Read in : English

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இடஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்றம் ரத்துசெய்தது செல்லும் என்று மார்ச் 31ம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சாதி அடிப்படையிலான உள்இடஒதுக்கீடு செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனாலும், 2021-ஆம் ஆண்டு வன்னியர் உள் இடஒதுக்கீட்டுக்காக தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் புள்ளி விவரங்களாலும், ஆய்வினாலும், விஞ்ஞான ரீதியாகவும் கட்டமைக்கப்படவில்லை என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புக்குக் காரணம் சொல்லியிருக்கிறது.

எனினும் மாநில அரசுக்கு அந்த மாதிரியான சட்டம் இயற்றும் உரிமை இல்லை என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. அதேசமயம் 2021-ஆம் ஆண்டின் சட்டத்திற்கு ஆதாரமாக தற்கால தரவுகளோ ஆய்வுகளோ வழங்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றம் கூறியுள்லதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.  உள்இடஒதுக்கீடுகளுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்குள்ளே செய்யப்படும் தனித்துவமான இடஒதுக்கீடுகளுக்கும் சாதியே ஆரம்பப்புள்ளி என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.

பாமகவுடன் கூட்டணி அமைக்கும் நோக்கத்தில் அஇஅதிமுக அரசு வன்னியர்களுக்கான உள்இடஒதுக்கீட்டை அவசர அவசரமாகக் கொண்டுவந்தது. சட்டரீதியாக இதை மேலும் எடுத்துக்கொண்டு செல்ல திமுக அரசு விரும்பினால் அதை எப்படிச் செய்யவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் சூசகமாகத் தெரிவித்திருக்கிறது.

பாமகவுடன் கூட்டணி அமைக்கும் நோக்கத்தில் அஇஅதிமுக அரசு வன்னியர்களுக்கான உள்இடஒதுக்கீட்டை அவசர அவசரமாகக் கொண்டுவந்தது. அதை இப்போதைய திமுக அரசும் ஆதரிக்கிறது. சட்டரீதியாக இதை மேலும் எடுத்துக்கொண்டு செல்ல திமுக அரசு விரும்பினால் அதை எப்படிச் செய்யவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் சூசகமாகத் தெரிவித்திருக்கிறது.

திமுக அரசு ஒரு விரிவான, விஞ்ஞான ரீதியிலான மக்கள்தொகை விவரங்களைக் கொண்டு ஆய்வு நடத்தி, சமூக, பொருளாதார நிலைகளையும், தொழிற் கல்வியிலும் அரசு வேலைகளிலும் இருக்கும் பிரதிநிதித்துவத்தையும் மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கும். இதை ஏற்கனவே 1980-களில் நீதிபதி அம்பா சங்கர் கமிஷன் செய்திருந்தது. ஆனால், அதில் சொல்லப்பட்ட தரவுகள் காலாவதி ஆனவை என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது.

கல்வியிலும் அரசு வேலைகளிலும் வன்னியர்களுக்கு இருக்கும் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஓர் இடஒதுக்கீடு செய்ய வேண்டியது அவசியம்தான் என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நிரூபிக்க வேண்டும். அந்த இடஒதுக்கீடு அளவின் மதிப்பீடு போதுமானதாக (Adequate reservation) இருந்தால் போதும் ; விகிதாச்சார அடிப்படையில் (Proportionate reservation) இருக்கத் தேவையில்லை என்று சொல்லிய உச்சநீதிமன்றத்தின் கருத்தினை அந்தக் கமிஷன் பின்பற்றவேண்டும்.

அந்த இடஒதுக்கீடு அளவின் மதிப்பீடு போதுமானதாக (Adequate reservation) இருந்தால் போதும் ; விகிதாச்சார அடிப்படையில் (Proportionate reservation) இருக்கத் தேவையில்லை என்று சொல்லிய உச்சநீதிமன்றத்தின் கருத்தினை அந்தக் கமிஷன் பின்பற்றவேண்டும்.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு, 1983இ-ல் அம்பா சங்கர் கமிஷன் மதிப்பீடு செய்த வெவ்வேறு சாதிகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்தது. அப்போது மாநிலத்தின் மொத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வீடுதோறும் நடத்திய கணக்கெடுப்பின்படி எடுக்கப்பட்டது. மொத்தம் இருந்த 4,99,90,943 மக்கள் தொகையில், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள்தொகை 1,23,17,745 ஆகும்; அதாவது 24.6 சதவீதம். வன்னியகுல ஷத்திரியர் மக்கள் தொகை 65,04,855; அதாவது 13.012 சதவீதம்.

தமிழ்நாட்டின் இன்றைய மக்கள்தொகை 6.8 கோடி; அம்பா சங்கர் கமிஷனின் கணக்கெடுப்பு காலத்தில் இருந்ததைவிட 35 சதவீதத்திற்கு மேலாக மக்கள்தொகை உயர்ந்திருக்கிறது. நீதியரசர் தணிகாசலம் கமிஷன் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு 2021-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. முன்பு நீதியரசர் ஜனார்த்தனம் கமிஷன் கொடுத்த அறிக்கையைச் அந்தக் கமிஷன் சுட்டிக்காட்டியது. ஜனார்த்தனம் கமிஷன் அறிக்கை 2007-11 காலத்துத் தரவுகளை ஆராய்ந்தது. பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், வேளாண்மை, சட்டம் ஆகிய தொழிற் கல்விகளில் வன்னிய ஷத்திரியகுல மாணவர்களின் சேர்க்கை அம்பா சங்கர் கமிஷன் 25 ஆண்டுகளுக்கு முன்பு தொகுத்த தரவுகளின்படி, வன்னியர் மக்கள்தொகைக்குப் பொருந்தும் விகிதாச்சாரத்தோடு அமையவில்லை என்று ஜனார்த்தனம் கமிஷன் அறிக்கை கூறியது.

அரசு வேலைகளில் குரூப் ஏ, பி, சி மற்றும் டி ஆகிய பிரிவுகளில் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் வெறும் 8.67 சதவீதம் என்றும், அம்பா சங்கர் கமிஷன் மதிப்பீட்டின்படி மக்கள்தொகையில் 13 சதவீதத்திற்கு மேலிருக்கும் இனம் அது என்பதைக் கவனத்தில் கொண்டால், அந்தப் பிரதிநிதித்துவம் போதாது என்றும் கமிஷன் கண்டறிந்து கூறியது. இதற்கு உறுப்பினர்களிடம் போதிய ஆதரவு இல்லாதபோதிலும்கூட, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கமிஷன் தலைவர் பரிந்துரைத்தார்.

இந்த இனத்தில் வன்னியர், வன்னியா, வன்னிய கவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாச்சி, பள்ளி, அக்னிகுல ஷத்ரியர் ஆகிய பிரிவுகள் உண்டு.

மறவர்கள், கள்ளர்கள், அகமுடையார்கள் என்று பல பிரிவுகளைக் கொண்ட ஆகப்பெரிய முக்குலத்தோர் இனத்திலிருந்து சாதி அடிப்படையிலான உள்இடஒதுக்கீடு கேட்டு எந்தவிதமான முறையீடுகளையும் கமிஷன் பெற்றிருக்கவில்லை என்பது நிதர்சனம். வன்னியர்களுக்குக் கொடுக்கப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீடு முக்குலத்தோரை எரிச்சலடைய வைத்ததால், தென்தமிழகத்தில் அதிமுக தேர்தலில் பின்னடைவைச் சந்தித்தது. அந்த 10.5 சதவீதத்தில் கவுண்டர்களும் இருந்தார்கள் என்பதால், அவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மேற்கு தமிழகத்தில் தன்கோட்டையை அஇஅதிமுக தக்கவைத்துக் கொண்டது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஜனார்த்தனம் கமிஷன் அறிக்கை 2012-இல் அவசர அவசரமாகச் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை வந்து சுமார் ஒன்பது வருடம் கழித்து, சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு அஇஅதிமுக அரசு வேண்டுகோள் விடுத்து நான்கு நாட்கள் சென்றபின்பு, நீதியரசர் தணிகாசலம் கமிஷன் 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ல் அரசிற்கு கடிதம் ஒன்று எழுதி 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தியது. இந்தக் காலகட்டங்களையும், அரசின் தேர்தல் நோக்கங்களையும் அவதானித்த நீதிமன்றம் அவற்றைப் பதிவுசெய்துகொண்டது. ஜனார்த்தனம் அறிக்கையையும், தணிகாசலத்தின் கடிதத்தையும் வெறும் சிறுபான்மை கருத்துக்கள் என்று சொன்ன நீதிமன்றம் எட்டு உறுப்பினர் கொண்ட கமிஷனின் மற்ற உறுப்பினர்கள் தரவுகளின் தரம் குறித்து எழுப்பியிருந்த ஆட்சேபங்களை நினைவுபடுத்தியது.

தணிகாசலம் கமிஷன் கடிதத்தில் வன்னியகுல ஷத்திரியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டையும், சீர்மரபினர்க்கும், சில மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் ஏழு சதவீதத்தையும், மீதமிருக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தவருக்கு இரண்டரை சதவீதத்தையும் பரிந்துரை செய்தது.

மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்புகளிலும், சீர்மரபினர்களிலும் மிச்சமிருக்கும் இனங்களோடு வன்னியகுல ஷத்திரியர்கள் போட்டிப்போட முடியவில்லை என்பதை நிரூபிக்கும்விதமாக எந்தவிதமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை அல்லது எந்தவிதமான ஆய்வு முடிவுகளும் நீதிமன்றத்துக்குத் தரப்படவில்லை.

மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்புகளிலும், சீர்மரபினர்களிலும் மிச்சமிருக்கும் இனங்களோடு வன்னியகுல ஷத்திரியர்கள் போட்டிப்போட முடியவில்லை என்பதை நிரூபிக்கும்விதமாக எந்தவிதமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை அல்லது எந்தவிதமான ஆய்வு முடிவுகளும் நீதிமன்றத்துக்குத் தரப்படவில்லை. எனவே 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. சரித்திரப்பூர்வமான பிரதிநிதித்துவமின்மையைச் சரிசெய்ய கொடுக்கப்படும் “போதுமான இட ஒதுக்கீடு” என்பதும் “விகிதாச்சார இடஒதுக்கீடு” என்பதும் ஒன்றல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், மக்கள் தொகை சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு சதவீதத்தை நிர்ணயிக்கும் ஒரே காரணியாக இருக்க முடியாது.

ஒரு பிரதிவாதி கொடுத்த 1980-83-க்கான தரவுகளை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அந்தத் தரவுகள் இதோ: மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட 48 வகுப்புகளில் 25 இனங்களின் மாணவர்களும், சீர்மரபினர் என்று அடையாளப்படுத்தப்பட்ட 68 வகுப்புகளில் 66 இனங்களின் மாணவர்களும் எம்பிபிஎஸ் படிப்பில் சேர முடியவில்லை என்றாலும் வன்னியர் இனத்து மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் 104 இடங்களைப் பெற்றுள்ளனர்; அவற்றில் 87 இடங்கள் இடஒதுக்கீட்டின் கீழ் கிடைத்தவை; 14 இடங்கள் பொதுப்பிரிவின் கீழ் கிடைத்தவை. இந்தத் தரவுகளை எல்லாம் உச்ச நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொண்டது.

மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் என்றும், சீர்மரபினர் என்றும் அடையாளப்படுத்தப்பட்ட 100-க்கும் மேலான இனங்களைத் தவிர்த்துவிட்டு வன்னியர்களுக்கு மட்டும் கல்வியிலும் அரசு வேலைகளிலும் தனி இடஒதுக்கீடு கொடுப்பதை சரியான தரவுகளின் அடிப்படையில் நியாயப்படுத்துமாறு உச்சநீதிமன்றம் கேட்டிருக்கிறது.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival