Read in : English
திமுக ஆட்சி அமைத்து இரண்டு மாதங்களில் தாம்பரம், ஆவடி மாநகராட்சிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டன. நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து சட்டசபை தேர்தலிலும் சென்னை மற்றும் சுற்றியுள்ள மூன்று மாவட்டங்களிலும் அநேக தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஊராட்சி தேர்தலில் திமுகவுக்குக் கிடைத்த வெற்றியால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் திமுகவினர் உற்சாகம் அடைந்தனர். அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை இழுபறி, தொகுதி பங்கீடு தோல்வி என ஊடகங்கள் பூதாகரத்தை கிளப்ப, ஆளும் கட்சியினர் மேயர் பதவியைக் குறிவைத்து களத்தில் இறங்கினர். சீட் கேட்டு கடுமையான போட்டி நிலவிய வார்டுகள், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் தங்கள் ஆதரவாளர்களுக்கும் நம்பிக்கையானவர்களுக்கும் சீட்டுகளை பெறுவதற்கு உதவியுள்ளனர். சீட் கிடைக்காத சில ஆளும் கட்சியினர் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் வார்டுகளில் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக தமிழக வாக்காளர்களின் கவனத்தை தாம்பரம் மாநகராட்சி பெற்றுள்ளது. 2011ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மூன்று மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கிய தாம்பரம் மாநகராட்சியின் மக்கள் தொகை 7 லட்சமாக இருந்த போது, பிறகு கடந்த 10 ஆண்டுகளில் தாம்பரத்தின் மக்கள் தொகை 7 மடங்கு அதிகரித்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சியை பொருத்த வரை மொத்தம் 70 வார்டுகளில் கூட்டணி கட்சிகளுக்கு 15 வார்டுகள் ஒதுக்கி திமுக 55 வார்டுகளில் போட்டியிடுகிறது. அதிமுக 67 வார்டுகளிலும், கூட்டணி கட்சியினர் 3 வார்டுகளில் போட்டியின்றனர். மேலும் நாம் தமிழர், மக்கள் நீதி மையம் என ஏழு முனை போட்டி நிலவுகிறது. தாம்பரம் மாநகராட்சியில் ஐந்நு நகராட்சிகள், ஐந்து பேரூராட்சிகளை உள்ளடக்கி 70 வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. வன்னியர், தலித், முதலியார், பிராமணர் போன்ற சாதியினரும் வடமாநிலத்தைச் சேர்ந்த வாக்காளர்களும் கணிசமான உள்ளனர். பல்லாவரம் மற்றும் தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு ஆதரவாளர்கள் இருப்பது போன்று குரோம்பேட்டை, பம்மல் மற்றும் கிழக்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் பாஐக ஆதரவாளர்களும் சட்ட மன்ற உறுப்பினரும், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி ஆதரவாளர்களும் கணிசமாக உள்ளார்கள்.
தாம்பரம் மாநகராட்சியை பொருத்த வரை மொத்தம் 70 வார்டுகளில் கூட்டணி கட்சிகளுக்கு 15 வார்டுகள் ஒதுக்கி திமுக 55 வார்டுகளில் போட்டியிடுகிறது. அதிமுக 67 வார்டுகளிலும், கூட்டணி கட்சியினர் 3 வார்டுகளில் போட்டியின்றனர்.
அதிமுக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் விலகி இருந்தாலும் திரிசூலம், பழைய பல்லாவரம் பகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி ஆதரவாளர்கள், அதிமுகவுக்கு வாக்களிக்கும் மன நிலையிலே உள்ளனர். வன்னியர்கள் அதிகமாக உள்ள அனகாபுத்தூர், பெருங்களத்தூர், கோவிலம்பாக்கம் மற்றும் செம்பாக்கம் ஊராட்சிகளில் பாமக தனியாக போட்டியிடுவதும் களத்தில் திமுகவுக்குக் கடுமையான போட்டியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் மாநகராட்சியில் 67 வார்டுகளில் தனித்து களம் காணும் அதிமுக, பாஐக ஆதரவு ஓட்டுகளையே நம்பியுள்ளது. வட மாநிலத்தவர்களும், பாஐகவை ஆதரிக்கும் பிராமணர் சாதியினரும் இப்பகுதியில் அதிகமாக உள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சியில் 67 வார்டுகளில் தனித்து களம் காணும் அதிமுக, பாஐக ஆதரவு ஓட்டுகளையே நம்பியுள்ளது. வட மாநிலத்தவர்களும், பாஐகவை ஆதரிக்கும் பிராமணர் சாதியினரும் இப்பகுதியில் அதிகமாக உள்ளனர். பல்லாவரம், பம்மல் பகுதிகளில் இஸ்ஸாமிய வாக்காளார்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் சுயேட்சையாக வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். கேட்டட் கம்யூனிட்டி, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் அதிகம் உள்ள சேலையூர், பெருங்களத்தூர், மேடவாக்கம் மற்றும் செம்பாக்கம் பகுதிகளில் சமுக ஆர்வலர்கள் பலர் இந்தத் தேர்தலில் களம் இறங்கியுள்ளனர்.
தேர்தல் கள நிலவரம் குறித்து சுயேட்சையாக போட்டியிடும் பத்திரிகையாளரும், சமுக ஆர்வலரும் பாரதி கண்ணன் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தல் , சட்டசபை தேர்தல் போன்று உள்ளாட்சி தேர்தலை கணக்கில் எடுக்கக்கூடாது. மக்கள் அந்த பகுதி பிரச்சினைகளை பற்றி அறிந்தவர்களயே மக்கள் தேர்வு செய்ய முடிவு செய்வார்கள் என்கிறார்.
தாம்பரம் ரயில் நிலையத்தை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு இணையாக உயர்த்துவது, வண்டலூரில் மத்திய அரசின் போலீஸ் அகடமி, தாம்பரம் உள்நாட்டு விமான நிலையம், மற்றும், சானிட்டோரியம் மத்திய மருத்துவ ஆராய்ச்சி நிலையம் என மத்திய அரசின் உதவியுடன் திட்டங்கள் நிறைவேற்றப்படும் பாஜகவுடன் அதிமுக வார்டு வேட்பாளர்களும் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர்.
கோவை, சேலம் உட்பட நான்கு மாநகராட்சிகளை கைப்பற்றிட வேண்டும் என துடிக்கும் அதிமுக தாம்பரத்தையும் குறிவைத்துள்ளது. அப்படி மேயர் பதவி துணை மேயர் பதவி அதிமுவுக்குக் கிடைத்தால் , திமுகவுக்குத் தலைவலி தாம்பரத்தில் இருந்தே உருவாகும். ஆனால், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சியில் அதிமுகவுக்கு வெற்றி என்பது அவ்வளவு எளிதாக இருக்காது.
Read in : English