Read in : English

மோடி அரசாங்கம் கொண்டுவர இருக்கும் புதிய வேளாண்மை சட்டங்களை வரவேற்கிறேன். இந்த சட்டங்கள் அமலுக்கு வரும்போது கிடைக்கும் வாய்புகளை பயன்படுத்திக்கொள்வதற்கு இப்போதே என்னை தயார்படுத்திவிட்டேன்.

இந்த சீர்திருத்தம் நரசிம்மராவ் அரசாங்கம் கொண்டுவந்த நிதி மற்றும் தொழிதுறை சீர்திருத்தங்களின் போது டாக்டர் மன்மோகன் சிங்கால் முன்மொழியப்பட்டது.

2019 தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி விவசாய பொருட்களை சந்தை படுத்துவதிலுள்ள சிக்கல்களை நீக்கி ஒரு ஆரோக்கியமான போட்டிகளையுடைய சூழலை உருவாக்குவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வேளான் சட்டங்கள் விவசாயம் குறித்தான அரசாங்கத்தின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை காண்பிக்கிறது.

நமது விலைவாசியை மட்டுபடுத்தும் கட்டுப்பாடுகளும் நடவடிக்கைகளும் முன்னர் அரிசி, கோதுமை போன்ற தானியங்களுக்கு தட்டுப்பாடு இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்டவை. நெல் மற்றும் கோதுமையை அரசாங்கமே ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ கொடுத்து கொள்முதல் செய்துவருவதால் விவசாயிகள் இதே பயிர்களை தொடர்ந்து விளைவிக்க முடிந்தது. ஆனால் இப்போது நமக்கு அதிகடியான கையிருப்பு இருப்பதால் உணவு தட்டுப்பாடு என்பது இல்லை.என்னவிருந்தாலும் ‘குறைந்த பட்ச ஆதரவு விலை’ எப்போதுமே அமலில் இருக்கத்தான் செய்யும்.

வித்தியாசம் என்னவென்றால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த பொருட்களை வட்டார சந்தையிலோ, அரசாங்க கொள்முதல் மையங்களிலோ அல்லது வாடிக்கையாளர்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் நேரடியாகவோ விற்பனை செய்யமுடியும்.

வர்ந்த சந்தை சூழலானது இப்போது பெருமளவு மாறியுள்ளது. பருப்பு வகைகளையும், சமையல் எண்ணை போன்றவற்றையும் இறக்குமதி செய்வதற்கு நாடு அதிகபடியான அந்நிய செலவாணியை கையிருப்பை செலவுசெய்ய வேண்டியிருக்கிறது. எனவே இத்தகை பயிர்களை விளைவிப்பதை நோக்கி நமது கவனத்தை திருப்பவேண்டியுள்ளது.

மேலும்,’ வறுமை ஒழிப்பு’ என்ற இடத்திலிருந்து அதிக ஊட்டச்சத்தை கொடுக்கக் கூடிய பருப்புவகைகள், சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வழங்குதை நோக்கி நாம் நகரவேண்டியுள்ளது.

அதை செயல்படுத்துவதற்கு, விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதற்கு பயிற்றுவிக்கவேண்டியுள்ளது.

கடைசியாக, விவசாயிகள் மின்னணு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான சந்தை ஒழுங்கமைப்பு ஒன்று வேண்டும். இது நாடுமுழுவதும் எளிதாக வர்த்தகத்தில் ஈடுபடுவதை உறுதிசெய்யும். விவசாயிகள் இந்தியாவில் எந்த உள்ள தாங்கள் விரும்பும் வாடிக்கையாளருக்கு விற்பதற்கு ஏதுவாக ‘விநியோக சங்கிலி’ யில் தேவையான மாற்றங்கள் கொண்டுவரவேண்டும்.

இபோது இடைத்தரகர்கள் வருமானத்தில் பெருமளவை கொண்டுசென்றுவிடுகிறார்கள். இந்த இடைத்தரகர்கள்தான் பொய்பிரச்சாரம் மற்றும் உண்மையை திரித்தல் மூலம் தேவையில்லாத பயத்தையும், நம்பிக்கையின்மையை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தி அவர்களின் இந்த போராட்டங்களை தூண்டிவிடுகிறார்கள்.

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல்:
நானும் திருவாரூரை சேர்ந்த ஒரு விவசாய குழுவும் இணைந்து நாங்கள் விளைவித்த பருத்தியை மொத்தமாக சேர்த்து நூற்பாலை உரிமையாளர்களுக்கு நேரடியா விற்க முனைந்தபோது அவர்கள் சந்தை விலைக்கு பொருட்கள் வாங்கிக்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்தாலும், தாங்கள் இடைத்தரகர்கள் மூலம் மட்டுமே பருத்தியை கொள்முதல் செய்ய விரும்புவதாக கூறினர்.

ஏனெனில் அவர்கள் கொடுக்கும் பருத்தி தொழிற்சாலை உற்பத்தியின் சில பகுதிகளுக்கான தேவையைத்தான் பூர்த்தி செய்யும் என்பதால் மீதமுள்ள தேவைக்கு இடைத்தரகர்களை நம்பியிருக்கவேண்டியிருக்கிறது என்று அவர்கள் வாதிட்டனர்.

விவசாயிகள் தங்களது விளைச்சலை கூட்டு சேர்த்து இந்தியாவிலுள்ள எந்த பகுதியிலும் சந்தைபடுத்துவதற்கான ‘வசதி ஏற்படுத்தும் ஒழுங்கமைப்பு’ நமக்கு தேவையாய் இருக்கிறது.

நாம் சிறு அளவில் விவசாய பொருட்களை விளைவிப்பதால் வாடிக்கையாளரிடம் பேரம் பேசும் சக்தி இல்லாமல் இருக்கிறது. இது நமது பலவீனம். விவசாயிகள் இணைந்து தங்களது விளைச்சலை ‘மொத்தமாக ஒன்று சேர்த்து’ ஒரே அலகாக விற்கவேண்டும். இவ்வாறுதான் இந்த விவசாய கூட்டுகுழு தங்களுக்கு சாதகமாக சந்தையை பயன்படுத்த முடியும். நான் ‘விவசாய உற்பத்தியாளர் அமைப்பு’ ஒன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருக்கிறேன்.

அத்தியாவசிய பொருட்களை சேமிப்பதற்கான உச்சவரம்பு அர்த்தமற்றது. பெருநிறுவனங்கள் உள்ளிட்டான போட்டி சூழல் இடையீடாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் லாபத்தை விவசாயிகளுடன் பகிர்ந்துகொள்ள செய்வதற்கு உதவும்.

தமிழ்நாட்டை பொருத்தவரை, அரசின் ஏகபோக கொள்முதல் தற்போது நடைமுறையில் இல்லை. இங்கே விவசாயிகள் தங்களுடைய உற்பத்திப் பொருளை எங்கேயும் விற்றுக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் மின்னணு வர்த்தகத்திற்கு வரி செலுத்தவேண்டியிருந்தது. இது “ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை கமிட்டி” விதிக்கப்பட்டது. இப்போது அது நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாகத்தான் தமிழ்நாட்டில் அரசியல் உள்நொக்கம் கொண்ட சில முனகல்களை தவிர்த்து புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் மிகக் குறைவாக உள்ளது.

மின்னணு வர்த்தகம் விவசாயிகள் தங்களுக்கு தோதான வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்வதை சாத்தியமாக்கும். சிக்கல் என்னவென்றால் இந்த கருத்து நமது விவசாயிகளுக்கு புதிசாக இருப்பதுதான். தலைமுறைகளாக நாம் இடைத்தரகர்களையே சார்ந்திருந்தோம்.

சந்தைபடுத்துதலை சாதகமாக்கி கையாள்வதற்கு ஊக்கமும், உறுதியும் தேவையாய் இருக்கிறது. வேளாண் துறை, மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராட்சி அறக்கட்டளை, தேசிய வேளான் அறக்கட்டளை, கிரிஷ் விகாஷ் கேந்த்ராஸ் போன்ற அரசு சாரா நிறுவனங்கள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

பெருநிறுவனங்கள், மற்றும் மற்ற வாடிக்களர்களுடன் ஒப்பந்தம் போடுவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து புதிய விவசாய சட்ட வரைவுகள் பேசுகின்றன. ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்கு முன் தனக்கு கிடைக்கும் விலை குறித்து விவசாயி அறிந்திருக்க வேண்டும். விதைத்த நாளிலிருந்து அறுவடை செய்யும் நாள் வரையிலான இடைபட்ட காலத்தில் விலையை பாதிக்கும் பலக் காரணிகளை ஒருவர் எதிர்நோக்கலாம்.

இந்தியாவின் மற்ற பகுதிகளிலுள்ள விளைச்சல், சர்வதேச போக்கு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் தொழிற்சாலையில் மதிப்பு கூட்டப்பட்ட விவசாய உற்பத்திப் பொருளிற்கான தேவை, பூச்சி மற்றும் பயிர்களில் வரும் நோய் போன்றவை இந்த எதிர்பாரா காரணிகளாக இருக்கலாம். அரசாங்கத்தின் ஏற்றுமதி-இறக்குமதி கொள்கைகள், மற்றும் அதில் ஏற்படும் மாற்றங்களும் விலையை பாதிக்கக் கூடிய மற்ற முக்கியமான காரணிகள். விவசாயிகளாகியா நாம் இத்தகைய விலையை பாதிக்கக் கூடிய காரணிகளை முன்னுணர முடியாது. இங்கேதான் ஒப்பந்தக்காரர்களுக்கு வெளியிலுள்ள ‘உதவும் அமைப்பு’ ஒன்றுத் தேவைப்படுகிறது. குறிப்பிட்ட பயிரை பயிர் செய்யவேண்டுமா? எந்த வகை பயிர் வேண்டும், எப்போது விதைக்கவேண்டும் நாமே முடிவுசெய்ய வேண்டும். யாராவது ஒருவர் அல்லது அமைப்பு அத்தகைய தகவல்களை கொடுக்கவேண்டும்.

வாடிக்கையாளராயிரும் தொழிற்சாலைகள், பெருநிறுவனங்கள் ஆகியவற்றை உண்மை தன்மை, மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை நாம் அறிந்திருக்கவேண்டும். நமது விளைபொருட்களை வாங்கும் எல்லா தொழிற்சாலைகள், மற்றும் பதபடுத்தும் தொழிற்சாலைகள் பற்றி தகவல் கொடுப்பதற்கு CRISIL போன்ற மதிப்பீடு அவசியம் தேவை.

வேளான் சட்டம் ஏற்படுத்தும் வர்த்தக வரைமுறைகளின் அடிப்படையில் எழும் சர்ச்சைகள் பல காரணங்களால் ஏற்படக் கூடும். விலையேற்றம் இருந்தால் விவசாயிகள் தங்களது ஒப்பந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் போகலாம். விலை வீழ்ச்சி ஏற்பட்டால் பெருநிறுவனங்கள் தங்களது ஒப்பந்த அடிப்படையிலான விலையை கொடுக்காமல் போய்விடுவார்களோ என்ற பயம் விவசாயிகளுக்கு இருக்கலாம்.

இதற்காக, ஒப்பந்த காலத்தில் சரியான சந்தை விலைவாசி போக்கு குறித்த தகவல்கள் முன்கூட்டியே கொடுக்கப்படவேண்டும். பொருத்தமான ‘கணித மாதிரி’ ஒன்றை இந்திய புள்ளியியல் நிறுவனம், அல்லது IIM, ICWA போன்ற அமைப்புகளின் உதவியுடன் உருவாக்கவேண்டும். இதில் 5% ஏற்ற இறக்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியது.

வாடிக்கையாளர் விவசாய உற்பத்திப் பொருளின் குறித்து அறிய விரும்புவார். இந்த நோக்கத்திற்காக, வெளியில் இருக்கும் ஒரு ‘தர நிர்ணயம் நிறுவனம்’ தர விதிமுறைகள் பின்பற்றப்பட்டதற்கான சான்றிதழ் கொடுக்கவேண்டும்

விற்பனையாளர் சரியான நேரத்தில் பணம் கிடைக்குமா என்றும், பணம் உற்பத்தி பொருளை அனுப்பிய உடன் கிடைக்குமா அல்லது பொருட்கள் போய் சேர்ந்த பிறகு கிடைக்குமா என்றும் அறியவிரும்புவார். இது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட வேண்டும். நிபந்தனை பூர்த்திசெய்யப்பட்டபின் கிடைக்கக் கூடியதான பணம் அல்லது வங்கி உத்தரவாதம் போன்ற வசதிகள் இருக்கவேண்டும்.

பொருள் கொடுப்பதில் ஏற்படும் தாமதம், போக்குவரத்தில் ஏற்படும் இழப்பு போன்றவை ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்படவேண்டும். போக்குவரத்து காப்பீடு கட்டாயமாக்கப்படவேண்டும்.

என்னுடைய வட்டாரத்தில் பருப்பு வகைகளை பயிரிடுவதை ஊக்குவிக்க விரும்புகிறேன். இந்தியா ஏறாளமாக பருப்புவகைகளை இறக்குமதி செய்கிறது. பொங்கல் அன்று பருப்பு வகைகளுக்கான விவசாய உற்பத்தியாளர் அமைப்பை உருவாக்க விரும்புகிறேன். முதலில் அவற்றை அருகிலுள்ள வீடுகளுக்கு சந்தைபடுத்த எண்ணியிருக்கிறோம்.

தரமும், விலையும்தான் எங்களது தாரக மந்திரம். இவ்வாறாக விவசாயிகளாகிய நாங்கள் இடைத்தரகர்களை தவிர்த்து நேரடியா வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ள முடியும்.

நேருக்கு நேர்

விவசாயம்சிந்தனைக் களம்

புதிய வேளாண் சட்டங்கள்விட, உழவர் சந்தை போன்ற திட்டங்கள் மேலானது!

ஓர் உழவனாக, தலைமுறை தலைமுறைகளாக விவசாயத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கிறேன். இந்தச் சட்டங்கள் அமலுக்கு வந்தால் விவசாயிகளின் வாழ்க்கை பெரும்...

Farmer
Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival