Read in : English

Share the Article

ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமாகும் அறிகுறிகள் தென்படும் இந்த நேரத்தில் உக்ரைனிலிருந்து இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டுவரும் ‘ஆபரேஷன் கங்கா’ என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது குறிப்பிடத்தக்க அளவுக்கு  சாதித்திருக்கிறது. பத்தாயிரத்திற்கும் மேலான இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதற்கான பெருமை, விகே சிங், ஹர்தீப் சிங் பூரி, கிரென் ரெஜிஜூ மற்றும்  ஜியோதிராதித்ய சிந்தியா ஆகிய நான்கு அமைச்சர்களையே சாரும். எனினும் சிந்தியாவின் கவனம் முழுவதும் புகழ் வெளிச்சத்திலேயே குவிந்திருந்தது  என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். ருமேனியா நாட்டிலுள்ள மேயர் ஒருவர் எல்லா ஏற்பாடுகளையும் தானேசெய்ததாகச் சொல்லி, என்னமோ சிந்தியாதான் பொறுப்பாக எல்லாவற்றையும் செய்ததுபோல பாவனை செய்கிறார் என்று அவரை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுசம்பந்தமான காணொலிக்காட்சி ஒன்று டிவிட்டரில் பரவியது.

கார்கீவ் நகரிலிருந்து இந்தியர்களை வெளியேற்றிக் கொண்டுவந்ததை மிகப்பெரும் சாதனை என்றுதான் சொல்லவேண்டும்.  ஏனென்றால் கடுமையான யுத்தத்தைச் சந்தித்த அந்த நகரம் ரஷ்யா எல்லைக்கு அருகில் இருக்கிறது. கார்கீவிலிருந்து வந்த கடைசி இந்தியர்கள் நெருக்கடியான ரயில்களில் உணவு, தண்ணீர் இல்லாமல் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டு கீவ் நகர்வழியாக லிவிவ் நகருக்கு வந்துசேர்ந்தார்கள். பலர் ஹங்கேரியிலிருந்து வீடுதிரும்பினார்கள்.

சுமி பல்கலைக்கழகத்து மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இன்னும் உக்ரைனில் அகதிகளாகச் சிதறிக் கிடக்கின்றனர். உணவுக்கும், குடிநீருக்கும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அவர்கள் நாடு திரும்ப விரும்பினாலும், அவர்கள் அங்கேயே இருக்கும்படி இந்திய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளார்கள். அவர்களைப் பாதுகாப்பாகக் கொண்டுவரும்படி பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறார். எனினும் அவர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை.

கவனமாக வடிவமைக்கபட்ட இந்தியாவின் ஐ.நா.  ராஜதந்திர உத்தி பெரிதாக பலன்கொடுக்காமல் போகலாம். ஏனென்றால் சண்டை நாடுகள் இந்தியாவின் கவலைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் என்பது சாத்தியம் இல்லை.

போர் இன்னும் இழுத்துக்கொண்டே போகிறது. உக்ரேனியர்கள் மிகவும் பதற்றத்தோடு இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்தியர்களின் பாதுகாப்பு  அபாயமான கட்டத்தை அடைந்துவிடலாம். ஆபரேஷன் கங்கா வின் முடிவும் இழுத்துக் கொண்டே போகலாம். அது போரோடு பிரிக்கமுடியாத அளவுக்குச் சம்பந்தப்பட்டிருக்கிறது. கவனமாக வடிவமைக்கபட்ட இந்தியாவின் ஐ.நா.  ராஜதந்திர உத்தி பெரிதாக பலன்கொடுக்காமல் போகலாம். ஏனென்றால் சண்டை நாடுகள் இந்தியாவின் கவலைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் என்பது சாத்தியம் இல்லை.

ஆபரேஷன் கங்கா

இந்த ஆபரேஷனின் குறிப்பிடத்தகுந்த அம்சம் என்பது மனிதாபின, ஆன்மீகக் குழுக்களின் பங்களிப்புதான். அவர்கள் உக்ரைனுக்குள் தைரியமாக நுழைந்து இந்திய அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு ஆதரவாகச்  செயல்பட்டார்கள். சேவா இண்டர்நேஷனல், ஸ்வாமிநாராயண் டிரஸ்ட், கால்சா எய்டு, இஸ்கான், தி ஆர்ட் ஆஃப் லிவிங் போன்ற நிறுவனங்கள் உக்ரைனுக்குள்ளும் அதன் அண்டை நாடுகளுக்குள்ளும் வசிக்கும் புலம்பெயர் இந்தியர்களுக்கிடையே இருந்த தங்கள் கட்டமைப்புகள் மூலம் உதவிகள் செய்தன. இதுதான் இன்றைய இந்தியாவின் மென்மையான அதிகாரத்தின் பிரயோகம் என்றால், அது பலனளித்தது போலத்தான் தெரிகிறது. ஆனாலும் சில குறைகள் உண்டு. .

வெளிநாட்டுத் தூதர் பதவிகளுக்குச் செய்யப்படும் நியமனங்களுக்குப் பின்னே  சித்தாந்த அடிப்படையிலான கண்ணோட்டங்கள் அடிக்கடி இருந்திருக்கின்றன. இதனால் எந்த பிரயோஜமும் இல்லை. அப்படி நியமிக்கப்பட்ட தூதுவர்களின்  அணுகுமுறை கறாரான தன்மை கொண்டதாக இருக்கிறது. தொழில் விஷயங்களில் அவர்கள் திறமைசாலிகளாக இருக்கலாம். ஆனால் பலதொடர்புகளை உருவாக்கிக்கொள்வது என்பது தொழிலைத் தாண்டிய ஒரு விஷயம். அதற்கு அந்தந்த நாட்டின் உள்ளூர் பழக்கவழக்கங்களோடு இணக்கமாக, அணுக்கமாகப் போவது அவசியம்.

துணை அமைச்சர்களான மீனாக்ஷி லெகியும், வீ. முரளிதரனும் ஆபரேஷன் கங்காவில் எந்தப் பங்கும் வகிக்கவில்லை. அவர்கள் அரசியல் காரணங்களுக்காக நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் எந்த வேலைக்காக நியமிக்கப்பட்டார்களோ அந்த வேலைக்கு அவர்கள் பொருத்தமானவர்கள் அல்லர்.

உக்ரைனில் இருந்த நமது தகவல் தொடர்பு நிலையம் பெரிதாக உதவவில்லை. போருக்கு முன்பு மாணவர்களுக்குக் கட்டுப்படியாகாத விலைகளில் நிர்ணயித்த டிக்கெட்டுகளோடு விமானங்களை ஏற்பாடு செய்தது அரசு என்று காங்கிரஸ் சரியாகவே விமர்சித்தது.

ஆபரேஷன் கங்கா அதற்க்கு முந்தி நிகழ்ந்தவை எல்லாம் நமது வெளிநாட்டு விவகாரங்கள் கட்டமைப்பின் போதாமையையும், ஒரு முக்கிய பிரச்சினை மீதான அரசுக் கொள்கை இன்மையையும் வெளிக்காட்டிவிட்டது. நம் மாணவர்களை வேகமாக வெளியேற்றிக் கொண்டுவருவதற்கான திறனும் வழிகளும் நம் தூதரகங்களிடம் இல்லை. கலவையான தகவல்கள்தான் அனுப்பப்பட்டன.  உக்ரைனில் இருந்த நமது தகவல் தொடர்பு நிலையம் பெரிதாக உதவவில்லை. போருக்கு முன்பு மாணவர்களுக்குக் கட்டுப்படியாகாத விலைகளில் நிர்ணயித்த டிக்கெட்டுகளோடு விமானங்களை ஏற்பாடு செய்தது அரசு என்று காங்கிரஸ் சரியாகவே விமர்சித்தது.

உக்ரைனிலும், அதைப்போன்ற மற்ற நாடுகளிலும் படித்துக் கொண்டிருந்த பெரும்பாலான மாணவர்கள் மிகவும் பணக்காரத்தனமான பின்புலம் கொண்டவர்கள் அல்லர். இந்தியாவில் படிப்பதைவிட அந்த நாடுகளில் கல்வி மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காகவே அவர்கள் அங்கே சென்றார்கள்.

வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள் மொத்தம் 11 லட்சம்பேர். அதில் நான்குலட்சம் பேர் அமெரிக்காவிலும், கனடாவிலும் படிக்கிறார்கள். இரண்டுலட்சம் பேர் ஐக்கிய அரேபிய அமீரகத்திலும் ஒரு லட்சம்பேர் ஆஸ்திரேலியாவிலும் படிக்கிறார்கள். சீனாவில் 23,000 மாணவர்களும்,  கஜக்ஸ்தானில் 5,300 பேரும், ரஷ்யாவில் 16,500 பேரும் படிக்கிறார்கள். போர் போன்ற காலகட்டத்தில் அவர்களை வெளியேற்றி மீட்டுக் கொண்டுவருவதற்கான அவசரகாலத் திட்டம் ஒன்றை இந்திய அரசு தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இதற்கிடையில் ஒரு சர்ச்சை வெடித்திருக்கிறது. தென்மாநில மாணவர்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டப்படுவதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன. உத்தரபிரதேசத் தேர்தல் காரணமாக அந்த மாநில மாணவர்களுக்குத் தனிக்கவனம் கொடுக்கப்படுவது போலத் தோன்றுகிறது.

உக்ரைனிலிருந்துத் தமிழக மாணவர்களை மீட்டு கொண்டுவருவதற்குச் செல்லும் குழுவிற்கு உதவும்படி ஒன்றிய அரசைத் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. கணிசமான அளவில் அந்த வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களிடையிலான தங்கள் தொடர்புகளை அந்தக்குழு பயன்படுத்திக் கொள்ளும்தான்; ஆனால் புலம்பெயர்ந்த ஒட்டுமொத்த இந்தியர்களும் ஒற்றுமையாகச் செயல்படுவது என்பதைப் பற்றி சர்ச்சை ஒன்று வெடிக்குமே. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியை ஆதரித்துவந்த புலம்பெயர் இந்தியர்களில் சில பிரிவினர் சமீபகாலங்களில் குடியரசுக் கட்சிக்கு ஆதரவு கொடுக்கத் தலைப்பட்டுவிட்டார்கள். அதனால் அங்கே ஒரு பிளவு ஏற்பட்டுவிட்டது. இதற்கிடையில் ஆந்திர அரசும் தனது குழு ஒன்றை அனுப்ப விருப்பம் தெரிவித்திருக்கிறது.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles