலம்.

ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தன்னிடம் இருந்த எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைத்துவிட்டது. அதாவது தக்கவைக்கப்படாத இஷான் கிஷானைத் திரும்பக் கொண்டுவர அவர்கள் மிகப்பெரிய தொகையைச் செலுத்த வேண்டியதாயிற்று. தகுதியே இல்லாத ஜோஃப்ரா ஆர்ச்சருக்காகக் ரூ.8 கோடி கொடுக்கப்பட்டது பலர் புருவங்களை உயர்த்தியது. அது ஏன் என்று பார்ப்போம்.

ஆனால் ஐபிஎல் ஒரு தாறுமாறான லீக் போட்டி. அங்கே என்ன நடக்கும் என்பதைக் கணிக்கவே முடியாது. மும்பை இந்தியன்ஸ் அணியின் வரலாற்றை வைத்துப் பார்க்கும்போது, அடுத்த சீசனில் அது மீண்டும் பலமாக திரும்பவரும் என்று பந்தயம் கட்டலாம். அதற்கான வழிமுறை இருக்கிறது; இந்தக் குறிப்பிட்ட ‘கலவைப் பொருள்’ அவர்களை நிறுத்தமுடியாதவர்களாக்கிவிடும்.

மும்பை இந்தியன்ஸ்

Photo Credit : Mumbai Indians Twitter page.

நாம் ஏன் இதைச் சொல்கிறோம் என்றால், ஜோஃப்ரா ஆர்ச்சர் காயத்திலிருந்து மீண்டு அடுத்த சீசனில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதினால்தான். இதனால் இப்போதைய அணிக்கு என்ன பலன்? தம்பி வெளியேறிவிட்டார்; ஆர்ச்சர் உள்ளே வந்துவிட்டார்; திடீரென்று மும்பை இந்தியன்ஸ் அணி ஆர்ச்சரையும், பம்ராவையும் வைத்து ஆட்டத்தை ஆரம்பித்து பந்துவீச்சு வலிமையை வெளிக்காட்டும்.

இந்த சீசனில் அவர்களின் மிகப்பெரும் பிரச்சினைகளே ஆட்டத்தை ஆரம்பிப்பதும், முடிப்பதும்தான். ஆர்ச்சரின் பவர் பிளே ஆட்ட விகிதம் 2020இல் 4.34 ஆக இருந்தது. டி-20 ஆட்டத்தில் பந்துவீச்சாளர்களின் மிகச்சிறந்த விகிதங்களில் அதுவும் ஒன்று. ஆர்ச்சர் இல்லாததுதான் அவர்களின் பிரச்சினைகளின் ஆகப்பெரியது..

2018இல் நடந்த ஒரு ஏலத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி அநேகமாக மிகச்சிறந்ததான ஒரு டி-20 படையை உருவாக்கிக் கொண்டது. ஆர்ச்சர் மீண்டும் வந்துசேர்ந்தால் அதைப்போல ஒன்றை மறுபடியும் அவர்களால் உருவாக்கிவிட முடியும்.

திலக் வர்மா, ஹார்திக் பாண்டியாவுக்கு ஒரு நல்ல மாற்று ஏற்பாடு. ஐந்து பந்துகளில் 28 ரன்களோடு ராகுல் சஹாரை முறியடித்த ‘பேபி ஏபி’ டேவால்ட் பிரெவிஸ் மும்பைக்கு மிகவும் தேவையான ஒரு முக்கியமான ஒரு வெளிநாட்டு பேட்ஸ்மன். அவரது வயது வெறும் 18-தான். போலார்டு தன் இளமைக் காலத்தில் செய்தது போல அவர்களுக்கு சில ஓவர்கள் கொடுத்து ஆட்டத்தை முடித்துவைக்க முடிந்தால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்த ஆண்டு ஆறாவது தடவையாக டைட்டில் வெல்லும் வாய்ப்பு உண்டு.

படுவேகமாக விக்கெட் வீழ்த்தும் துரிதப்பந்து வீச்சாளர்கள் இரண்டுபேர், சீறிப்பாயும் ஒரு வெளிநாட்டு பேட்ஸ்மென் மற்றும் போலார்டு – இந்தக் காரணிகளால்தான் மும்பை அணி ஐந்து டைட்டில்களை வென்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலங்களின்போது வேறுபட்ட தந்திரோபாயத்தில் இயங்குகிறது. என்றாலும் மும்பை இந்தியன்ஸ் அணியைக் கட்டமைக்கும் அணுகுமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எதிர்காலத்தைப் பலமாக்குவதற்கு உதவக்கூடும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஏலங்களின்போது வேறுபட்ட தந்திரோபாயத்தில் இயங்குகிறது. என்றாலும் மும்பை இந்தியன்ஸ் அணியைக் கட்டமைக்கும் அணுகுமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எதிர்காலத்தைப் பலமாக்குவதற்கு உதவக்கூடும். நான்குமுறை சாம்பியனான அவர்கள் இன்னும் பழைய ஆட்களையும், தோனியின் நம்பிக்கைகுரிய தளபதிகளையுமே நம்பியிருக்கிறார்கள். அணியின் மீதான தோனியின் ஆதிக்கம் நாள்செல்ல செல்ல மங்கத் தொடங்கலாம். அப்போது அவர்கள் இப்போதைய ஃபார்முலாவைக் கட்டிக்கொண்டு போராடத்தான் வேண்டியிருக்கும்.

ஃபெலமிங்க் சொன்னது போல, சிஎஸ்கே அணி, அடுத்த பெரிய ஏலத்திற்கு முன்பாக, மூன்று ஆண்டுகள் டைட்டிலை வெல்வதற்காகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த உத்தி வேலை செய்யாமல்கூட போகலாம். ஏனென்றால் ஐபிஎல் மிகவும் நிலையான, 10 அணி மாற்றல் அடிப்படையிலான மாதிரியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது (ஒரு ஏலத்தொகுதிக்குப் பதில் ஆட்டக்காரர்களை கிளப்புகளுக்குள்ளேயே மாற்றிக்கொள்ளும் முறை). அதனால் திறமைகளைத் தேடிக் கண்டறியும் ஆகச்சிறந்த முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தரவுகளின் முக்கியத்துவத்தைச் சொல்ல வேண்டியதில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி திலக் வர்மாவையும், பேபி ஏபியையும் தேர்ந்தெடுத்திருக்கிறது என்பதை வைத்துப் பார்க்கும்போது தற்காலத்து ஐபிஎல் நட்சத்திரங்களுக்கான ஒரே மாதிரியான மாற்று ஏற்பாடுகளைச் செய்வதற்குத் தரவுகள் எப்படி உதவுகின்றன என்று புரிகிறது. இந்த மாற்று ஆட்டக்காரர்கள் முழுக்க கிரிக்கெட் வீரர்களாக மாற இன்னும் சிலகாலம் ஆகலாம். ஆனால் சில ஆண்டுகள் அவர்களைச் சரியாக வழிநடத்தினால் அடுத்த தசாப்தத்தில் அவர்கள் சரியான ஒழுங்கோடு விளையாடுவார்கள்.

அதைப்போல, போலார்டுக்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்வது இந்த அணிக்கு சிரமம்தான். ஆனால் தரவுகளின் அடிப்படையிலான அணுகுமுறையால் அடுத்த பத்தாண்டுக்குத் தேவையான இன்னொரு மாணிக்கத்தை அவர்களால் கண்டறிய முடியும். ஆனால் திறமைகளைக் கண்டுபிடிப்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் பழங்காலத்து முறைகளையே இன்னும் கடைப்பிடிக்கிறது. ஆட்டக்காரர்களின் சரித்திரம், கலாச்சாரம், திறமைகள் ஆகியவை மட்டுமே அவர்களுக்கு முக்கியம்; தரவுகள், புள்ளிவிவரங்கள் ஆகியவை அவர்களுக்கு இரண்டாம்பட்சம்தான்.

தொடர்ந்து தாக்குப்பிடிக்கக்கூடிய அணியை உருவாக்கும் பரிசோதனையில், சில சராசரி சீசன்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். இந்த ஆண்டு எம்.ஐ அணி அதை எதிர்நோக்கத் தயாராகவே இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு தோனி நிரந்தரமாக விலகிப்போகலாம். எதற்கும் இப்போதே சென்னை சூப்பர் கிங்ஸ் தயாராக இருக்க வேண்டும்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles