Read in : English
இன்று 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பளித்த மூன்றவாது நீதிபதி சத்யநாராயணன், தகுதி நீக்கம்செல்லும் என தீர்ப்பளித்தது ஆளும் அதிமுக அரசுக்கும் முதல்வர்எடப்பாடி கே பழனிச்சாமிக்கும் இடைக்கால நிவாரணமாக அமைந்துள்ளது. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்அதிமுக அரசு, இந்த தீர்ப்பின் மூலம் தாங்கள் சில மாதங்களுக்குபாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொள்ளலாம்.
தற்போது ‘மைனாரிட்டி’ யாக இருக்கும் அதிமுக அரசு, அடுத்துவரும் இடைத்தேர்தல்களின் முடிவை வரையிலோ அல்லது உச்சநீதிமன்றத்தில் தகுதிநீக்க வழக்கு குறித்த இறுதித்தீர்ப்பு வரும் வரையிலோ சிலமாதங்கள் இயங்கலாம். உச்சநீதிமன்றத்தில் பாதகமான தீர்ப்புவந்தால், அரசுக்கு மீண்டும் பிரச்சனை வரும். ஆனால் தீர்ப்பு வரும்வரைக்கும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள இயலும்.
அதிமுகவுக்கு இந்த தீர்ப்பு தேர்தலை சந்திக்க வேண்டும் என்கிற புதிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீர்ப்பை வைத்து முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடியை நீக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த தினகரன் தரப்புக்கு, இன்றைய தீர்ப்பு ஏமாற்றமும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிக்கிறது. தன்னை ஆதரிக்கும் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தன் பக்கமுள்ள மொத்தம் 24 சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியோடு எடப்பாடி அரசை கலைக்கலாம் என திட்டம் வகுத்தார் அமமுகதலைவர் டிடிவி தினகரனுக்கு தற்போது இவர்கள் அனைவரையும் ஒன்றாக வைத்திருப்பதே மிகப்பெரிய சவாலாகவும் பிரச்சனையாகவும் இருக்கும். அதிமுகவை உடைக்கலாம் என்ற அவரது முயற்சி தற்போது பலகீனமாகியுள்ளது.
ஆனால், அதிமுகவுக்கு இந்த தீர்ப்பு தேர்தலை சந்திக்க வேண்டும் என்கிற புதிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த வெற்றியைக் கொண்டாட அதிமுகதலைமை அலுவலகத்துக்கு விரைந்து வந்தாலும் அதிமுக தரப்புஉச்சநீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்வது அல்லது இடைத்தேர்தல்களை சந்திப்பது என்கிற புதிய தடைகளைக் கண்டு அச்சத்தில் உள்ளது.
திமுகவுக்கு இந்த தீர்ப்பு, அதன் பலத்தை நிரூபிக்கவும் சட்டசபையில் பெரும்பான்மையைப் பெறவும் நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம்லீக் கட்சியைச் சேர்ந்த 97 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினகரன் அணி, 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக சின்னத்தில்வெற்றி பெற்ற கருணாஸ், தனியரசு, அன்சாரி, மற்றும் மூன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் — பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன்– சேர்த்து ஏழாகக் குறைந்துள்ளது. ஆளும் அதிமுகவின் பலம் 234க்கு 109ஆக உள்ளது.அதேவேளையில் எதிர்தரப்பின் பலம் 104 ஆக உள்ளது.சட்டசபையில் தற்போது 20 காலி இடங்கள் உருவான நிலையில்மொத்தம் 215 உறுப்பினர்களே உள்ளனர். அதிமுக 109 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று அதிகாரத்தில் இருந்தாலும் ,பல உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்துதான் ஆட்சியில் நீடிக்கமுடிகிறது என்று மக்களின் பார்வையாக உள்ளது.பெருன்பான்மையில்லாத ஒரு அரசு என்று தான் மக்கள் நினைக்கின்றார்கள். இந்த பார்வை மாற வேண்டும் என்றால் முழுபெரும்பான்மை அதாவது 117 உறுப்பினர்களுக்கு மேல் இருந்தால்தான் இது பெரும்பான்மை உள்ள ஓர் அரசாக கருதப்படும்.
இன்று மூன்றாவது நீதிபதி அளித்த தீர்ப்பினால், நம்பிக்கைவாக்கெடுப்பு நடத்த இருந்த தடை நீங்கியுள்ளது;இடைத்தேர்தல்களை நடத்தி காலி இடங்களை நிரப்ப வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
Read in : English