Read in : English
2011ஆம் அண்டு நடந்த தேர்தலில் 10 மேயர் பதவிகளையும் தி.மு.க. இழந்தது. தற்போது முதல்வரும், திமுக கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், தற்போதைய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 21 மேயர் பதவிகள் அனைத்தையும் கைப்பற்றி அதிமுகவைப் பழிவாங்கியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தி.மு.க. 130 கவுன்சிலர் பதவிகளையும், 23 நகராட்சித் தலைவர் பதவிகளையும் பெற்றது. அப்போது, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. 585 மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளையும், 90 நகராட்சி தலைவர் பதவிகளையும் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
11 ஆண்டுகளுக்குப் பிறகு, 2022இல், தி.மு.க தலைமையிலான கூட்டணியானது உள்ளாட்சித் தேர்தலில் 75 முதல் 80 சதவீதப் பதவிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.
11 ஆண்டுகளுக்குப் பிறகு, 2022இல், தி.மு.க தலைமையிலான கூட்டணியானது உள்ளாட்சித் தேர்தலில் 75 முதல் 80 சதவீதப் பதவிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. 2011 முடிவுகள் எறக்குறைய முற்றிலுமாகத் தலைகீழாக மாறியுள்ளது. 138 பேரூராட்சிகளில் 132 பேரூராட்சிகளை தி.மு.க கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க.வுக்கு 3 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 3 இடங்களும் மட்டுமே கிடைத்துள்ளன. 489 டவுன் பஞ்சாயத்துகளில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. 2011இல் நடைபெற்ற மேயர் பதவிக்கான தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத திமுக, தற்போது 21 மேயர் பதவி இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதை அபாரம் என்றே சொல்ல வேண்டும். அதேசமயம், இது அ.தி.மு.க.வுக்குப் பேரழிவை ஏற்படுத்தி இருப்பதாகவே பார்க்க வேண்டும்.
எதிர்கட்சியான அ.தி.மு.க. தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியதுடன், கட்சிக்கு ஒரு தலைவரையும் தேட வேண்டிய நேரம் இது. ஏனெனில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக 5 தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ளது. எனவே, தி.மு.க.வை எதிர்கொள்ள எடப்பாடி இனி மாற்று வியூகம் வகுக்க வேண்டும். 2019ஆம் ஆண்டு முதல், அ.தி.மு.க. 13 இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்ததைத் தவிர மக்களவைத் தேர்தலில் கிட்டத்தட்ட பெரும்தோல்வியைத் தழுவியது. அ.தி.மு.க.வைவிட கிராமப்புறங்களில் தி.மு.க. பலவீனமாக இருந்தபோதிலும், 2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில்கூட அ.தி.மு.க. தோல்வியைச் சந்தித்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை அடுத்து அதிமுக ஆட்சியை இழந்தது.2021ஆம் ஆண்டின் இறுதியில் நடந்த ஒன்பது மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் அதிமுகவுக்கு மற்றுமொரு அடி. தற்போதைய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் தோல்வி தொடர்கதையாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி அவருடைய தலைமையைத் தக்கவைப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறாரே தவிர, பல ஆண்டுகளாக கட்சியைவிட்டு ஒதுங்கியிருந்த கட்சியினரை மீண்டும் கட்சிக்குள் அழைத்து வர நடவடிக்கை எடுக்கவில்லை.
எடப்பாடி பழனிசாமி அவருடைய தலைமையைத் தக்கவைப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறாரே தவிர, பல ஆண்டுகளாக கட்சியைவிட்டு ஒதுங்கியிருந்த கட்சியினரை மீண்டும் கட்சிக்குள் அழைத்து வர நடவடிக்கை எடுக்கவில்லை. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலாவின் ஆதரவாளர்களையும், சசிகலாவின் அண்ணன் மகன் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுக கட்சியையும் விலக்கியே வைத்துள்ளார்.
தினகரனையும், சசிகலாவையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சிக்குக் கொண்டு வந்தால் கட்சியில் தனதுபிடி தளர்ந்து விடும் ன்று எடப்பாடி பழனிசாமி கவலைப்படுகிறார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையில் இயங்கிய கட்சி அமைப்பை மாநிலத்தின் மேற்குப் பகுதியில் குறிப்பாக சேலம், கோவை, ஈரோடு மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் உள்ள பிற்படுத்த சாதியினரைச் சார்ந்த கட்சியாக எடப்பாடி குறைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறார்.
வன்னியர்களைக் கவரும் விதத்தில் வன்னியர்களுக்கான பிரத்யேக இடஒதுக்கீட்டின் மூலம் அவர்களைக் கவரலாம் என்ற அவரது உத்தியானது மற்ற சமூகங்களிடமிருந்து கிடைத்த ஆதரவு பின்னடைய செய்துவிட்டது.
அ.தி.மு.க. ஆட்சியின் போது சொத்துக் குவிப்புத் தொடர்பாக அடுத்த சில மாதங்களில் தமிழக காவல் துறையால் தொடரவிருக்கும் ஊழல் வழக்குகளைத் தவிர்க்க பா.ஜ.கவுடன் பழனிசாமி இணக்கமான உறவைத் தொடர்வதாகவும் குறைகூறுகிறார்கள். 2022 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.கவும் அ.தி.மு.க.வும் தனித்துப் போட்டியிட முடிவு செய்த போதிலும், பா.ஜ.கவை கூட்டணிக் கட்சியாக வைத்திருக்க பழனிசாமி முயன்றார். அப்போதும் கூட, பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும் மாநிலம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளில் பா.ஜ.கவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இதன் மூலம் இரு கட்சிகளும் தங்களது கூட்டணியினை முறித்துக் கொள்ளவில்லை என்பதும், உண்மையில், அ.தி.மு.க. இன்னும் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியின் ஓர் அங்கமாகத்தான் இருக்கிறது என்பதும் தெளிவாகிறது.
மறுபுறம், மதச்சார்பற்ற கூட்டணி வலுவாகவும், ஒற்றுமையாகவும் இருப்பதை உறுதிசெய்து, 2019 முதல் தனது கூட்டணிக் கட்சிகளைத் தக்க வைத்துக்கொள்ள தி.மு.க. அக்கறையுடன் இருக்கிறது. அதனால், தி.மு.கவும் அதின் கூட்டணிக் கட்சிகளும் அதன் பலனை அறுவடை செய்துகொண்டு வருகிறார்கள்.
அ.தி.மு.க. கூட்டணியைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக, கிட்டத்தட்ட எல்லோரையும் இழந்துவிட்டது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. வெளியேறியது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.கவில் இருந்து பா.ம.க. விலகியது. தற்போதைய தேர்தலில் பா.ஜ.கவும் தேர்தல் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக விலகியது. அ.தி.மு.க.வில் தற்போது எஞ்சியிருப்பது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்பட ஒன்றிரண்டு சிறு கட்சிகள் மட்டுமே.
அ.தி.மு.க.வின் பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாடானது தமிழகத்தில் மதச்சார்பற்ற கட்சிகளை திமுக அணிதிரட்டுவதை எளிதாக்கியுள்ளது.
பா.ஜ.க.வை விட்டுக்கொடுக்க அ.தி.மு.க தயாராக இல்லாத நிலையில், சிறுபான்மையினரின் வாக்குகளும் மதச்சார்பற்றவர்களின் வாக்குகளும் அதன் கூட்டணிக்கு ஆதரவாக ஒருங்கிணைப்பதன் மூலம் தி.மு.க. தொடர்ந்து பயன் கிடைத்து வருகிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழக மக்கள் முன்வைக்கும் சமூக நல்லிணக்கம், மதச்சார்பின்னமை கொள்கைகள் காரணமாக காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் ஆதரவு அளித்து வருகிறார்கள். அ.தி.மு.க.வின் பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாடானது தமிழகத்தில் மதச்சார்பற்ற கட்சிகளை திமுக அணிதிரட்டுவதை எளிதாக்கியுள்ளது.
Read in : English