Read in : English
கடந்த ஆகஸ்டு 30ஆம் தேதி திமுக முன்னாள் தலைவர் கலைஞருக்கு நடந்த இரங்கல் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தேசிய அளவிலான தலைவர்கள் கலந்துகொண்ட போதிலும், அந்த கூட்டம் எதிர்கட்சிகளின் அரசியல் மாநாடாகவே நடந்து முடிந்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர் மு.க.ஸ்டாலின், மத்தியில் அடுத்து அமையவிருக்கும் ஆட்சி அமைய முக்கிய பங்காற்றுவார் என்று பல தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர்.
இப்பேச்சு பாஜக வின் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரிக்கும் பொன்.ராதா கிருஷ்ணனுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தாலும், மொத்த எதிர்க்கட்சிகளும் ஒரே குடையின் கீழ் இணைந்தது அடுத்து 2019-ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலுக்கு கூட்டணி அமைக்க அச்சாரமாக அமைந்துள்ளது.
இந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய தலைவர்களில், நிதின் கட்காரி, நிதிஷ் குமாரை தவிர்த்து மற்ற அனைவரும் மு.கருணாநிதி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க எடுத்த முயற்சிகளை எடுத்துக் கூறி, ஸ்டாலினும் அத்தகைய செயல்பாட்டைத் தொடர வேண்டும் என கூறினர். மேலும், ஸ்டாலினும் திமுகவும் அடுத்த லோக்சபா தேர்தலில் பாஜக ஆட்சியை வீழ்த்த, எதிர்க்கட்சிகளை இணைக்க முக்கிய பங்காற்ற வேண்டும் என கூறினர்.
கடந்த இரண்டு நாட்களாக தேசிய அளவில் திமுக செயல்பாடுகள் குறித்து கண்காணிக்கப்படுகிறது. பாஜக நாட்டை காவி மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதையும் கல்வி, இலக்கியம் மற்றும் சமூகத் தளத்தில் காவிமயமாக்க்கி அதன் மூலம் தேசிய ஒற்றுமையை குலைக்கும் நிலையை உருவாக்கியிருப்பதையும் ஸ்டாலின் ஸ்டாலின் மிக தீவிரமாக சுட்டிக் காட்டினார்.
எதிரெதிர் துருவங்களான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் இடதுசாரி கட்சிகளையும் ஒரே மேடையில் ஸ்டாலின் கொண்டு வந்தது அத்தனை எளிதில் நடைபெறக் கூடிய விஷயமல்ல. அதேபோல் பரம வைரிகளான தெலுங்கு தேசமும் காங்கிரஸ் கட்சியும் ஒரே மேடையில் இருந்தனர். காங்கிரஸ் கூட்டணியை நோக்கி நகரும் நோக்கிலுள்ள என்சிபி கட்சியினரும் தங்கள் வருகையின் மூலம் ஒற்றுமைக்கான கரத்தை வலுப்படுத்தியுள்ளனர். அதேபோல் ஆம் ஆத்மி கட்சி டெல்லி மற்றும் பஞ்சாபில் காங்கிரஸை எதிர்க்கும் கட்சியாக இருப்பினும் இம்மேடையில் தங்கள் ஒற்றுமையைக் காட்டினர். மேலும், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியை ஸ்டாலின் தொடர வேண்டும் அக்கட்சியின் சார்பில் கேட்டுக் கொண்டனர்.
இது இரங்கல் கூட்டமாக இருப்பினும், பாஜக அமைச்சர் நிதின் கட்காரி கண்முன்னே எதிர்க்கட்சிகள் கூட்டணியாக உருவாகும் சூழல் ஏற்பட்டது. நிதின் கட்காரி, வழக்கம் போல் அவசர பிரகடன நிலையின் போது திமுக மீது உருவாக்கப்பட்ட அடக்குமுறைகளையும் திமுக ஏ.பி.வாஜ்பேயியுடன் கொண்டிருந்த உறவையும் சுட்டிக் காட்டிப் பேசினார்.
ஆனால் இந்த செய்திகளையும் மீறி அங்கிருந்த வெவ்வேறு கட்சிகளும் பாஜக — தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக ஒற்றை பொது நோக்கத்துடன் ஒரே அணியாக திரளும் தங்கள் நிலைப்பாட்டை உறுதியாகத் தெரிவித்தனர்.
கலைஞரின் இரங்கல் கூட்டத்துக்கு பிகார் முதல்வரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒருவருமான நிதிஷ் குமாரை அழைத்து வரும் முயற்சியில் ஸ்டாலின் வெற்றியடைந்தார். அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக உருவாகி வரும் கூட்டணியின் தலைவர்கள் கூறிய செய்தியை தவறவிட்டு இருக்கமாட்டார்.
மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீதராம் யெச்சூரியும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜாவும் கலந்துகொண்ட அதே மேடையில் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த எம்.பி டெரிக் ஓ பிரையன்–ம் கலந்துகொண்டார். அதே மேடையை காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத்தும் பகிர்ந்துகொண்டார். இது இன்றைய சூழ்நிலையில் சாதாரண விஷயமல்ல என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
Read in : English