Read in : English
இறுதியில் அந்த நாளும் வந்துவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் பதவியை கிரிக்கெட்டில் உச்சத்தில் இருக்கும் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்துவிட்டார் எம்.எஸ். தோனி. கிரிக்கெட் ஆட்டக்காரர்களிலே அனைத்துவடிவ ஆல்ரவுண்டர் அநேகமாக ஜட்டு என்னும் மகாஅரக்கனாகத்தான் இருக்கும். தோனியும், அவரது அணியும் ஐபிஎல் புதிரைத் தீர்த்து தன்னந்தனியாகக் கட்டமைத்த ஒரு கலாச்சாரத்தின் மீது, மட்டையை வாளாகச் சுழற்றி, அடித்துநொறுக்கும் ஜடேஜா எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துவார்?
முதலில், சென்னை சூப்பர் கிங்ஸ் எப்போதுமே தோனியை ஒரு வழிகாட்டி ஒளிவிளக்காகவே கருதியிருக்கிறது. அவரது கருத்துகள் ஆராதிக்கப்பட்டன. அவர் எடுக்கும் எல்லா முடிவுகளையும் நிர்வாகம் ஆதரித்தது. ’தல’யை வெற்றிமேல் வெற்றியைக் குவித்த பயணத்தில் தன் அணியையும், ரசிகர்களையும் வழிநடத்திய ஒரு விவேகமான, திறமையான தலைவராகக் குழுவின் சமூக வலைத்தளம் கொண்டாடியது. முன்னெடுத்துச் சென்ற எல்லா விளம்பர நிகழ்வுகளும், சீசனுக்கு முந்திய கீதங்களும் ரஜினிகாந்தின் பாடலை அல்லது விஜயின் பாடலை ஒலிக்கவிட்டன. அந்த இரண்டு சினிமா நட்சத்திரங்களும் தங்கள் மக்களுக்காக, தங்களின் லட்சியக் கருத்திற்காக எல்லா சவால்களையும் எதிர்த்துப் போராடும் பாத்திரங்களை ஏற்று நடித்தவர்கள். திரைப்படங்களில் அவர்களின் பாத்திரங்கள் வெறுக்கப்பட்டிருக்கலாம்; ஆனால் ஒருபோதும் புறக்கணிக்கப்பட்டதில்லை.
Dhoni Dhoni Dhoni…. @ChennaiIPL
— Albie Morkel (@albiemorkel) October 10, 2021
கடந்த ஆண்டு விஜயின் ஆகப்பெரும் கேளிக்கைப் படமான ‘மாஸ்டர்’ வெளியானதும், ஐபிஎல் சீசன் தொடங்கியதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன. அப்போது தோனி தான் ‘வாத்தி’; லட்சியத்தோடும், தெளிவோடும் செயல்பட்ட ஒரு தலைவர் அவர்; கடின உழைப்புக்கும், விசுவாசத்திற்கும், கடமையுணர்ச்சிக்கும் வெகுமதி அளித்த வெகுசிறப்பான ஒரு தலைவர். அந்த வாத்தியின் கிரிக்கெட் கருத்துகளுக்கேற்ப கட்டமைக்கப்பட்டது அவரது அணி. அவரது அணியினர் யாவரும் பெரும்பாலும் மென்மையாகப் பேசுபவர்கள்; அனுபவசாலிகள்; அமைதியானவர்கள்; எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லாத ஒட்டுமொத்த தனிமனிதர்கள். வாத்தியின் அணிச்சூழலுக்குள் பின்னிருக்கை சோம்பேறித்தனத்தைக் கொண்டுவரக்கூடிய ஓர் ஆட்டக்காரரை சென்னை சூப்பர் கிங்ஸ் ஒருபோதும் தேர்ந்தெடுத்ததில்லை. வழமையான ஒரு சொற்றொடர் கூறுவது போல, தோனிதான் சிஎஸ்கே; சிஎஸ்கேதான் தோனி.
சென்னை சூப்பர் கிங்ஸ் எப்போதுமே தோனியை ஒரு வழிகாட்டி ஒளிவிளக்காகவே கருதியிருக்கிறது. அவரது கருத்துகள் ஆராதிக்கப்பட்டன. அவர் எடுக்கும் எல்லா முடிவுகளையும் நிர்வாகம் ஆதரித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் நான்காவது டைட்டிலை வென்றபோது, இளைஞர் ருதுராஜ் கெய்க்வாட் அணி தங்கியிருந்த ஓட்டலுக்குள் வெற்றிக்கோப்பையுடன் நுழைந்ததைக் காட்டிய காணொளிக்காட்சி ஒன்று வைரல் ஆனது. அந்தக் கொண்டாட்டத்தில் தோனி பின்னிருந்து அடக்கி வாசித்தார். ஒரு வாத்தி தன்வேலையை வெறும் புகழ்மாலைகளுக்காகச் செய்வதில்லை. தன் மாணவர்கள் பெரிதாகச் சாதிப்பதற்கு உதவுவதுதான் அவரது நோக்கம். அந்த சமயத்தில் உபயோகிக்கப்பட்ட மேற்கோள் எதுவாக இருக்குமென்று ஊகித்துப் பாருங்கள். “மாறா நாம ஜெயிச்சிட்டோம்.” நடிகர் சூர்யாவிடம் ஒரு சாதாரண மனிதன் ’சூரரைப் போற்று’ திரைப்படத்தில் சொல்லும் வார்த்தைகள் அவை. அந்த வார்த்தைகள்தான் இரவல் வாங்கப்பட்டன. இதெல்லாம் அந்த அணி 2008இ-ல் உள்வாங்கிக் கொண்ட ஆண்மைத்தனத்தைச் சுட்டிக்காட்டுகின்றது.
தைரியமான, ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் அணியை ‘தல’ எப்படி வழிநடத்தினார் என்பது சமீபத்து சிஎஸ்கே வீடியோவில் புலனாயிற்று. ”அந்தப் பசங்க கத்தியோடு சுத்திக்கிட்டு இருந்தவங்க. இப்போது நாடி நரம்பு இரத்தமெல்லாம் கிரிக்கெட்தான் என்று விளையாடுறானுங்க. இப்படித்தான் அவங்க சிந்தனையெல்லாம். எல்லாம் யாரால?”
இப்போது புதிய கேப்டன் ஜடேஜா. இனி என்ன மாற்றங்கள் வரும்? புதுயுக மனிதர்களின் பிரதிநிதி ரவீந்திர ஜடேஜா. 2011-க்குப் பிந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தின் விளைச்சல் அவர். முத்திரை பதித்த எல்லா ஆட்டக்காரர்களுக்கும் சில பொதுவான அம்சங்கள் இருக்கும். கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, கோலி போன்ற ஆட்டக்காரர்கள் கட்டுக்கோப்பான உடலமைப்பு கொண்டவர்கள். அவர்கள் பேணிக்காக்கும் உடல்திறனும், உடல்வடிவ ஒழுங்கும் ஈடு இணையற்றவை. பெரும்பாலானவர்கள் ஒப்பந்தத்தில் எடுக்கப்பட்டவர்கள். அவர்கள் விளையாட்டில் எதிரிகளைப் பலமாகத் தாக்குபவர்கள். பிட்ச்சில் நெருப்பை உமிழ்பவர்கள். களத்தில் அவர்கள் அமைதியாக இருப்பதில்லை; கணக்குப்போட்டு எதையும் செய்வதில்லை. இந்திய கிரிக்கெட்டின் அதிரடியான ’பிராண்ட்’டின் பிரதிநிதிகள் அவர்கள். இந்தக் கலாச்சாரத்தின் மொத்தவடிவம் ஜட்டு. அவர் பேட் செய்யும் பாணியில், ஃபீல்ட் செய்யும் பாணியில், பந்து வீசும் பாணியில் ஓர் அழுத்தம், ஓர் ஆழம் தெரியும். நண்பர்களை உருவாக்க அல்ல, அவர்கள் விளையாடுவது; ஜெயிப்பதுதான் அவர்கள் நோக்கம். அவர்களின் லட்சிய முழக்கம், “அந்தப் பசங்களை பிடியுங்கள்,” என்பதுதான்.

(Photo Credit: Mathew Hayden Instagram page)
சிஎஸ்கேவின் சமூகவலைத்தளக் குழு, ஜடேஜாவின் படிமத்தை அல்லு அர்ஜுன் புஷ்பாவைப் போல வடிவமைத்திருக்கிறது. புஷ்பா என்னும் உக்கிரமான தனித்துவமான சந்தனமரக் கடத்தல்காரனின் படிமம் அது. அந்தப் பாத்திரம் பேசிய பிரபலமான வசனங்களில் ஒன்று “தகெடலீ” அல்லது “நான் அரண்டு பின்வாங்க மாட்டேன்,” என்பது.
கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேகர் அவரை “துக்கடா துண்டு” ஆட்டக்காரர் என்றழைத்தார். ஆனால் ஜடேஜா விளையாட்டின் எல்லா அம்சங்களிலும் நிலையாகப் பயிற்சி எடுத்து பரிணாமம் அடைந்து 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை விளையாட்டின் அரையிறுதிச் சுற்றில் இந்தியா ஜெயிப்பதற்கு உதவி செய்தார். எல்லாவிதமான சோதனைகளையும் தாண்டி, தனதுu விளையாட்டு பாணியில் ஓர் உக்கிரத்தைக் கொண்டுவந்தார் அவர்.
சிஎஸ்கே ஜடேஜாவின் அணியாக மாறத்தான் போகிறது. ஆனால் உரிமம் எப்போதும் தோனியினுடையதாக இருக்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கலாச்சார மாற்றம் நிகழப்போகிறது என்றாலும், இந்த அதிகாரம் கைமாறும்வரை தோனியே இருந்து ஜடேஜாவை வழிநடத்துவார் என்று தெரிகிறது. சிஎஸ்கே ஜடேஜாவின் அணியாக மாறத்தான் போகிறது. ஆனால் உரிமம் எப்போதும் தோனியினுடையதாக இருக்கும்.
மும்பையில் ஒரு பயிற்சி முடிவில் ஜடேஜா இப்படிச் சொன்னார்: “அவர் (தோனி) தொடர்ந்து இருப்பார் என்பதற்காக நான் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏதாவது கேட்க வேண்டியிருந்தால் நான் அவரிடம் சென்று நிச்சயமாகக் கேட்பேன். நான் அணுக வேண்டிய மனிதராக அவர் இருந்தார்; இருப்பார்; இன்றும் அப்படியே இருக்கிறார். அதனால் எனக்கு அதிகமான கவலை ஏதுமில்லை.”
ஜடேஜாவுக்குப் பதிலாக ஒரு பழைய ஜாம்பவானை தோனியின் குறுகியகால பதிலியாகக் கொண்டுவந்திருக்க வேண்டும் என்று சிலர் விவாதம் செய்யலாம். ஆனால் ஜட்டுவைத் தேர்ந்தெடுத்ததே தோனிதான். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சாந்தமாக ஆடுவது என்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் தீயாய் ஆடுவது. என்னயிருந்தாலும், தேசிய உணர்வுள்ள, அதிரடியான, அதிகார கௌரவமிக்க மனிதர்கள் வாழுகின்ற காலம் அல்லவா இது!
Read in : English