Read in : English
மத்தியில் 1996-ல் ஐக்கிய முன்னணி அரசு அமைய பல வடிவமைப்பாளர்களில் ஒருவர் என். சந்திரபாபு நாயுடு. தற்போது பாஜகவை ஆட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான புதிய சூத்திரத்தை உருவாக்க முயன்று வருகிறார். 1996-ல் செய்தது போலவே சந்திரபாபு நாயுடு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்னக அரசியலில் முக்கிய இரு சக்திகளான ஐக்கிய ஜனதா தளம்(எஸ்) கட்சியின் நிறுவனர் ஹெச்.டி.தேவகவுடா மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்து பாஜகவுக்கு எதிராக ஒரு வெற்றிகூட்டணியை உருவாக்க முயற்சித்து வருகிறார்.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, தேவகவுடாவின் ஜனதா தள்(எஸ்) மற்றும் திமுக ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றாக இணைந்து பொதுவான தேசிய தளத்தை உருவாக்க ஒத்துக்கொண்டுள்ளன. இது தேசிய முற்போக்கு கூட்டணிக்கு எதிரான ஒரு அணி அமைக்கப்படுகிறது. மேலும், இந்தச் செய்தி பிரதமர் மோடி, தன் கூட்டணிக்கு ஆள் தேடிக்கொண்டிருக்கும் வேளையில் அதிர்ச்சி அளித்துள்ளது.
தென்னகத்திலிருந்து, மோடிக்கு எதிராக பல சக்திகள் ஒன்றாக இனைந்து புதிய சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் எந்த கட்சியும் பாஜகவுடன் தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ள தயாராகில்லை. சென்ற வாரம் கர்நாடகாவில் நடைபெற்ற ஐந்து இடைத்தேர்தல்களில், 4 இடங்களில் பாஜக தோல்வியை தழுவியது. அங்கேயே தோல்வி என்றால், பாஜகவிற்கு சோதனை காலம்தான் என்று அக்கட்சி உணர்ந்துள்ளது. ஒரு காலத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு இயக்கத்தில் நாயுடு முன்னணி வகித்தார். ஆனால், அவர் அந்த எதிர்ப்பு கொள்கையை கைவிட்டது மற்றுமல்லாமல், காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி ஏற்படுத்திவிட்டு, மற்ற எதிர் கட்சிகளையும் அணுகி, ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவிற்கு எதிராக கூட்டணியை ஏற்படுத்தி வருகிறார். இதை பாஜக சற்றும் எதிர்பார்க்கவில்லை.
1996-ல் தமிழ் மாநில காங்கிரஸ் (TMC) தலைவர் ஜி.கே.மூப்பனார் கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தார். இப்போது இன்னொரு டிஎம்சி (TMC) திருணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தோற்கடிக்கும் கூட்டணி ஏற்படுத்த தயாராகி வருகிறார்.
கூட்டணியில் முக்கியக் கட்சியான காங்கிரஸ், 2014 பொதுத்தேர்தலில் செய்தது போல் அல்லாமல் கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்து பெரும்பான்மையை பெறும் வகையில் இயங்க தயாராகிவிட்டது. . எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு தேசிய அளவில் மாற்று குறித்து கலந்தாலோசித்து வருகின்றன. அதில் சிலர், காங்கிரஸிடம் ராகுல் காந்தியை பிரதம வேட்பாளராக அறிவிக்க வேண்டாம்;அதனை தேர்தலுக்கு பிற ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தோற்கடிக்கும் வகையில் மாற்று கூட்டணியை உருவாக்குவது அவசியம் என நாயுடு வற்புறுத்தி வருகிறார், அதில் அவர் வெற்றியும் கண்டுவருகிறார்.
தெலுங்கு தேசம், திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தள் ஆகிய கட்சிகள் பலமாக இருக்கும் இடத்தில் காங்கிரஸையும் இணைத்து, வாய்ப்புள்ள இடங்களில் அக்கட்சிகள் தலைமையில் கூட்டணி அமைக்கலாம். தெலுங்கு தேசம் இந்த யோசனையை ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் முன்வைத்துள்ளது. திமுக இதே வழியில் தமிழகத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லீம் லீக், விசிக, மதிமுக போன்ற கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்துக்கொள்ளலாம் என்ற திமுகவின் திட்டத்திற்கு நாயுடு பச்சை கொடி காட்டிவிட்டார்.
மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் முறையே திருணாமுல் காங்கிரஸும் இடது ஜனநாயக முன்னணியும் வலுவாக உள்ளதால் காங்கிரஸை இணைத்துக்கொள்ளாமல் இருக்கலாம்.
வடமாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்க்கும் பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இந்த மாநிலங்களில், உத்தர பிரதேசம் தவிர, சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொள்ளும் முடிவு காங்கிரஸின் கைகளில் உள்ளது.
இந்த வழிமுறை தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் உத்தரபிரதேசத்தில் வேறாக உள்ளது. அங்கு சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தேர்தலுக்கு முன்பாக தொகுதி பங்கீடு கோருகின்றன. ஒருவேளை காங்கிரஸ் கட்சி இக்கூட்டணியில் இணையாவிட்டாலும் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜும் இணைந்தே உத்தரபிரதேசத்தில் பெரும்பான்மை இடங்களை பிடிக்க முடியும். இதன் மூலம், தேசிய ஜனநாயகக் கூட்டணி 2014 பொதுத்தேர்தலில் வென்ற இடங்களை கைப்பற்றி, மாற்றரசை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எதிர்க்கட்சிகளுக்கு வந்துள்ளது.
மேற்கு இந்தியாவில், குறிப்பாக மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும்.
இப்படியாக, ஐக்கிய முற்போக்குக் முன்னணியைப் பொறுத்தவரையில் தென் மாநிலங்கள் நான்கிலும் கூட்டணி கிட்டத்தட்ட உருவாகிவிட்டது.
தேசிய அளவில் காங்கிரஸ் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற முக்கிய பங்காற்ற வேண்டும். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், இரண்டிலாவது காங்கிரஸ் பாஜகவை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றினால் காங்கிரஸ் தேசிய அளவில் வலுவாக நிற்கும்.மேலும், பாஜக பல மாநிலங்களில் வலுவிழந்து, எதிர் கட்சிகளின் கை ஓங்கியிருப்பது, பாஜகவின் தோற்றத்தை பாதிக்கும். இதனால், சில மாநிலங்களில் பாஜகவுடன் தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ள பல காட்சிகள் தயக்கம் காட்டலாம்.
சந்திரபாபு, ஜனதா தள்(எஸ்), திமுக போன்ற கட்சிகள், வெவ்வேறு கொள்கையுடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும்போது குறைந்தபட்ச பொது திட்டத்தை உருவாக்குவதன் அவசியத்தை நாயுடு வலியுறுத்தியுள்ளார். தேசிய அளவில் இக்குறைந்தபட்ச பொது திட்டம் அவசியமானது. இக்கட்சிகளிடமிருந்து இதற்கான பங்களிப்பை சந்திரபாபு நாயுடு கோரியுள்ளார்.
ஐக்கிய முன்னணி இடதுசாரிகளை சேர்த்து தெற்கில் 90 முதல் 100 இடங்களில் வெற்றிபெற்று, பாஜகவுக்கு 10 க்கு மேற்பட்டு இடங்களை அனுமதிக்கக்கூடாது என்பதே இந்த எதிர்கட்சிகளின் இலக்காக அமைந்துள்ளது. .
தெலுங்குதேச கட்சி 1998-ல் காங்கிரஸுடன் ஏற்பட்ட முரணில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் நடந்துகொண்டது. ஆனால் இப்போது அதற்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு, ஆந்திர பிரதேசத்திலும் தெலுங்கானாவிலும் முறையே ஒய்எஸ்ஆர் காங்கிரஸையும் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியையையும் தோற்கடிக்க, தேவைப்படுகிறது. திமுகவுக்கும் தமிழகத்தில் கூட்டணி தேவைப்படுகிறது. கர்நாடக சூத்திரம், தேசிய அளவில் பாஜகவை தோற்கடிக்க பாதையை அமைத்துவிட்டது. அந்த வகையில் 1996-ல் நிலவிய காங்கிரஸ் எதிர் நிலைப்பாடு மாறி, அக்கட்சியுடன் இணைந்து வேலை பார்க்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதால், ஐக்கிய முன்னணி கூட்டணி கடந்த காலத்தை விட இப்போது அதிக வலுவுடனும் பலத்துடனும் உள்ளது. அடுத்த சில மாதங்களில், மேலும் வலுவடைய வாய்ப்புமுள்ளது. சென்ற ஆண்டில், பாஜக அரசை அகற்றி, ஒரு மாற்றரசை ஏற்படுத்துவது எட்டாக்ககணியாக இருந்தது. அந்த நிலைமை இப்பொழுது மாறிவிட்டது.
Read in : English