Read in : English

தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுக்கிற அல்லது தயக்கம் காட்டுகிற போக்கு மக்கள் மத்தியில் குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் நிலவுவது தமிழ்நாட்டில் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதை பாதிக்கிறது. பண வசதி, அரசின் வெளிப்படைத் தன்மை குறித்த சந்தேகங்கள், தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயத்தை சென்றடைவதற்கான முயற்சிகள் இல்லாமை முதலியவைதான் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுக்கிற அல்லது தயக்கம் காட்டுகிற நிலைக்கு காரணம். தமிழ்நாட்டில் சராசரியாக வயது வந்தவர்களின் எண்ணிக்கை 5 கோடி என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களில் இருந்து தெரிய வருகிறது.

தமிழ்நாட்டில் ஒரு டோஸ் மட்டும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 4.64 கோடி பேர் என்றும், முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 2.68 கோடி பேர் என்றும் கோவிட்-19 தடுப்பூசி பதிவுக்கான இந்திய அரசின் இணைய தளமான கோவின் (Cowin) தெரிவிக்கிறது. மக்களை முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ள வைப்பதில் தமிழ்நாடு பாதி அளவைக் கடந்திருக்கிறது.

கொரோனாவின் இரண்டாம் அலைக்குப் பிறகு, தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் அதிகரித்திருப்பது, கொரோனா உருமாற்றங்கள், ஒருவேளை, மிகவும் ஆபத்தான உருமாற்றங்கள் ஏற்படுவதற்கான இடமாக மாநிலத்தை மாற்றலாம் என சமீபத்தில், உருமாறிய கொரோனாவான ஓமிக்ரான் ஏற்படுத்திய பயமுறுத்தலுக்குப் பிறகு, வல்லுநர்கள் தமிழகத்தை எச்சரித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒரு டோஸ் மட்டும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 4.64 கோடி பேர் என்றும், முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 2.68 கோடி பேர் என்றும்
கோவிட்-19 தடுப்பூசி பதிவுக்கான இந்திய அரசின் இணைய தளமான கோவின் (Cowin) தெரிவிக்கிறது.

சிரிப்பு நடிகர் விவேக்கின் திடீர் மரணம்தான் இந்தத் தூண்டுதலுக்கான அம்சம் என்று தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுப்பவர்கள் சிலருடன் பேசியபோது தெரிவித்தனர். தடுப்பூசியின் வலுவான ஆதரவாளரான நடிகர் விவேக், இந்த ஆண்டு ஏப்ரலில் கோவிட்- 19 தடுப்பூசி ஒரு டோஸ் போட்டுக் கொண்டதற்கு மறுநாள் மாரடைப்பால் மரணம் அடைந்தார். விவேக்கின் மரணத்துக்கு தடுப்பூசிதான் காரணம் என்று வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்காக அவர் சட்ட நடவடிக்கையை சந்திக்க வேண்டியிருந்தது. விவேக்கின் மரணத்துக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என ஓராண்டுக்குப் பிறகு அரசாங்கம் அதிகாரபூர்வமாக மக்களுக்கு விளக்கம் அளித்தது. தெளிவு ஏற்படுத்துவதற்குப் பதிலாக, இந்த தாமதமான விளக்கம் மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

தடுப்பூசி“தடுப்பூசிகளை அரசு முன்னிறுத்தும் விதமானது சாதாரண மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது என தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுப்பதில் உறுதியாக இருக்கும் அசோக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) குறிப்பிடுகிறார். `நாங்கள் நலமாக இருக்கும்போது, தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு ஏன் கட்டாயப்படுத்த வேண்டும் என வயது முதிர்ந்தவர்கள்கூட கேட்கிறார்கள்” என அவர் தெரிவிக்கிறார். தடுப்பூசியை உருவாக்குவதற்காக எடுத்துக் கொண்ட காலஇடைவெளி பற்றிதான்
பொதுவான சந்தேகம் என்று அசோக் கூறுகிறார். குறுகிய காலத்துக்குள் எப்படி தடுப்பூசியை உருவாக்க முடிந்தது என்று பலரும் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். கோவிட்-19 நிகழ்வு முழுவதும் சந்தேகத்துக்கு உரியதாகத் தோன்றுகிறது என தமிழ்நாடு சீர்திருத்த இயக்கத்தைச் சேர்ந்த ஜெயசீலன் கூறுகிறார். “அரசு அதிகாரிகளின்
அணுகுமுறை மிகவும் சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு யாரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என மத்திய, மாநில அரசுகள் கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பக் கூறி வருகின்றன. ஆனால், உள்ளூர் அதிகாரிகள் அதை கட்டாயப்படுத்துகிறார்கள். தடுப்பூசி கட்டாயம் என்பது பற்றிய அரசு ஆணைகளைத் தருமாறு கேட்டால் நமது அதிகாரிகளால் எதையும் தர முடிவதில்லை’’ என்று அவர் தெரிவிக்கிறார்.

மற்ற நலவாழ்வு குறியீடுகளில் உயர்ந்த செயல்பாடு இருந்தபோதிலும், தொடர்ச்சியாக வந்த தேசிய குடும்ப நலவாழ்வு சர்வேக்கள் தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் செயல்பாடு
சரிவுப் போக்கில் இருப்பதையே காட்டியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

அவரது யூடியூப் சானலை 6,300 பேர் பின்தொடர்கிறார்கள். அதில் அரசு அதிகாரிகளுக்கு ஜெயசீலன் மூடி மறைக்காமல், நேரடியான கேள்விகளை முன்வைக்கிறார். அவரது வீடியோக்களை கணிசமான பேர் பார்க்கிறார்கள். தடுப்பூசி குறித்து கேள்விகள் எழுப்புவதற்காக செய்தியாளர்கள் கூட்டம் நடத்தியதற்காக தான் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார். “தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம் தடுப்பூசிக்கு எதிரானது அல்ல. தடுப்பூசி கட்டாயம் பற்றி  அரசு ஏன் பிடிவாதமாக இருக்கிறது என்பதற்கு பதில் அளிக்குமாறு நாங்கள் கோருகிறோம். கோவிட்-19 பெருந்தொற்றினால் இறந்தவர்களின் உடல்கள் ஏன் போஸ்ட்மார்ட்டம் செய்யப்படுவதில்லை? நடிகர் விவேக்கின் மரணத்துக்கு தடுப்பூசி
காரணம் இல்லை என்று சொல்வதற்கு மத்திய அரசு ஏன் பல மாதங்கள் எடுத்துக் கொண்டது? அரசுகளும் அதிகாரிகளும் மறைக்கப் பார்ப்பது என்ன? ‘’ என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

கடந்த பத்தாண்டுகளில் மொத்த இறப்புகள் குறித்த அறிக்கைகள், தடுப்பூசி போட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான பாதகமான நிகழ்வுகள் (Serious Adverse Events Following Immunization – AEFI) பற்றிய அறிக்கைகள், தடுப்பூசியின் பயன்திறன் குறித்த அறிக்கைகள் மற்றும் இதர ஆவணங்கள் போன்ற எந்த ஆவணங்களையும் மத்திய அரசு தருவதில்லை என்று ஜெயசீலன் குறிப்பிடுகிறார். `தமிழ்நாட்டில் நகர்ப்புற, கிராமப்புற சமூகங்கள் மத்தியில் கோவிட்-19 தடுப்பூசி குறித்த மனோபாவம் மற்றும் தடுப்பூசி போடுவதற்கான தயக்கம் – சமூகங்கள்-அடிப்படையிலான சர்வே‘ என்ற தலைப்பில் BMC நலவாழ்வு ஆராய்ச்சிப் பணிகள் இதழில் வெளியாகி இருக்கும் ஆய்வுக் கட்டுரையானது, தமிழ்நாட்டில் தடுப்பூசி போட மறுத்தல் அல்லது தயக்கம் காட்டுதல் என்பது கோவிட்-19 பெருந்தொற்றுக்கு நெடுக்காலத்துக்கு முன்பே தொடங்கிவிட்டதாக குறிப்பிடுகிறது.

வழக்கமான குழந்தைப் பருவ தடுப்பூசிகளை நோக்கிய ஒட்டுமொத்தமான தடுப்பூசி போடுவதற்கான தயக்கமானது தமிழ்நாட்டில் பெருந்தொற்றுக்கு முன்பாகவே அதிகரித்து வந்திருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. `2016-இல் தமிழ்நாட்டில் ஓர் இயக்கமாக தட்டமைக்கான (Measles-Rubella ) தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டபோது, அதற்கு தயக்கம் காட்டிய பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தது உண்டு என ஆய்வறிக்கை கூறுகிறது. மற்ற நலவாழ்வு குறியீடுகளில் உயர்ந்த செயல்பாடு இருந்தபோதிலும், தொடர்ச்சியாக வந்த தேசிய குடும்ப நலவாழ்வு சர்வேக்கள் தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் செயல்பாடு
சரிவுப் போக்கில் இருப்பதையே காட்டியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டில் தடுப்பூசி போட தயங்குவதற்கும், மறுப்பதற்கும் செல்வச் செழிப்பு பிரச்சினைதான் காரணம் என்று குறிப்பிடுகிறார் அறிவியல், தொழில்நுடபத் துறையைச் சேர்ந்த முதுநிலை விஞ்ஞானி டி.வி. வெங்கடேஸ்வரன். “முந்தைய தலைமுறைகளை துன்பத்துக்கு உள்ளாக்கிய பிரச்சினைகள் தமிழ்நாட்டில் இப்போது இல்லை. பல்வேறு சமூகக் குறியீடுகளில் தமிழ்நாடு முன்னேறி இருக்கிறது. “இந்தக் கட்டத்தில், இதை அடைவதற்காக கடந்து வந்த பாதையை அல்லது போராட்டங்களை நாம் மறந்துவிடும் போக்கு நிலவுகிறது. இது ஒரு சமுதாயம் என்ற முறையில் நாம் துன்பப்பட்டு அனுபவித்த கடந்த கால பிரச்சினைகளை நிராகரிப்பதாகும்” என்று அவர் கூறுகிறார்.

தடுப்பூசிக்கு எதிரான போக்குடைய இளைஞர்கள் பெரியம்மையில் உயிர் பிழைத்த இளைஞர்களை பார்த்திருக்க வாய்ப்பில்லை. உயிர்களைப் பறித்த உயிர்க் கொல்லி நோய் அது. அதில் உயிர் பிழைத்தவர்கள் அவர்களது உருவத் தோற்றத்தையே சிதைத்த தழும்புகளினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். தடுப்பூசிகளினால்தான் பெரியம்மை நோய் அகற்றப்பட்டது. அதன் பிறகு அதனால் அழிவு ஏற்படுவதை நாம் பார்க்கவில்லை” என்கிறார் அவர்.

அங்கீகாரம், பிரதிநிதித்துவம், மறுவிநியோகம் பற்றி பேசுகிறார் வெங்கடேஸ்வரன். “மறுவிநியோகம் என்பது எல்லோருக்கும் செல்வத்தை பகிர்ந்தளித்தல் என்பதையும், அங்கீகாரம் மற்றும் பிரதிநிதித்துவம் என்பது எல்லா சமூகங்களுக்கும் இடமளித்தல்
என்பதையும் குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டில் அனைத்துப் பிரிவினரும் உயர்ந்த நிலையிலான அங்கீகாரத்தையும், பிரதிநிதித்துவத்தையும் எட்டியுள்ளனர். “இந்த அளவுக்கு அங்கீகாரத்தையும் பிரதிநிதித்துவத்தையும், ஓரளவுக்கு செல்வப் பகிர்வையும் அடைந்துள்ள நிலையில், கடந்த காலத்தை போற்றிப் புகழ்வதன் ஒருசார்பான விளைவில் இப்போது நாம் சிக்கியிருக்கிறோம்”’ என்று அவர் கூறுகிறார்.

“உள்ளூர் மருத்துவத்துக்கு அழுத்தம், மூட நம்பிக்கைகளை, உள்ளூர் கலாச்சாரத்தை போற்றிப் பாராட்டுதல் என்பதெல்லாம் ஓரளவுக்கு மற்ற மாநிலங்களில் இருந்தபோதிலும், தமிழ்நாட்டில் தடுப்பூசி போடத் தயங்குதல் அல்லது மறுத்தல் என்பதற்கு, அரசும், நலவாழ்வுத் துறை அதிகாரிகளும் சமூகங்களைச் சென்றடைவதில்ஏற்பட்ட தோல்வியே பெரிதும் காரணம் எனத் தோன்றுகிறது” என்கிறார் அகில இந்திய மக்கள் அறிவியல் அமைப்பைச் சேர்ந்த டி.ரகுநந்தன்.

கோவிட்-19 மற்றும் தடுப்பூசிகள் குறித்த சந்தேகங்களையும் அச்சங்களையும் நீக்குவதற்கு அரசு வெளிப்படையாக செயல்பட வேண்டியது முக்கியம்

“தடுப்பூசி போடத் தயக்கம் என்பது நாடு முழுவதும் காணப்பட்டபோதிலும், பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் ஏற்பட்ட பாதிப்பு மக்களை அஞ்சி நடுங்க வைத்துவிட்டது. மக்கள் உயிரிழப்பதைக் கண்ட பிறகு அவர்கள் தடுப்பூசி மையங்களுக்கு
விரைந்தனர். அந்த நிலையில் தடுப்பூசியின் பயன்கள் குறித்து மக்களுக்கு விழிப்பூட்டுவதில் தமிழ்நாடு அரசும் தடுப்பூசிப் பிரிவு அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட்டிருந்திருக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிடுகிறார். இதே விவரத்தை நலவாழ்வுத் துறை வல்லுநர் டாக்டர் சுந்தரராமனும் ஏற்கெனவே ஒரு கட்டுரையில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

தடுப்பூசிஇதற்கிடையே கோவாக்சின் தடுப்பூசி தோல்வியானது அரசுக்கு மோசமான எதிர்விளைவை ஏற்படுத்திவிட்டது என்று ரகுநந்தன் கூறுகிறார். “அரசு அதை தீவிரமாக முன்னிறுத்திய விதமும், கோவாக்சின் தடுப்பூசிக்கு சர்வதேச சமுதாயம் மற்றும் உலக நலவாழ்வு நிறுவனம் ஆகியவற்றிடம் இருந்து வந்த எதிர்வினையும் மக்கள் மத்தியில் நிறைய சந்தேகங்களை ஏற்படுத்தியது என்று அவர் தெரிவித்தார். “உலகம் முழுவதிலும் தடுப்பூசிகளுக்கு அவசரநிலைக் கால பயன்பாட்டுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் மருத்துவமனை தரவுகள் மற்றும் இணையான பரிசீலனை
ஆகியவற்றை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட இயல்புக்கு மாறான தாமதமானது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசிக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. சிடஸ் கேடில்லா நிறுவனத்தின் இன்னொரு தடுப்பூசி தொடர்பாகவும் அரசு இதே தவறை செய்கிறத”’ என்று அவர் தெரிவித்தார்.

இறப்புக்கு கோவிட்-19-தான் காரணம் என்று பதிவு செய்யத் தவறியது நிறைய குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது என்றும் ரகுநந்தன் குறிப்பிடுகிறார். இதனால் கோவிட்- 19-ன் விளைவுகளான பல்வேறு-உறுப்புகள் செயலிழப்பு மற்றும் நுரையீரல் செயலிழப்பு போன்றவற்றைதான் மரணத்துக்கான காரணங்களாக நலவாழ்வுத்துறை அதிகாரிகள் குறிப்பிடும் நிலையில் போய் முடிந்துள்ளது. ஆகவே, கோவிட்-19-னால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அரசிடம் சரியான எண்ணிக்கை இல்லை. எனவே, கோவிட்-19 மற்றும் தடுப்பூசிகள் குறித்த சந்தேகங்களையும் அச்சங்களையும் நீக்குவதற்கு அரசு வெளிப்படையாக செயல்பட வேண்டியது முக்கியம் என்று ரகுநந்தன் வலியுறுத்துகிறார்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival