Read in : English

அன்புள்ள விவசாயிகளே! உங்களது விவசாயத்தின் முக்கிய நோக்கம் என்ன? பணம் சம்பாதிக்கத்தான் என்றுதான் பெரும்பாலோனோர் கூறுவீர்கள். இதுதான் உண்மை. விவசாயம் வெறும் சேவை மட்டுமல்ல. விவசாயம் என்பது  சேவை அல்ல இது ஒரு தொழில். இங்கு எதுவும் இலவசமாகக் கிடைக்காது. எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு. இடுபொருட்களின் விலையைக் குறைத்து உற்பத்தியை அதிகரிப்பதைப் பொருத்தே விவசாயம் வெற்றிகரமாக அமையும். அனைத்து சிறு, குறு விவசாயிகளுக்கும் இது முக்கியமான விஷயம்.

உரம் மற்றும் பூச்சி மருத்துகளின் பயன்பாட்டைக் குறைத்தால், அது தொலைநோக்கில் விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடியதாக இருக்கும்.  காரணம், விவசாயிகள் உரம் மற்றும் பூச்சி மருந்துகளை வாங்குவதற்குத் தான் அதிக பணத்தை செலவு செய்யப்படுகிறது.  ஆகையால் வீடு மற்றும் வயல்களில் உருவாகும் கழிவுகளை உரமாக மாற்றும் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்குக் கற்றுத்தருவது அவசியம்.

ஒருங்கிணைந்த விவசாய முறையினால் வருமானம் அதிகாரிப்பதுடன், குடும்ப உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

இதை உணர்ந்து செய்தால், விவசாயிகளின் பண்ணை வருமானம்  அதிகரிப்பது உறுதி. ஒருங்கிணைந்த விவசாயம் முக்கியமான விஷயம். பயிர் செய்தல், கால்நடை வளர்த்தல், மீன் வளர்த்தல், காடு வளர்த்தல் போன்ற பல்வேறு விவசாய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து மேற்கொண்டால் அது வளங்குன்றா விவசாயத்துக்கு உதவும். அத்துடன், வயல்களின் வளம் பெருகி பொருளாதாரமும் உயரும்.

ஒருங்கிணைந்த விவசாய முறையினால் வருமானம் அதிகாரிப்பதுடன், குடும்ப உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். கோயமுத்தூரில் உள்ள கிருஷி விஞ்ஞானி கேந்திராவை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். அங்கு ஒரு முன்மாதிரி ஒருங்கிணைந்த பண்ணையை முனைவர் குமாரவடிவேலு  உருவாக்கி இருக்கிறார். அந்த மாதிரியை  விவசாயிகள் கடைப்பிடிப்பதற்கும் ஊக்குவித்து வருகிறார் அவர். இந்த முன்மாதிரி பண்ணை 2013ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. கன்றுக்குட்டி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, பண்ணைக்குட்டை, மேய்ச்சலுக்கு புல் மற்றும் பயிர் செய்தல் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது இந்தப் பண்ணை. குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கான முன்மாதிரியாக இதை உருவாக்கியுள்ளார்.

கிருஷி விஞ்ஞான் கேந்திரா மற்றும் மாவட்ட வளர்ச்சி முகமை இணைந்து இது உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவியுடன் அந்த மாவட்டத்தில் 1.85 முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளை கண்டறிந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பதற்கான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது.

தற்போது ஐந்து விவசாயிகள் பயிற்சியாளர்களாக உள்ளனர். இவர்கள் மற்ற விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பு குறித்து கற்றுத் தருகின்றனர். பெரியநாயக்கன்பாளையம்  பன்னிமடை கிராமத்தைச் சேர்ந்த எம். கிருஷ்ணமூர்த்தி தன் வயலில் வாழை மற்றும் பாக்கு மட்டுமே பயிர் செய்துகொண்டிருந்தார். கிருஷி விஞ்ஞான் கேந்திரா மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவியால், இந்த பயிர் முறையிலிருந்து மாறி தென்னை, கலப்பு மேய்ச்சல் பயிர்கள், ஆடு வளர்ப்பு, மாடு,  முயல், மீன்  வளர்ப்பு ஆகியவற்றையும் செய்து வருகிறார். அதேநிலத்தில் சிறு பண்ணைக் குட்டையையும் அமைத்து அதில் மீன்களை வளர்த்து வருகிறார். அதற்கு பண்ணையில் வளர்க்கும் கோழிகளின்  எச்சத்தை உணவாக இட்டு வருகிறார். ஒருங்கிணைந்த பண்ணையில் பல்வேறு செயல்பாடுகளால் மண்ணின் வளம் அதிகரித்துள்ளது. மண் மற்றும் நீர் சேமிப்பு நடவடிக்கைகளால் மழை நீரை பயன்படுத்த முடிகிறது. அது மண் வள மேலாண்மைக்கும் உதவுகிறது.

தொடர்புக்கு: முனைவர் குமாரவடிவேலு, தலைவர் மற்றும் பேராசிரியர்,  ஸ்ரீஅவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை,

இமெயில்: drkumaricar@gmail.com

ஐசிஏஆர்- கேவிகே, விவேகானந்தபுரம், காரமடை தாலுகா, கோயமுத்தூர், தொலைபேசி:  4254 284223
இமெயில்: avinashilingamkvk@gmail.com,  வாட்ஸ் அப்: +91 8248048285

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival