Read in : English

கல்பாக்கத்தில் உள்ள மக்களின் பாதுகாப்புக் காரணங்களுக்காக அணுமின் நிலைய நிர்வாகத்துடன் போராடி வருபவர் டாக்டர் வீ. புகழேந்தி. அவர் சொல்கிறார்; அணுமின் நிலையத்தில் அவே ஃப்ரம் ரியாக்டர் (ஏஎப்ஆர்) என்றழைக்கப்படும் எரிபொருள் சேமிப்புக் கிடங்கு கட்டும் திட்டத்திற்கு பூவுலகின் நண்பர்கள் என்ற  சுற்றுப்புறச்சூழல் அமைப்பு தெரிவித்திருக்கும் எதிர்ப்பு முற்றிலும் விஞ்ஞான நோக்கில் அமைந்ததல்ல; அதில் அரசியல் நோக்கங்கள் இரூக்கின்றன. அந்தக் கட்டுமானத்திற்கு எதிராக திமுக அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. அதன் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ஆர். பாலு நாடாளுமன்றத்தில் அதற்கெதிராகப் பேசியிருக்கிறார். பயன்படுத்திய எரிபொருள் சேமிப்புக் கிடங்கு கட்டக்கூடாது என்று சொல்லிய பாலு, கூடங்குளத்தில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை நீண்டகாலத்திற்குச் சேமிப்பதில் தங்களுக்கு அனுபவமில்லை என்று அணுமின் நிறுவனமே ஒத்துக்கொண்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

அந்தக் கட்டுமானம் ஆபத்தானது; அது உள்ளூர் மக்களைக் கதிரியக்கப் பரிசோதனை எலிகளாக மாற்றிவிடும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கூறியிருக்கிறது. அணுமின் நிறுவனம் நீண்டகாலம் அணுஎரிபொருளைச் சேமிக்க  ஓர் ஆழமான நிலவியல் வைப்புக்கிடங்கைக் கட்டவேண்டும் என்று உச்சநீதிமன்றம் 2013-இல் தீர்ப்பு சொன்னது. அந்த நிலவியல் வைப்புக் கிடங்கு பத்து ஆண்டுகளுக்குத் தேவைப்படாது என்று சொன்னது அணுமின் நிறுவனம். மேலும் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு அணு உலைக் கட்டடத்திலேயே சேமித்துக்கொள்ள முடியும் என்று சொல்லிய அணுமின் நிறுவனம் 2018-ஆம் ஆண்டிற்குள் அந்த ஏஎஃப்ஆர் கட்டடத்தைக் கட்டி முடித்துவிடுவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் 2018-இல் அதைக் கட்டுவதில் சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் எழுந்ததால் அதைக் கட்டிமுடிக்கவில்லை என்று சொல்லிய அணுமின் நிறுவனம் மேலும் ஐந்து ஆண்டுகள் அவகாசம் கேட்டது. பலத்த  எதிர்ப்புக் காரணமாக, ஏஎஃப்ஆர் கட்டுமானத் திட்டம் பற்றிய பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் 2019இல் நடத்த முடியவில்லை. இப்போது அணுமின் நிறுவனம் தனது திட்டத்தின் மீதான எதிர்வினைகளையும், கருத்துகளையும் இணையம்வழி கேட்டிருக்கிறது.

கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு எதிராகப் போராடும் டாக்டர் புகழேந்தி உள்ளூர் மக்கள் கதிரியக்கத்தினால் பாதிக்கப்படுவதைத் தான் பார்த்திருப்பதாகச் சொல்கிறார்.

எப்போதுமே சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் தனிப்பட்ட செயல்வீரர்களாகவோ அல்லது அரசுசாரா அமைப்புகள் மூலமாகவோ செயல்படுவார்கள். நேரடியாக  அரசியல் சம்பந்தமுள்ள பிரச்சினைகளுக்கும் அவர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள்  என்றாலும், பெரும்பாலும், குறைந்தபட்சம் பொதுவெளியிலாவது, அவர்கள் அரசியல்சார்பற்றவர்களாகவே இருப்பார்கள். கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு எதிராகப் போராடும் டாக்டர் புகழேந்தி உள்ளூர் மக்கள் கதிரியக்கத்தினால் பாதிக்கப்படுவதைத் தான் பார்த்திருப்பதாகச் சொல்கிறார். கூடங்குளம் ஏஎஃப்ஆர் கட்டுமானத் திட்டத்தை ஒன்றிய அரசு, -மாநில அரசு மோதலைத் தூண்டிவிடும் மற்றுமொரு பிரச்சினையாகத் திமுக அரசு மடைமாற்றத் துடிக்கிறது. திமுகவும், அஇஅதிமுகவும் மாறிமாறி ஆட்சி செய்த காலங்களில் கூடங்குளம் நிலையத்தில் பல தசாப்தங்களில் பல்வேறு பணிகள் அனுமதிக்கப்பட்டு நடந்துகொண்டுதான் இருந்தன.

இப்போது திட்டமிடப்பட்டிருக்கும் பிரயோகப்படுத்திய எரிபொருள் சேமிப்புக் கிடங்கு (ஸ்பெண்ட் ஃப்யூயெல் ஸ்டோரேஜ் ஃபசிலிட்டி – எஸ்ஃப்எஸ்ஃப்) என்பது கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குள்ளிருக்கும் சுற்றுப்பகுதியில்தான் கட்டப்படும்; ஆனால் அது அணு உலைக்கு வெளியேதான் இருக்கும். அங்கே அணுப்பிளவு எதிர்வினைகள் நிகழப்போவதில்லை; மேலும் எரிபொருள் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படும்வரை அந்தக் கிடங்கு தற்காலிகமாகத்தான் இயங்கும். பிரயேகப்படுத்திய எரிபொருள் சேமிப்புக் கிடங்கிற்கு எதிராக வழக்கு தொடுத்த பூவுலகின் நண்பர்களின் நீதிமன்ற ஆவணங்களைக் காட்டி, தாராப்பூர் உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் இந்த மாதிரி வசதிகள் இருக்கின்றன என்று சொல்கிறார் டாக்டர் புகழேந்தி. நிரூபிக்கப்பட்ட மறுசுழற்சித் தொழில்நுட்பம் இந்தியாவிடம் இருக்கிறது. ஆதலால் எரிபொருளை மறுசுழற்சி செய்து மறுபடியும் பயன்படுத்துவது ஒன்றும் அவ்வளவு கடினமல்ல என்கிறார் அவர்.

எரிபொருள் மறுசுழற்சி செய்வதால் உண்டாகும் அணுக்கழிவை என்ன செய்வதுஅதை எப்படி சேமிப்பதுஇப்படியோர் சர்ச்சை உலகம் முழுவதும் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

எரிபொருள் மறுசுழற்சி செய்வதால் உண்டாகும் அணுக்கழிவை என்ன செய்வது? அதை எப்படி சேமிப்பது? இப்படியோர் சர்ச்சை உலகம் முழுவதும் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது.. ஆழமான நிலவியல் வைப்புக் கிடங்குகள் அமைக்கும் திட்டம் முன்வைக்கப்படுகிறது. மலைகளைக் குடைந்து அவற்றில் அணுக்கழிவை நிரந்தரமாகச் சேமித்துவைப்பதுதான் அந்தத் திட்டம். மின் உற்பத்தியில் 20 சதவீதத்தை அணுவிலிருந்து உண்டாக்கிக் கொள்ளும் அமெரிக்கா நேவடாவில் யுக்கா மலைகளில் ஓர் ஆழமான நிலவியல் வைப்புக்கிடங்கை உருவாக்கத் திட்டமிட்டது; ஆனால் சில தொழில்நுட்பப் பிரச்சினைகளால் அது கைவிடப்பட்டது. ஆழமான நிலவியல் வைப்புக்கிடங்கு ஒன்றை உருவாக்கும் செயலில் ஃபிரான்ஸ் இறங்கியுள்ளது. அங்கே மின் உற்பத்தியில் 70 சதவீதம் அணுசக்தியிலிருந்துதான் வருகிறது. அந்த நாட்டின் அணுசக்தித் திறன் இந்தியாவில் இருப்பதைவிட 10 மடங்கு அதிகம். அதனால் மொத்த மின் உற்பத்தியில் வெறும் 3 சதவீதத்தை அணுசக்தியிலிருந்து பெறும் இந்தியாவைவிட அந்த நாட்டில் அணுக்கழிவு மிக அதிகம். இந்தியாவின் அணுமின் நிலையங்களில் மறுசுழற்சிக்குப் பிந்திய அணுக்கழிவு மிகவும் குறைவு என்று அணுசக்தித்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள். அணுக்கழிவை பாதுகாப்பாக, சௌகரியமாக கழிவு முடக்க நிலையங்களில் சேமித்து வைக்கலாம்; இந்த கழிவு முடக்க நிலையங்களிலும் இந்தியாவுக்கு அனுபவம் உண்டு.

இந்தியா-ரஷ்யா ஒப்பந்தப்படி, கூடங்குளத்தில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் ரஷ்யாவுக்கு அனுப்பிவிட வேண்டும் என்பதுதான் முதலில் இருந்த விதி. ஆனால் பின்பு அந்த நிபந்தனை மாற்றப்பட்டு எரிபொருள் இந்தியாவிலே  வைத்துக் கொள்ளப்பட்டது.

டாக்டர் வீ. புகழேந்தி

பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை தமிழில் அணுக்கழிவு என்று வர்ணிக்கும் பூவுலகின் நண்பர்களை டாக்டர் புகழேந்தி விமர்சிக்கிறார். பயன்படுத்தப்பட்ட எரிபொருள் வழக்கமாக மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது; பின்பு மின் உற்பத்திக்காக அது அணுசக்தி எரிபொருள் சுழற்சிக்குள் இறக்கிவிடப்படுகிறது. நிஜமான அணுக்கழிவு என்பது மறுசுழற்சி செய்யும்போது சிதறும் சின்னசின்ன எரிபொருள் துளிகள்; அவற்றைத்தான் மறுபடியும் பயன்படுத்த முடியாது என்று டாக்டர் புகழேந்தி விளக்குகிறார்.

மறுசுழற்சியின்போது, அணுமின் நிலையங்களின் எரிபொருளில் இருக்கும் அணுகுண்டு வஸ்துவைப் பிரித்தெடுத்து குண்டு தயாரிக்கும் நாடுகள் உண்டு. ஆனால் உலக ஒப்பந்தங்களும், உலக அணுசக்தி ஏஜென்சியும் அணுமின் நிலையங்களிலிருந்து வெளியேவரும் எரிபொருளைக் கண்காணித்து அது குண்டு தயாரிக்க மடைமாற்றம் செய்யப்படவில்லை என்பதை உறுதிசெய்து கொள்கின்றன. கூடங்குளம் மின் நிலையமும் உலக அணுசக்தி ஏஜென்சியின் பாதுகாப்புக் கண்காணிப்பில் வருகிறது; அதாவது, அங்கே பயன்படுத்தப்பட்ட எரிபொருள் எங்கே போகிறது, ஏன் போகிறது என்பதையெல்லாம் உலக அணுசக்தி ஏஜென்சி கண்காணிக்கிறது. அதனால் அந்த எரிபொருள் குண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதில்லை. உலக அணுசக்தி ஏஜென்சி. கல்பாக்கத்தை “ராணுவப் பயன்பாட்டுக்கானது” என்று வர்ணித்திருக்கிறது.

இந்தியாவில் 22 அணு உலைகள் இருக்கின்றன; அவற்றில் 12 உலக அணுசக்தி ஏஜென்சியின் கண்காணிப்பில் இருக்கின்றன. அவற்றிற்கான எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. ஓர் அணு உலை உலக அணுசக்தி ஏஜென்சிக் கண்காணிப்பில் இருந்தால்தான் இந்தியாவிற்கு வெளிநாடுகள் அணு எரிபொருளை ஏற்றுமதி செய்யும். கூடங்குளமும் உலக அணுசக்தி ஏஜென்சியின் பாதுகாப்புக் கண்காணிப்பில் இருக்கிறது. அதனால் அதன் எரிபொருள் என்னவாகிறது என்பதும், அது என்ன செய்யப்படுகிறது என்பதும் நமக்கு வெளிப்படையாகவே தெரிந்துவிடும் என்கிறார் டாக்டர் புகழேந்தி.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival