Read in : English

Share the Article

கோலாகலமாக 2008ஆம் ஆண்டில் தொடங்கட்டது முதல், இந்தியன் பிரிமியர் வீக் (ஐபிஎல்) வர்த்தகரீதியாக வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இது விளையாட்டு மட்டுமில்லை, வியாபார ரீதியான விளையாட்டு என்பதை ஐபிஎல் உணர்த்தியிருக்கிறது. விளையாட்’டிலிருந்து கிடைக்கக்கூடியதைவிட, வேறு வழிகளில் எதிர்பாராத வகையில் பணத்தைத் தந்துள்ளது

ஆனால் இந்த ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு என்பது வியாபார நோக்கில் மட்டும் செயல்படுவதற்கு மட்டுமல்ல, அதற்கு சமூகப் பொறுப்பும் இருக்க வேண்டும் என்பதை, கொரோனா உணர்த்தியிருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி அவர்களது ரசிகர்களும் தற்போது சமூக பொறுப்புடன் பல்வேறு சேவைகளை செய்யத் தொடங்கியுள்ளனர். ஏழை எளியோருக்கு உதவுவது, சமூகத்திற்கு தேவையானவற்றை செய்து கொடுப்பது, தடுப்பூசி முகாம்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர் ஐபிஎல் அணிகளை வைத்திருக்கும் நிறுவனங்களும் தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியைக் கொண்டு பல்வேறு சேவைகளை செய்கின்றன.

முன்பெல்லாம் ஐபிஎல் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, வர்த்தகம் தான் மேலோங்கி இருந்தது. ஒருபுறம் கிரிக்கெட் வீரர்களும் அவர்களை உற்சாகப்படுத்தும் சியர் லீடர்களும் போட்டிகளை வண்ணமயமாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், மற்றொரு புறம் கிரிக்கெட் ரசிகர்களை தன்வசம் இழுக்க ஏராளமான மொபைல் ஆப் செயல்படத் தொடங்கின. Dream11 உள்பட பல்வேறு ஆன்லைன் ஆப்கள் சக்கைப்போடு போடத் தொடங்கின. கிரிக்கெட் மீது வெறிகொண்ட ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்கள் அல்லது அணியினரைத் தேர்வு செய்து, ஆன்லைனில் விளையாடத் தொடங்கினர். ஆன்லைன் ரம்மி போலவே இந்த விளையாட்டும் அதிர்ஷ்டம் அடிப்படையிலானது.

இநத டிரீம் 11 ஆப் விளையாட்டுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் தோனியும் ஆதரித்தார். ரவு தெரிவித்து வந்தார். சிறிய கட்டணம் செலுத்தி, இந்த வகை ஆப்களில் இணைந்து உத்தேசமாக வீரர்களையும், அணிகளையும் தேர்வு செய்ய வேண்டும். அதிர்ஷ்டத்தில் வெற்றிபெற்றால் பரிசுகள் அளிக்கப்படும்.

எந்த ஒரு கிரிக்கெட் நுணுக்கமும் தெரியாமலேயே ஆன்லைனில் எளிதாக விளையாட முடியும் என்பதால், இந்த வகை ஆப்களை ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் ஆதரித்துப் பயன்படுத்தத் தொடங்கினர். நிறைய பேர் பணம் கட்டி அதை இழந்தனர், இன்னும் இழந்து கொண்டே இருக்கின்றனர்.

ஒருபுறம் கிரிக்கெட் வீரர்களும் அவர்களை உற்சாகப்படுத்தும் சியர் லீடர்களும் போட்டிகளை வண்ணமயமாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், மற்றொரு புறம் கிரிக்கெட் ரசிகர்களை தன்வசம் இழுக்க ஏராளமான மொபைல் ஆப் செயல்படத் தொடங்கின.

ரசிகர்களை கட்டிப்போட்டு பணத்தைக் கொண்டு விளையாடச் செய்யும் இந்த வகை ஆன்லைன் விளையாட்டுகள், இன்னும் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆப் களின் துணையுடன் ரசிகர்களின் ஒவ்வொரு ரூபாயையும் ஐபிஎல் அறுவடை செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆயினும் எப்போதுமே வர்த்தகம் மட்டுமே வெற்றிக்கான அளவுகோல் இல்லை என்பதை, ஐபிஎல் தொடர்புடைய அனைவரும் இப்போது உணரத் தொடங்கி இருக்கின்றனர்.

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளில் சிலவற்றை புகழ்பெற்ற நிறுவனங்கள் வைத்திருக்கின்றன. சில அணிகளை வாங்கி நிர்வகிப்பதற்காகவே பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சொந்தமாக வைத்துள்ளது.

ஆர்சிபி அணியை யுனைட்டட் ஸ்பிரிட்ஸ் நிறுவனமும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை ஆர்பிஎஸ்ஜி குழுமமும், மும்பை இந்தியன்ஸ் அணியை ரிலையன்ஸ் நிறுவனமும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சன் டிவி குழுமமும் சொந்தமாக வைத்துள்ளன.இந்த நிறுவனங்கள் ஏற்கனவே கார்ப்பரேட் சமூக பொறுப்பு செயல்பாடுகளைக் கொண்டிருப்பதால், அவற்றின் கீழ் இயங்கும் ஐபிஎல் அணிகளும் சமூக செயற்பாடுகளுக்கு உடன்பட்டு இயங்கும்.

ஐபிஎல் கிரிக்கெட் அணிகள் தாங்கள் சார்ந்த நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டித் தருவது மட்டுமின்றி, பிராண்ட் மதிப்பையும் பல மடங்கு உயர்த்தித் தருகின்றன. உதாரணத்திற்கு நடிகர் ஷாருக்கான் ஒரு ஐபிஎல் அணியை சொந்தமாக வைத்திருப்பதால், அவரது பிராண்ட் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு உயர்ந்து நிற்கிறது.

இந்த கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு செயற்பாட்டில் முன்னிலை வகிப்பது ரிலையன்ஸ் பவுண்டேஷன். மும்பை இந்தியன்ஸ் அணியை வைத்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், மாணவர்களின் திறன்களை வளர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், நாடு முழுக்க ஏராளமான இடங்களில் சிறிய மற்றும் பெரிய அளவிலான கிரிக்கெட் தொடர்களை நடக்கிறது. இதன் தலைமைப் பொறுப்பிலிருக்கும் நீட்டா அம்பானி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் இருகிக்கிறார்.

நாடு முழுவதும் இளம் தலைமுறையினரின் திறன்களை மேம்படுத்தி, விளையாட்டுத் துறையில் அதிக அளவில் அவர்களைப் பங்கெடுக்க வைப்பதற்காக, தனது நிறுவனம் மற்றும் அறக்கட்டளை மூலம் அவர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

விளிம்பு நிலையில் உள்ள 18 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் நலனுக்காக, மும்பை இந்தியன்ஸ் அணியினர் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டனர். இதேபோல அனைவருக்கும் கல்வி மற்றும் விளையாட்டு என்ற நோக்கத்தை கையில் எடுத்து, ரிலையன்ஸ் பவுண்டேஷன் பிரச்சாரம் செய்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியினர் பங்கேற்றனர். இதேபோல உடல் இயக்கக் குறைபாடுள்ள குழந்தைகளின் நலனுக்காக, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கோவிட் பெருந்தொற்று காலத்தில் மட்டும், ரிலையன்ஸ் பவுண்டேஷன் மூலம் 7.5 கோடி உணவுப் பொருட்கள் ஏழை எளியோருக்கு வழங்கப்பட்டன. சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில், ரிலையன்ஸ் பவுண்டேஷன் சார்பாக பல்வேறு தரப்பினருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

சிறிய அளவிலான கிராமங்களிலிருந்தும் திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக, சேலத்தில் விளையாட்டு பயிற்சிப் பள்ளி தொடங்கப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவித்துள்ளது.

கோவிட் பெருந்தோற்றுக் காலத்தில் மூன்று ஆண்டுகளுக்கான பேரிடர் மேலாண்மை மற்றும், சுகாதார திட்டங்களை கொண்டு வரப்போவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவித்தது. 2020-21 இல் மட்டும் இதற்காக சிஎஸ்கே சார்பாக 1.6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் தடுப்பூசி முகாம்கள் உள்பட பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சிறிய அளவிலான கிராமங்களிலிருந்தும் திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக, சேலத்தில் விளையாட்டு பயிற்சிப் பள்ளி தொடங்கப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவித்துள்ளது.

கிரிக்கெட் அணியாகவும், நிறுவனமாகவும் மட்டுமின்றி தனிப்பட்ட அளவில் வீரர்களும், சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். பாட் கம்மின்ஸ், ஷிகர் தவான் ஆகியோர் தனிப்பட்ட முறையில் பொது முடக்க காலத்தில் சமூக சேவைகளில் ஈடுபட்டிருந்தனர்.

சிஎஸ்கே ரசிகர்கள் பெருந்தொற்று காலத்தில் நல்வாழ்வு முகாம்களை நடத்தினர். தமிழகத்தில் திரைப்பட ரசிகர்களைப் போலவே பல்வேறு நலத்திட்டங்களையும் மேற்கொண்டனர்.

ஆர்சிபி ரசிகர்கள் , தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக, மிகப்பெரிய அளவிலான ரத்ததான முகாமை நடத்தினர். மேலும் பசுமையை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக, ஆர்சிபி பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

கேகேஆர் உரிமையாளரான நடிகை ஜூஹி சாவ்லா, மேற்கு வங்க கிராமங்களில் உள்ள பெண்களின் சுய முன்னேற்றத்திற்காக, பல்வேறு திட்டங்களை மேற்கொண்டார்.

நடிகை பிரீத்தி ஜிந்தா தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, ஒரிசா மாநிலத்தில் பல்வேறு சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு உள்ளது. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அந்த அணி வீரர்கள் அனைவரும் நீலநிற பட்டையை அணிந்தனர். விளிம்பு நிலையில் உள்ள குழந்தைகளின் நலனுக்காக, பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் பலர் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த அணி சாம்பியன் பட்டமும் பெறவில்லை. இருந்தும் மாநிலத்தில் பல்வேறு சமூக நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், தங்களது தொடர்ச்சியான சமூக செயல்பாடுகளால் செய்திகளில் இடம் பெற்றுக் கொண்டிருந்தது. தங்களது ரசிகர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் ஸ்டெப்பதலான் என்ற அமைப்புடன் கைகோர்த்து, பல்வேறு நலத்திட்ட முகாம்களை நடத்தி வருகின்றனர் .

ஐபிஎல் அணிகளின் இதுபோன்ற சமூக சேவைகள், அவற்றின் பிராண்ட் மதிப்பை உயர்த்தும் நோக்கில் நடத்தப்படுகின்றன என்றாலும், சமூகத்தில் அவற்றுக்கு மிகப்பெரிய நன்மதிப்பும் கிடைக்கிறது. சமூகத்திற்கு மட்டுமின்றி தங்களது ரசிகர்களுக்காகவும், பல்வேறு முன்னெடுப்புகளை ஐபிஎல் அணிகள் மற்றும் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. கே.கே.ஆர். மற்றும் ரிலையன்ஸ் ஆகியவை இப்பணியை மிகப்பெரிய அளவில் நடத்துகின்றன.

தங்களது அணிகளை பலப்படுத்துதல், தாங்கள் சார்ந்த நிறுவனத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றோடு சேர்த்து, புதிய புதிய திறனாளர்களை ஊக்குவித்தல் மற்றும், சமூக செயற்பாடுகளின் மூலம் தங்களது பிராண்ட் மதிப்பை உயர்த்துதல் ஆகியவற்றை மேற்கொள்வது, காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டாலும்கூட, வரவேற்கத்தக்கதுதான்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles