Read in : English
முதல்வர் மு.க. ஸ்டாலின் சப்தமில்லாமல் சில அமைச்சர்களின் துறைகளில் சில மாற்றங்களைச் செய்து, சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாவு, செய்தித் துறை அமைச்சர் எம்.பி. சாமிநாதன் ஆகியோர் தங்களது பணிகளைத் திறமையாகச் செய்து வருவதையும் மற்றவர்கள் அந்த அளவுக்கு வேகத்துடனும் எதிர்ப்பார்க்கும் அளவுக்குத் திறமையாகவும் செயல்படுவதில்லை என்பதையும் மு.க. ஸ்டாலின் பார்த்தார்.
தனது எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாத அமைச்சர்களை அதிரடியாக நீக்கி அமைச்சரவையில் அடிக்கடி மாற்றங்களைச் செய்யும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் உருவாக்கி வைத்திருந்த பாதையிலிருந்து மாறி, அதுபோன்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் வகையில் அமைச்சர்கள் யாரையும் ஸ்டாலின் பதவியிலிருந்து நீக்கவில்லை. அதேசமயம் ஜனவரி 12ஆம் தேதி சில அமைச்சர்களின் சில துறைகளை மாற்றி இருக்கிறார்.
இந்த அதிர்ச்சி வைத்தியம், மூத்த அமைச்சர்களையும் தங்•களது செயல்பாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அத்துடன், வேகமாகவும் தரத்துடன் ஆட்சிப் பணிகளைச் செய்ய அவர்களை முடுக்கிவிட்டுள்ளது
தொழில் துறையுடன் இருந்த சர்க்கரை ஆலைகள் துறை, வேளாண்மைத் துறையை வைத்திருக்கும் எம்ஆர்கே பன்னீர்செல்வத்துக்கு மாற்றப்பட்டது. அதனால், வேளாண்மை துறையுடன் கரும்பு மேம்பாட்டையும் அவர் சேர்த்துப் பார்க்க வேண்டியதிருக்கும். போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்பட்ட விமான நிலையங்கள் துறை ராஜ கண்ணப்பனிடமிருந்து தொழில் துறை அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுக்கு மாற்றப்பட்டது.
தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் இருந்த வெளிநாட்டு மனித வள கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனம் தற்போது, சிறுபான்மையினர் நல மற்றும் வெளிநாட்டில் வாழும் தமிழர் நலத்துறை அமைச்சரான கே.எஸ். மஸ்தானிடம் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் துறைகளில் பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யப்படாத நிலையில், அமைச்சராக இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு சாதிக்க வேண்டும் அல்லது வெளியேற வேண்டும் என்பதற்கான செய்தியாகவே இதைக் கருத வேண்டும்.
இந்த அதிர்ச்சி வைத்தியம், மூத்த அமைச்சர்களையும் தங்•களது செயல்பாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அத்துடன், வேகமாகவும் தரத்துடன் ஆட்சிப் பணிகளைச் செய்ய அவர்களை முடுக்கிவிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் வரும் சூழ்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக வெற்றி பெற்று, எதிர்க்கட்சிகளுக்கு இடமில்லாமல் செய்து விட வேண்டும் என்பதற்கு அனைத்து அமைச்சர்களும் நேர காலம் பார்க்காமல் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று ஸ்டாலின் எதிர்பார்க்கிறார்.
அமைச்சர்கள் செயலூக்கத்துடன் செயல்பட வேண்டிய அவசியத்தை ஸ்டாலின் சுட்டிக்காட்டும் வகையில் அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன. சென்னையில் சாலைகள் அமைக்கும் பணியின் தரத்தைப் பார்வையிட இரவு நேரத்தில் சென்றது, திட்டமிடப்படாத வகையில் சென்ற அவர் அண்ணா சாலையிலும் பஸ் நிறுத்தத்திலும் முகக்கவசம் அணியாமல் இருந்த மக்களுக்கு முகக்கவசங்களை வழங்கியது, கொரோனா, ஓமைக்ரான் பரவலைத் தடுப்பது குறித்து கண்காணிப்புடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் மாநிலத்தின் பல பகுதிகளில் மருத்துவமனைகளுக்குச் சென்று வந்தது போன்றவை, அசமந்தமாக இருக்கும் சில அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கு மாறானது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் வரும் சூழ்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக வெற்றி பெற்று, எதிர்க்கட்சிகளுக்கு இடமில்லாமல் செய்து விட வேண்டும் என்பதற்கு அனைத்து அமைச்சர்களும் நேர காலம் பார்க்காமல் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று ஸ்டாலின் எதிர்பார்க்கிறார். அடுத்த சில மாதங்களில் இந்தத் தேர்தல்கள் முடிந்த பிறகு, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டும் தேர்தலில் அவர்களது கட்சிப் பணிகளைக் கருத்தில் கொண்டும் அமைச்சரவையை மாற்றியமைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
Read in : English