Read in : English

ராஜிவ் காந்தி வழக்கில் மாநில மற்றும் மத்திய அரசின்  சட்ட உரிமைகளை  உச்சநீதிமன்றம் மீண்டும்  தெளிவாக உறுதிபடுத்தி உள்ள நிலையில், ராஜிவ் காந்தியின் கொலையாளிகள் விடுதலை  பெறுவதை பாரதீய ஜனதா அரசு தடுத்து  நிறுத்தும் என அந்த கட்சியின் மூத்ததலைவர் ஒருவர் உறுதிபடுத்தி உள்ளார். ராஜிவ் காந்தியின் ஏழு கொலையாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை வரும் ஞாயிற்றுக் கிழமை  அன்று தமிழக அரசு  மாநில ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பினால் கூட, அவர்களை  விடுதலை செய்யக் கூடாது என்பதில் உறுதியாகவே உள்ள மத்திய அரசின் சட்ட மற்றும் உள்துறை அமைச்சர்கள் இருவரும் அதை தடுத்து நிறுத்தி விடுவார்கள் எனக் கருதப்படுவதினால் விரைவில் பேரறிவாளன்  விடுதலை பெற முடியாது என்பதாகவே தோன்றுகின்றது.

அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பின்படி மத்திய அரசுக்கே அந்த அதிகாரம் உள்ளது என்ற சட்ட விதி உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்பதே உண்மை.

ராஜிவ் காந்தியின் ஏழு கொலையாளிகளின் விடுதலையில் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் முழுவதும் தமிழக அரசுக்கு உள்ளது என்பதை போல உச்சநீதிமன்றத்தின் செப்டம்பர் ஆறாம் தேதி தீர்ப்பு அமைந்துள்ளது என்பதாக தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் வெளியிட்டுள்ள  செய்திகள் தவறானது என்று சட்ட வல்லுநர்கள்    சுட்டிக்காட்டியுள்ளனர்.  உண்மை என்னவென்றால்  அந்த ஏழு கைதிகளை விடுதலை செய்யும் முழு அதிகாரமும் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது, அதில் தமிழக அரசாங்கம்  எந்த முடிவையும் எடுக்க முடியாது  என்ற மத்திய அரசின் வாதத்தை 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  பத்தாம் தேதி வெளியான தீர்ப்பில் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதுவே உறுதியான நிலையென்று  செப்டம்பர் ஆறாம் தேதியன்று வெளியான தீர்ப்பில்  உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது என்றும், அதை மீறி வேறு எந்த மனுவும் பரிசீலிக்கப்படாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  அந்த கைதிகளின் விடுதலையை தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத் தான் உள்ளது என்று உச்சநீதிமன்றம் செப்டம்பர் ஆறாம் தேதி உறுதி செய்துள்ள போதிலும், அந்த அதிகாரத்தை மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியதாக கற்பனை செய்தி எப்படி உருவானது, அதை தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள்  உண்மை என்று நம்பி, அவர்கள் அப்படிப்பட்ட உண்மைக்கு புறம்பான செய்திகளை எப்படி வெளியிட்டார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது.   அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பின்படி மத்திய அரசுக்கே அந்த அதிகாரம் உள்ளது என்ற சட்ட விதி உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்பதே உண்மை .

மேல் கூறிய சட்ட விதிமுறை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பேரறிவாளன்  கருணை மனு குறித்த நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியபோது,  கருணை மனு ஏற்கனவே மாநில ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது, அதை அவரே பரிசீலிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. எந்த ஒரு சிறைக்  கைதியும் கருணை மனுவை மாநில ஆளுநருக்கோ அல்லது இந்திய நாட்டின் ஜனாதிபதிக்கோ அனுப்ப சட்டம் வகை செய்துள்ளது. இது புது உத்தரவோ புதிய முடிவோ இல்லை. ஒரு மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை அந்த மாநிலத்தின் ஆளுநர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பொதுவான சட்டவிதிமுறை  இருந்தாலும் மேற்கூறிய நிலையில் தண்டனை பெறும் கைதிகளின் கருணை மனுக்களுக்கு பொருந்தாது என்று  மத்திய   அரசின் சட்ட வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

பாரதீய ஜனதா கட்சியின் கூற்றின்படி மத்திய அரசாங்கத்தின் புலனாய்வு நிறுவனங்களின் விசாரணை அடிப்படையில் கொடுக்கப்படும்  தண்டனை பெறும் கைதிகளின் விடுதலையில் மாநில அரசாங்கம் முடிவெடுக்க முடியாது, அந்த அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என்பதை நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உறுதி செய்துள்ளது என்பதினால், அந்த கருணை மனுக்களின் மீதான முடிவை எடுக்கும் முன், ஆளுநர் மத்திய அரசாங்கத்தின் ஆலோசனையைக் கண்டிப்பாக பெற வேண்டும் என்பதாகும். முன்னர் மாநில ஆளுநராக இருந்த பர்னாலா மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த ஒரு கருணை மனு இதில் மேற்கோளாக காட்டப்படுகின்றது. எனவே இந்த ஆளுநர் கூட மத்திய அரசின் படி தான் முடிவெடுக்க கூடும் , முடிவை எடுப்பார் என்று இந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாரதீய ஜனதா கட்சியின் கூற்றின்படி மத்திய அரசாங்கத்தின் புலனாய்வு நிறுவனங்களின் விசாரணை அடிப்படையில் கொடுக்கப்படும்  தண்டனை பெறும் கைதிகளின் விடுதலையில் மாநில அரசாங்கம் முடிவெடுக்க முடியாது.

பயங்கரவாதம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு போன்றவற்றில் உறுதியான நிலைப்பாட்டில் உள்ள மத்திய அரசாங்கம், கருணை மனுக்கள் மீதான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உறுதிபட கூறி உள்ள தீர்ப்பினால்,  இந்த கைதிகளின் விடுதலையை அனுமதிக்காது என்றே தோன்றுகின்றது. இது குறித்து ஆகஸ்ட் பத்தாம் தேதியன்று உச்சநீதிமன்றத்திற்கு தமது உறுதியான நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்த மத்திய அரசு,  அந்த கைதிகளை (ராஜிவ் கொலையாளிகளை) விடுதலை செய்வது மிகத் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றும், உலகளவில் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றும் கூறி இருந்தது.  அவர்கள் அளித்துள்ள பதிலில்  தீய சக்திகளின் ஆலோசனையின்படி, திட்டமிடப்பட்டு, கவனமாக செயல்பட்டு, சூழ்ச்சி வலைவிரித்து  அதன் மூலம் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாத அமைப்பினால் கொடூரமாக நாட்டின்  முன்னாள்  பிரதமர் கொல்லப்பட்டு உள்ளார் என்பதை கவனத்தில்  கொள்ள வேண்டும் என்றும் தெளிவு படுத்தி இருந்தது.

பயங்கரவாதத்தில் எந்தவிதமான உடன்பாட்டையும் ஏற்பதில்லை என்ற நிலைப்பாட்டில் பாரதீய ஜனதா கட்சி உறுதியாகவே உள்ளது. ராஜிவ் காந்தி கொலையாளிகளின் விடுதலை விஷயத்தில் ஒரு நிலைப்பாட்டையும், இந்திய நிலப்பரப்பான காஷ்மீரத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நிகழ்த்திவரும் பயங்கரவாதத்திற்கு எதிராக மாற்று நிலைப்பாட்டையும் எடுக்க இயலாது. மேலும் இந்தியாவில் ஊடுருவி உள்ள பங்களாதேசத்தை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு நிகழ்த்தி வரும் பயங்கரவாத செயல்கள்   வேறு  உள்ளன. ஆகவே இந்த நிலையில் ராஜிவ் காந்தியின் கொலையாளிகளுக்கு கருணை காட்டி விடுதலை செய்வது தவறான கருத்தை நாட்டில் ஏற்படுத்தி,  நாட்டின் பிற இடங்களில் நிகழ்ந்து வரும் பயங்கரவாத செயல்களை ஊக்குவிப்பது போல அமைந்து விடும் என்பதே இந்த உறுதியான நிலைப்பாட்டின் அடிப்படை உண்மை. பாரதீய ஜனதா ஆட்சியில் மட்டும் அல்ல, மற்ற கட்சிகளின் ஆட்சியிலும் இதே வழியிலான வெளிநாட்டுக் கொள்கை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது என்பதாக கூறுகின்றார்கள்.

சட்ட வல்லுநர்கள் மேலும் கூறுகையில் தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏழு கைதிகளுக்கும் பொருந்தும் என்பதை போன்ற தவறான கருத்தை   பரப்பி உள்ளார்கள். அது தவறு. உச்சநீதிமன்றம்   ஏற்கனவே நிலுவையில் இருந்த பேரறிவாளன் கருணை மனுவை  பரிசீலிக்கலாம் என்று மட்டுமே கூறி உள்ளது  தவிர மற்ற ஆறு கைதிகளின் விடுதலை குறித்த கருத்தை தெரிவிக்கவில்லை. மற்ற ஆறு கைதிகளும் பின்னர் கருணை மனுக்களை அளித்தால் அவற்றையும் ஆளுநர்  பரிசீலிக்கலாம்  என்பதே சரியான நிலைபாடு   என்பதாக கருத்து தெரிவிக்கின்றார்கள்.

மூன்றாவதான தவறான கருத்து என்னவென்றால்   கருணை மனுக்கள் மீதான முடிவை எடுக்கும் அதிகாரம் தமக்கே இருப்பதாக எடுத்துரைத்த தமிழக அரசாங்கத்தின் வாதம் ஏற்கப்பட்டு, அதை எதிர்த்துவாதம் புரிந்த மத்திய அரசாங்கத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இந்த தவறான கருத்தையும் ஊடகங்கள் வெளியிட்டுள்ளார்கள். உண்மை நிலை என்னவென்றால் இரு அரசாங்கங்களின் வாதங்களும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளன என்பதே ஆகும்.   நடைபெற்ற வாதங்களின் அடிப்படையில் தமது இறுதியான நிலைப்பாட்டை மூன்று மாதங்களுக்குள்ளாக மத்திய அரசாங்கம்                உச்சநீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்.  2014ம் ஆண்டு மாநில அரசாங்கத்தினால் மத்திய அரசாங்கத்திடம் அளிக்கப்பட்டு உள்ள கடிதத்திற்கான பதில் இன்னமும் அனுப்பப்படவில்லை என்பதினால் அதில் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்பதாக உச்சநீதிமன்றத்தின் மூன்று அமர்வை சேர்ந்த நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி A M சாப்ரே, மற்றும் நீதிபதி நவீன் சின்ஹா கூறினார்கள். நீதிபதிகள், அரசாங்கத்தின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் திரு பிங்கி ஆனந்திடம் வாய்மொழி கட்டளையாக   இனி முடிவெடுக்க வேண்டியது நீங்கள்தான். அந்த முடிவே இதற்கு முடிவாக அமையும் என்று கூறினார்கள். ஆக இந்த விஷயத்தில் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தை வெளிப்படுத்தும் வகையில் தீர்ப்பு அளித்து மனுக்களின் மீதான விசாரணையை  உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. அதைத் தவிர அரசியல் சாசன அமர்வு  கைதிகளுக்கு தரப்படும் வாழ்நாள் சிறை தண்டனை என்பது ஒரு கைதியின் ஆயுள் முழுவதுக்கும் பொருந்தும் என்ற நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தி உள்ளது. பேரறிவாளனின்  கருணை மனு மீதான முடிவை மாநில ஆளுநர் எடுக்கலாம் என்பதாக மட்டுமே கூறி உள்ள நீதிபதிகள் இத்தனை காலவரம்பிற்குள் அந்த கருணை மனுக்கள் மீதான முடிவை எடுக்க வேண்டும் என்ற காலவரம்பை தரவில்லை. ஆளுநரின் முடிவு எப்படி இருக்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவிக்கவில்லை.

அரசியல் சாசன அமர்வு  கைதிகளுக்கு தரப்படும் வாழ்நாள் சிறை தண்டனை என்பது ஒரு கைதியின் ஆயுள் முழுவதுக்கும் பொருந்தும் என்ற நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தி உள்ளது.

இதுதான் யதார்த்தமான நிலை எனும்போது, கைதிகளின் விடுதலை நிலைப்பாட்டில் முழு அதிகாரமும் மாநில அரசுக்கே உள்ளது என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளதை போல கருத்து தெரிவித்து வரும் கட்சிகளின் கருத்து குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இந்த தீர்ப்பின் மூலம்   உச்சநீதிமன்றம்   மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவுகளின் விசாரணை அடிப்படையில் தரப்படும் தீர்ப்புக்களில் கருணை மனுக்களை ஏற்றுக் கொண்டு தண்டனை காலத்தைக் குறைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு, மாநில அரசிற்குக்  கிடையாது  என்ற சட்ட விதிமுறையை மீண்டும் நிலைநாட்டி உள்ளார்கள் என்பதாக கூறுகின்றார்கள்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள சட்ட வல்லுநர்கள் கூறுவது என்னவென்றால் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களின் கொடூரமான திட்ட அடிப்படையில் பின்னப்பட்ட சூழ்ச்சி வலையில் உயிர் இழந்த நாட்டின்  முன்னாள் பிரதமரை கொலை செய்துள்ள கைதிகளை மத்திய அரசாங்கத்தின் புலனாய்வு நிறுவனங்களின் விசாரணை அடிப்படையில் கொடுக்கப்பட்ட  தீர்ப்பின்படி தண்டனை பெறும் கைதிகளின் விடுதலையில், கருணை மனுக்களின் அடிப்படையில் விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது  என்று மாநில அரசுக்கு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதியன்று மத்திய அரசாங்கம் எழுதி உள்ள கடிதத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மாநில அரசு இதுவரை கேட்டுக்கொள்ளவில்லை.  உச்சநீதிமன்றம்,  மத்திய அரசின் நிலைப்பாட்டை மாநில அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்பதாகவே கருதப்படவேண்டும்.  திமுக போன்ற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஏழு கைதிகளின் விடுதலை குறித்த நிலைப்பாட்டிற்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல  நாங்கள் என்று அரசியல் சார்ந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்த  ஆளும் கட்சி மற்றும்  மாநில அரசு முயல்கின்றது. கைதிகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று மாநில  அரசு தீர்மானத்தின் மூலமாக ஞாயிறன்று ஆளுநருக்கு தெரிவிக்கும்.

ஏழு கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற அமைச்சரவையின் ஒருமித்த தீர்மானத்தை மாநில ஆளுனருக்கு அனுப்பியதின் மூலம்  எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிலிருந்து அதிமுக அரசு  தப்பித்துக்கொள்ளலாம். இறுதியில், சிறைக்கதவுகளின் சாவி எங்களிடம் தான் உள்ளது, கைதிகளுக்கு விடுதலை கிடையாது என்று பாஜக அரசின் முடிவே இறுதியானதாக அமையும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival