Read in : English
குற்றம் அல்லது சட்ட ஒழுங்கு வழக்குகள் பற்றிய முதல் தகவல் அறிக்கைகளை (First Information Reports) காவல்துறை அதிகாரிகள் பதிவு செய்கின்றனர். அதுவே பின்னாளில் பொய்யான தகவல் அறிக்கையாக (False Information Reportt) மாறிவிடுகிறது.
தமிழக பாஜக தலைவரும், முன்னாள் காவல்துறை அதிகாரியுமான கே. அண்ணாமலை, தமிழக அரசியல் கட்சிகளில் தங்கள் கட்சி சிறப்பான செல்வாக்கைப் பெற்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக உண்மைக்கும மாறான தகவலைக் கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நல்லவேளை, அதில், பாஜகவுக்கு முதல் இடம் என்று அவர் சொல்லவில்லை!
பாஜகவால் வெளியிடப்பட்ட சில புள்ளி விவரங்களைக் கூர்ந்து கவனித்தால், குறிப்பிடத்தக்க வகையில் அவர்களின் செல்வாக்கு மேம்பட்டிருப்பதாவோ அல்லது மூன்றாவது இடத்தைப் பிடித்துவிட்டதாகவோ அவர்கள் கூறியிருப்பது பொய்யான தகவல் என்பது தெரியும்.
பாஜகவால் வெளியிடப்பட்ட சில புள்ளி விவரங்களைக் கூர்ந்து கவனித்தால், குறிப்பிடத்தக்க வகையில் அவர்களின் செல்வாக்கு மேம்பட்டிருப்பதாவோ அல்லது மூன்றாவது இடத்தைப் பிடித்துவிட்டதாகவோ அவர்கள் கூறியிருப்பது பொய்யான தகவல் என்பது தெரியும்.
2022ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மொத்தமாக 308 வார்டுகளில் மட்டுமே வென்றது. இது 2011 தேர்தலில் பெற்ற 272 இடங்களைப் பிடித்தது போன்றதேயாகும். ஆனால், காங்கிரஸ் இப்போது 592 இடங்களைப் பிடித்துள்ளது, இது பாஜக பெற்றுள்ள எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அதிகம். காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணியில் நின்றதால், பாஜக பெற்ற வாக்குகள் அதிகரித்திருப்பதாகக் கருத வேண்டும் என பாஜக கூறுவது அர்த்தமற்றது.
திமுகவும் இதர கூட்டணிக் கட்சிகளும் தங்கள் வார்டுகளில் பெற்ற பெரும் எண்ணிக்கையிலான வாக்குகளில், காங்கிரஸ் கட்சிக்கான வாக்குகளும் அடங்கும். ஒவ்வொரு கட்சிக்கான வார்டுகளை தனித்தனியாக பிரிக்க முடியாது. வெற்றி பெற்ற இடங்களின் அடிப்படையில், கட்சிகளின் செல்வாக்கை மாநில தேர்தல் ஆணையம் பதிவு செய்வதுடன் அந்த விவகாரம் முடிவடைகிறது.
தேர்தல் களத்தில் திமுக ஆதிக்கம் செலுத்தியதால் காங்கிரஸ் மற்றும் திமுகவின் மற்ற கூட்டணிக் கட்சிகள் மிகக் குறைவான இடங்களில்தான் போட்டியிட்டன என்பதை அண்ணாமலை உணர வேண்டும். மறுபுறம், பாஜக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் 40 முதல் 50 சதவிகிதம் வரை வேட்பாளர்களை நிறுத்தியது, இது காங்கிரஸை விட அதிகமாக இருந்தது. காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகள் கடந்த காலத்தில் சராசரியாக 7 முதல் 8 சதவீத வாக்குகளைப் பெற்றிருப்பதால், தற்போது பாஜக சராசரியாக 5 சதவீத வாக்குகளைப் பெற்றிருப்பதாக சொல்வதில் ஒன்றுமேயில்லை.
முக்கியமாக கன்னியாகுமரி மாவட்டத்திலும், கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் ஓரிரு இடங்களிலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் மொத்தமுள்ள 308 வார்டுகளில் 200 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 37 மாவட்டங்களில் 108 வார்டுகளை மட்டுமே வென்றது மிகமிகக் குறைவானதாகும்.
பாஜக இப்போது வெறும் 22 மாநகராட்சி கவுன்சிலர் வார்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது, அதிலும் கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியிலிருந்து 12 இடங்கள் வந்துள்ளன. மத அடிப்படையில் வாக்காளர்களைத் தூண்டிவிட்டிருப்பதால் பாஜக அங்கே வலுவான நிலையில் உள்ளது.
மாநிலத்தின் பிற பகுதிகளில், பாஜக 10 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது, இது மற்ற பகுதிகளில் பெரும்பாலான வாக்காளர்கள் அதைப் புறக்கணித்ததையே காட்டுகிறது. முக்கிய இடமான சென்னை மாவட்டத்தில் பாஜகவுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது, அதே நேரத்தில் காங்கிரஸ் 13 இடங்களை வென்றுள்ளது. அதிமுகவின் 15 இடங்களை விட 2 இடங்கள் மட்டுமே குறைவாக பெற்றுள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் பாஜக படுதோல்வி அடைந்திருக்கிறது.
‘ஸ்டிரைக் ரேட்‘ எனப்படும் வெற்றி விகிதத்தைப் பொறுத்தவரை, சென்னையில் 198 இடங்களில் போட்டியிட்ட பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது 0.50 சதவீதம் என்ற மிகக் குறைந்த அளவாகும், அதே நேரத்தில் சென்னை மாநகராட்சி பகுதியில் காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி சதவீதம் 81.25 ஆகும். இது மிகவும் தனித்துவமானது. வெற்றி விகிதத்தைப் பொறுத்தவரை பாஜகவை விட இடதுசாரி கட்சிகளும் சிறப்பாக செயல்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்திலும் வெற்றி விகிதத்தைப் பொறுத்தவரை பாஜக-வைவிட காங்கிரசுக்கு வெற்றி விகிதம் அதிகம். மாநிலத்தின் சில பகுதிகளைப் போலவே, இங்கும், பல வார்டுகளில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி முறிந்ததால், காங்கிரஸ் மற்றும் திமுகவின் அதிருப்தி வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் எதிராக செயல்பட வழிவகுத்தது.
பாஜக எந்த வகையிலும் தமிழகத்தில் முன்னணியில் இல்லை என்பதோடு திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளை மட்டுமின்றி மற்ற அரசியல் கட்சிகளைவிடவும் மிகவும் பின்தங்கியுள்ளது.
அதிமுக-வுக்கு இணையான செல்வாக்கு உள்ளதாக பாஜக கூறிக் கொள்ளும் கோவை மாவட்டத்தில்கூட, கோவை மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெறாமல், ஒரு நகராட்சி வார்டு உறுப்பினர், ஐந்து டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிகளை மட்டுமே பாஜக வென்றது. மறுபுறம், 9 மாநகராட்சி கவுன்சிலர் பதவிகள், 6 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் 12 டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 27 வார்டுகளில், பாஜகவுக்கு 6 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. கோவை மாவட்டத்தில் பாஜகவைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலும் (இந்து நாடார்களின் ஆதரவைப் பயன்படுத்தி மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி அதை வாக்காக்க முயற்சிப்பது) கோவை (1998இல் குண்டுவெடிப்பு சம்பவத்தைக்காட்டி, பலன்களை அறுவடை செய்ய முயற்சிப்பது) மற்றும் சென்னையின் சில இடங்களிலும் (சாதி, மத காரணிகளின் சுரண்டலினால் பெருமளவு பிராமணர்கள் உள்ள இடங்களில்) வென்றதைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் பாஜக செல்வாக்கை இழந்திருக்கிறது என்பதையே ஆரம்ப கட்ட ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
பாஜக எந்த வகையிலும் தமிழகத்தில் முன்னணியில் இல்லை என்பதோடு திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளை மட்டுமின்றி மற்ற அரசியல் கட்சிகளைவிடவும் மிகவும் பின்தங்கியுள்ளது.
மாநிலம் முழுவதுமான தேர்தல் தரவுகள் இல்லாததால் விரிவான பகுப்பாய்வு செய்ய இப்போது சாத்தியப்படவில்லை. தரவுகள் உள்ளிடப்பட்டவுடன் விரிவான பகுப்பாய்வு மேற்கொள்ளப்படும்.
Read in : English