Read in : English
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிக்கான தேதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தேதிகளை அறிவித்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளைக் காண்பதில் உள்ள ஆர்வம் சூடுபிடித்துள்ள சூழ்நிலையில், இந்த விளையாட்டின் போக்குகளையும் அதில் பொதிந்துள்ள வர்த்தகத்தையும் புரிந்து கொள்வது அவசியமாகிறது. உள்ளூரில் உள்ள திறமையான ஆட்டக்காரர்களை ஊக்குவித்து வளர்க்காமல் தோனியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஏன் வெற்றியில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது.
ஐபிஎல் போட்டிகளுக்காக கிரிக்கெட் வீரர்களை ஏலம் எடுப்பதில் சிறந்த உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதற்குப் பதிலாக, பிரபலமானவர்களையே தேர்வு செய்தார்கள். இதனால் குறைந்த ஏலத் தொகைக்குத் தமிழ்நாட்டு வீரர்கள் வேறு அணிகளுக்குச் செல்ல வேண்டியதாயிற்று.
சென்னை சூப்பர் கிங்ஸ் விரும்பியிருந்தால், அவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதற்காகவாவது, அதிலிருந்து சில வீரர்களையாவது தேர்வு ªச்யதிருக்கலாம். ஆனால், அந்த அணியிடம் பணம் இருந்தபோதிலும்கூட, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷாரூக்கானுக்கு அதிக விலை கொடுத்து எடுக்க முன்வரவில்லை. இந்த ஏலம் முடிந்தும்கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூ.2 கோடி பணம் மிச்சமாக இருந்தது. இதற்குக் காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விளையாட்டு கிளப்பைப் போல செயல்படவில்லை. வர்த்தக நோக்கிலேயே அது இருந்தது.
உள்ளூரில் உள்ள திறமையான ஆட்டக்காரர்களை ஊக்குவித்து வளர்க்காமல் தோனியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஏன் வெற்றியில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது.
உள்ளூரில் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து ஆதரிக்கும் போக்கு கால்பந்து விளையாட்டு உலகிலிருந்து வந்தது. தங்களது விளையாட்டு கிளப்புகள் மீது வைத்திருக்கும் விசுவாசம் கொண்டாடப்படும். 18, 19 வயதுகளில் உள்ள கிளப்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் முதல் முறையாக அறிமுக வாய்ப்புக் கொடுக்கப்படும்போது அவர்களது அணியை சொந்த அணிபோல் நினைத்து விளையாடுவார்கள். அமெரிக்காவில் உள்ள நேஷனல் புட்பால் லீக், நேஷனல் பேஸ்கட் பால் அசோசியேஷன் ஆகியவற்றை இதற்கு மாதிரியாகக் கொள்ளலாம்.
விளையாட்டில் அடிப்படை மாற்றங்கள் இருக்க வேண்டும் என்பதையே இந்தியன் பிரிமியர் லீக் அங்கீகரித்துள்ளது. வெளிநாட்டு விளையாட்டு வீரர்களுக்கு கவர்ச்சிக்கரமான பெரிய தொகைக்கு அவர்களை ஓப்பந்தங்கள் செய்வதற்கு எதிர்கால ரசிகர்கள் ஆதரவளிப்பார்கள் என்பதை அது உணர்ந்திருந்தது. Ðபாரம்பரியமாக இருந்து வரும் அணிக்காக விளையாடுதல் என்ற நெறிமுறைகளுக்காக அது இல்லை. எதிர்கால ரசிகர்களை மனதில் வைத்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கட்டமைக்கப்பட்டது. உள்ளூரில் உள்ள திறமையான வீரர்க•ளை வளர்க்க வேண்டும் என்பது அதன் நோக்கம் அல்ல.
இந்தியன் பிரிமியர் லீக் என்ற பெயர் இங்கிலீஷ் பிரிமியர் லீக் என்ற பெயரைப் போல இருந்தாலும், விளையாட்டு வீரர்களின் விளையாடும் திறமையைக் கொண்டே அவர்களை ஊக்குவிப்பதும் ஒதுக்கி வைப்பதும் என்ற இங்கிலீஷ் புட்பால் லீக் பயன்படுத்தும் விதி அமைப்புகளை ஐபிஎல் பின்பற்றுவதில்லை. ஐபிஎல் போட்டிகள் அமெரிக்க விளையாட்டு மாதிரியில் செயல்படுபவை.
அழகான விளையாட்டில் ஆபத்தும் இருப்பது, விளையாட்டுக்கு நல்லதுதான். ஆனால், வர்த்தகத்துக்கு ஆபத்து கூடாது என்பதுதான் நியதியாக உள்ளது. விளையாட்டு நாட்களில் கி¬ட்ககும் வருமானம், ஒளிபரப்பு மூலம் கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு 100 மில்லியனுக்கு மேல் வருமான இழப்பு ஏற்பட்டதை அடுத்து இங்கிலீஷ் கிளப், ஒதுக்கி வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி வந்தது. Ñஎனினும், அமெரிக்காவில் உள்ள மேஜர் லீக் சாக்கர் என்ற கால்பந்தாட்டக் குழுவிடம் அந்த மாதிரி இல்லை. அது வர்த்தக மாதிரியைத் தழுவிக் கொண்டு செயல்படுகிறது. அதேபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது மும்பை இந்தியன்ஸ் அணிகளில் உள்ளூர் வீரர்களை ஒதுக்கி வைக்கும் போக்கு நிலவுகிறது. ஐபிஎல் போட்டிகளுக்கும் உலகளாவிய ரசிகர்களைக் குறிவைத்து இந்த வர்த்தகம் உருவாகிறது, அதாவது உலகளாவிய அளவில் பல்வேறு இடங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. உள்ளூர் விளையாட்டு வீரர்களை வைத்துக் கொள்வதில் பிரச்சினைகள் உள்ளன. பெரிய போட்டிகளில் விளையாடுவதற்கு அவர்கள் தயாராகாத நிலையில் இருப்பது அணியை நடத்தும் அமைப்புகளின் வர்த்தகத்துக்கு நல்லதல்ல.
சிறந்த அணிகளில் பெரிய விளையாட்டு வீரர்கள் விளையாடுவதை மக்கள் விரும்புவதால் மேலும் வருவாய் ஈட்டுவதற்காக உலகப் புகழ் பெற்ற வீரர்களைக் களம் இறக்கவே பெரிய அணிகளை உருவாக்கும் பெரிய வர்த்தக அமைப்புகள் முயற்சி செய்யும்.
சிறந்த அணிகளில் பெரிய விளையாட்டு வீரர்கள் விளையாடுவதை மக்கள் விரும்புவதால் மேலும் வருவாய் ஈட்டுவதற்காக உலகப் புகழ் பெற்ற வீரர்களைக் களம் இறக்கவே பெரிய அணிகளை உருவாக்கும் பெரிய வர்த்தக அமைப்புகள் முயற்சி செய்யும்.
2018ஆம் ஆண்டு விளையாட்டு வீரர்களின் ஏலத்துக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோச், ஸ்டீபன் பிளம்பிங் சொன்னார்: அனுபவமிக்க ஆட்டக்காரர்கள்தான் ஐபிஎல் போட்டிகளில் செல்வாக்குச் செலுத்துகிறார்கள் என்பதை பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறேன். கிரிஷ் கெய்ல் மீண்டும் வந்தார். நன்றாக விளையாடுகிறார். உடல் தகுதியுடன், ஊக்கத்துடன் இருக்கும் அர்ப்பணிப்புடன் கூடிய மூத்த விளையாட்டு வீரர்கள், நிலைத்து விளையாடுவார்கள். அதனால் போட்டிகளில் வெற்றி பெற்று முன்னேறிச் செல்ல அது உதவியாக இருக்கும். இளம் விளையாட்டு வீரர்களை வளர்ப்பதற்காக நான் இங்கு இல்லை. ஆனால் எங்களது அணிக்காக போட்டிகளில் வெற்றி பெற செய்யவே இருக்கிறேன்ÕÕ
இப்போது, கிரிக்கெட் உலகம், சுழற்சிமுறை கொள்கைக்குப் பழக்கமாகிவிட்டது. சர்வதேசக் கிரிக்கெட்டில் புதிய விளையாட்டு வீரர்களை காண்பதற்கான வலியுறுத்தல்கள் அதிகமாகிவிட்டன. 2020ஆம்ஆண்டில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இளைஞர்களுக்கு போதிய வாய்ப்புக் கொடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்தது. இளைஞர்களிடம் போதிய உத்வேகம் இல்லை என்று தோனி அப்போது சொன்னது சர்ச்சையாகிவிட்டது. கேதர் ஜாதவ் மெதுவாக பேட்டிங் செய்ததால் அந்தப் போட்டியில் தோல்வியைத் தழுவ நேரிட்டது என்று சொல்லபட்டது. மெதுவாக ரன்களைச் சேர்த்ததாக தோனி மீது கூட விமர்சனம் எழுந்தது.
மூத்த விளையாட்டு வீரர்கள் தோனியின் ஆட்கள் என்பதால் விமர்சனம் செய்யப்பட்டார்கள். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாகிவிடவில்லை. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாங்கள் வலுவாக மீண்டு வந்துள்ளோம் என்றார தோனி.
ஆனால் முடிவு? 2021ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் பெரிய வெற்றி. அதனால் அந்த அணியின் முக்கிய வீரர்கள் அப்படியே இருந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறந்த சில புதிய வீரர்கள் எடுக்கப்பட்டனர். மூத்த வீரர்களை அப்படியே வைத்துக் கொள்வது என்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவு செய்தது லாபகரமாகவே இருந்தது. Ñமீண்டும் Ñமாற்றத்தைக் கொண்டு வருவது வரத்த்கத்துக்கு பாதகமாகவே இருக்கும் என்று கருதப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் நீண்ட கால திட்டத்துடனே செயல்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் தோனியின் அணி. அதன் உறுப்பினர்கள் அவரது நெருங்கிய உள்வட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூற முடியாது. ஆனால் அவர்கள் முக்கியமானவர்கள். தங்களது பிற்காலத்தில்தான், ஷேன் வாட்ஸ்சன், மொய்ன் அலி, கெய்க்வாட், ஹேசல்வுட், சாகர், தாகூர், ஜடேஜா, ராயுடு போன்றவர்கள் வெற்றிகரமாக இருந்தார்கள்.
எனவே, அணியின் தலைவராக இருப்பவர், தமிழ்நாட்டில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களை வளர்க்க வேண்டும் என்பதற்காகச் செயல்பட வேண்டும் என்று பரிந்துரைப்பது சரியானது அல்ல. தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் அவரது அணிக்கு மீண்டும் வெற்றியை ஈட்டித் தருகிறார் தோனி. இதுதானே அந்த அணியின் வியாபாரத்துக்குத் தேவை!
Read in : English