Read in : English

இந்த சீசன் ஐபிஎல்- போட்டியின் மூன்றாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (3.4.22) நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஐபிஎல் போட்டிகளில் 13 சீசன்களில் சென்னை அணி, முதல் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெறாமல் போனது இதுவே முதல் முறை. சென்னை அணியில் என்ன நடக்கிறது? அவர்கள் ஏன் தொடர்ந்து தோல்வியடைகிறார்கள்? கேப்டன் பதவியின் அழுத்தத்தை ஜடேஜாவால் தாங்க இயலவில்லையா?

சென்னை அணியின் மோசமான தொடக்கத்தை 2020 சீசனுடன் ஒப்பிட வேண்டும். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றில் நுழையத் தவறிய ஒரே சீசன் அதுதான். 2020க்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்க்ஸ் புதிய விளையாட்டு பாணியை பின்பற்றியது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணி ஏன் பின்தங்கியிருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோசமான சீசனான 2020 இல் தோனியும் சோபிக்கவில்லை. அந்த சீசனில், ஒரு அரை சதம் கூட அடிக்காமல் தோனி ஆட்டத்தை முடித்துக் கொண்டார். தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கின் அணியினர், துணிச்சலான ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றனர். கேதார் ஜாதவ் 6 ஆவது வீரராக இறக்கப்பட்டார். வயதான ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் போன்றவர்களை மாற்றவில்லை (இருவரும் அந்த சீசனுடன் ஐபிஎல் போட்டிகளிலிருந்து வெளியேறினர்). இதன் விளைவாக, அணியின் வியூகம் மிகவும் சிக்கலானதாக மாறியது. சேப்பாக்கத்தில் சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளத்தில் பயிற்சிபெற்ற அணியை, வேகப்பந்து வீச்சு பாதித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய முரளி விஜயின் மோசமான ஆட்டமும் அணியை பாதித்தது.

ரிதுராஜ் கெய்க்வாட்டின் எழுச்சியும், சாம் கரனின் ஆல்ரவுண்டர் செயல்பாடும் மட்டுமே அந்த சீசனில் சிஎஸ்கேவுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் ராயுடு, ஃபாஃப் மற்றும் பிராவோ போன்ற திறமையான வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் ஒட்டுமொத்த அணியைத் தடம்புரளச் செய்தது.

2020ஆம் ஆண்டு சீசன் இப்படி பாதகமாக இருந்தாலும், அணி உருவாகி, அவர்கள் விளையாடிய அணுகுமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மூன்று வெற்றிகளையும் ஐந்து இறுதிப் போட்டிகளில் தோல்வியையும் கண்டது.

2020ஆம் ஆண்டில் துபாய் மற்றும் அபுதாபியின் போர்டு ரூம்களில் செய்யப்பட்ட தந்திரோபாய மாற்றங்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய மந்தமான தொடக்கத்துடன் தொடர்புடையவை.

தோனியின் தலைமை இல்லாத ஒரு காலகட்டத்தில், கேப்டன் ஜடேஜா பதற்றத்துடன், 20 ஓவர் போட்டியை எப்படி கையாள்வது என்பதைக் கற்றுக் கொண்டு வருகிறார். அணியின் ஓட்டைகள் தெளிவாகத் தெரிகின்றன.

2020க்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ், தனது வெற்றிகரமான செயல்முறையை புறந்தள்ளியது. 2020க்கு முன்பிருந்த அணியில், தொடர்ந்து நிலையான ஆட்டத்தின் மையமாக இந்திய வீரர்கள் இருந்தனர். அவர்கள் அணியை எப்படியும் வெற்றி பெறச் செய்துவிடுவார்கள். ஆனால், தோனிக்கு வயதானது போல் மற்ற வீரர்களும் வலுவிழந்தனர். அணியின் திறன் குறைந்ததால், புதிய மாதிரி உருவாக்கப்பட்டது.

இந்திய பேட்ஸ்மேன் ஒருவருடன், ஒரு வெளிநாட்டு தொடக்க வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் ஜோடி சேர்க்கும். ஃபாஃப்-கெய்க்வாட் இணையில், தென்னாப்பிரிக்க வீரர் செயல் வீரராக இருப்பார். கெய்க்வாட்டுடன் இணைந்து ஆட்டத்தை சிறப்பாகக் கொண்டு செல்வார். மூன்றாவதாக களமிறங்கும் மொயின் அலி, மிடில் ஓவர்களில் ரன்- ரேட்டை மேம்படுத்துவார். நான்கு, ஐந்தாவது வீரர்களாகக் களமிறங்கும் ராயுடு, உத்தப்பா ஆகியோர் அதிரடியாக விளையாடி, தங்களது வேலையைச் சிறப்பாகச் செய்வார்கள் என்று வியூகம் இருந்தது. ஜடேஜா ஒரு திறமையான வீரராக வளர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இறுதி ஆட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதே இலக்கு. ஜோஷ் ஹேசல்வுட் பவர் பிளே பந்துவீச்சாளர் தீபக் சாஹருக்கு துணையாக இருப்பார். 2021ஆம் ஆண்டில் சிறப்பாக விளையாடிய ஷர்துல் தாக்கூரும் இந்த புதிய மாதிரி உருவாக்கத்தில் ஓர் அங்கம்.

ஒரு இன்னிங்ஸின் இறுதி நேரத்தில், புதிய மாதிரிக்கு வலுசேர்ப்பதாக தோனி மற்றும் டி.ஜே.பிராவோ ஆகியோரின் அனுபவம் அமையும். இந்தப் புதிய மாதிரி அமைப்பு அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் 11 பேரின் உருவாக்கம், அணியை சமநிலைப்படுத்தியது. 10 பேர் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகூட எந்த பலவீனமான காரணமும் இன்றி, கட்டமைப்பு ரீதியாக நிலையாக இருக்கும். அனுபவமும், அமைதியும் இந்த அணியின் மைய இழையாக இருக்கும்.

(Photo Credit : Shivam Dube -Twitter page)

ஆனால் இப்போது, தோனியின் தலைமை இல்லாத ஒரு காலகட்டத்தில், கேப்டன் ஜடேஜா பதற்றத்துடன், 20 ஓவர் போட்டியை எப்படி கையாள்வது என்பதைக் கற்றுக் கொண்டு வருகிறார். அணியின் ஓட்டைகள் தெளிவாகத் தெரிகின்றன. சில அனுபவம் மிக்க நபர்கள், ஏலத்தின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து வெளியேறியதும், அந்த தோல்வியின் பக்கத்தில் வந்துவிட்டதற்கு காரணம்.

எளிமையாகச் சொல்வதென்றால், ஏலத்தில் அதிக விலை கொடுத்து (ரூ.14 கோடி) சிஎஸ்கே வாங்கிய தீபக் சாஹருக்கு ஏற்பட்ட காயம் அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. ஃபாஃப், ஹேசல்வுட் (முந்தைய சீசனில் இருந்த இரண்டு உறுதியான தொடக்க வீரர்கள்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தனர். தாக்கூர், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு சென்றார். இவை அனைத்துமாகச் சேர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய மூன்று ஆட்டங்களில் இது எப்படித் தெரிந்தது என்பதைப் பார்ப்போம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணுகுமுறை மாதிரியை ஒருபோதும் மாற்றாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் இழந்த வீரர்களுக்கு மாற்று வீரர்களைக் கொண்டு வருகிறார்கள். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில், ஃபாஃப் இடத்தில் டெவோன் கான்வே வந்தார். மொயின் அலி இல்லாதது மிடில் ஓவர்களில் ஓர் இடைவெளியை ஏற்படுத்தியது. சாஹருக்கு ஏற்பட்ட காயத்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, துஷார் தேஷ்பாண்டேவை வைத்து விளையாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

விளைவு: கான்வே 3(4) ரன்களுடன் வெளியேறினார். மொயீன் அலி இல்லாததால், உத்தப்பாவும் ராயுடுவும் ரன் ரேட்டை அதிகரிக்கப் போராடினர். சாஹர் இல்லாததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தொடக்க விக்கெட்டுகளை சாய்க்க முடியவில்லை. தோனி சிறப்பாக ஆடினாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 131 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதை எளிதாக எடுத்துக்கொண்டு ஆட்டத்தை வென்றது.

புதிய ஐபிஎல் சீசனின் தொடக்கத்தில் புதிய அணியுடன், ஜடேஜாவிடம் கேப்டன் பதவியை அளிக்க தோனி எடுத்த முடிவு, மாற்றத்திற்கான சரியான வழியாகும். அணியைப் புரிந்து கொள்ளவும், தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளவும் ஜடேஜாவுக்கு இந்த சீசன் பயன்படும்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில், பந்துவீச்சில் அதிக வேகத்தையும் அனுபவத்தையும் சேர்க்க சென்னை சூப்பர் கிங்ஸ், கான்வேயை நீக்கியது. மொயீன் திரும்பி வந்தார். ஆனால் முதன்முறையாக, சென்னை சூப்பர் கிங்ஸ் தங்கள் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதாக அறியப்பட்ட அணுகுமுறை மாதிரியை மாற்றியது. ஒரு வெளிநாட்டு பேட்ஸ்மேன் – ஒரு இந்திய பேட்ஸ்மேன் ஜோடி நீக்கப்பட்டது. 20 ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 210 ரன் எடுத்தது. மொயீன் அலி, பேட்ஸ்மேனுக்கு ஏற்ற ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடினார்.

இங்கே பிரச்சினை என்னவென்றால், சாஹர், தாக்கூர் மற்றும் ஹேசல்வுட் ஆகியோருக்குப் பதிலாக தேஷ்பாண்டே, முகேஷ் சவுத்ரி மற்றும் பிரிட்டோரியஸ் ஆகியோரைக் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ், அந்த ‘பவுலிங்கில் தங்களது மாதிரி அணுகுமுறையை பின்பற்ற முயற்சித்தது. ஆனால் அது.பலனளிக்கவில்லை. ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அது தோல்வியைத் தழுவியது. சாஹரின் பவர்பிளே திறமை இருந்திருந்தால் இரண்டாவது போட்டியில் சென்னை அணி வெற்றியை எட்டியிருக்கும்.

மூன்றாவது போட்டியில், ஜோர்டானைக் கொண்டு வந்து அனுபவமில்லாத தேஷ்பாண்டேவுடன் இணைத்து, இந்த சமநிலையை மீண்டும் சரிசெய்ய முயன்றனர். ஆனால், நேற்று, துரதிர்ஷ்டவசமாக பேட்டிங் தோல்வியடைந்தது. ஐபிஎல் போட்டியின் ஆரம்ப கட்டங்களில் எதிர்பார்த்தது போலவே அணி, நிறைய ஏற்றத்தாழ்வுகளை பார்க்கிறது. வீரர்கள் வருகிறார்கள். போகிறார்கள். முன்னணியில் இருந்து ஆட்டத்தைத் தொடங்க ஒரு அணிக்கு சமநிலை தேவை. புதிய வீரர்கள், புதிய கேப்டன் மற்றும் புதிய சூழலுடன், சென்னை அணி சிரமத்தை எதிர்கொண்டுள்ளது.

13 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மொத்தம் 86 வீரர்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 148 வீரர்களையும், பஞ்சாப் அணி 139 வீரர்களையும் பயன்படுத்தியுள்ளன. எனவே இங்கே என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். ஒரு வீரர் இல்லாதது மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் திடீரென சரிவை ஏற்படுத்தியது. மேலும் சிந்தித்து செயலாற்றவும், அதிரடி ஆட்டத்தால் ஆட்டத்தின் போக்கை மாற்றவும் தோனி தற்போது தலைமைப் பொறுப்பில் இல்லை.

புதிய ஐபிஎல் சீசனின் தொடக்கத்தில் புதிய அணியுடன், ஜடேஜாவிடம் கேப்டன் பதவியை அளிக்க தோனி எடுத்த முடிவு, மாற்றத்திற்கான சரியான வழியாகும். அணியைப் புரிந்து கொள்ளவும், தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளவும் ஜடேஜாவுக்கு இந்த சீசன் பயன்படும்.

தோனி ஓய்வு பெறும்வரை ஜடேஜாவுக்கு அவரது வழிகாட்டுதல் கிடைக்கும். எனவே நல்லது, கெட்டது எதுவானாலும் மாதிரி அணுமுறை உள்ளது. ஜடேஜா அதைச் சமாளிக்க வேண்டும். ஜடேஜாவுக்கு இது சோதனையான காலம்தான்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival