Read in : English

நான் சிங்கள பௌத்த வாக்குகளாலேயே ஜனாதிபதியானேன் என்ற ஆணவத்துடன் சிங்கத்தின் பரம்பரை எனும் கர்ஜனையோடு ருவான் வெலிசாயவில் தனது முதலாவது பதவி பிரமாண உரையோடு ஆட்சி பீடம் ஏறியவரை இன்று ஆட்சிக்காலத்தின் அரை பகுதி கூட முடிவடைவதற்கு முன்னர் வாக்களித்த சிங்கள பௌத்த மக்களே

கோத்தபயவுக்கு எதிராக தெருவில் இறங்கி எதிர்ப்பு கோஷமிட்டு விரட்டியடிக்க வைத்திருக்கிறது காலம். அதுசரி இரத்தப்பலி கொடுத்து ஆட்சிக்கு வந்தால் அந்த ஆட்சி நிலைக்குமா?

இராணுவத்தில் அழிஞ்சவனை விட ஆணவத்தால அழிஞ்சவன் அதிகம். ஜனாதிபதியும் பிரதமரும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையிலேயே பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச அடுத்த சில மணிநேரங்களில் பதவி விலகுவார் எனத்தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அதற்கு மறுப்பு வந்துள்ளது. (மார்ச் 26 அன்று நடத்தப்பட்ட இலங்கை விவகாரம் தொடர்பான முகநூல் நேரலையின் காணொளியைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே (Sneharashmini- Wikimedia Commons)

பங்காளிகளின் வெளியேற்றம், இராஜாங்க அமைச்சர்களின் இராஜினாமா, ஆளுங்கட்சியினரின் அதிருப்தி ஆகியவற்றுக்கு மத்தியில் தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் அரசாங்கம் வசம் உள்ள இடங்கள்:

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -117
ஈபிடிபி – 02
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி – 01
அரவிந்தகுமார் – 01
டயானா – 01

மொத்தம் அரசுக்கு ஆதரவாக 122 ஆசனங்களே உள்ளன.

அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக்கொள்ள ஏழு பேர் தயார் நிலையில் இருக்கின்றனர்.

1. சுசில் பிரேமஜயந்த
2. விஜயதாச ராஜபக்ச
3. சந்திம வீரக்கொடி
4. விதுர விக்ரமநாயக்க
5. பிரேமநாத் சீ தொலவத்த
6. நிமல் லான்சா
7. ரொஷான் ரணசிங்க

122 – 7 = 115

ஆக, ஆளுங்கட்சி வசம் தற்போது 115 ஆசனங்களே உள்ளன. இந்நிலையில் அரசிலிருந்து வெளியேற தயார் என்ற அறிவிப்பை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் விடுத்துள்ளது.

115-2 = 113

எனவே, டக்ளஸ், பிள்ளையான் ஆகியோர் (2+1 = 3) அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டால் (113 – 3 = 110) நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சாதாரண பெரும்பான்மையை இழந்துவிடும்.

சிலவேளை, அரசமைப்பின் 20வது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (4), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (02), அலி சப்ரி (புத்தளம்) (01) ஆகியோரின் ஆதரவை பெற்றால் அல்லது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் எதிரணி எம்.பிக்களை வளைத்து போட்டால் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

தற்போதைய சூழ்நிலையில் கட்சி தாவல்கள் என்பது சாத்தியப்படுமா என்பது சந்தேகமே! தேசிய மட்டத்திலான தேர்தலொன்றுக்கும் சாத்தியம் குறைவு. எனவே, இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு அரசு முற்படலாம்.

தற்போதைய சூழ்நிலையில் கட்சி தாவல்கள் என்பது சாத்தியப்படுமா என்பது சந்தேகமே! தேசிய மட்டத்திலான தேர்தலொன்றுக்கும் சாத்தியம் குறைவு. எனவே, இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு அரசு முற்படலாம்.

நாடாளுமன்றத்தின் பதவிகாலம் இரண்டரை வருடங்கள் முடிந்த பின்னர் 2023 பெப்ரவரியில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்குசெல்லக்கூடும். (தற்போதைய சூழ்நிலையில் இதுவே ஏற்புடைய நடவடிக்கையென அரசியல் கட்சிகள் கருதுகின்றன.) ஏனெனில் சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் கூட்டணியின் நிலைப்பாடு இதுவாகவே உள்ளது. பிரதமர் பதவி துறந்தால், அமைச்சரவையும் கலைந்துவிடும். பிறகு புதிய அமைச்சரவை நியமிக்கப்படலாம். இது இடைக்கால அரசுக்கான நகர்வாக அமையலாம்.

அவசரகால நிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியிருந்தாலும் அதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் அதனை நிறைவேற்றிக்கொள்வதற்குகூட அரசு நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.

பொதுத்தேர்தலில் மொட்டு கட்சி (ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் ஆசனங்கள் சகிதம்) 145 ஆசனங்களை வென்றது.

இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – 14 (நா.உ)
தேசிய சுதந்திர முன்னணி – 06
ஜனநாயக இடதுசாரி முன்னணி – 02
பிவிதுரு ஹெல உறுமய – 01
கம்யூனிஸ் கட்சி – 01
லங்கா சமசமாஜக்கட்சி – 01 (தேசியப்பட்டியல்)
‘யுதுகம’ – 01 ஆகியன அரசை எதிர்க்கும் நிலைப்பாட்டில் உள்ளன.

145 -26 = 119
எமது மக்கள் சக்தி – 01
தேசிய காங்கிரஸ் – 01 ஆகியவை 11 கட்சிகளின் கூட்டணியில் உள்ளன. 119 -2 = 117 ( அரசு வசம் தற்போது உள்ள ஆசனங்கள்) எனவேதான், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம் தற்போது 117 ஆசனங்களே உள்ளன என்று மேலே குறிக்கப்பட்டுள்ளது.

அவசரகால நிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியிருந்தாலும் அதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் அதனை நிறைவேற்றிக்கொள்வதற்குகூட அரசு நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.

மகிந்த பதவி விலகினால், தங்களுக்காக மகிந்தவை அரசியலுக்கு கொண்டு வந்த விமல் போன்றோரது ஒட்டுண்ணி அரசியல் முடிந்து போகும்.
மகிந்தவை வைத்துக் கொண்டுதான் விமல், கம்மன்பில போன்றோரால் வாழ முடியும். எனவே மகிந்த , பதவி விலக நினைத்தாலும், இவர்கள் விடமாட்டார்கள். அவர்களுக்கு பசிலை துரத்துவதுதான் முக்கிய குறி.

இப்போதுள்ள நிலையில் மக்கள், ராஜபக்ச குடும்பத்தில் எவரையும் இனி அரசில் மட்டுமல் அரசியலிலும் இருக்கவிட வாய்பில்லை. தண்ணி கழுத்துக்கு மேல் போய் விட்டது. இன்னும் இருக்க நினைத்தால் , இன்னும் பிரச்சினை அதிகரிக்கும். ஆதரவாளர்களாலோ அல்லது அரசு சார்பு அரசியல்வாதிகளாலோ இனி வீடுகளில் இருக்க முடியாத நிலை தெரிகிறது.

இப்போது தெரிவது தணல் மட்டும்தான். இது தீ பிழம்பாக மாறும் நிலை தூரமில்லை. இனவாதமெல்லாம் பேசி மக்களை திசை திருப்பவும் முடியாது. அதில் மக்கள் தெளிவடைந்து விட்டார்கள்

மக்கள், பலரது வீடுகளை முற்றுகை இடத் தொடங்கியுள்ளனர். இப்படி ஒரு நிலை இதுவரை காலமும் இலங்கை சரித்திரத்தில் ஏற்பட்டதே இல்லை. நாட்டை விற்று விட்டு, இவர்கள் வேறு நாடுகளுக்கு போய் விடுவார்கள். ஆனால் நாங்கள் எங்கு போவது என்பதே மக்களது ஆதங்கமும் , கேள்வியுமாகும். அதற்கு பதில் ஆட்சியாளர்களிடம் இல்லை.

எதிர்க்கட்சிகளை விட, வீதியில் போராட இறங்கியிருப்போரில் அதிகமானோர் இன்றைய அரசை ஆட்சி பீடம் ஏற்றியோர்தான். அதுதான் சிந்திக்க வேண்டிய விடயம். இப்போது தெரிவது தணல் மட்டும்தான். இது தீ பிழம்பாக மாறும் நிலை தூரமில்லை. இனவாதமெல்லாம் பேசி மக்களை திசை திருப்பவும் முடியாது. அதில் மக்கள் தெளிவடைந்து விட்டார்கள். இவர்கள் தனிநாடு கேட்டு போராடும் அல்லது நாட்டை புரட்சி செய்து கவிழ்க்க முயலும் கூட்டம் அல்ல.

ஒரு நேரம் சாப்பிட வழியின்றி , வீட்டில் ஒளியின்றி , நோய்க்கு மருந்தின்றி , பயணிக்க எரிபொருளின்றி , விவசாயம் செய்ய உரமின்றி , அழும் குழந்தைக்கு பாலின்றி, அநேக சிரமங்களோடு கதறிய மக்களது குமுறல். இந்த குமுறல் இன்றைய அரசை முற்றாக துரத்தும் வரை ஓயாது.

புலம் பெயர்ந்த இலங்கையரும் ஆர்ப்பாட்டங்களில் இலங்கை அரசுக்கு எதிராக போராட ஆரம்பித்துள்ளனர். அதனால் சர்வதேசம் கூட சில முடிவுகளை எடுக்கும். நாட்டை மீட்ட அரசன் என கொண்டாடிய தலைவர்களை , நாட்டை விட்டு வெளியேறு என கோஷமிட அதே மக்களை தள்ளியது இன்றைய அரசினரின் கெட்ட நேரம். இந்த போராட்டங்களை பார்க்கும் சர்வதேசம் கூட இவர்களை ஆதரிக்காது. காபந்து அரசு அமைப்பது என்பது கதைதான். அதை எவரும் ஆதரிக்க மாட்டார்கள்.

நாடாளுமன்றத்தில் அடுத்த தவணையை நீடிக்க அரசு முயற்சித்துக் கொண்டிருக்க, வீதி போராட்டங்கள் ஆரம்பமாயின. ஊரடங்கு சட்டத்தை மக்கள் ஒரு சதத்துக்கும் சட்டை செய்யவில்லை. சமூக வலைத் தளங்களை தடை செய்ததால் இரவு முதல் நடந்தவை மறைக்கப்பட்டன. அதை தொடர முடியாது. உலகம் அதை அனுமதிக்காது.

இப்போதுள்ள நிலையில் 2/3 அரசுக்கு கிடைக்காது. அப்படி வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடு போக முடியாது. இதுவே நிலவரம். உயிர் ஊசலாடும் நிலையில் அரசு.. யார் பேச்சையும் மக்கள் கேட்கும் நிலையில் இல்லை. அதுதான் இன்றுள்ள ஆபத்து.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival