Read in : English
வீடுகளில் சேரும் எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் பயன்பாடு இல்லாமல் போனதும் அந்தக் கழிவுப்பொருட்களை வெளியே தூக்கி எறியக் கூடாது. அதை வாங்கி மறுசுழற்சி செய்ய பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை அடையாறு கஸ்தூர்பா நகரில் உள்ள ரெசிடென்ட்ஸ் ஆஃப் கஸ்தூர்பா நகர் அசோசியேஷன்ஸ் என்ற அமைப்பு, தங்கள் பகுதிகளில் உள்ள வீடுகளிலிருந்து இ–வேஸ்ட்களை சேகரித்து மறுசுழற்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கும் பணியைச் செய்து வருகிறார்கள். அந்தந்தப் பகுதிகளில் இந்தக் இ–வேஸ்ட்களைச் சேகரிக்க சிறப்பு முகாம்களையும் நடத்துகிறார்கள்.
இந்த முகாம்கள் மூலம் சேகரிக்கப்பட்ட இந்த இ-வேஸ்ட்கள் அனைத்தும் திருப்பதியை மையமாக கொண்டு இயங்கும் world scrap recycling solutions என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.
இந்த முகாம்கள் மூலம் சேகரிக்கப்பட்ட இந்த இ-வேஸ்ட்கள் அனைத்தும் திருப்பதியை மையமாக கொண்டு இயங்கும் world scrap recycling solutions என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.
சேகரிக்கப்பட்ட இந்த இ–வேஸ்ட்களில் பிளாஸ்டிக், மெட்டல், கண்ணாடி என தனித்தனியே பிரித்து அதை உற்பத்தியாளர்களுக்கு அனுப்பி வைத்து விடுவோம் என்றார் வோல்ட் ஸ்க்ராப் மறுசுழற்சி நிறுவனத்தின் சென்னை கிளையின் மூத்த மேலாளரான வி.ரா.உமா காமினி. எஞ்சிய பயன்படுத்த முடியாத கழிவுகள் அனைத்தும் திருப்பதியில் உள்ள மறுசுழற்சி தொழிற்சாலையில் மறுசுழற்சி செய்யப்படுவதாகவும் வீடுகளில் இருக்கும் இ-வேஸ்ட்களை நேரடியாக அசோக் நகரில் இருக்கும் தங்களில் மறுசுழற்சி அலுவலகத்தில் கொண்டு வந்து கொடுக்கலாம் என்றும் உமா காமினி கூறுகிறார். சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள இ–வேஸ்ட்களை அகற்ற 8838695815, 9381092900 என்ற் தொலைபேசி எண்ணையோ அல்லது www.worldscraprecycling.com என்ற இணையதளத்தையோ தொடர்பு கொள்ளலாம்.
இவர்களை போலவே சென்னை அருகே கும்மிடிபூண்டியில் இ–வேஸ்ட்களை மறுசுழற்சி செய்யும் virogreen நிறுவனம் 2002ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இவர்கள் வாரத்திற்கு ஒருமுறை அழைப்பின் பேரில் வீடுகளுக்கே சென்று வீணாகும் இ–வேஸ்ட்களை சேகரிக்கின்றனர். வீடுகள் மட்டுமின்றி கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடம் இருந்தும் வைரோகிரீன் இ- வேஸ்ட்களைச் சேகரிக்கிறது.
வீடுகள் மட்டுமின்றி கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடம் இருந்தும் வைரோகிரீன் இ––வேஸ்ட்களைச் சேகரிக்கிறது.
மாநகராட்சி, மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முறையான அனுமதி பெற்றால் மட்டுமே மக்களிடம் இருந்து இ-வேஸ்ட்களைச் சேகரிக்க முடியும். அரசின் அங்கீகாரம் பெற்றுத்தான் இயங்க வேண்டும் என்று வைரோகிரீன் நிறுவனத்தின் மேலாளரான ஆர்.ஜெயகுமார் கூறுகிறார்.
சென்னையில் மட்டும் அரசு அங்கீகாரத்துடன் இ–வேஸ்ட்களை மறுசுழற்சி செய்யும் இரு தொழிற்சாலைகள் இருப்பதாக கூறும் ஜெயக்குமார், இ–வேஸ்ட்களை தரம்பிரித்து ஒப்படைக்கும் 35 சிறு நிறுவனங்கள் செயல்படுவதாகவும் குறிப்பிட்டார். இ–வேஸ்ட்களைத் தரம்பிரித்து மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைக்கு வருகை தரும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள், பாதுகாப்பாக கழிவுகள் அழிக்கப்படுகிறதா, அதற்கான உபகரணங்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வதுடன், ஆண்டிற்கு எத்தனை டன் கழிவுகளை சேகரிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகளை நிர்ணயிப்பதாகவும் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள இ–வேஸ்ட்களை அவர்களின் இடத்திற்கே சென்று சேகரித்து கொள்ள www.virogreen.in என்ற இணையதளத்தையோ அல்லது 9940831313/ 044- 26512449 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இ-வேஸ்ட்கள் நிலம், நீர், காற்று என சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை விளைவிப்பதால் அதை மிகுந்த கவனமுடன் கையாள வேண்டியது அவசியம் என்கிறார் குளோபல் அகாடமி ஆப் டெக்னாலஜியில் துணை பேராசிரியராக பணியாற்றி வரும் குஷ்பு கே.பிராவத்.
இ-வேஸ்ட்கள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும என்கிறார் குளோபல் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சிவசுப்ரமணியம் ஜெயராமன்.
Read in : English